எழுதாத கவிதை ஒன்றை
எழுதுவேன் என்றேன்
என்னவென நீ கேட்டாய்
உன் பெயர்தான் என
உன்னிடம் சொன்னேன்
சிரிக்காதே என்றபோதெல்லாம்
சிரித்துக்கொண்டே இருக்கிறாய்
சிதறுகிறது என் நெஞ்சம்
என்பதை அறியாமலே
என் புன்னகை தொலைத்தேன்
என்றேன்
எங்கே என்றாய்
உன் புன்னகையிடம் என்றேன்.
நிலவு அழகு என்றாய்
இல்லை என்றேன்
அப்புறம் எது என்றாய்
அது நீதான்
என்றேன்
என் பேனா
உன்னை கவிதை எழுத
மறுக்கிறது
காரணம் கேட்டேன்
உன் அழகுக்கான வார்த்தைகள்
என்னிடம் இல்லையேன
சொல்கிறது
Tweet |
கவிதைகள்...அதிலும் காதல் கவிதைகள்
ReplyDeleteஏன்...(பெரும்பாலும்) வாசிக்கும் போது சந்தோசத்தை மட்டுமே தருகிறது??
//என் பேனா
ReplyDeleteஉன்னை கவிதை எழுத
மறுக்கிறது
காரணம் கேட்டேன்
உன் அழகுக்கான வார்த்தைகள்
என்னிடம் இல்லையேன
சொல்கிறது//
அழகா இருக்கு நண்பரே...........
மிக்க நன்றி ராஜ உங்கள் வருகைக்கு
Deleteகவிதை!
ReplyDeleteஉணர்வு பூர்வமாக!
உணர்ச்சி பூர்வமாக!
seeni என் ஆரம்ப பதிவில் இருந்து இப்பொழுது வரை என் தளத்திற்கு வந்து படித்து என்னை ஊக்கபடுத்தி வருகின்றீர்கள் .மிக்க நன்றி
Deleteஉங்கள் புன்னகையை மட்டுமல்ல வார்த்தைகளையும் களவாடி விட்டாலோ ரசிக்கும் படியாக இருந்தது .
ReplyDeleteசசிகலா உங்கள் வருகையும் கருத்தும் இன்னும் என்னை மென்மேலும் எழுததூண்டும் .மிக்க நன்றி
Deleteகவிதை கவிதை பாய் ...
ReplyDeleteநிலவு அழகு என்றாய் இல்லை என்றேன் அப்புறம் எது என்றாய் அது நீதான் என்றேன்
அருமை பாய்
மாஹின் மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Deleteநல்ல வரிகள் சார் ! வாழ்த்துக்கள் ! நண்பர் கஸாலி பதிவின் மூலம் உங்கள் தளத்திற்கு வந்தேன். தொடருங்கள் ! நன்றி !
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்
DeleteNICE ANNA.....
ReplyDelete