தலைப்பு பார்த்து தலையை சொரிந்துகொள்ளாதீர்கள்.இன்னும் ஒரு பதிவா பவர் ஸ்டாரை பற்றி என .இது என்னை பற்றியது .ப்ளாக் எழுத வந்து ஒரு மாதமே ஆனா நிலையில் இன்று சிலரையாவது என் பதிவுகள் சென்று அடைய காரணமாக பவர் ஸ்டார் இருந்து இருக்கிறார் .அவருக்கு என் முதல் நன்றி .
பேஸ்புக்கில் எனக்கு அதிகமாக டேக் செய்யப்பட்ட படங்களில் முதன்மையானது பவர் ஸ்டார் படங்கள்தான் .எல்லா படங்களுக்கும் பின்னோட்டம் போட்டு இருக்கிறேன் எனக்கு இவர் படங்கள் டேக் செய்யாதீர்கள் பயந்துவருது தூக்கம் வரமாட்டேங்குது என .அப்படி பின்னூட்டம் போட்ட நானே பவர் ஸ்டார் பொது மேடையில் கோபிநாத் எனும் அறிவாலியால் அசிங்கமாக கேள்வி கேட்டபோதும் அமைதியாக இருந்த பவர் ஸ்டார் பார்த்து ப்ளாக் எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டேன்
.அந்த பதிவு எழுதிய அன்று எனக்கு அதிகமான வாசகர்கள் என் ப்ளாக் வந்து சென்றார்கள் .அன்றைய தினம் முழுவதும் தமிழ் மனத்தில் முதல் இடத்தில் இருந்தது .இப்ப சென்றவார இடுகையில் அதிக வாசகர்கள் பார்வையிட்ட முதல் இருபது இடத்தில் என் பதிவு பதினோராவது இடத்தில் இருக்கு .புதிய பதிவராகிய என்னை என் தளத்திற்கு வந்த ஊக்குவித்த வாசகர்கள் அனைவருக்கும் என்னை பவராக்கிய பவர் ஸ்டாருக்கும் என் நன்றி .
.................................................................................................................................
இன்று பத்தாவது பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானவுடன் எல்லோரும் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களை வாழ்த்தியும் ,மலரும் நினைவுகளையும் எழுதி உள்ளனர் .அதிக மதிப்பெண்கள் எடுத்து உள்ளார்கள் என சந்தொசப்பட்டாலும் எனக்கு இதில் சிறிது உடன்பாடு இல்லை .
காரணம் இன்று தனியார் பள்ளிகளில் ஒன்பதாவது வகுப்பு பாடங்களையும் ,பதினோராம் வகுப்பு பாடங்களையும் நடத்துவதே இல்லை .ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாவது வகுப்பு பாடங்கள் நடத்தபடுகின்றன .பதினோராம் வகுப்பில் பனிரெண்டாவது வகுப்பு பாடங்கள் எடுக்கபடுகின்றன .ஒரே வகுப்பு பாடங்களை இரண்டு வருடங்கள் படிக்கும்போது அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் வியப்பேதும் இல்லை .பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானவுடன் எங்கள் பள்ளி நூறு சதவிகித தேர்ச்சி அடைந்து உள்ளார்கள் என மாணவர்கள் படமும் நானுறு மார்க் வாங்கியவர்கள் என அவர்கள் மதிப்பெண்ணும் மாணவர்கள் புகைப்படத்தின் கீழே போட்டு டிஜிடல் போர்ட் வைக்கப்படுகிறது .இது சரியா .குறைந்த அளவு அறிவுடைய மாணவனே ஒரே பாடத்தை இரண்டுவருடங்கள் படிக்கும்போது முன்னூறு மதிப்பெண் எடுக்க கூடிய நிலை இருக்கும்போது நானுறுக்கும் மேல் மதிப்பெண்கள் எடுப்பதில் வியப்பேதும் இல்லை .தனியார் பள்ளிகள் அறிவுடைய கல்வித்தரத்தை மாணவர்களுக்கு கற்றுதருகிரார்களா இல்லை தொழிற்சாலை மிஷின்களை போல மாணவர்களை உருவாக்குகிரார்களா .
இப்பொழுது அரசு பள்ளிகளிலும் கூட ஒன்பதாவதில் பத்தாவது பாடத்தை நடத்துகின்றனர் .
........................................................................................................................................
இங்கே ப்ளாக் எழுதுபவர்களிடம் அரசியல் எதுவும் நடக்கிறதா .நல்ல பதிவு ஒன்றிக்கு ஓட்டுபோட்டு அந்த பதிவு தமிழ் மனம் மகுடத்தில் இருக்கும்போது ,அல்லது நல்ல பதிவாக இருந்தாலும் எதிர்மறை ஓட்டு போடுவதேன்.நான் இங்க புதியவனாக இருப்பதால் எனக்கு ஏன் என புரியவில்லை .
........................................................................................................................
நேற்று பக்கத்து நாடான இந்தோனேசியாவிற்கு நண்பர்களுடன் சென்றேன் .ஏழை நாடு என அழைக்கப்படும் அந்த நாட்டில் எல்லாம் இருக்கிறது .எல்லாமும் கிடைக்கிறது .பணம் மட்டும் வேண்டும் .எனக்கு அங்கே ஒன்றை பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது .வாடகை கார் போல வாடகை மோட்டர் சைக்கிள் .ஒவ்வொரு ஏரியாவிலும் சிறியவகை மொட்டோர்சைக்கிளுடன் பத்து பதினைந்து பேர் நிற்கின்றார்கள் .அந்த வழியாக போகின்றவர்களை அழைக்கிறார்கள் .ஏறியவுடன் சென்று சேரவேண்டிய இடத்திற்கு பத்து நிமிடத்திற்குள் அருகில் இருக்கும் இடத்திற்கு இரண்டு நிமிடத்திற்குள் கொண்டுபோய் விட்டுவிடுகின்றனர் .தூரத்திற்கு தகுந்த பணம் வாங்கிகொல்கின்றனர் .மொட்டோரில் போவது டாக்சியை விட விலை குறைவு .உள்ளூர் மக்கள் மொட்டோர்களில் தான் அதிகம் பயணிக்கின்றனர் .
Tweet |
No comments:
Post a Comment