Friday, 29 June 2012

ஏன் நினைவாகி போனாய் நீ........




அவள் ஜன்னலோரம் அமர்ந்து வீதியை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.கண்ணோரம் எப்பொழுது கீழே விழுவோம் என கண்ணீர் தேங்கி நின்றது .விம்மி அழ வழிதெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறாள் .கண்ணீருக்கு காரணம் என்ன சொல்லமுடியும் பெற்றோரிடம் .அலைபேசியை பார்த்துகொண்டே இருக்கிறாள் திடீரென உயிர் பெற்று அவன் குரல் அதில் கேட்கமுடியாதா என...

நேற்றுவரை சிரிக்கவைத்துகொண்டே இருந்தாயே .ஒரே நொடியில் என் உலகை இருளச்செய்து மறைந்துவிட்டாயே .எதற்காக என்னை பார்த்தாய் .பேசினாய் ,பழகினாய்.என்னை தவிக்கவிட்டு போய்விடவா?

உன்னை பார்த்த முதல் நாளை விட நேற்று உன்னை பார்த்த நினைவே என்னை காலம் முழுவதும் வதைக்க செய்யபோகிறது .மூளை சாவடைந்தும் உன் மூச்சு மட்டும் ஓடிக்கொண்டு இருந்ததே எதற்காக .என்னிடம் சொல்லாத வார்த்தைகள் எதையும் மிச்சம் வைத்து இருந்தாயோ .கண்ணீரற்று யாரையோ பார்ப்பதுபோல் உன்னை பார்த்துகொண்டு இருந்தேன் .யார் யாரோ வருகிறார்கள் .எதை எதையோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .அவர்களிடம் நான் யாரென்று சொல்லமுடியாமல் தவித்தது உனக்கு தெரியுமா?
 .
அங்கே அதிகமாய் அரற்றி அழுததில் உன் அப்பா ஒருவர் என தெரிந்தது .அவரிடம் போய் நான் யாரென்று சொல்வது .மகனை இழந்து தவிக்கும் உன் அப்பாவுக்கு நான் ஆறுதல் சொல்வதா இல்லை உன்னை இழந்து நான் தவிக்கிறேன் என சொல்வதா?.

நேற்று கடைசியாக சொன்னாய் உன் அப்பாவிடம் பேசப்போவதாக .என்ன எனக்கேட்டேன் .உன்னை விரும்புவதாய் சொல்லபோகிறேன் என்றாய் .சீக்கிரமே என் தேவதையை எனக்கு கல்யாணம் செய்துகொடுங்க என கேட்கப்போவதாய் சொன்னாய் .அமைதியா நான் இருந்தேன் .ஏன் அமைதியாக இருக்கே என கேட்டாய் .எனக்கு சந்தோசமா இருக்கு அதை வெளிபடுத்த தெரியல அப்படின்னு சொன்னேன் .அதுக்கும் சிரித்தாய் நீ .அந்த சிரிப்புதான் கடைசியாக நீ சிரிப்பது என்பது எனக்கு தெரியாது .மாலையில் உன்னை வந்து சந்திக்கிறேன் என சொல்லி சென்றாய் .


போன அரைமணி நேரத்துக்குள் மறுபடியும் போன் செய்தாய் .இப்பதானே பார்த்துட்டு போனே அப்புறம் மறுபடியும் ஏன் போன் செய்றே என்றேன் .என்னிடம் கொபபடுவதுபோல நடித்தாய் .ஏன் நடிக்கிறே என கேட்டேன் .அதுவும் தெரிந்து போச்சா என சொன்னாய் .சரி மாலையில் பார்ப்போம் என சொன்னாய் .சரி என சொன்னேன் .போனை அடைத்து விட்டாய் .
மறுபடியும் அரைமணி நேரத்தில் உன்னிடம் இருந்து போன் .உன்னை திட்டிவிடுவோம் என போனை ஆன் செய்தேன் .ஹலோ செல்வியா பேசுறது என யாரோ பேசினார்கள் .என்ன என என்று கேட்க்கும்போதே தலை சுற்றிவிட்டது .உன் பைக் ஆச்சிடன்ட் ஆகி உன்னை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக சொன்னார்கள் .உன்னை பார்க்க ஓடிவந்தேன் .அங்கே உன் மூச்சு மட்டுமே இயங்கிக்கொண்டு இருந்தது .உன் அப்பா வருகைக்காக மருத்துவமனையில் காத்து இருந்தார்கள் .என்னை யாரென கேட்டார்கள் .நான் என்ன சொல்வேன் நாளைய உலகம் எங்களுக்ககா காத்து இருந்தது எனவா?

உன் அப்பா வந்தார் .மருத்துவர்கள் எவ்வளவோ பேசினார்கள் உன் உடல் உறுப்புகளை தானம் செய்யச்சொல்லி .நானும் சொல்லலாம் என நினைத்தேன் உன் உறுப்புகள் மூலம் எங்காவது வாழ்ந்துகொண்டு இருப்பாய் என .ஆனால் என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை .உன் அப்பா கிராமத்து ஆளு .என் குழந்தையை கூறு போடவிடமாட்டேன் என சொல்லி உன்னையும் உன் மூச்சையும் மட்டுமே இங்கிருந்து எடுத்து சென்றுவிட்டார் .இன்று உன்னை தகனம் செய்துவிட்டதாக சொன்னார்கள் .

நான் அழவேண்டும் .யாரிடம் சொல்லி அழுவது .என் சிரிப்பையும் என் அழுகையும் ஒரு சேர எடுத்து சென்றுவிட்டாய் .வெளியில் மழை பெய்கிறது .என் கண்களில் இருந்து வெளியாகத கண்ணீருக்கு வானம் மழையாக தன் கண்ணீரை தந்துகொண்டு இருக்கிறது

10 comments:

  1. மனதை நெகிழச்செய்யும் படைப்பு. அருமை.

    ReplyDelete
  2. எதற்காக .என்னிடம் சொல்லாத வார்த்தைகள் எதையும் மிச்சம் வைத்து இருந்தாயோ .

    நெஞ்சம் கனத்துப்போனது அழ வைத்த வரிகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சசிகலா

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு நன்றி நு சொல்றதுக்கு தவறுதலா டெலீட் டை தட்டிவிட்டேன் .உங்கள் கருத்து அழிந்து விட்டது .மன்னிக்கவும் .உங்கள் வருகைக்கும் அன்புக்கும் நன்றி சுவனப் பிரியன்

      Delete
  4. ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன் சார் !
    (TM 3)நன்றி !

    ReplyDelete