Thursday, 18 October 2012

பூ...............பூ தெரியுமா உங்களுக்கு பூக்கள் தெரியுமா .எல்லாம் தெரிந்து இருக்கும் .தினசரி வாழ்வில் பூக்களை கடக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா இவ்வுலகில் .

பூ வாசம் உள்ளதும் வாசம் இல்லாததுமாக எத்தனை எத்தனை பூக்கள் இருக்கின்றன .ஒவ்வொரு நாளும் எதேனும் பூக்களை உற்று பார்த்துக்கொண்டே இருக்கிறேன் .அவை மொட்டாகவும் மலர்ந்த மலராகவும் தலையாட்டி சிரிக்கின்றன .எப்படியும் காய்ந்து உதிர்ந்துவிடுவோம் என தெரிந்தும் பயமற
்று சிரித்துக்கொண்டு இருக்கின்றன .

அதிகமாய் மலரும் முன்பே செடியில் இருந்து வேட்டையாடப்படும் மலராக மல்லிகைபூ இருக்கின்றது .முன்பு மல்லிகைபூக்கள் வாழைநாரில் தொடுக்கப்பட்டது .அப்படி தொடுக்கபட்டதாலேயே யாரையாவது பார்த்து பழமொழி சொல்லும்போது பூவோடு சேர்ந்து நாறும் மணப்பதுபோல என சொன்னார்கள் .இன்று வாழைநார் மறந்து நூர்கண்டுகளில் தொடுக்கபடுகிறது .

எங்கே என்ன நடந்தாலும் இந்த பூக்களுக்கு அங்கே என்ன வேலை .முதலில் முந்தி வருவது பூக்கள்தானே .வாசமாகவும் அலங்காரமாகவும்
எல்லா வீடுகளுக்கும் நுழைந்து விடுகின்றன .எவ்வளவு நாகரீகத்தின் உச்சியில் இருந்தாலும் ஒரு பெண் ஒரு முழம் பூவை தலையில் சூடும்போது அழகின் உச்சத்தை தொட்டவள்போல தெரிகிறாள் .

மணப்பெண்ணின் தலையில் ஏறி அமர்ந்த பூக்கள் முதலிரவு அறைக்குள்ளும் மெத்தைகளில் பரவிக்கிடக்கின்றது நசுங்கபோகிறோம் என தெரியாமலே .

ரோஜாக்கள் எப்பொழுதும் அமைதியாக இருப்பதாக தோணும் எனக்கு .வருடத்தில் வரும் ஒரு நாளுக்காக மற்ற அத்தனை நாட்களும் அமைதியாக இருக்கின்றன .பிப்ரவரி பதினாலு அன்று உலகம் முழுக்க ஒரு ஆன் கையில் இருந்து பெண் கைக்கு மாறிசெல்ல பூத்து இறுகும் ரோஜாக்கள் .அன்பை சொல்ல நாங்க மட்டுமே குத்தகை என ரோஜாக்கள்
பெருமைபட்டுகொள்கின்றன.

எனக்கும் பூக்களோடு வாசம் உண்டு .அது அன்பையும் கொடுத்து இருக்கு
அதே நேரம் வெறுப்பையும் தந்து இருக்கு .

எங்கேனும் பயணத்தில் ரோட்டோரங்களில் பூக்கள் கொட்டிகொண்டே போய் இருந்தால் யாரோ இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கி சென்றார்கள் என தெரிகிறது .அதை சொல்லவும் பூக்கள் தேவையாக இருக்கு .

புது கணவன் மனைவிக்கு பூ வாங்கி வரும்போது வீட்டில் இருக்கும் தங்கைக்கு தெரியாமல் மனைவிக்கு கொடுக்க அங்கே மறைக்கப்படும் பூவாகவும்  ஆகிவிடுகிறது .

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் பூக்கள் பற்றி .உங்களுக்கும் தெரிந்து இருக்கும் பூக்கள் பற்றி

Wednesday, 17 October 2012

மாற்றான் - தோற்றானா வென்றானா?மாற்றான் 

ரொம்ப எதிர்பாப்பை ஏற்ப்படுத்தும் எந்த படமும் அதை நேர் செய்வதில் இருந்து தவறுகிறது .சமீப உதாரணம் மாற்றான் .

எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய காரணம் சூர்யா ,கே வி ஆனந்த் ,ஹாரிஸ் ஜெயராஜ் என பிரபலங்கள் இந்த படத்தில் இடம் பெற்றதுதான் .

கதை ஒரு வரியில் சொல்லலாம் .ஒட்டி பிறந்த இரட்டையர் ஒரு இதயத்தில் வாழ்கின்றனர் .சொந்த அப்பாவே வில்லன் .இரட்டையரில் ஒருவர் இறந்துவிட இன்னொருவர் அப்பாவை எலிகளுக்கு இ
ரையாக்குவது கதை,

சூர்யா என்னதான் நூத்துக்கு இருநூறு சதம் தன் உழைப்பைகொட்டி நடித்தாலும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது கதையோட்டத்தில் ஏற்ப்படும் தொய்வுகளால் .எண்ணிக்கையில் சூர்யாவுக்கு இன்னொரு படமாக அமைந்து விட்டது .இறுதிகாட்சியில் அழுது நடிக்கும்போது ஏனோ ஏழாம் அறிவு படம் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை .அதோடு எரிச்சல் வருவதையும் தடுக்கமுடியவில்லை .

காஜல் அகர்வால் படத்திற்கு பலமா பலமில்லையா என்பதை கணிக்கமுடியவில்லை .படத்தில் வருகிறார் ,சூர்யாவிற்கு மொழி பெயர்க்கிறார் ,கொஞ்சம் ஆடுகிறார் அவ்வளவுதான் .இரட்டையரில் தான் காதலித்தவன் இறந்தவுடன் எந்தவித மன அதிர்வுகளும் இல்லாமல் இன்னொரு சூர்யாவுடன் கை கோர்க்கிறார் .

சூர்யா அப்பாவாக வருபவரை சிங்கம் ஹிந்தி பதிப்பில் பார்த்து இருக்கிறேன் .அவருடைய நடிப்பை என்ன சொல்வது .பத்தோடு பதினொன்றாக வருவது போல வந்து மகனிடம் அறிவுரை வாங்கி கடைசி காட்சியில் செத்து போகிறார் .

அப்புறம் கே வி ஆனந்த் .ஷங்கரிடம் ஒளிப்பதிவு செய்தபோது பிரமாண்டமாய் கதை சொல்வதை கவனித்து இருப்பார் போல .அதை வைத்து அயன் ,கோ போன்ற வெற்றிப்படங்களை இயக்கி இருந்தார் .அதில் கொஞ்சம் மமதை ஏறி இருக்கலாம் .அதே போல இந்த படமும் வந்து விடும் என எடுத்து சொதப்பி விட்டார் .படம் ஆரம்பித்ததில் இருந்து ஒரு காட்சி நன்றாக இருந்தால் அடுத்தகாட்சியில் தொய்வாக நகரும் .இதே போல படம் நகருவதால் முழுமையாய் ஒன்றி படம் பார்க்கமுடியவில்லை .

படத்தில் மிகபெரிய பலம் சண்டை காட்சிகள் அதை படமாக்கியவிதம் ஆகியவற்றை சொல்லலாம் .படத்தில் வரும் சண்டை காட்சிகள் இதுவரை வந்த படங்களில் உச்சம் என சொல்லலாம் .ஒளிபதிவாளர் சௌந்தரராஜன் கடுமையாக உழைத்து இருக்கிறார் .சண்டைபயிர்ச்சி இயக்குனரையும் பாராட்டியே ஆகணும் .

படத்துக்கு மிகபெரிய திருஷ்டி போட்டு ஹாரிஸ் ஜெயராஜின் இசை .ஒரு பாடலின் இசையை மட்டும் வைத்துக்கொண்டு எத்தனை படத்துக்குத்தான் இசை அமைப்பார் என தெரியவில்லை .கார் துரத்தல் காட்சிகளில் பயன்படுத்தி இருக்கும் இசை ஏ ஆர் ரகுமான் சிவாஜி படத்தில் திரை அரங்கு சண்டைகாட்சியில் பயன்படுத்திய இசை .

படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் உங்களை திருப்திபடுத்தகூடும் .இல்லையேல் எரிச்சலை தரும் .

ஆனாலும் ஒருமுறை பார்த்து வரலாம் .

கொசுறு .திரை அரங்கில் டிக்கெட் கிழிப்பவர் நான்கு நாட்களாக ஓரளவு திரை அரங்கம் நிறைகிறது என்று சொன்னார் .

Friday, 12 October 2012

கனவாய் போன மின்சாரம்


எல்லோரும் மாஞ்சு மாஞ்சு எழுதிட்டாங்க மின்சாரம் இல்லாதது பத்தி .நானும் அதை எழுதணுமா என நினைக்கும்போதே எழுது மனது ஆணையிடுகிறது .என்ன எழுதலாம் .

நிறைய எழுதலாம் எங்க ஊரு மின்சாரம் பற்றி .எனக்கு விவரம் தெரிந்த 1980 ல எங்க ஊர்ல மின்சாரம் இருந்த பதினைந்து வீடுகளில் எங்க வீடும் ஒன்னு .மின் விளக்கு ஆன் செய்தோம் என்றால் அப்படி ஒளிரும் என சொல்ல ஆசைதான் .ஆனா அப்படி எல்லாம் ஒளிராது .மின்சாரம் இருந்தாலும் மண்ணெண்ணெய் விளக்கு வைத்துதான் எந்த வேலையும் செய்யமுடியும் .இரவு பத்து மணிக்கு லைன் மாத்துவாங்க .அப்ப போனா போகுதுன்னு இன்னும் கொஞ்சம் கூடுதலா மின்சாரம் வரும் .படிக்கும்போதுகூட குத்துவிளக்குதான் வைத்து படிப்போம் .அப்படி படிச்சும் நான் தேறாம போனது வேறுவிசயம் .

1990 ல பக்கத்து ஊருக்கு ட்ரான்ஸ்பார்மர் புதிதாக வைத்தார்கள் .எங்க ஊர்ல இருந்து ரெண்டு கிலோமீட்டர் தள்ளி அமைந்து இருந்தது அது .அதனால மின்சாரம் இன்னும் கொஞ்சம் கூடுதலா வந்தது .அப்ப எங்க வீட்ல மிச்சியோ ,கிரைண்டரோ ,தொலைகாட்சி பெட்டியோ இல்லை கூடுதலா மின்சாரம் தேவைபடுவதர்க்கு .அப்ப எங்க அம்மா அம்மியில் மசாலை அரைத்தும் ,ஆடுகல்லில் மாவு அரைத்தும் விறகடுப்பில் ஆக்கித்தந்த உணவின் சுவை இன்னும் நினைவிலும் நாக்கில் ருசியும் இருக்கவே செய்கிறது .

1992 la புதிதாக வீடுகட்ட ஆரம்பித்தோம் .அப்ப வீட்டுக்கு மின்சாரத்துக்கு அப்ளை செய்ய மின்வாரிய அலுவலகம் சென்றோம் .அங்கே எனக்கு தெரிந்த நண்பர் இருந்தார் .அவர் சொன்னார் நீங்க கட்டும் வீடு பெரிதாக இருக்கு அதனால த்ரீபேஸ் மின்சாரத்துக்கு அப்ளை செய்யுங்க என்றார் .சரி என நானும் அவ்வாறே செய்தேன் .எங்க ஊர்லேயே த்ரீபேஸ் மின்சாரத்துக்கு அப்ளை செய்து வாங்கிய முதல் வீடு எங்க வீடுதான் .எங்க வீட்டுக்கு த்ரீபேஸ் மின்சாரம் கொடுக்க போஸ்ட் மரத்தில் இரண்டு ஓயார்தான் எப்பொழுதும் இருந்தது .இன்னும் ஒரு ஒயர் புதிதாக போட்டுவந்து எங்க வீட்டுக்கு லைன் கொடுத்தாங்க .

1993 la எங்க புது வீட்டுக்கு குடிபெயர்ந்தோம் .எனக்கும் அந்த வருடம்தான் திருமணம் நடந்தது .இப்ப எங்க வீட்ல புதிதாக தொலைகாட்சி பெட்டி ,ஐஸ் பெட்டி ,விடியோ,கிரைண்டர் ,மிச்சி என அனைத்து மின்சாரம் தேவைப்படும் பொருளும் இருந்தது .த்ரீபேஸ் மின்சாரம் இருந்தும் நிறைய மின் உபயோகபொருள் இருந்ததால் ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக ச்டேப்லைசர் பொறுத்தவேண்டி இருந்து .இந்த சமயம் எங்க ஊரில் நிறைய வீடுகளில் மின்சாரம் வந்துவிட்டது .தூரத்தில் இருந்ததால் கொஞ்சம் மின்சாரம் பற்றாக்குறையாக வரும் .பத்துமணிக்குமேல்தான் டியூப்லைட் எரியும் .

1995 la முதன் முதலாக மலேசியா வந்துவிட்டேன் .அதன் பின்பு எங்கள் வீட்டுக்கு சில அடிகள் தூரத்திலேயே புதிய ட்ரான்ஸ்பார்மர் நிறுவி விட்டார்கள் .எங்கள் ஊரின் மின்பற்றாக்குரையும் நீங்கியது .மிக சந்தோஷமாக இருந்துவந்தோம் .

இந்த நிலையில்தான் ஆற்காடுவீராசாமி மின்துறை அமைச்சராக இருந்தபோது இரண்டுமணிநேர மின் தடை இருந்தது .அது நட்ட நடுசென்டர்கள் எனும் நடுநிலைவாதி புலிகள் முகநூல் மற்றும் ப்ளாக்கரில் கலைஞரையும் ,ஆற்காடுவீராசாமி அவர்களையும் திட்டுவதற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் பெரும் உதவிபுரிந்தது இந்த கண்ணில் காணாத மின்சாரம் .

இப்ப தமிழகம் காக்க வந்த தங்கத்தாரகை ,அகில உலக அகிலாண்டேஸ்வரி என அடி வருடிகளால் வர்ணிக்கப்படும் ஜெயலலிதா ஆட்சியில் பதினெட்டு மணிநேரம் சில நாட்கள் இருபத்தி மூணேகால் மணிநேரம் மின்சாரம் எங்கே இருக்கு அல்லது போகிறது என்பது தெரியவில்லை .

இனிமேல் காணமல் போனவர்கள் வரிசையில் மின்சாரத்தையும் சேர்க்கவேண்டியதுதான் .

கனவுகாணுங்கள் அப்துல்கலாம் சொன்னார் .நான் சொல்றேன் கனவுகானுகள் கனவிலாவது உங்கள் வீட்டில் இருபத்துநாலு மணிநேரம் மின்சாரம் இருப்பதாக 

Thursday, 11 October 2012

பூர்விகா மொபைலின் பகல் கொள்ளைபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ  கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க....

நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் சாம்சங் நோட் செல்போனுக்கு ஸ்க்ரீன் ப்ரோடக்டர் வாங்குனேன் .நான் விலை எவ்வளவு என்று கேட்க்கைலேயே என் போனை வாங்கி துடைத்து சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டனர் .அப்புறம் ஸ்கிரின் ப்ரடக்டரை ஒட்டி கையில் கொடுத்து ரூபாய் எழுநூற்று ஐம்பது ரூபாய் கேட்டார்கள் .என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை .விதியோ என கொடு
த்துவிட்டு வந்தேன் .வெளியில் வந்து வேறு ஒரு கடையில் அதே ஸ்க்ரின் ப்ரோடக்டரை விலை கேட்டேன் .அவர்கள் சொன்ன விலை வெறும் முன்னூறு ரூபாய் மட்டுமே .

மலேசியாவில் இருபது வெள்ளிக்குமேல் எந்த ஸ்க்ரின் ப்ரடக்டர் இல்லை .இந்திய மதிப்பில் ரூபாய் முன்னூற்று நாற்ப்பது மட்டும் .பூர்விகா மொபைல்ஸ்ல போட்டது சீனா தயாரிப்பு .மலேசியா விழும் சீனா தயாரிப்புதான் .

முன்னூறு ரூபாய்க்கு வேறு கடையில் கிடைக்கும் ஒரு பொருள் பூர்விகாவில் எழுநூற்று ஐம்பது ரூபாய் .எவ்வளவு கொள்ளை .

சீனா மொபைல்ஸ் வாங்குரவுங்க இது போன்ற பெரிய கடையில் வாங்காதீங்க .இங்கே நீங்க இரண்டாயிரம் கொடுத்து வாங்கும் ஒரு போன் சிறிய கடைகளில் வெறும் எண்ணூறு ரூபாய்க்கு கிடைக்கிறது .

விளம்பரங்களையும் ,கடை பகட்டுக்களையும் நம்பி ஏமாறாதீங்க

Friday, 5 October 2012

ஒரு கதவின் கதைகதவு இல்லாத வீடுகள் ஏதேனும் இருக்குமா .கதவை இதுவரை வீடு அடைக்கும் ஒரு பகுதியாகவே நினைத்துவந்து இருக்கிறேன் .ஆனால் நேற்று பார்த்த காட்சி ஒன்று என் நெஞ்சில் அறைந்தது போல இருந்தது .ஒரு பயணம் மேற்கொண்டு இருந்தேன் .அப்பொழுது ஒரு பகுதியை கடக்கும்போது பழைய பொருட்கள் விற்கும் கடை ஒன்றை கடக்க நேரிட்டது .

அங்கே கண்ட காட்சிகள் மனதில் சஞ்சலத்தை உண்டுபண்ணியது .அங்கே கண்ட அத்தனை பொருட்களும் வீடுகள் உடைத்
து சேகரித்த ஜன்னல்கள் ,கதவுகள் ஆகியவை .வரலாற்று கூடங்களில் கண்ட காட்சிகள் போல இருந்தது கதவுகளை பார்த்த பொழுது .

ஒவ்வொரு கதவும் என்னிடம் ஏதோ சொல்ல வருவதுபோல இருந்தது .நாங்கள் வாழ்ந்த வாழ்வு எப்படிபட்டது என கேட்பதுபோல இருந்தது .அங்கே கிடந்த கதவுகள் சில தலைமுறை வாழ்க்கைதனை பார்த்து வந்ததுபோல இருந்தது .ஒவ்வொரு கதவுக்கும் சில சரித்திரங்கள் கண்டிப்பாக இருந்து இருக்கும் என தோன்றியது .

சந்தோஷமாக வாழ்ந்த குடும்பத்து கதவுகள் வேகமாக அறைந்துசாத்தபடாமல் மிக மென்மையாக கையாளப்பட்டு இருக்கலாம் .கோபமும் குரோதமும் கொண்ட குடும்பத்து கதவுகள் சாத்தப்படும்போது இடி விழுந்ததுபோல அறைந்து சாத்தப்பட்டு இருக்கலாம் .

சந்தோசத்தையும் துக்கத்தையும் எப்பொழுதும் மௌனாமகவே காலம் காலமாக பார்த்துகொண்டு வருகின்றன கதவுகள் .சில கதவுகளில் அளிக்கபடாத சந்தனமும் குங்குமமும் மிச்சமாக ஒட்டி இருந்தது .யாரேனும் அந்த கதவுகளுக்கு பூஜைகள் செய்து இருக்கலாம் .

ஜன்னல்களும் அழுவதுபோல இருந்தது .எவ்வளவு சந்தோசங்கள் எவ்வளவு ஊடல்கள் எவ்வளவு சண்டைகள் அறைக்குள் நடந்தபோதெல்லாம் சாட்சியாய் இருந்தது அந்த ஜன்னல்கள்.
நிலவு வானில் தோன்றியபோதெல்லாம் அதன் ஒளியை அறைக்குள்
அனுமதித்து தென்றலையும் உடன்வர சம்மதித்து எல்லோருக்கும் சந்தோசங்களை கொடுத்தது ஜன்னல்கள்தானே.

யாரும் அறியாத ரகசியங்கள் முதலில் அறிவது கதவுகளும் ஜன்னல்களும்தானே .

வீடுகளுக்கு பாதுகாவலாகவும் ,வீட்டில் நடக்கும் சந்தோஷ நிகழ்வுகளுக்கு முதல் வரவேற்ப்பாளராகவும் கதவுகள்தானே இருக்கு .

ஒரு வீட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்துவந்த கதவுகளும் ஜன்னல்களும் மனிதர்களுக்கு வரும் மரணம் போல கால மாற்றத்தில் வீடுகள் இடிக்கப்பட்டு பெயர்தெடுக்கப்படுமபோது அவற்றின் அழுகுரலை
நாம் கேட்டு இருப்போமோ