Friday, 29 June 2012

ஏன் நினைவாகி போனாய் நீ........
அவள் ஜன்னலோரம் அமர்ந்து வீதியை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.கண்ணோரம் எப்பொழுது கீழே விழுவோம் என கண்ணீர் தேங்கி நின்றது .விம்மி அழ வழிதெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறாள் .கண்ணீருக்கு காரணம் என்ன சொல்லமுடியும் பெற்றோரிடம் .அலைபேசியை பார்த்துகொண்டே இருக்கிறாள் திடீரென உயிர் பெற்று அவன் குரல் அதில் கேட்கமுடியாதா என...

நேற்றுவரை சிரிக்கவைத்துகொண்டே இருந்தாயே .ஒரே நொடியில் என் உலகை இருளச்செய்து மறைந்துவிட்டாயே .எதற்காக என்னை பார்த்தாய் .பேசினாய் ,பழகினாய்.என்னை தவிக்கவிட்டு போய்விடவா?

உன்னை பார்த்த முதல் நாளை விட நேற்று உன்னை பார்த்த நினைவே என்னை காலம் முழுவதும் வதைக்க செய்யபோகிறது .மூளை சாவடைந்தும் உன் மூச்சு மட்டும் ஓடிக்கொண்டு இருந்ததே எதற்காக .என்னிடம் சொல்லாத வார்த்தைகள் எதையும் மிச்சம் வைத்து இருந்தாயோ .கண்ணீரற்று யாரையோ பார்ப்பதுபோல் உன்னை பார்த்துகொண்டு இருந்தேன் .யார் யாரோ வருகிறார்கள் .எதை எதையோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .அவர்களிடம் நான் யாரென்று சொல்லமுடியாமல் தவித்தது உனக்கு தெரியுமா?
 .
அங்கே அதிகமாய் அரற்றி அழுததில் உன் அப்பா ஒருவர் என தெரிந்தது .அவரிடம் போய் நான் யாரென்று சொல்வது .மகனை இழந்து தவிக்கும் உன் அப்பாவுக்கு நான் ஆறுதல் சொல்வதா இல்லை உன்னை இழந்து நான் தவிக்கிறேன் என சொல்வதா?.

நேற்று கடைசியாக சொன்னாய் உன் அப்பாவிடம் பேசப்போவதாக .என்ன எனக்கேட்டேன் .உன்னை விரும்புவதாய் சொல்லபோகிறேன் என்றாய் .சீக்கிரமே என் தேவதையை எனக்கு கல்யாணம் செய்துகொடுங்க என கேட்கப்போவதாய் சொன்னாய் .அமைதியா நான் இருந்தேன் .ஏன் அமைதியாக இருக்கே என கேட்டாய் .எனக்கு சந்தோசமா இருக்கு அதை வெளிபடுத்த தெரியல அப்படின்னு சொன்னேன் .அதுக்கும் சிரித்தாய் நீ .அந்த சிரிப்புதான் கடைசியாக நீ சிரிப்பது என்பது எனக்கு தெரியாது .மாலையில் உன்னை வந்து சந்திக்கிறேன் என சொல்லி சென்றாய் .


போன அரைமணி நேரத்துக்குள் மறுபடியும் போன் செய்தாய் .இப்பதானே பார்த்துட்டு போனே அப்புறம் மறுபடியும் ஏன் போன் செய்றே என்றேன் .என்னிடம் கொபபடுவதுபோல நடித்தாய் .ஏன் நடிக்கிறே என கேட்டேன் .அதுவும் தெரிந்து போச்சா என சொன்னாய் .சரி மாலையில் பார்ப்போம் என சொன்னாய் .சரி என சொன்னேன் .போனை அடைத்து விட்டாய் .
மறுபடியும் அரைமணி நேரத்தில் உன்னிடம் இருந்து போன் .உன்னை திட்டிவிடுவோம் என போனை ஆன் செய்தேன் .ஹலோ செல்வியா பேசுறது என யாரோ பேசினார்கள் .என்ன என என்று கேட்க்கும்போதே தலை சுற்றிவிட்டது .உன் பைக் ஆச்சிடன்ட் ஆகி உன்னை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக சொன்னார்கள் .உன்னை பார்க்க ஓடிவந்தேன் .அங்கே உன் மூச்சு மட்டுமே இயங்கிக்கொண்டு இருந்தது .உன் அப்பா வருகைக்காக மருத்துவமனையில் காத்து இருந்தார்கள் .என்னை யாரென கேட்டார்கள் .நான் என்ன சொல்வேன் நாளைய உலகம் எங்களுக்ககா காத்து இருந்தது எனவா?

உன் அப்பா வந்தார் .மருத்துவர்கள் எவ்வளவோ பேசினார்கள் உன் உடல் உறுப்புகளை தானம் செய்யச்சொல்லி .நானும் சொல்லலாம் என நினைத்தேன் உன் உறுப்புகள் மூலம் எங்காவது வாழ்ந்துகொண்டு இருப்பாய் என .ஆனால் என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை .உன் அப்பா கிராமத்து ஆளு .என் குழந்தையை கூறு போடவிடமாட்டேன் என சொல்லி உன்னையும் உன் மூச்சையும் மட்டுமே இங்கிருந்து எடுத்து சென்றுவிட்டார் .இன்று உன்னை தகனம் செய்துவிட்டதாக சொன்னார்கள் .

நான் அழவேண்டும் .யாரிடம் சொல்லி அழுவது .என் சிரிப்பையும் என் அழுகையும் ஒரு சேர எடுத்து சென்றுவிட்டாய் .வெளியில் மழை பெய்கிறது .என் கண்களில் இருந்து வெளியாகத கண்ணீருக்கு வானம் மழையாக தன் கண்ணீரை தந்துகொண்டு இருக்கிறது

Wednesday, 27 June 2012

இரண்டாவது தேனிலவு

இரண்டாவது தேனிலவு என மலேசியாவில் தமிழ் தினசரியில் வெளியான செய்தியைப்பார்துவிட்டு அதை படித்து பார்த்தேன் .இன்றைய நிலையில் எல்லா நாடுகளிலும் பரீட்சித்துப் பார்கவேண்டிய  நிகழ்வாய் படுகிறது எனக்கு  .

மலேசியாவில் ஒரு மாநிலத்தில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இந்த இரண்டாவது தேனிலவு திட்டத்தை செயல்படுத்தி பார்த்து இருக்கிறார்கள் .அதற்க்கு நல்ல பலனும் கிடைத்து இருக்கிறது .

செய்தி இதுதான் .மலேசியா குடும்பநல கோர்ட்டிற்கு வந்த விவகாரத்து வழக்குகளுக்கு அவர்கள் முயற்சித்து பார்த்ததுதான் இந்த இரண்டாவது தேனிலவு திட்டம் .விவகாரத்துகோரி வந்தவர்கள் அனைவருமே திருமணம் முடிந்து ஐந்து வருடங்களுக்குள் ஆனாவர்களே அதிகம் .இப்படி வரும் வழக்குளுக்கு பெரும்பாலும் ஒரு வருடம் வரைக்கும் டைம் கொடுப்பார்கள் .அதன் பின்பும் சரிவரவில்லை எனில் விவகாரத்து வழங்கி விடுவார்கள் .ஒரு வருடம் டைம் கொடுத்தபோதும் கணவனும் மனைவியும் சேர்ந்தும் இருப்பதில்லை .தங்கள் ஈகோவை விட்டுக்கொடுக்க தயாராகவும் இருப்பதில்லை எப்பொழுதுமே .

இப்படி பிரிந்து வாழ்பவர்கள் விவகாரத்து கேட்டுவரும்போது அவர்களுக்கு ஒரு உண்மை தெரிந்தது .அனைவருமே திருமணம் ஆகி ஐந்து வருடங்களுக்குள் ஆனவர்கள் .இவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவதை விட வேறு வகையில் முயற்சித்து பார்ப்போம் என அரசு செலவிலேயே முயற்சித்து பார்த்தது ரெண்டாவது தேனிலவு திட்டம் .விவகாரத்து கேட்டு வந்த கணவன் மனைவி இருவரையும் அழைத்து பேசி ஐந்து நாட்களுக்கு சுற்றுலாதளமும் அங்கே இருக்கும் உயர்தர ஹோட்டலில் தங்குவதற்கு அனைத்து வசதிகளையும் மற்றும் பணமும் கொடுத்து அனுப்பி வைத்து இருக்கின்றனர் .இவ்வாறு இரண்டாவது தேனிலவு திட்டத்தில் அனுப்பிய தம்பதியரில் இருநூற்றி எழுபத்து எட்டு தம்பதியர் மீண்டும் இணைந்து வாழ சம்மதித்து தங்கள் விவகாரத்து வழக்கை மீட்டுக்கொண்டு உள்ளனர் .இப்பொழுது இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தும் முயற்சியை எடுத்து உள்ளார்கள் .

கணவன் மனைவிக்குள் ஏற்ப்படும் பிரச்சினைகளை நீதிமன்றங்களுக்கு செல்வதைவிட இருவரும் அமர்ந்து பேசி தங்களுக்குள் என்ன குறை என்பதை களைந்து இருந்தார்கள் என்றால் எந்த நீதிமன்றங்களும் பஞ்சாயத்தும் அவசியமே இல்லை .

இன்று அதிகமாக விவகாரத்து செய்பவர்கள் காதலித்து மனந்தவர்களே .இதிலும் நகர பின்னணியில் வாழ்பவர்கள் அதிகமாக விவகாரத்து வழக்கு போடுகிறார்கள் .காதலிக்கும்போது தங்கள் குறைகளை பேசி எப்பொழுதும் காதலிப்பதில்லை .தங்கள் நிறைகளை முன்வைத்தே எப்பொழுதும் காதலிப்பார்கள் .கல்யாணம் முடிந்தவுடன் ஒருத்தர் குணம் ஒருவருக்கு ஒவ்வொன்றாக தெரியவரும் .இருவரும் சண்டை இடவேண்டியது நீ என்னை ஏமாற்றி விட்டாய் என .இருவருக்குள்ளும் உள்ள குறைகள் தெரியவரும்போது தங்களுக்குள்ளே மனம் விட்டு பேச ஆரம்பித்து இருந்தார்கள் என்றால் எந்தவித பிரச்சினைகள் இன்றி வாழ்க்கை சக்கரம் ஓடிக்கொண்டு இருக்கும் .என்று இருவருக்குள்ளும் ஈகோ தலைதூக்க அனுமதிக்கிறார்களோ அன்றே அவர்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க ஆரம்பித்து விடுகிறார்கள் .

இந்த இரண்டாவது தேனிலவு திட்டம் இந்தியாவின் பெருநகரங்களுக்கு இன்று அவசியாமான திட்டம் .பிரிந்து வாழும் தம்பதியரை   தங்கள் மனசு விட்டுபேச ஒரு சந்தர்ப்பம் அமைத்து தருவது இன்றைய நிலையில் அவசியமாகிறது .யாரோ மத்தியஸ்தம் அல்லது நீதிமன்றங்களில் பேசி  தீர்ப்பதை விட சம்மந்தப்பட்ட இருவரே பேசவும் தனிமையும் ஏற்ப்படுதிகொடுக்கும்போது நிச்சயம் நல்ல பலனை தரும்

Thursday, 21 June 2012

உலக தொலைகாட்சிகளில் முதன்முறையாக

தலைப்பு பார்த்துட்டு என்ன யோசிக்கிறீங்க .மேலே படிங்க கொஞ்சம் செய்தி இருக்கு .நான் இங்கே சொல்லப்போற செய்தி யாரேனும் பதிவிட்டு கூட இருக்கலாம் .இருந்தாலும் நானும் எழுதவேண்டியதாக இருக்கிறது .

சென்றவார ஜூனியர் விகடனை வாசித்து கொண்டு இருந்தேன் .அதில் ஒரு செய்தி எங்க அப்பா மூணு கொலை செய்து புதைத்துவிட்டார் என .செய்தியை படித்து முடித்துவிட்டு கொஞ்சம் நேரம் அமைதியாக அதே நேரம் சிந்தனை வயப்பட்டவனாக அமர்ந்துவிட்டேன் .

சதீஷ் ,பார்கவி இவர்கள் காதலர்கள் .இவர்கள்  காதலர்களை சேர்த்துவைக்கும் தனியார் தொலைகாட்சி  நிகழ்வில் கலந்து இருக்கின்றார்கள் .அங்கே பார்கவியின் அப்பாவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார் .பார்கவி தன் அப்பாவோடு செல்லமாட்டேன் என கூறி அவர் மூன்று கொலைகள் செய்து புதைத்தவர் என சொல்லி இருக்கிறார் .

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு அதை பார்த்த ஜீவா என்ற பெண்மணி கொலையானது தனது கணவரும் ,மகளும் ,மருமகனுமாக இருக்கலாம் என போலீசில் புகார் செய்து இப்பொழுது விசாரணை நடப்பதாக எழுதி உள்ளார்கள் .

என் கேள்வி தொலைகாட்சி நேர்மை பற்றி .ஒரு நிகழ்வு தொலைகாட்சியில் ஒளிபரப்படும் முன்பு பதிவு செய்யப்படுகிறது .அது ஒருவாரமா அல்லது இரண்டு வாரம் கழித்தோ ஒளிபரப்படும் .நிகழ்ச்சி பதிவு செய்யப்படும்போது அதில் கலந்துகொண்டு இருக்கும் ஒரு நபர் கொலையாளி என பெற்ற மகள் சொன்னபோது தொலைக்காட்சியினர் போலீசில் புகார் செய்து இருக்கவேண்டாமா .

நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதை பார்த்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் போய் புகார் கொடுக்கும் வரை அந்த கொலையாளி சுதந்திரமாகவே இருந்துள்ளார் .ஒளிபரப்பட்ட உடனே பொதுமக்களோ அல்லது போலீசோ ஏன் விரைவான நடவடிக்கையில் இறங்கவில்லை .

கணவன் மகள் மருமகன் என மூன்று நபர்கள் காணமல் போனபோதும் அந்த பெண்மணி ஏன் போலீசில் புகார் செய்யவில்லை .தன் அப்பா கொலை செய்தது தெரிந்தும் பார்கவியால் எப்படி ஒரே வீட்டில் நான்கு வருடங்கள் இருக்க முடிந்தது .அடுக்கடுக்காக கேள்விகள் கேக்கலாம் .

இனி வரும்காலங்களில் இப்படி தொலைக்காட்சியினர் விளம்பரம் செய்தாலும் செய்வர் .

உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக கொலைசெய்த சிலமணி நேரங்களே ஆன கொலையாளி எங்கள் தொலைகாட்சியில் தோன்றுவார் .

உலக தொலைகாட்சியில் முதன் முறையாக கொலை செய்வதை நேரடி ஒளிபரப்பு எங்கள் தொலைகாட்சியில் மட்டுமே .

உலக தொலைகாட்சியில் முதன்முறையாக வீடு புகுந்து இளம்பெண்ணை கற்பழிக்கும் காட்சி எங்கள் தொலைகாட்சியில் மட்டுமே .

வன்மம் நிறைந்து காணப்படுகிறது இன்றைய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் .தொடர் நாடகங்கள்தான் சமூக சீர்கேடுகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது என பார்த்தல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதை தாண்டி ரேட்டிங் வாங்குவதற்காக வீட்டிற்குள் அத்தனை சீர்கேடுகளையும் அடுப்பங்கரைக்குள் கொண்டுவந்து விடும் போலருக்கு

Tuesday, 19 June 2012

இந்த வாரம்....அரசியல்வாதிகளின் ”ஙே” வாரம்....


ஙே” என்ற இந்த வார்த்தைக்கு அர்த்தம் குமுதம் அரசு பதில்களிலும் ,எழுத்தாளர் ராஜேந்திரகுமார் நாவல்களில் மட்டுமே அறிந்து இருக்கின்றேன் .மற்றபடி ஙே எனும் வார்த்தைக்கு உண்மையில் அர்த்தம் இருக்கிறதா என்பது தெரியாமல்தான் இதுவரை இருந்து வந்தேன் .ஆனால் கடந்த ஒரு வாரமா அவ்ளோ ஞே க்களை பார்த்து வருகிறேன் இந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் .முதல் ஙே ஒய்வு எடுக்குறதுக்கே புது அர்த்தம் கண்டுபிடித்த செல்வி ஜெயலலிதா .எழுதி குடுக்குறத அர்த்தம் தெரியாமே அப்படி வாசித்து செல்லும் ஜெயலலிதாவுக்கு நான் கை காட்டுற ஆளுதான் இந்த தடவை ஜனாதிபதி என மிதமிஞ்சிய நம்பிக்கையில் சங்கு ஊதப்பட்டுவிடுவார் என தெரியாமல் சங்மாவுக்கு அதரவு சொல்லி முதல் ஆளாக ஙே என விழித்துக்கொண்டு இருக்கிறார் .அப்புறம் இந்த மம்தா பானர்ஜி .இவருக்கு கொஞ்சம் மனதுக்குள் இரும்பு பெண்மணி மார்கரெட் தாட்சர் என நினைப்பு .கொஞ்சம் ஓரக்கண்ணில் பிரதமர் பதவிக்கும் ஆசை துளிர்விட்டு இருக்கும்போல .தான் இந்தியாவின் அசைக்கமுடியாத சக்தி என நிரூபிக்க ஆசை .பலிகடா அப்துல் கலாம் .கலாம் பாட்டுக்கு அறிவியல் கருத்தரங்கு என கல்லூரிகளுக்கு பயணம் செய்துகொண்டு இருந்தவரை நீங்க மறுபடியும் வந்து ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் உக்காருங்க என அழைத்துவிட்டு இன்னைக்கு ஙேஎன விழிபிதுங்கி நிக்கிறார் .அடுத்து ஙே பா ஜ க எனும் தேசிய கட்சி மொத்தமும் .பிரதமர் பதவிக்கு யாரை முன்மொழிவது என இப்பவே சண்டை போட உல் கட்ட்சியிலே ஆளுக்கு ஒரு பிரிவாக இருக்கும்போது ஜனாதிபதி தேர்தலில் மட்டும் என்ன ஒற்றுமையா இருந்துருவாங்களா என்ன? .முதலில் சங்மா ஆதரவு கேட்டவுடன் ஜெயலலிதாவே ஆதரிக்கும்போது நாம ஆதரிக்கலாம் என நினைக்கும்போதே மம்தா அப்துல்கலாமை நிற்கவைப்போம் என அறிக்கை வருது .தேள் கொட்டுனவன் உடம்புபோல ஆகிடுச்சு பா ஜ க கட்சிக்கு .நாமதானே அப்துல்கலாமுக்கு மொத்த ஏஜன்ட் ,இந்த அம்மா என்ன இப்ப வந்து அந்த உரிமையை கையில் எடுக்குதே என இவங்களும் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து இப்ப ஙே என விழி பிதுங்கி நிக்கிறாங்க .மறுபடியும் சங்மா வுக்கு சங்கு ஊத பாஜக காவடி எடுப்பாங்க போல .அடுத்து கலைஞர் ஆரம்பத்தில் சொன்ன பதிலோடு நின்று இருக்கலாம் .மத்தியஅரசு நிற்க வைக்கும் வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு என சொன்ன பின்னாடி எதற்கு கலாம் என்றால் கலகம் என சொல்லணும் .ஏற்கனவே தமிழ் போராளிகள் எல்லோரும் எப்படா அய்யா வாய தொறப்பாரு நாம ஸ்டேட்டஸ் போட்டு கிழிக்கலாம் கொஞ்சம் தமிழன் என நிரூபிக்கலாம் என காத்திருக்கும்போது இப்படி பேசுனா சும்மா இருப்பாங்களா? .ஒருநாள் பொழுது அவங்களுக்கு ஓடிடுச்சு .கலைஞர் தான் தப்பா சொல்லிட்டோமோ என ஙே என விழி பிதுங்கி நிக்கிறார் .இருபது இருபது என எல்லா இளைஞன் மனதிலும் விதைத்தவருக்கு சொந்தகாரரனா அப்துல்கலாம் .ஜனாதிபதியாக இருந்தபோது சில மரபுகளை உடைத்தவர்தான் .ஆனால் சில நேரங்களில் பேசவேண்டியது இருக்கும்போது மௌனமாகவும் இருந்தவர் .இவர் மனதிலும் இன்னும் கொஞ்சம் ஜனாதிபதி பதவிமேல் ஆசை இருந்து இருக்கும்போல .மம்தா பேரை அறிவித்த உடனே மறுத்து அறிக்கை விட்டு இருப்பாரேயானால் இன்று இன்னும் எல்லோர் மனதிலும் உயர்ந்து இருப்பார் .ஆனால் தாம் நின்றால் எல்லோரும் ஆதரிக்கும் சூழ்நிலை இல்லை என்று தெரிந்தபின்னால் நான் போட்டியிடவில்லை என சொல்லி ஙே என இவரும் விழி பிதுங்கி நிற்கிறார் .

மொத்தத்தில் கேலிகூத்து நடத்துவதில் யாரும் சளைத்தவரல் இல்லை என்பதை இந்த ஜனாதிபதி தேர்தலில் நிரூபித்து எல்லோரும் ஙே என விழிபிதுங்கி நிற்கின்றனர்

அரசியல்வாதிகள் ''ஙே''ன்னு விழி பிதுங்கும் வாரம்.....


ஙே” என்ற இந்த வார்த்தைக்கு அர்த்தம் குமுதம் அரசு பதில்களிலும் ,எழுத்தாளர் ராஜேந்திரகுமார் நாவல்களில் மட்டுமே அறிந்து இருக்கின்றேன் .மற்றபடி ஙே எனும் வார்த்தைக்கு உண்மையில் அர்த்தம் இருக்கிறதா என்பது தெரியாமல்தான் இதுவரை இருந்து வந்தேன் .ஆனால் கடந்த ஒரு வாரமா அவ்ளோ ஞே க்களை பார்த்து வருகிறேன் இந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் .முதல் ஙே ஒய்வு எடுக்குறதுக்கே புது அர்த்தம் கண்டுபிடித்த செல்வி ஜெயலலிதா .எழுதி குடுக்குறத அர்த்தம் தெரியாமே அப்படி வாசித்து செல்லும் ஜெயலலிதாவுக்கு நான் கை காட்டுற ஆளுதான் இந்த தடவை ஜனாதிபதி என மிதமிஞ்சிய நம்பிக்கையில் சங்கு ஊதப்பட்டுவிடுவார் என தெரியாமல் சங்மாவுக்கு அதரவு சொல்லி முதல் ஆளாக ஙே என விழித்துக்கொண்டு இருக்கிறார் .அப்புறம் இந்த மம்தா பானர்ஜி .இவருக்கு கொஞ்சம் மனதுக்குள் இரும்பு பெண்மணி மார்கரெட் தாட்சர் என நினைப்பு .கொஞ்சம் ஓரக்கண்ணில் பிரதமர் பதவிக்கும் ஆசை துளிர்விட்டு இருக்கும்போல .தான் இந்தியாவின் அசைக்கமுடியாத சக்தி என நிரூபிக்க ஆசை .பலிகடா அப்துல் கலாம் .கலாம் பாட்டுக்கு அறிவியல் கருத்தரங்கு என கல்லூரிகளுக்கு பயணம் செய்துகொண்டு இருந்தவரை நீங்க மறுபடியும் வந்து ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் உக்காருங்க என அழைத்துவிட்டு இன்னைக்கு ஙேஎன விழிபிதுங்கி நிக்கிறார் .அடுத்து ஙே பா ஜ க எனும் தேசிய கட்சி மொத்தமும் .பிரதமர் பதவிக்கு யாரை முன்மொழிவது என இப்பவே சண்டை போட உல் கட்ட்சியிலே ஆளுக்கு ஒரு பிரிவாக இருக்கும்போது ஜனாதிபதி தேர்தலில் மட்டும் என்ன ஒற்றுமையா இருந்துருவாங்களா என்ன? .முதலில் சங்மா ஆதரவு கேட்டவுடன் ஜெயலலிதாவே ஆதரிக்கும்போது நாம ஆதரிக்கலாம் என நினைக்கும்போதே மம்தா அப்துல்கலாமை நிற்கவைப்போம் என அறிக்கை வருது .தேள் கொட்டுனவன் உடம்புபோல ஆகிடுச்சு பா ஜ க கட்சிக்கு .நாமதானே அப்துல்கலாமுக்கு மொத்த ஏஜன்ட் ,இந்த அம்மா என்ன இப்ப வந்து அந்த உரிமையை கையில் எடுக்குதே என இவங்களும் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து இப்ப ஙே என விழி பிதுங்கி நிக்கிறாங்க .மறுபடியும் சங்மா வுக்கு சங்கு ஊத பாஜக காவடி எடுப்பாங்க போல .அடுத்து கலைஞர் ஆரம்பத்தில் சொன்ன பதிலோடு நின்று இருக்கலாம் .மத்தியஅரசு நிற்க வைக்கும் வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு என சொன்ன பின்னாடி எதற்கு கலாம் என்றால் கலகம் என சொல்லணும் .ஏற்கனவே தமிழ் போராளிகள் எல்லோரும் எப்படா அய்யா வாய தொறப்பாரு நாம ஸ்டேட்டஸ் போட்டு கிழிக்கலாம் கொஞ்சம் தமிழன் என நிரூபிக்கலாம் என காத்திருக்கும்போது இப்படி பேசுனா சும்மா இருப்பாங்களா? .ஒருநாள் பொழுது அவங்களுக்கு ஓடிடுச்சு .கலைஞர் தான் தப்பா சொல்லிட்டோமோ என ஙே என விழி பிதுங்கி நிக்கிறார் .இருபது இருபது என எல்லா இளைஞன் மனதிலும் விதைத்தவருக்கு சொந்தகாரரனா அப்துல்கலாம் .ஜனாதிபதியாக இருந்தபோது சில மரபுகளை உடைத்தவர்தான் .ஆனால் சில நேரங்களில் பேசவேண்டியது இருக்கும்போது மௌனமாகவும் இருந்தவர் .இவர் மனதிலும் இன்னும் கொஞ்சம் ஜனாதிபதி பதவிமேல் ஆசை இருந்து இருக்கும்போல .மம்தா பேரை அறிவித்த உடனே மறுத்து அறிக்கை விட்டு இருப்பாரேயானால் இன்று இன்னும் எல்லோர் மனதிலும் உயர்ந்து இருப்பார் .ஆனால் தாம் நின்றால் எல்லோரும் ஆதரிக்கும் சூழ்நிலை இல்லை என்று தெரிந்தபின்னால் நான் போட்டியிடவில்லை என சொல்லி ஙே என இவரும் விழி பிதுங்கி நிற்கிறார் .

மொத்தத்தில் கேலிகூத்து நடத்துவதில் யாரும் சளைத்தவரல் இல்லை என்பதை இந்த ஜனாதிபதி தேர்தலில் நிரூபித்து எல்லோரும் ஙே என விழிபிதுங்கி நிற்கின்றனர்

Monday, 18 June 2012

என் மலரும் நினைவுகள்.......என் கல்யாணத்தின்போது அனைத்து வேலைகளையும் நானே செய்தேன் .என் அண்ணனுக்கும் எனக்கும் மூன்று நாள் இடைவெளியில் கல்யாணம் நடந்தது .என் அண்ணன் கல்யாணத்திற்கு பத்து நாளைக்கு முன்புதான் ஊருக்கு வந்தார் .அதனால் ஏறக்குறைய அனைத்து வேலைகளையும் நானே செய்தேன் .

அப்படி இருக்கும்போது எனது தந்தை என்னை கூப்பிட்டு உன் கல்யாணத்தன்று பாட்டுக்கச்சேரி ஏற்பாடு செய் என சொல்லிவிட்டார் .அண்ணனுக்கு வெளியூர் பொண்ணு ,எனக்கு உள்ளூர் பொண்ணு .அண்ணன் வரவேற்பும் ,அன்றே எனக்கு திருமணமும் என ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .

கல்யாண வீடுகளில் டெக்கரேஷன் செய்வது அப்பொழுதுதான் ஆரம்பம் ஆகி இருந்த நேரம் .அப்ப அறந்தாங்கியில் சுபால் டெக்கரேஷன் என ஒருவர் நடத்திக்கொண்டு இருந்தார் .அவர் மதுரையை சேர்ந்தவர் .அவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன் பாட்டுக்கச்சேரி வைக்கணும் என .அவர் மதுரையில் எனக்கு தெரிந்த நிறைய குருப் இருக்கு வாங்க போய் பேசிவிட்டு வருவோம் என சொன்னார் .நானும் அவருடன் மதுரைக்கு கச்சேரி புக் செய்ய சென்றேன் .

நாங்க மதுரையில் அப்பொழுது பிரபலமாக இருந்த ஒயிட் ரோஸ் என்ற குருப்பை போய் பார்த்தோம் .அவர்கள் எங்களிடம் சொன்னார்கள் எங்கள் குருப் மட்டும் வந்தால் ஒரு ரேட்.இங்கே நெல்லை பிரபாகர் என்பவர் மிக பிரபலம் அவரை அழைத்து வந்தால் கூடுதல் தொகை என சொன்னார்கள் .அவர் பாடிய விடியோவையும் போட்டு காட்டினார்கள் .எஸ் பி பாலசுப்ரமணியம் குரலை நகல் எடுத்து இருந்தது அவர் குரல் .எனக்கும் மிக பிடித்து விட்டது .அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துவிட்டேன் .

ஊருக்கு வந்து நெல்லை பிரபாகர் கலக்கும் மதுரை ஒயிட் ரோஸ் இன்னிசை குழுவினரின் இசைக்கச்சேரி நடைபெறும் என நோட்டிஸ் அடித்து எங்கும் ஒட்ட சொல்லிவிட்டேன் .

கல்யாணத்தன்று இரவு இசைக்குழுவும் வந்து மேடையில் ஆர்கெஸ்ட்ரா பொருட்களை சரி செய்துகொண்டு இருந்தார்கள் .நல்லகூட்டம் கூடி விட்டது .எனக்கு ஊரில் நண்பர்கள் வட்டமும் கொஞ்சம் பெரியது .எல்லோரும் வந்துவிட்டார்கள் .சரியாக ஒன்பது மணிக்கு கச்சேரி ஆரம்பம் ஆனது .முதலில் இஸ்லாமிய பாடல்கள் பாடினார்கள்

.அனால் மேடையில் நெல்லை பிரபாகரோ,பெண் பாடகியோ யாரும் இல்லை .இரண்டு மூன்று பாடல்கள் முடிந்தபின்பு வருவார்கள் என பார்த்தோம் .மூன்று பாடல் முடிந்த பின்பும் நெல்லை பிரபாகர் வரவில்லை .நான்காவது பாடலுக்கு இரண்டு நபர்கள் மைக்கை பிடித்து தயாராக இருந்தார்கள் .இசை ஆரம்பம் ஆகி பாட ஆரம்பித்தார்கள் .என் முகம் போனபோக்கை இன்று பார்த்தாலும் சொல்ல வார்த்தை இருக்காது .அந்த இருவரில் ஒரு ஆண் பெண் குரலில் பாடினார் .என் நண்பர்கள் எல்லோரும் என்னை கேலி செய்தே நோகடித்து விட்டனர் .நெல்லை பிரபாகரும் வரவில்லை .பெண் பாடகியும் வரவில்லை .இன்று வரைக்கும் என் நண்பர்கள் அந்த கச்சேரியை சொல்லி சிரிப்பார்கள் .

நெல்லை நண்பர்களே இன்னும் அந்த நெல்லை பிரபாகர் பாடிக்கொண்டு இருக்கின்றாரா .

மதுரை நண்பர்களே இன்னும் அந்த ஒயிட் ரோஸ் இசைக்குழு இயங்கிக்கொண்டு இருக்கிறதா

Tuesday, 12 June 2012

கனவுகள்தானோ வாழ்க்கை எல்லாம்..


"அம்மா போன் அடிக்குதும்மா" செல்வி சத்தம்போட்டு அம்மாவை கூப்பிட்டாள்.

“எடுத்து யாருன்னு கேளும்மா” .

”ஹலோ யாரு பேசுறது?” .

”நான் அண்ணன் பேசுறேன் செல்வி”
.
”நல்லா இருக்கியா அண்ணே?” .

”நான் நல்லா இருக்கேம்மா ,நீ அம்மா அப்பா எல்லாம் எப்படி இருக்கீங்க?”

”எல்லோரும் நல்லா இருக்கோம்ணே ,அம்மாவை கூப்பிடவா ,
கூப்பிடுமா” .

செல்வியிடமிருந்து அம்மா போனை வாங்கினாள்.

”ஹலோ சேகரு நல்லா இருக்கியாய்யா?”

”நல்லா இருக்கேம்மா ,நீங்க அப்பா தங்கச்சி எல்லோரூம் நல்லா இருக்கீங்களா ,அப்பா எங்கேம்மா?” .

”எல்லோரும் நல்லா இருக்கோம் சேகரு .அப்பா வயக்காட்டுக்கு போயிருக்காங்க”

”சரிம்மா ,செல்விக்கு மாப்பிள்ளை வந்துச்சே என்னம்மா சொன்னாங்க” .

”புடிச்சு இருக்குன்னு சொன்னாங்க சேகரு .நம்ம குடும்பத்தில் எல்லோருக்கும் மாப்பிள்ளைய புடிச்சு இருக்கு .மாப்பிள்ளை குடும்பமும் நல்ல குடும்பம்தான்” .

”அப்புறம் என்னம்மா பேசி முடிச்சிற வேண்டியதுதானே?” .

”இல்லைப்பா கொஞ்சம் கூடுதலா செய்முறை எதிர்பார்க்குறாங்க” .

”கவலை படாதீங்கம்மா செஞ்சுறலாம்.எனக்கு இருக்குறது ஒரே தங்கச்சிதான் என்ன என்ன கேக்குறாங்களோ அவ்வளவையும் செய்வோம் பேசி முடிங்கம்மா .கொஞ்சம் பணம் இங்கே சேர்த்து வைத்து இருக்கேன் அதோடு முதலாளியிடம் கேட்டால் பணம் தருவாரு .என் முதலாளி நல்ல குணம் .கண்டிப்பா கேட்ட பணம் தருவாரு .நீங்க கல்யாணத்துக்கு ஆகவேண்டிய வேலைய பாருங்க .அப்பாவிடம் கவலைப்பட வேணாம்னு சொல்லுங்க .நானும் முடிந்தால் கல்யாணத்திற்கு வருவதற்கு முயற்சி செய்றேம்மா .
நீங்க உடம்பை கவனித்து பார்த்துக்குங்க அம்மா .போனை வைக்கவாம்மா”.
................................................................

போனை வைக்கவாம்மா ,போனை வைக்கவாம்மா ,போனை வைக்கவாம்மா .

”டேய் சேகரு எழுந்திரிடா மணி ஆறு ஆகப்போவது .சீக்கிரம் வேலைக்கு இறங்காட்டி முதலாளி கத்துவாருடா.என்னடா புலம்புறே எப்போதும்போல கனவாடா” .

”ஆமாடா கனவுதான் .சீக்கிரம் கல்யாணம் நடக்கும்னு காத்துகிட்டு இருக்குற தங்கச்சி ,ஏதாவது என்னால் நடந்துறாதா என ஏங்கும் அம்மா ,எந்நாளும் ஆஸ்பத்திரியும் வீடுமா அலையுற சீக்காளி அப்பா எல்லோருக்கும் இருக்குற ஒரே நம்பிக்கை நான் .ஆனால் நான் சம்பாரிக்கும் பணம் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டவே சரியா இருக்கு .இதுல நான் என்னடா பண்ணமுடியும் .கனவுதான் காணமுடியும் .வாடா எப்போதும்போல வேலைக்கு போவோம் .இல்லாட்டி திட்டி தொலைவாரு”

Sunday, 10 June 2012

அவளிடம் நான் சொல்ல நினைத்த வார்த்தைகள்


எழுதாத கவிதை ஒன்றை
எழுதுவேன் என்றேன்
என்னவென நீ கேட்டாய்
உன் பெயர்தான் என
உன்னிடம் சொன்னேன்

சிரிக்காதே என்றபோதெல்லாம்
சிரித்துக்கொண்டே இருக்கிறாய்
சிதறுகிறது என் நெஞ்சம்
என்பதை அறியாமலே

என் புன்னகை தொலைத்தேன்
என்றேன்
எங்கே என்றாய்
உன் புன்னகையிடம் என்றேன்.


நிலவு அழகு என்றாய்
இல்லை என்றேன்
அப்புறம் எது என்றாய்
அது நீதான்
என்றேன்

என் பேனா
உன்னை கவிதை எழுத
மறுக்கிறது
காரணம் கேட்டேன்
உன் அழகுக்கான வார்த்தைகள்
என்னிடம் இல்லையேன
சொல்கிறது


Friday, 8 June 2012

ஆனந்தவிகடன் எனும் ஆலமரத்தில் இந்த வாரம் நானும்


லிவைஸ் ஜீன்சும் டெனிம் டீசர்ட்டும் ரேபான் கூலிங்கிளாஸ் போட்டு மெக்டொனால்ட் பர்கர் அல்லது கென்டக்கி சிக்கன் சாப்பிட பழகி இருந்தாலும் ,பக்கத்தில் நாடுகளில் போய் சுற்றித்திரிந்து வந்து இருந்தாலும் அடிக்கடி ஆற்றங்கரையின் சுவற்றில் கைலி கட்டி உட்கார்ந்து கதைகள் பேசிய அந்த கிராமத்தான் எட்டிபார்ப்பதை ஏனோ தவிர்க்கமுடிவதில்லை .

நேற்றையதினம் அவ்வாறே அமைந்தது எனக்கு ஒரு தொலைபேசியின் வழியாக வந்த செய்தியால் .நன்றாக உறங்கிய என்னை எழுப்பி உனக்கு ஒரு மகிழ்வான செய்தி என சொன்னான் நண்பன் .சொல்லிய செய்தியை கொஞ்சம் மனம் நம்ப மறுத்தது .ஏன் எனில் வெறும் பதினாறு பதிவே இதுவரை ப்ளாக்கில் எழுதி இருக்கிறேன் .நான் சென்ற மாதத்தில் இருந்து ப்ளாக்கில் எண்ணங்களுக்குள் நான் என்ற தலைப்பில் இதுவரை பதினாறு பதிவுகள் தான் எழுதி இருக்கிறேன் .அப்படி இருக்கும்போது உன் ப்ளாக் ஆனந்தவிகடன் துணை இதழான என் விகடன் திருச்சி பதிப்பில் வெளியாகி இருக்கு என சொன்னால் மனம் நம்புமா .மறுபடியும் நண்பன் சொன்னான் நெட்டில் செக் பண்ணி பாரு என .அவ்வாறே பார்த்தேன் .ஆம் ஆனந்தவிகடனில் என் பதிவு .
துள்ளிகுதிக்காத குறை ஒன்றுதான் என்னிடம் .நீண்டநாளாக வெளிவராத கிராமத்தான் நேற்று வெளியே குதித்துவிட்டான் . ஆனந்தவிகடனில் என் பதிவு வந்து இருக்கு என முதலில் பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன் .வரிசையாக வாழ்த்துக்கள் என நண்பர்களின் பின்னூட்டங்கள் .பின்பு ஏதோ உலகம் ஒரு நாள் என் கையில் என்பதுபோல என் நண்பர்களுக்கும் என் குடும்பத்தினருக்கும் போன் செய்து விசயத்தை சொன்னேன் .எல்லோரும் வாழ்த்தினர் .

இன்று காலையில்தான் என் மனைவியிடமும் மகளிடமும் பேசமுடிந்தது.மனைவி எப்பொழுதும்போல சந்தோசம் என சொன்னாள்.ஆனால் என் மகள் என்னிடம் பேசியதும்தான் தான் குழந்தையின் சந்தோசம் எப்படி என்பது புரிந்தது .என் மகள் என்னிடம் அத்தா [அப்பா ]நான் இந்த புத்தகத்தை என் பள்ளிகூடத்தில் என் நண்பர்களிடம் காட்டவா என குதுகலத்துடன் கேக்கும்போது ஒரு தந்தையாக சொல்லமுடியாத சந்தோசம் அடைந்தேன் .என் மனமும் குழந்தையோடு குழந்தையாக ஆனது .

நாள் ஒன்றுக்கு நான்கு தடவை போனால் போகுது என்று பேருந்து எட்டிப்பார்க்கும் ஊரில் பிறந்தவன் நான் .இன்று பொருளாதார வாழ்விற்காக அயல்தேசதில் இருந்துகொண்டு கணினிக்குள் தொலைந்துபோன வாழ்வியல் மிச்சங்களை எழுத்துக்களாக எழுத ஆரம்பித்தேன் ..அந்த எழுத்துக்கள் இன்று ஆனந்தவிகடனில் வெளியானது கண்டு மனம் அடைந்த சந்தோஷத்தில் இந்த பதிவு .

இந்த மகிழ்வான தருணத்தில் நான் ஒருவருக்கு நன்றி சொல்லாமல் விட்டால் நன்றாக இருக்காது .அவர் என் நண்பன் ரஹீம் கஸாலி.பேஸ்புக்கில் எழுதும் எழுத்துக்களை பார்த்து நீ இங்கே எழுதியது எதையும் உன்னாலேயே மறுபடியும் படிக்க முடியாது .நீ ப்ளாக்கில் வந்து எழுது என சொல்லி ப்ளாக்கை டிசைன் செய்து கொடுத்து இன்று ஆனந்தவிகடனில் வரும் அளவுக்கு கொண்டுவந்து இருக்கின்றார் .நன்றி ரஹீம் கஸாலி .

என் பதிவுக்கு வருகைதந்து படித்துக்கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி .உங்கள் ஆதரவில் இன்னும் எழுதுவேன் .

மறுபடியும் ஆனந்தவிகடனுக்கு என் நன்றி .

Wednesday, 6 June 2012

அப்பாடக்கர் எனும் அறிவாளிதமிழன்


உலக தொலைகாட்சிகளில் முதன்முறையாக என்று போடுவது போல உலக இணையதளங்களில் முதன்முறையாக என செய்திகள் போட துடிக்கும் அறிவாளி தமிழனே எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறாய் நீ .

இணைய இணைப்பையும் ,இனைய இணைப்பு உள்ள செல்பேசியயையும் கையில் வைத்துகொண்டு உலக உலாவந்து ,உள்ளூர் குட்டிசுவர் தாண்டி எல்லைகள் அற்று பேசுகின்றாய் .எல்லை என்று சொன்னது நாட்டின் எல்லைகள் அல்ல .எதை பேசுவதாக இருந்தாலும் ஒரு எல்லை வேண்டும் .ஆனால் நீ எல்லை கோட்டை மீறுதல் வேண்டும் என அடம்பிடித்து அலைந்துகொண்டு இருக்கிறாய் .

ஒவ்வொரு நாளும் உன்னை யாரேனும் கவனத்திகொண்டே இருக்கவேண்டும் என பேராசைபடுகிறாய்.ஆசைகொள்வதில் தவறு ஒன்றும் இல்லை .அர்த்தத்தோடு அந்த ஆசைகள் வேண்டாமா .

இன்று பேஸ்புக் உலகமே கொஞ்ச நேரத்தில் ஸ்தம்பித்து விட்டது .உன் மண்ணாய் போன யார் செய்திகளை முந்திதருவது என்ற ஆசையால் .யார் பக்கத்தை திறந்தாலும் பதிவுகளும் பதிவுகளை ஒட்டிய பின்னூட்டமும் ஒன்றை நோக்கியே கை நீட்டி செய்திகளை சொல்லிக்கொண்டே இருந்தன .

குஷ்பூவின் இடுப்பை கிள்ளியது உங்களுக்கு பதிவு போட்டு கும்மி அடிக்கும் நிகழ்வாக தெரிந்தது .ஏன் எனில் குஷ்பூ ஒரு நடிகை .பெரிய மார்பகங்களையும் இடுப்பையும் தொப்புளில் வளையம் மாட்டியதை மட்டுமே ரசிக்க பழகிய நமக்கு  அந்த உடம்புக்குள் உயிரும் உணர்வும் கலந்த ஒரு பெண் இருக்கிறாள் என்பதை மறந்து அருவெருப்பின் உச்சத்தையும் ஆபாசத்தையும் கலந்து எழுதுகிறாய் .

ஏன் இப்படி எழுதுகிறாய் நமக்கும் அம்மாக்கள்,அக்காக்கள் ,தங்கைகள் ,அத்தைகள் என பெண் வடிவில் உறவுகள் இருக்கிறது என சொன்னால் உள்ளே வராதே ஒதுங்கி போ என சொல்கிறாய் .எனக்கு குஷ்பூ உறவுக்காரங்க இல்லைதான் ,ஆனால் என் பார்வையில் பெண் வடிவில் அம்மாவையும் தன்னுள் ஒலித்துவைத்து இருக்கும் மனுஷி.

என்னையே திரும்ப கேட்க்கிறாய் எங்கள் குடும்ப உறவுகள் குத்தாட்டம் போடவில்லை .ஆதலால் எங்கள் குடும்ப உறவுகளை பதிவு எழுதி கும்மி அடிக்கமாட்டோம் .நீ வேண்டும் என்றால் குத்தாட்டம் ஆடச்சொல்லி எழுது என .என்ன சொல்வது உனக்கு பதில் .சினிமாக்காரி என்றால் நமக்கு கேவலமானவர்கள் .

இன்னொன்றையும் நீ எழுதுகிறாய் ரஞ்சிதா பற்றி எழுதாதவர்கள் யாரும் இருக்கின்றீர்களா என .அதுதான பிரச்சினை .செய்திகளின் வீரியம் எது என்பதை எப்பொழுது உணர ஆரம்பிப்பாய் .ரஞ்சிதாவின் செய்தி தனிப்பட்ட ஒன்று அல்ல .நித்தியானந்தாவின் ஆன்மிகம் கேள்விகுரியானபோழுது அவரையும் சேர்த்து எழுதும் அளவுக்கு தள்ளபட்டுவிட்டார் .உன் கேள்வி நியாயம் ஆனதுதான் .அன்று ரஞ்சிதா வை எழுதியது போலவே எல்லோரையும் எழுதுவேன் என சொல்ல வருகிறாயா .

அப்ப மஞ்சள் பத்திரிக்கை எழுதி பிழைப்பு நடத்துபவனுக்கும் ,நூறு லைக் ஐம்பது கமன்ட் வாங்க எழுதும் உனக்கும் என்ன வித்தியாசம் அன்பு தமிழனே .

நேற்று தான்யா எனும் நடிகையை மன உளைச்சல் கொள்ளும் அளவுக்கு தனிப்பக்கம் ஆரம்பித்து திட்டினாய் .இன்று குஷ்பூ இடுப்பு  நாளை எதை எழுதி தமிழன் என நிரூபிக்க போகிறாய் .

நான் இவ்வளவு எழுதியதால் என்னை உனக்கு திட்ட தோன்றலாம் .தாரளாமாக திட்டிக்கோள்.நான் கவலை அடையபோவதில்லை .நான் எழுதியது ஒரு தகப்பனாக ஒரு அண்ணனாக ,ஒரு தம்பியாக பெண்மையை மதிக்கும் ஒரு தோழனாக மட்டுமே இதை எழுதினேன் .

நீ நாளைய செய்திகளுக்கும் யார் முதலில் செய்திகள் தருவது என்பதற்காக உன் கணினியை எப்பொழும் போல பார்த்துக்கொண்டிரு

Monday, 4 June 2012

எனக்கு உதவிய பவர் ஸ்டார்......தலைப்பு பார்த்து தலையை சொரிந்துகொள்ளாதீர்கள்.இன்னும் ஒரு பதிவா பவர் ஸ்டாரை பற்றி என .இது என்னை பற்றியது .ப்ளாக் எழுத வந்து ஒரு மாதமே ஆனா நிலையில் இன்று சிலரையாவது என் பதிவுகள் சென்று அடைய காரணமாக பவர் ஸ்டார் இருந்து இருக்கிறார் .அவருக்கு என் முதல் நன்றி .

பேஸ்புக்கில் எனக்கு அதிகமாக டேக் செய்யப்பட்ட படங்களில் முதன்மையானது பவர் ஸ்டார் படங்கள்தான் .எல்லா படங்களுக்கும் பின்னோட்டம் போட்டு இருக்கிறேன் எனக்கு இவர் படங்கள் டேக் செய்யாதீர்கள் பயந்துவருது தூக்கம் வரமாட்டேங்குது என .அப்படி பின்னூட்டம் போட்ட நானே பவர் ஸ்டார் பொது மேடையில் கோபிநாத் எனும் அறிவாலியால் அசிங்கமாக கேள்வி கேட்டபோதும் அமைதியாக இருந்த பவர் ஸ்டார் பார்த்து ப்ளாக் எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.அந்த பதிவு எழுதிய அன்று எனக்கு அதிகமான வாசகர்கள் என் ப்ளாக் வந்து சென்றார்கள் .அன்றைய தினம் முழுவதும் தமிழ் மனத்தில் முதல் இடத்தில் இருந்தது .இப்ப சென்றவார இடுகையில் அதிக வாசகர்கள் பார்வையிட்ட முதல் இருபது இடத்தில் என் பதிவு பதினோராவது இடத்தில் இருக்கு .புதிய பதிவராகிய என்னை என் தளத்திற்கு வந்த ஊக்குவித்த வாசகர்கள் அனைவருக்கும் என்னை பவராக்கிய பவர் ஸ்டாருக்கும் என் நன்றி .

.................................................................................................................................
இன்று பத்தாவது பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானவுடன் எல்லோரும் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களை வாழ்த்தியும் ,மலரும் நினைவுகளையும் எழுதி உள்ளனர் .அதிக மதிப்பெண்கள் எடுத்து உள்ளார்கள் என சந்தொசப்பட்டாலும் எனக்கு இதில் சிறிது உடன்பாடு இல்லை .

காரணம் இன்று தனியார் பள்ளிகளில் ஒன்பதாவது வகுப்பு பாடங்களையும் ,பதினோராம் வகுப்பு பாடங்களையும் நடத்துவதே இல்லை .ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாவது வகுப்பு பாடங்கள் நடத்தபடுகின்றன .பதினோராம் வகுப்பில் பனிரெண்டாவது வகுப்பு பாடங்கள் எடுக்கபடுகின்றன .ஒரே வகுப்பு பாடங்களை இரண்டு வருடங்கள் படிக்கும்போது அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் வியப்பேதும் இல்லை .பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானவுடன் எங்கள் பள்ளி நூறு சதவிகித தேர்ச்சி அடைந்து உள்ளார்கள் என மாணவர்கள் படமும் நானுறு மார்க் வாங்கியவர்கள் என அவர்கள் மதிப்பெண்ணும் மாணவர்கள் புகைப்படத்தின் கீழே போட்டு டிஜிடல் போர்ட் வைக்கப்படுகிறது .இது சரியா .குறைந்த அளவு அறிவுடைய மாணவனே ஒரே பாடத்தை இரண்டுவருடங்கள் படிக்கும்போது முன்னூறு மதிப்பெண் எடுக்க கூடிய நிலை இருக்கும்போது நானுறுக்கும் மேல் மதிப்பெண்கள் எடுப்பதில் வியப்பேதும் இல்லை .தனியார் பள்ளிகள் அறிவுடைய கல்வித்தரத்தை மாணவர்களுக்கு கற்றுதருகிரார்களா இல்லை தொழிற்சாலை மிஷின்களை போல மாணவர்களை உருவாக்குகிரார்களா .

இப்பொழுது அரசு  பள்ளிகளிலும் கூட ஒன்பதாவதில் பத்தாவது பாடத்தை நடத்துகின்றனர் .
........................................................................................................................................
இங்கே ப்ளாக் எழுதுபவர்களிடம் அரசியல் எதுவும் நடக்கிறதா .நல்ல பதிவு ஒன்றிக்கு ஓட்டுபோட்டு அந்த பதிவு தமிழ் மனம் மகுடத்தில் இருக்கும்போது ,அல்லது நல்ல பதிவாக இருந்தாலும் எதிர்மறை ஓட்டு போடுவதேன்.நான் இங்க புதியவனாக இருப்பதால் எனக்கு ஏன் என புரியவில்லை .
........................................................................................................................

நேற்று பக்கத்து நாடான இந்தோனேசியாவிற்கு நண்பர்களுடன் சென்றேன் .ஏழை நாடு என அழைக்கப்படும் அந்த நாட்டில் எல்லாம் இருக்கிறது .எல்லாமும் கிடைக்கிறது .பணம் மட்டும் வேண்டும் .எனக்கு அங்கே ஒன்றை பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது .வாடகை கார் போல வாடகை  மோட்டர் சைக்கிள் .ஒவ்வொரு ஏரியாவிலும் சிறியவகை மொட்டோர்சைக்கிளுடன் பத்து பதினைந்து பேர் நிற்கின்றார்கள் .அந்த வழியாக போகின்றவர்களை அழைக்கிறார்கள் .ஏறியவுடன் சென்று சேரவேண்டிய இடத்திற்கு பத்து நிமிடத்திற்குள் அருகில் இருக்கும் இடத்திற்கு இரண்டு நிமிடத்திற்குள் கொண்டுபோய் விட்டுவிடுகின்றனர் .தூரத்திற்கு தகுந்த பணம் வாங்கிகொல்கின்றனர் .மொட்டோரில் போவது டாக்சியை விட விலை குறைவு .உள்ளூர் மக்கள் மொட்டோர்களில் தான் அதிகம் பயணிக்கின்றனர் .