Saturday, 15 December 2012

கும்கி- நல்ல முயற்சி.....ஆக மிக சிறந்த படம் என சொல்ல முடியாதுதான்.ஆனால் நல்ல படம்.

கதை எப்பொழுதும் சொல்லபட்ட கதைதான்.

அதை காட்சியாக எடுத்தவிதம் அருமையாக இருக்கு.

கதை நாயகன் பிரபு மகன்.நல்ல தொடக்கம் என சொல்லலாம்.அடுத்த படங்களில் இன்னும் கொஞ்சம் முயற்ச்சிக்கவேண்டும்.முதல் படம் எனும் அளவில் நல்ல நடிப்புதான்.

கதை நாயகி லட்சுமி மேனன்.பரவாயில்லை ரகம் நடிப்பு.ஆனால் அவர் அழகு கூடுதல் இம்சை நமக்கு.இன்னும் எனக்கு கன்னுக்குல்லே இருக்கு அவர் முகம்.

தம்பி ராமையாவும் உன்டியல் எனும் கேரக்டரில் வரும் இன்னொரு பய்யனும் நகைச்சுவையில் நம்மை ஓரளவு சிரிக்கவைத்து இருதியில் உயிரை விட்டு நம்மை கொஞ்சம் அழ வைக்கின்றனர்.

அப்புறம் அந்த யானை.ராம நாராயணன் படத்தில் வரும் மிருகங்கள் போல இல்லாமல் கதையோடு பயனித்து கடைசி காட்சியில் நாயகனை காப்பாற்றி உயிரை விடுகிறது.

ஒளிப்பதிவு மிக சிறந்தது.ஒளிப்பதிவுக்காகவே இந்த படத்தை மறுபடியும் பார்க்கலாம்.கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ஒளிப்பதிவு.

இயக்கம் பிரபு சாலொமன்.நல்ல இயக்கம்தான்.நல்ல படத்தையே கொடுத்து இருக்கிறார்.ஆனால் மைனா படம் பார்த்துவிட்டு அதே நினைப்பில் போனால் நீங்க ஏமாந்து போவீர்கள்.மைனா படம் ஆரம்பித்ததில் இருந்து தடக் தடக் எதிர்பாராத காட்சிகள் மாறும்.கிளைமேக்ஸ் பதினைந்து நிமிடத்துக்குல் மூன்று கிளைமேக்ஸ் காட்சிகள் வரும்.அதுபோல எதுவும் இல்லாமலே நல்லதொரு படமாக இருக்கிறது.

திரை அரங்கில் பார்க்க கூடிய நல்லதொரு படமே கும்கி

Sunday, 18 November 2012

தனியார் மருத்துவமனைகளின் அலட்சியமும் ஒரு உயிரின் ஊசலாட்டமும் . - ஒரு நேரடி ரிப்போர்ட்


தீபாவளி இரவு அன்று டெங்கு காய்ச்சலுக்கு அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த என் மச்சானை உடனடியாக திருச்சியில் சேர்க்க சொல்லிவிட்டார்கள் .என் மச்சான் வாய் பேசமுடியாதவர் .இரவு பத்து மணிக்குமேல்தான் திருச்சியில் சேருங்கள் என்று சொன்னார்கள் .

அதன்பின்பு என் கிராமத்தில் இருந்து வாடகை கார் எடுத்துக்கொண்டு என் மச்சான
ையும் அவர் மனைவியையும் மற்றும் இரண்டு பெண்கள் என் மகன் ஆகியோர் திருச்சி பயணமானோம் .திருச்சியை நாங்கள் சென்று அடையும்போது இரவு மணி ஒன்று .இதற்க்கு இடையில் என் மச்சான் காரில் பட்டபாடு சொல்லி அழமுடியாது .வாய் பெசமுடியாதவரால் ஒன்றும் சொல்லமுடியாமல் துடிப்பதும் அழுவதுமாக எங்களோடு பயணித்தார் .

திருச்சியில் நாங்கள் முதலில் சென்றது அமெரிக்கன் மருத்துவமனை .அங்கே இருந்த ஒரு மருத்துவ பெண்மணி மருத்துவர்கள் அனைவரும் விடுமுறையில் உள்ளனர் .இப்ப இங்கே தங்குவதற்கு பெட்டும் இல்லை .நோயாளி அன் கண்டிசனில் இருக்கிறார் .உடனடியாக வேறு ஒரு மருத்துவமனையில் சேருங்கள் என்று சொல்லி விட்டனர் .

அதன்பின்பு நாங்கள் சென்றது கே எம் சி மருத்துவமனைக்கு .அங்கே இருந்த ஒரு பரதேசி நாய் கொஞ்சம்கூட ஈவு இறக்கம் இல்லாமல் இங்கே இப்பொழுது அனுமதிக்க முடியாது .நீங்க வேறு மருத்துவனை பாருங்க என சொல்லிவிட்டான் .நாங்கள் என் மச்சானின் நிலையை எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் அரசு மருத்துவமனையில் சேருங்கள் என சொன்னான் .நேரம் ஆக ஆக என் மச்சான் வயிறு வலியில் துடிப்பதும் நெஞ்சை அடைப்பதுமாக அவதிப்பட்டுகொண்டு இருந்தார் .

அதன்பின்பு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பிரண்ட் லைன் மருத்துவமனை சென்றோம் .அங்கே இருந்த நர்சும் இப்ப இங்கே சேர்க்கமுடியாது என சொல்லிவிட்டனர் .அதன்பின்பு கீதாஞ்சலி மருத்துவமனை சென்று கேட்டோம் .அவர்களும் அனுமதிக்க மறுத்தனர் .அங்கே இருந்த நர்ஸ் சுதர்சனா மருத்துவமனையில் சேருங்கள் என்று சொன்னார் .நாங்கள் சுதர்சனா மருத்துவமனை சென்று அனுமதிக்க சொன்னோம் .அங்கே இருந்த
நர்சுகள் என் மச்சானை அனுமதித்து பரிசோதனையும் செய்தனர் .என்ன செய்கிறது என கேட்டனர் .நாங்க அறந்தாங்கி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சேர்த்து இருந்ததையும் வெளியே சென்றது கருப்பாக இருந்தததையும் சொன்னோம் .
நர்ஸ் போய் மருத்துவரிடம் பேசிவிட்டு வந்து இங்கே அனுமதிக்க முடியாது மருத்துவர் ஊரில் இல்லை என்று சொல்லி விட்டனர் .எவ்வளவோ சொல்லி பார்த்தோம் .அவர்கள் கேட்கவில்லை .

அதன்பின்பு விடியல் காலை நான்கு மணிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு நான் மட்டும் காரில் திரும்பிக்கொண்டு இருந்தேன் .காலை ஆறுமணிக்கு திருச்சியில் இருந்து தொலைபேசி வருகிறது .என் மச்சானுக்கு அடுத்து அடுத்த பெட்டுகளில் இருந்த மூன்று பேர் மரணம் அடைந்து விட்டார்கள் என்று .அதை பார்த்த என் மச்சான் அவரின் தங்கையின் காலில் கும்பிட்டு விழுந்து இருக்கிறார் .என்னை இங்கே வைக்காதே .என்னை வெளியில் எங்காவது கொண்டுபோய் காப்பாற்று என அழுது இருக்கிறார் .
அந்த சமயம் அங்கே வந்த காலை டூட்டி மருத்துவரிடம் கேட்டதற்கு உங்கள் அண்ணன் அன் கண்டிசனில் இருக்கிறார் .எது வேண்டுமானாலும் நடக்கலாம் என சொல்லி விட்டார் எந்த இரக்கமும் இன்றி .

அதன்பின்பு கொண்டுபோன எந்த பொருளையும் எடுக்காமல் அங்கே இருந்தவர்களுக்கு தெரியாமல் என் மச்சானை ஆட்டோவில் அழைத்துக்கொண்டுபோய் ஏ பி சி மருத்துவமனை கொண்டுபோய் இருக்கின்றனர் .அங்கேயும் அவர்கள் சேர்க்கவில்லை .இது எல்லாவற்றையும் பார்த்துகொண்டு இருந்த என் மச்சான் மரண பயத்தில் அழுது இருக்கின்றார் .

ஊருக்கு வந்த நான் இன்னும் இரண்டுபேரை அழைத்துக்கொண்டு என் உறவினர் காரோடு புதுக்கோட்டையில் காத்துகொண்டு இருந்தேன் .திருச்சியில் இருந்து ஒரு கார் எடுத்துக்கொண்டு என் மச்சானும் உறவினர்களும் வந்து சேர்ந்தனர் .கடைசி முயற்சியாக மச்சானை அழைத்துக்கொண்டு மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை சென்றோம் பகல் பனிரெண்டு மணி அளவில் .அவர்கள் உடனடியாக எமெர்ஜென்சி வார்டில் அனுமதித்து அவசர சிகிச்சை செய்தனர் .

இறந்துபோய் விடுவார் என நாங்கள் நினைத்த என் மச்சான் இன்று நலமுடன் உள்ளார் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்ததால் .

திருச்சி கே எம் சி ,அமெரிக்கன் ,பிரண்ட் லைன் ,கீதாஞ்சலி ,சுதர்சனா போன்ற மருத்துவமனைகள் எதற்க்காக .அவர்களுக்கு பணம் மட்டுமே முக்கியமா .ஒரு உயிரின் அவசியம் தெரியாமல் எதற்க்காக மருத்துவமனை நடத்துகிறார்கள் .

Tuesday, 13 November 2012

துப்பாக்கி சீறியதா? பதுங்கியதா?- ஒரு அலசல்படம் பார்க்கபோகும் முன்பு எந்த எதிர்பார்ப்பையும் சுமந்து செல்லாமல் துப்பாக்கி படத்திற்கு சென்றேன் .படம் ஆரம்பித்து பதினைந்து நிமிடம் சென்றே திரை அரங்கினுள் சென்றேன் .

கதை என்ன என்பதை ஒரு வரியில் முடித்துவிடலாம் .ராணுவத்தில் வேலை பார்க்கும் விஜய் விடுமுறையில் ஊருக்கு வரும்போது தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவது கதை .அதை சொன்னவிதம்தான் படம் நன்றாக அமைந்து இருக்கிறது .

விஜய் பொண்ணு பார்க்
கபோய் அந்த பொண்ணு ரொம்ப அடக்க ஒடுக்கமா இருக்க விஜய் வேணாம்னு சொல்லிட்டு காஜல் அகர்வாலை குத்துசண்டை போட்டியில் பார்க்கும்போது சிரிப்பு வருவதை தடுக்கமுடியவில்லை .விஜயோடு சேர்ந்து சத்யனும் காமடியில் கலக்கி இருக்கிறார் .காஜல் அகர்வால் கதாநாயகி இலக்கணப்படி சில காட்சிகளும் பாடல் காட்சிகளில் வந்தாலும் காமடியிலும் நடிப்பிலும் அசத்தி இருக்கிறார் .

விஜயை இதற்க்கு முன்பு இவ்வளவு அழகாக யாரும் காட்டி இருக்கின்றார்களா என தெரியவில்லை .ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் இயக்குனர் முருகதாசும் மிக மெனக்கெட்டு இருக்கின்றனர் .விஜய் காட்சியின் தன்மை உணர்ந்து நடித்து இருக்கிறார் .தான் இதற்க்கு முன்பு நடித்த சாயல் வராமல் இருக்க மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் .சண்டைகாட்சிகளில் விஜயின் ஆக்சன் அவரின் ரசிகர்களுக்கு செம தீனி .பாடல் காட்சியிலும் தான் ஒரு சிறந்த டான்சர் என்பதை இந்த படத்திலும் நிருபித்து இருக்கிறார் .

அப்புறம் அந்த தீவிரவாதிகள் எல்லா படத்திலும் வருவதை போல இந்த படத்திலும் கடைசிக்காட்சியில் உயிரை விடுவதற்காக நடித்து இருக்கின்றார்கள் .

எடிட்டர் உழைப்பு நன்றாக தெரிகிறது .மிக நீளமான படத்தை போர் அடிக்காமல் இருப்பதற்கு அவரது கத்தி உதவி இருக்கின்றது .

படத்தில் காமடி இருக்கு .நல்ல சண்டை இருக்கு .கொஞ்சம் கதை இருக்கு .எல்லோரிடமும் கொஞ்சம் நடிப்பும் இருக்கு .ஆனா இந்த ஹாரிஸ் ஜெயராஜ் எதற்க்காக இந்த படத்திற்கு .பாடல்கள் கேக்கும்போது நன்றாக இருப்பதாக தோன்றினாலும் எல்லா பாடலும் அவர் இசை அமைத்த பாடலில் இருந்தே எடுத்து போட்டு இருக்கின்றார் .பின்னணி இசையில் ஏழாம் அறிவு படத்தில் பயன் படுத்திய இசையை பயன்படுத்தி இருக்கின்றார் .

நீங்க இந்த படத்தில் விஜயை ரசிக்கலாம் .முன்பு பார்த்த அவரது படம்போல இந்த படம் இல்லை .கண்டிப்பாக திரை அரங்கில் பாருங்க .

துப்பாக்கி .தோட்டா சீறிபாயும்

Thursday, 1 November 2012

ஏழாம் உலகமும், ஜெயமோகனின் ஏழரையும்..............


ஒரு வழியா ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவல் படித்து முடித்துவிட்டேன் .நீண்டநாட்களாக படிக்க நினைத்து தேடி வாங்கிய புத்தகம் அது .நான் தேடியலைந்த காரணம் இந்த நாவலை படித்து முடிக்காதவர்கள் இலக்கியம் படிக்கமுடியாது போன்ற மாயதொற்றங்கள் உருவாக்கப்பட்டதால் .

நான் ஜெயமோகன் தளத்திற்கு போய் படிக்கும்போதெல்லாம் ஏழாம் உலகம் நாவல் படித்தவர்கள் எழுதிய கடிதங்களும் அதற்க்கு ஜெயமோகன் சொல்லிவரும் பதிலும் இ
ந்த நாவலை இன்னும் படிக்காமல் இருக்கோமே என என் எண்ணங்களை தூண்டிக்கொண்டே இருந்தது .இந்த நாவலோடு விஷ்ணுபுரம் ,பின்தொடரும் நிழல் போன்ற நாவலுக்கும் ஏதாவது கடிதமும் ஜெயமோகனின் பதிலும் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும் .ஏழாம் உலகம் நாவல் படித்தவர்கள் எழுதியதுபோல மனதை உலுக்கி செல்கிறதா இந்த நாவல் என்று என்னை கேட்டால் இல்லை என்றே சொல்வேன் நான் .

எதற்காக ஏழாம் உலகம் நாவல் பற்றி இவ்வளவு பிதற்றல்கள் என தெரியவில்லை .இயக்குனர் பாலா எடுத்த நான் கடவுள் இந்த படத்தின் கதையை ஒற்றி எடுக்கப்பட்டு வசனமும் ஜெயமோஹனே எழுதி இருந்தார் .நான் கடவுள் எனக்குள் ஏற்ப்படுத்திய பாதிப்பை சிறிதேனும் ஏழாம் உலகம் நாவல் என்னுள் ஏற்ப்படுத்தவில்லை .

வட்டார வழக்கில் எழுதிய ஒன்றை தவிர இந்த நாவலில் வேறேதும் விசேஷம் இருப்பதாக தெரியவில்லை எனக்கு .நாவலில் போகிற போக்கில் எம்ஜியாரையும் ,ஓவியர் மணியன் அவர்களையும் ,ரஜினிகாந்த் அவர்களையும் கிண்டல் செய்து தன் மனவக்கிரத்தை தீர்த்துக்கொண்டு உள்ளார் .மாற்றுத் திறநாளி என இன்று கவுரவமாக அழைக்கபடுபம் உடல் ஊனமுற்றவர்களை வைத்து கதை எழுதி உள்ளார் .அப்படி எழுதியவற்றில் நிறைய முரண் இருக்கிறது .உடல் ஊனமுற்ற பெண் ஒருவருக்கு உடல் ஊனமுற்றேவா குழந்தைகள் பிறக்கும் .கதையின் இறுதி பகுதியில் வரும் ஒரு இடம் நாவல் படிப்பவர்களை அசைத்துபோட்டது போலிருக்கிறது .உடல் குறை உள்ள பெண்ணிற்கு பிறந்த ஒரு குழந்தை அதுவும் ஒரு விரலுடன் ஊனமுற்ற குழந்தை சிறு வயதிலேயே பிரிதேடுக்கபட்ட அந்த குழந்தை பெரியவன் ஆனதும் யாரேனே தெரியாமலேயே மது கொடுத்து தாயிடமே குழந்தை உருவாக்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதும் அந்த தாய் அலறுவதும் கதையாக முடித்து இருக்கிறார் .நாவல் படித்து வரும்போதே நிறைய இடங்களில் கெட்ட வார்த்தைகளில் கதை நிரப்பப்பட்டு இருக்கு .அப்படி எழுதுவதுதான் இலக்கியம் போலருக்கு

Thursday, 18 October 2012

பூ...............பூ தெரியுமா உங்களுக்கு பூக்கள் தெரியுமா .எல்லாம் தெரிந்து இருக்கும் .தினசரி வாழ்வில் பூக்களை கடக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா இவ்வுலகில் .

பூ வாசம் உள்ளதும் வாசம் இல்லாததுமாக எத்தனை எத்தனை பூக்கள் இருக்கின்றன .ஒவ்வொரு நாளும் எதேனும் பூக்களை உற்று பார்த்துக்கொண்டே இருக்கிறேன் .அவை மொட்டாகவும் மலர்ந்த மலராகவும் தலையாட்டி சிரிக்கின்றன .எப்படியும் காய்ந்து உதிர்ந்துவிடுவோம் என தெரிந்தும் பயமற
்று சிரித்துக்கொண்டு இருக்கின்றன .

அதிகமாய் மலரும் முன்பே செடியில் இருந்து வேட்டையாடப்படும் மலராக மல்லிகைபூ இருக்கின்றது .முன்பு மல்லிகைபூக்கள் வாழைநாரில் தொடுக்கப்பட்டது .அப்படி தொடுக்கபட்டதாலேயே யாரையாவது பார்த்து பழமொழி சொல்லும்போது பூவோடு சேர்ந்து நாறும் மணப்பதுபோல என சொன்னார்கள் .இன்று வாழைநார் மறந்து நூர்கண்டுகளில் தொடுக்கபடுகிறது .

எங்கே என்ன நடந்தாலும் இந்த பூக்களுக்கு அங்கே என்ன வேலை .முதலில் முந்தி வருவது பூக்கள்தானே .வாசமாகவும் அலங்காரமாகவும்
எல்லா வீடுகளுக்கும் நுழைந்து விடுகின்றன .எவ்வளவு நாகரீகத்தின் உச்சியில் இருந்தாலும் ஒரு பெண் ஒரு முழம் பூவை தலையில் சூடும்போது அழகின் உச்சத்தை தொட்டவள்போல தெரிகிறாள் .

மணப்பெண்ணின் தலையில் ஏறி அமர்ந்த பூக்கள் முதலிரவு அறைக்குள்ளும் மெத்தைகளில் பரவிக்கிடக்கின்றது நசுங்கபோகிறோம் என தெரியாமலே .

ரோஜாக்கள் எப்பொழுதும் அமைதியாக இருப்பதாக தோணும் எனக்கு .வருடத்தில் வரும் ஒரு நாளுக்காக மற்ற அத்தனை நாட்களும் அமைதியாக இருக்கின்றன .பிப்ரவரி பதினாலு அன்று உலகம் முழுக்க ஒரு ஆன் கையில் இருந்து பெண் கைக்கு மாறிசெல்ல பூத்து இறுகும் ரோஜாக்கள் .அன்பை சொல்ல நாங்க மட்டுமே குத்தகை என ரோஜாக்கள்
பெருமைபட்டுகொள்கின்றன.

எனக்கும் பூக்களோடு வாசம் உண்டு .அது அன்பையும் கொடுத்து இருக்கு
அதே நேரம் வெறுப்பையும் தந்து இருக்கு .

எங்கேனும் பயணத்தில் ரோட்டோரங்களில் பூக்கள் கொட்டிகொண்டே போய் இருந்தால் யாரோ இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கி சென்றார்கள் என தெரிகிறது .அதை சொல்லவும் பூக்கள் தேவையாக இருக்கு .

புது கணவன் மனைவிக்கு பூ வாங்கி வரும்போது வீட்டில் இருக்கும் தங்கைக்கு தெரியாமல் மனைவிக்கு கொடுக்க அங்கே மறைக்கப்படும் பூவாகவும்  ஆகிவிடுகிறது .

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் பூக்கள் பற்றி .உங்களுக்கும் தெரிந்து இருக்கும் பூக்கள் பற்றி

Wednesday, 17 October 2012

மாற்றான் - தோற்றானா வென்றானா?மாற்றான் 

ரொம்ப எதிர்பாப்பை ஏற்ப்படுத்தும் எந்த படமும் அதை நேர் செய்வதில் இருந்து தவறுகிறது .சமீப உதாரணம் மாற்றான் .

எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய காரணம் சூர்யா ,கே வி ஆனந்த் ,ஹாரிஸ் ஜெயராஜ் என பிரபலங்கள் இந்த படத்தில் இடம் பெற்றதுதான் .

கதை ஒரு வரியில் சொல்லலாம் .ஒட்டி பிறந்த இரட்டையர் ஒரு இதயத்தில் வாழ்கின்றனர் .சொந்த அப்பாவே வில்லன் .இரட்டையரில் ஒருவர் இறந்துவிட இன்னொருவர் அப்பாவை எலிகளுக்கு இ
ரையாக்குவது கதை,

சூர்யா என்னதான் நூத்துக்கு இருநூறு சதம் தன் உழைப்பைகொட்டி நடித்தாலும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது கதையோட்டத்தில் ஏற்ப்படும் தொய்வுகளால் .எண்ணிக்கையில் சூர்யாவுக்கு இன்னொரு படமாக அமைந்து விட்டது .இறுதிகாட்சியில் அழுது நடிக்கும்போது ஏனோ ஏழாம் அறிவு படம் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை .அதோடு எரிச்சல் வருவதையும் தடுக்கமுடியவில்லை .

காஜல் அகர்வால் படத்திற்கு பலமா பலமில்லையா என்பதை கணிக்கமுடியவில்லை .படத்தில் வருகிறார் ,சூர்யாவிற்கு மொழி பெயர்க்கிறார் ,கொஞ்சம் ஆடுகிறார் அவ்வளவுதான் .இரட்டையரில் தான் காதலித்தவன் இறந்தவுடன் எந்தவித மன அதிர்வுகளும் இல்லாமல் இன்னொரு சூர்யாவுடன் கை கோர்க்கிறார் .

சூர்யா அப்பாவாக வருபவரை சிங்கம் ஹிந்தி பதிப்பில் பார்த்து இருக்கிறேன் .அவருடைய நடிப்பை என்ன சொல்வது .பத்தோடு பதினொன்றாக வருவது போல வந்து மகனிடம் அறிவுரை வாங்கி கடைசி காட்சியில் செத்து போகிறார் .

அப்புறம் கே வி ஆனந்த் .ஷங்கரிடம் ஒளிப்பதிவு செய்தபோது பிரமாண்டமாய் கதை சொல்வதை கவனித்து இருப்பார் போல .அதை வைத்து அயன் ,கோ போன்ற வெற்றிப்படங்களை இயக்கி இருந்தார் .அதில் கொஞ்சம் மமதை ஏறி இருக்கலாம் .அதே போல இந்த படமும் வந்து விடும் என எடுத்து சொதப்பி விட்டார் .படம் ஆரம்பித்ததில் இருந்து ஒரு காட்சி நன்றாக இருந்தால் அடுத்தகாட்சியில் தொய்வாக நகரும் .இதே போல படம் நகருவதால் முழுமையாய் ஒன்றி படம் பார்க்கமுடியவில்லை .

படத்தில் மிகபெரிய பலம் சண்டை காட்சிகள் அதை படமாக்கியவிதம் ஆகியவற்றை சொல்லலாம் .படத்தில் வரும் சண்டை காட்சிகள் இதுவரை வந்த படங்களில் உச்சம் என சொல்லலாம் .ஒளிபதிவாளர் சௌந்தரராஜன் கடுமையாக உழைத்து இருக்கிறார் .சண்டைபயிர்ச்சி இயக்குனரையும் பாராட்டியே ஆகணும் .

படத்துக்கு மிகபெரிய திருஷ்டி போட்டு ஹாரிஸ் ஜெயராஜின் இசை .ஒரு பாடலின் இசையை மட்டும் வைத்துக்கொண்டு எத்தனை படத்துக்குத்தான் இசை அமைப்பார் என தெரியவில்லை .கார் துரத்தல் காட்சிகளில் பயன்படுத்தி இருக்கும் இசை ஏ ஆர் ரகுமான் சிவாஜி படத்தில் திரை அரங்கு சண்டைகாட்சியில் பயன்படுத்திய இசை .

படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் உங்களை திருப்திபடுத்தகூடும் .இல்லையேல் எரிச்சலை தரும் .

ஆனாலும் ஒருமுறை பார்த்து வரலாம் .

கொசுறு .திரை அரங்கில் டிக்கெட் கிழிப்பவர் நான்கு நாட்களாக ஓரளவு திரை அரங்கம் நிறைகிறது என்று சொன்னார் .

Friday, 12 October 2012

கனவாய் போன மின்சாரம்


எல்லோரும் மாஞ்சு மாஞ்சு எழுதிட்டாங்க மின்சாரம் இல்லாதது பத்தி .நானும் அதை எழுதணுமா என நினைக்கும்போதே எழுது மனது ஆணையிடுகிறது .என்ன எழுதலாம் .

நிறைய எழுதலாம் எங்க ஊரு மின்சாரம் பற்றி .எனக்கு விவரம் தெரிந்த 1980 ல எங்க ஊர்ல மின்சாரம் இருந்த பதினைந்து வீடுகளில் எங்க வீடும் ஒன்னு .மின் விளக்கு ஆன் செய்தோம் என்றால் அப்படி ஒளிரும் என சொல்ல ஆசைதான் .ஆனா அப்படி எல்லாம் ஒளிராது .மின்சாரம் இருந்தாலும் மண்ணெண்ணெய் விளக்கு வைத்துதான் எந்த வேலையும் செய்யமுடியும் .இரவு பத்து மணிக்கு லைன் மாத்துவாங்க .அப்ப போனா போகுதுன்னு இன்னும் கொஞ்சம் கூடுதலா மின்சாரம் வரும் .படிக்கும்போதுகூட குத்துவிளக்குதான் வைத்து படிப்போம் .அப்படி படிச்சும் நான் தேறாம போனது வேறுவிசயம் .

1990 ல பக்கத்து ஊருக்கு ட்ரான்ஸ்பார்மர் புதிதாக வைத்தார்கள் .எங்க ஊர்ல இருந்து ரெண்டு கிலோமீட்டர் தள்ளி அமைந்து இருந்தது அது .அதனால மின்சாரம் இன்னும் கொஞ்சம் கூடுதலா வந்தது .அப்ப எங்க வீட்ல மிச்சியோ ,கிரைண்டரோ ,தொலைகாட்சி பெட்டியோ இல்லை கூடுதலா மின்சாரம் தேவைபடுவதர்க்கு .அப்ப எங்க அம்மா அம்மியில் மசாலை அரைத்தும் ,ஆடுகல்லில் மாவு அரைத்தும் விறகடுப்பில் ஆக்கித்தந்த உணவின் சுவை இன்னும் நினைவிலும் நாக்கில் ருசியும் இருக்கவே செய்கிறது .

1992 la புதிதாக வீடுகட்ட ஆரம்பித்தோம் .அப்ப வீட்டுக்கு மின்சாரத்துக்கு அப்ளை செய்ய மின்வாரிய அலுவலகம் சென்றோம் .அங்கே எனக்கு தெரிந்த நண்பர் இருந்தார் .அவர் சொன்னார் நீங்க கட்டும் வீடு பெரிதாக இருக்கு அதனால த்ரீபேஸ் மின்சாரத்துக்கு அப்ளை செய்யுங்க என்றார் .சரி என நானும் அவ்வாறே செய்தேன் .எங்க ஊர்லேயே த்ரீபேஸ் மின்சாரத்துக்கு அப்ளை செய்து வாங்கிய முதல் வீடு எங்க வீடுதான் .எங்க வீட்டுக்கு த்ரீபேஸ் மின்சாரம் கொடுக்க போஸ்ட் மரத்தில் இரண்டு ஓயார்தான் எப்பொழுதும் இருந்தது .இன்னும் ஒரு ஒயர் புதிதாக போட்டுவந்து எங்க வீட்டுக்கு லைன் கொடுத்தாங்க .

1993 la எங்க புது வீட்டுக்கு குடிபெயர்ந்தோம் .எனக்கும் அந்த வருடம்தான் திருமணம் நடந்தது .இப்ப எங்க வீட்ல புதிதாக தொலைகாட்சி பெட்டி ,ஐஸ் பெட்டி ,விடியோ,கிரைண்டர் ,மிச்சி என அனைத்து மின்சாரம் தேவைப்படும் பொருளும் இருந்தது .த்ரீபேஸ் மின்சாரம் இருந்தும் நிறைய மின் உபயோகபொருள் இருந்ததால் ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக ச்டேப்லைசர் பொறுத்தவேண்டி இருந்து .இந்த சமயம் எங்க ஊரில் நிறைய வீடுகளில் மின்சாரம் வந்துவிட்டது .தூரத்தில் இருந்ததால் கொஞ்சம் மின்சாரம் பற்றாக்குறையாக வரும் .பத்துமணிக்குமேல்தான் டியூப்லைட் எரியும் .

1995 la முதன் முதலாக மலேசியா வந்துவிட்டேன் .அதன் பின்பு எங்கள் வீட்டுக்கு சில அடிகள் தூரத்திலேயே புதிய ட்ரான்ஸ்பார்மர் நிறுவி விட்டார்கள் .எங்கள் ஊரின் மின்பற்றாக்குரையும் நீங்கியது .மிக சந்தோஷமாக இருந்துவந்தோம் .

இந்த நிலையில்தான் ஆற்காடுவீராசாமி மின்துறை அமைச்சராக இருந்தபோது இரண்டுமணிநேர மின் தடை இருந்தது .அது நட்ட நடுசென்டர்கள் எனும் நடுநிலைவாதி புலிகள் முகநூல் மற்றும் ப்ளாக்கரில் கலைஞரையும் ,ஆற்காடுவீராசாமி அவர்களையும் திட்டுவதற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் பெரும் உதவிபுரிந்தது இந்த கண்ணில் காணாத மின்சாரம் .

இப்ப தமிழகம் காக்க வந்த தங்கத்தாரகை ,அகில உலக அகிலாண்டேஸ்வரி என அடி வருடிகளால் வர்ணிக்கப்படும் ஜெயலலிதா ஆட்சியில் பதினெட்டு மணிநேரம் சில நாட்கள் இருபத்தி மூணேகால் மணிநேரம் மின்சாரம் எங்கே இருக்கு அல்லது போகிறது என்பது தெரியவில்லை .

இனிமேல் காணமல் போனவர்கள் வரிசையில் மின்சாரத்தையும் சேர்க்கவேண்டியதுதான் .

கனவுகாணுங்கள் அப்துல்கலாம் சொன்னார் .நான் சொல்றேன் கனவுகானுகள் கனவிலாவது உங்கள் வீட்டில் இருபத்துநாலு மணிநேரம் மின்சாரம் இருப்பதாக 

Thursday, 11 October 2012

பூர்விகா மொபைலின் பகல் கொள்ளைபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ  கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க....

நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் சாம்சங் நோட் செல்போனுக்கு ஸ்க்ரீன் ப்ரோடக்டர் வாங்குனேன் .நான் விலை எவ்வளவு என்று கேட்க்கைலேயே என் போனை வாங்கி துடைத்து சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டனர் .அப்புறம் ஸ்கிரின் ப்ரடக்டரை ஒட்டி கையில் கொடுத்து ரூபாய் எழுநூற்று ஐம்பது ரூபாய் கேட்டார்கள் .என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை .விதியோ என கொடு
த்துவிட்டு வந்தேன் .வெளியில் வந்து வேறு ஒரு கடையில் அதே ஸ்க்ரின் ப்ரோடக்டரை விலை கேட்டேன் .அவர்கள் சொன்ன விலை வெறும் முன்னூறு ரூபாய் மட்டுமே .

மலேசியாவில் இருபது வெள்ளிக்குமேல் எந்த ஸ்க்ரின் ப்ரடக்டர் இல்லை .இந்திய மதிப்பில் ரூபாய் முன்னூற்று நாற்ப்பது மட்டும் .பூர்விகா மொபைல்ஸ்ல போட்டது சீனா தயாரிப்பு .மலேசியா விழும் சீனா தயாரிப்புதான் .

முன்னூறு ரூபாய்க்கு வேறு கடையில் கிடைக்கும் ஒரு பொருள் பூர்விகாவில் எழுநூற்று ஐம்பது ரூபாய் .எவ்வளவு கொள்ளை .

சீனா மொபைல்ஸ் வாங்குரவுங்க இது போன்ற பெரிய கடையில் வாங்காதீங்க .இங்கே நீங்க இரண்டாயிரம் கொடுத்து வாங்கும் ஒரு போன் சிறிய கடைகளில் வெறும் எண்ணூறு ரூபாய்க்கு கிடைக்கிறது .

விளம்பரங்களையும் ,கடை பகட்டுக்களையும் நம்பி ஏமாறாதீங்க

Friday, 5 October 2012

ஒரு கதவின் கதைகதவு இல்லாத வீடுகள் ஏதேனும் இருக்குமா .கதவை இதுவரை வீடு அடைக்கும் ஒரு பகுதியாகவே நினைத்துவந்து இருக்கிறேன் .ஆனால் நேற்று பார்த்த காட்சி ஒன்று என் நெஞ்சில் அறைந்தது போல இருந்தது .ஒரு பயணம் மேற்கொண்டு இருந்தேன் .அப்பொழுது ஒரு பகுதியை கடக்கும்போது பழைய பொருட்கள் விற்கும் கடை ஒன்றை கடக்க நேரிட்டது .

அங்கே கண்ட காட்சிகள் மனதில் சஞ்சலத்தை உண்டுபண்ணியது .அங்கே கண்ட அத்தனை பொருட்களும் வீடுகள் உடைத்
து சேகரித்த ஜன்னல்கள் ,கதவுகள் ஆகியவை .வரலாற்று கூடங்களில் கண்ட காட்சிகள் போல இருந்தது கதவுகளை பார்த்த பொழுது .

ஒவ்வொரு கதவும் என்னிடம் ஏதோ சொல்ல வருவதுபோல இருந்தது .நாங்கள் வாழ்ந்த வாழ்வு எப்படிபட்டது என கேட்பதுபோல இருந்தது .அங்கே கிடந்த கதவுகள் சில தலைமுறை வாழ்க்கைதனை பார்த்து வந்ததுபோல இருந்தது .ஒவ்வொரு கதவுக்கும் சில சரித்திரங்கள் கண்டிப்பாக இருந்து இருக்கும் என தோன்றியது .

சந்தோஷமாக வாழ்ந்த குடும்பத்து கதவுகள் வேகமாக அறைந்துசாத்தபடாமல் மிக மென்மையாக கையாளப்பட்டு இருக்கலாம் .கோபமும் குரோதமும் கொண்ட குடும்பத்து கதவுகள் சாத்தப்படும்போது இடி விழுந்ததுபோல அறைந்து சாத்தப்பட்டு இருக்கலாம் .

சந்தோசத்தையும் துக்கத்தையும் எப்பொழுதும் மௌனாமகவே காலம் காலமாக பார்த்துகொண்டு வருகின்றன கதவுகள் .சில கதவுகளில் அளிக்கபடாத சந்தனமும் குங்குமமும் மிச்சமாக ஒட்டி இருந்தது .யாரேனும் அந்த கதவுகளுக்கு பூஜைகள் செய்து இருக்கலாம் .

ஜன்னல்களும் அழுவதுபோல இருந்தது .எவ்வளவு சந்தோசங்கள் எவ்வளவு ஊடல்கள் எவ்வளவு சண்டைகள் அறைக்குள் நடந்தபோதெல்லாம் சாட்சியாய் இருந்தது அந்த ஜன்னல்கள்.
நிலவு வானில் தோன்றியபோதெல்லாம் அதன் ஒளியை அறைக்குள்
அனுமதித்து தென்றலையும் உடன்வர சம்மதித்து எல்லோருக்கும் சந்தோசங்களை கொடுத்தது ஜன்னல்கள்தானே.

யாரும் அறியாத ரகசியங்கள் முதலில் அறிவது கதவுகளும் ஜன்னல்களும்தானே .

வீடுகளுக்கு பாதுகாவலாகவும் ,வீட்டில் நடக்கும் சந்தோஷ நிகழ்வுகளுக்கு முதல் வரவேற்ப்பாளராகவும் கதவுகள்தானே இருக்கு .

ஒரு வீட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்துவந்த கதவுகளும் ஜன்னல்களும் மனிதர்களுக்கு வரும் மரணம் போல கால மாற்றத்தில் வீடுகள் இடிக்கப்பட்டு பெயர்தெடுக்கப்படுமபோது அவற்றின் அழுகுரலை
நாம் கேட்டு இருப்போமோ

Wednesday, 26 September 2012

சுந்தரபாண்டியன்படம் வெளியான அன்று என் அண்ணன் மகன் படம் பார்த்துவிட்டு வந்து நல்லா இருக்கு சச்சா என்றான் .அப்புறம் கேபிள் சங்கர் விமர்சனம் ,ஆனந்தவிகடன் விமர்சனம் எல்லாம் படிச்சுட்டேன் .எல்லாரும் விமர்சனம் எழுதியபிறகு நான் என்ன எழுதுவது .படம் பார்த்தபின்பு எழுதலாம் என தோன்றியது .

படம் யாரும் சொல்லாத கதை என்று கிடையாது .எல்லோரும் தொட்டுசென்ற களம்தான்.காட்சி அமைப்பில் புதுமை என்றும் சொல்லமுடியாது .ஆனால் படம் ரசிக்கவைக்கிறது .

சசிகுமாருக்கு ரசிகர்களின் நாடி தெரிந்து இருக்கிறது .தனக்கு எது செட்டாகும் என தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார் .நகைசுவை நடிகருக்கு இடம் கொடுத்து தான் நடிக்கவேண்டிய இடத்தில் மட்டும் நடித்து இருக்கிறார் .பேருந்து காட்சிகளில் பரோட்டா சூரியோடு சேர்ந்து அதகளபடுத்துகிறார்.ஓரிரு காதல் காட்சிகளே இருந்தாலும் அதிலும் சோடைபோகவில்லை சசிகுமார் .

சசிகுமாருக்கு பின்பு படத்தின் தூணாக தாங்கி இருப்பது சூரி என சொல்லலாம் .சூரி முந்தய படங்களில்  கொஞ்சம் கவுண்டமணி சாயலில் கத்திபேசுவார்.இந்த படத்தில் அமைதியாக பேசி நம்மை குலுங்கி சிரிக்கவைத்து விடுகிறார் .ஏறக்குறைய படத்தின் படத்தின் பெரும்பகுதியில் வந்தாலும் அசத்தல் நடிப்பு சூரிக்கு .

கதாநாயகிக்கு இந்த படம் அறிமுகம் என்பதை நம்பமுடியவில்லை .சந்தோசமோ துக்கமோ எந்த காட்சியிலும் அவரது முகம் பொருந்திபோகிறது .
காதலித்தவனை கல்யாணம் செய்ய அப்பா சம்மதம் சொல்லியவுடன் வரும் அழுகையும் சந்தோசமும் மிக அர்ப்புதமாய் நடித்து உள்ளார் .

இரண்டு பாடல் காட்சிகள் வாயசைப்பு இல்லாமல் பின்புலத்தில் ஓடவிட்டு காட்சிகள் எடுத்தவிதம் அவ்வளவு அழகு .

நண்பர்களாக வரும் அத்தனைபேரும் காட்சியின் தன்மை உணர்ந்து நடித்து உள்ளனர் .அப்பாக்களாக வரும் நரேன் ,தென்னவன் இருவரும் நடிப்பும் மிகை இல்லை .

இசை ரகுநந்தன் .மோசமில்லை .பின்னணி இசை படத்தின் பலம் .

ஒளிப்பதிவும் ரசிக்கவைக்கிறது .

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எதிர்பாராதவிதமாக அமைக்கப்பட்டுள்ளது .

பழையமொந்தையில் புதியகள் என்பதுபோல எண்பதுகளில் வந்த படம் போல இருந்தாலும் இருக்கையில் அமரவைத்துவிடுகிறது படம் .

திரைஅரங்கில் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் .துளி ஆபாசம் கிடையாது

Friday, 7 September 2012

வேளாங்கன்னியில் நான்

நேட்று அண்ணன் மகளை பார்ப்பதற்க்கு வேளாங்கன்னி வந்து இருந்தேன்.அங்கே எடுத்த படங்கள்
Tuesday, 4 September 2012

ஒரு கிராமத்தானின் பதிவுலக மாநாட்டு அனுபவங்கள்

ஒருநாள் நண்பர் கஸாலி போன் செய்து சென்னை பதிவர் சந்திப்புக்கு வந்துவிடு என சொன்னார் .நானும் சரி என சொல்லிவிட்டேன் .இரண்டுநாள் கழித்து நானும் என் மனைவியும் அவங்க அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டர் சைக்கிளில் திரும்பிக்கொண்டு இருந்தோம் .அப்பொழுது பேச்சோடு பேச்சாக நான் சனிக்கிழமை சென்னைக்கு போகிறேன் என்று சொன்னேன் .எதற்கு என கேட்டாள்.ப்ளாக்கர் மீட்டிங் என சொன்னேன் .நானும் வருகிறேன் என சொன்னாள்.நான் கூட்டிட்டு போக முடியாது .உன்னை கொண்டுபோய் ஹோட்டலில் விட்டுவிட்டு மறுபடியும் கூட்டிட்டு வருவதற்கு எதற்கு சென்னைக்கு வரவேண்டும் என மறுத்துவிட்டேன் .ஒரு வழியாக சம்மதம் வாங்கி வெள்ளிக்கிழமை இரவு அறந்தாங்கியில் இருந்து இரவு எட்டு மணிக்கு பயணமானேன் .பஸ் இடையிலேயே கெட்டுபோக போகுது என தெரியாமலே .

பயணம் சென்றுகொண்டு இருக்கும்போது திருச்சிதாண்டியவுடன் பஸ் கெட்டுபோய் விட்டது .அதன்பின்பு இரண்டுமணி நேரம் கழித்து வேறு ஒரு பஸ் வந்து எங்களை ஏற்றிக்கொண்டு சென்னை பயணம் ஆனது .காலை ஐந்து மணிக்கு சென்னையில் இருக்கவேண்டிய பஸ் எட்டு மணிக்கு கோயம்பேட்டில் என்னை இறக்கிவிட்டு சென்றுவிட்டது .

ராஜேந்திரகுமார் நாவலில் வரும் ஞே எனும்  சொல்லுக்கு ஏற்றார் போல என் விழி பிதுங்கி எழும்பூருக்கு எப்படி போவது என தெரியாமல் நின்றேன்.ஒரு வழியாக எழும்பூர் வந்து ஹோட்டல் ரீகலில் தங்கினேன் .கொஞ்சநேரம் ஓய்வெடுத்துவிட்டு உணவருந்த சரவணபவன் உணவகம் சென்றேன் .ரெண்டு இட்லி ஒரு வடை ஒரு தோசை சாப்பிட்டேன் .ப்ரெஷர் உள்ள ஆளாக இருந்தால் நிச்சயம் எனக்கு மயக்கமே வந்து இருக்கும் கொண்டுவந்து கொடுத்த பில்லை பார்த்து .பெரிய இட்லியாக பத்து ரூபாய்க்கு ஐந்து இட்லி கிடைக்கும் ஊரில் பிறந்த எனக்கு நூற்றி பதினாறு ரூபாய் என்பது மிக மிக அதிகம் .டிப்ஸ் பத்து ரூபாய் வேறு

ஹோட்டலுக்கு நண்பர் அருள் எழில் வந்து சந்தித்தார் .அவருடன் ஒருமணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டு இருந்தேன் .அதன்பின்பு நண்பர் கஸாலி இருக்கும் இடம் நோக்கி சென்றேன்  ,கஸாலியிடம் நீண்டநேரம் உரையாடிக்கொண்டு இருந்தேன் .மதிய உணவருந்தும் நேரமும் வந்து விட்டது .கஸாலி நான் சாப்டுற சாப்பாடு உனக்கு சரிவராது .பக்கத்தில் கேரள உணவகம் ஒன்று இருக்கு .அங்கே போய் சாப்பிடு என சொன்னார் .நானும் அந்த கேரள உணவகம் குமரகோம் தேடிசென்று விறு விறு என உள்ளே சென்று
அமர்வதற்கு இடம் தேடினேன் .அப்பொழுது ஒருவர் சார் என பின்னாடி நின்று ர
அழைத்தார் .என்ன என கேட்டபோது வெளியில் அமருங்கள் .உங்கள் முறை வரும்போது அழைப்போம் என சொன்னார் .அப்போ;அப்பொழுதுதான்
கவனித்தேன் ஏற்கனவே பத்து பேருக்கு மேல் தங்கள் முறைக்கு அமர்ந்து இருப்பதை .இவ்வாறு சனிக்கிழமை ஓடி விட்டது .

ஞாயிறு காலையில் பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு செல்வதற்கு கஸாலிக்கு போன் செய்து வழி கேட்டேன் .அப்படியே ஆட்டோ காரரிடம் போய் அஞ்சுவிளக்கு செல்லவேண்டும் என சொன்னபோது கொல்லு கொலைக்கு அஞ்சாமல் நூற்றி ஐம்பது கேட்டார் .என்னங்க விலை கூடுதலாக கேக்குறீங்க என சொன்னபோது நான் திரும்பி வரும்போது வெறும் ஆளாக வரவேண்டும் என சொன்னார் .வேறுவழி அதே ஆட்டோவில் மண்டபம் வந்து சேர்ந்தேன் .

மண்டபத்தில் இறங்கி கஸாலிக்கு போன் செய்து  எங்கே இருக்கே என்றேன் .மேலே ஏறிவா என சொன்னார் .மேலே ஏறி சென்றவுடனே நிறைய பேர் என்னிடம் வந்து தங்களை அறிமுகபடுத்திகொண்டு என்னையும் நலம் விசாரித்தனர் ,சிலர் மிக நெருக்கமாக நெடுநாள் பழகியவர்கள் போல பேசினார்கள் .அப்பொழுதுதான் தெரிந்தது கஸாலி ஏற்கனவே என் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு இருக்கிறார் என்பது .மிக்க நன்றி கஸாலி .

அப்புறம் திடிர்னு என் கையில் மைக்கை கொடுத்து உங்களை அறிமுகபடுத்திகொள்ளுங்கள் என சொன்னார்கள் .தபூசங்கர் கவிதை தலைப்பு வெட்கத்தை கேட்டாள் என்ன தருவாய் என்பது போல வெட்கம் பிதுங்கி திங்க முதலில் பேச மறுத்தேன் ,பின்பு ஒரு வழியாக பேசி முடித்தேன் ,பின்பு நிறைய நண்பர்களிடம் பேசினேன் ,அதன்பின்பு மச்சான் சிராஜுதீன் வந்தார் .கஸாலி அவருக்கு தெரிந்த நண்பர்கள் அனைவரிடமும் அறிமுக படுத்தினார் .

பின்பு பதிவர்கள் அறிமுகம் நடந்தது .ஏறக்குறைய எல்லோருமே தயார் நிலையில் வந்து இருப்பார்கள் போல .மைக் சில நேரம் தன்வேலையை சரிவர
செய்யாத போதும் பதிவர்கள் தங்களை மிக அழகாக அறிமுகபடுத்திக்கொண்டார்கள் .அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது மறுபடி மேடையில் என்னை அறிமுகபடுத்திகொள்ள வேண்டும் என்பது .ஏனோ இந்த நேரத்தில் மன்னன் ரஜினி கவுண்டமணி தியேட்டர் காமடி நினைவுக்கு வந்தது .மேடையில் நான் ஏறி நின்றபோது என் காலடியில் ஏனோ பூமி நழுவி ஓடிக்கொண்டு இருந்தது .மேடையில் கேபிள் சங்கர் என்ன சொன்னார் நான் என்ன பேசினேன் என்பது தெரியவில்லை .ஒருவழியாக பதிவர்கள் அறிமுகம் முடிந்து உணவருந்தும் வேலை தொடங்கியது .அதன் பின்பு எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருந்தேன் .

மண்டபத்திற்கு வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தோம் .திடிரென பட்டுக்கோட்டை பிரபாகர் நடந்து வந்துகொண்டு இருந்தார் .மனம் திடிரென துள்ளிக்குதித்தது .இளம் வயதில் அவர் எழுதிய நாவல்களை விரும்பி படித்தவன் நான் .தொட்டால் தொடரும் நாவல் ஆனந்தவிகடனில் வெளிவந்தபோது அறந்தாங்கி சென்று புக் வாங்கி வந்து படிப்பேன் .அந்த அளவு
பிகேபி பைத்தியம் நான் .விழா மேடையில் பிகேபி அமர்ந்து இருந்தபோது அவர் அருகில் சென்று என்னை அறிமுகபடுத்திகொண்டேன் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் கிராமம் நான் என .

மறுபடியும் மூத்த பதிவர்களை சிறப்பிக்கும் விழா பிகேபி தலைமையில் நடந்தது .ஒவ்வொருவராக அறிமுகபடுத்தி சிறப்பித்துகொண்டு வரும்போது திடிரென என் பெயரை சொல்லி அழைத்தார்கள் மூத்தபதிவர் ஒருவருக்கு சால்வை போர்த்துவதற்கு .மேடை ஏறியபொழுது விழாவை வழி நடத்திக்கொண்டு இருந்த சுரேகா என் தலைமுடி ரகசியம் கேட்டார் .அதையும் சொல்லிவிட்டு சால்வை போர்த்திவிட்டு இறங்கி என் பணியை முடித்தேன் .

இன்னும் நிறைய எழுதலாம் .இங்கே எல்லோரும் எழுதி விட்டார்கள் .அதனால் இதை என் அனுபவமாக மட்டுமே எழுதினேன் .யாரையும் குறிப்பிட்டு எழுத முடியவில்லை .விழாவுக்கு வந்த அனைத்து பதிவர்களுக்கும் என்னிடம் உரையாடிய நண்பர்கள் ,விழா சிறக்க உழைத்த பதிவர்கள் எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்
Monday, 3 September 2012

முகமூடி .சூப்பர்மேன் எனும் சொத்தைமேன்நான் படம் பார்க்க திரை அரங்கம் சென்றால் ஒன்று நடிகர்களுக்காக அல்லது இயக்குனர்களுக்காக .அப்படி நான் இயக்குநருக்காக சென்றுபார்த்த படம் முகமூடி .மிஷ்கினின் சித்திரம் பேசுதடி ,அஞ்சாதே ,யுத்தம் செய் மற்றும் நந்தலாலா காப்பி செய்து எடுக்கப்பட்ட படம் என்றாலும்கூட எனக்கு பிடிக்கவே செய்து இருந்தது .

ஏற்கனவே ஓரளவு ரசிக்ககூடிய அளவில் படம் எடுத்தார் என்ற காரணத்திற்க்காக  
முகமூடி படம் பார்க்க சென்றேன் .டைட்டில் போடும்போது நடிகர்கள் பெயர் போடும்போதுகூட ஆஹா படம் அருமையாக இருக்கபோகுது என்று நினைத்துக்கொண்டு இருந்த என் எண்ணத்தில் மண்ணை அள்ளிபோட்டதுதான் மிச்சம் .

படம் ஆரம்பித்தவுடனே சூப்பர் ஹீரோ படங்களில் கதாநாயகன் சாகசம் செய்து அறிமுகம் ஆவதுபோல இல்லாமல் மிக சாதரணமாக ஜீவா அறிமுகம் ஆகும்போது ஆகா மிஷ்கின் மற்ற இயக்குனர்கள் செய்யும் தவறை செய்யவில்லை நிச்சயம் படம் நல்லா இருக்கும் என்ற நினைப்பிலேயே படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் .இடைவேளைவரை குழந்தை தத்தக்கா பித்தக்கா என தத்தி தத்தி நடப்பதுபோல சண்டைகாட்சியும் ,காதல் காட்சியும் ,விரும்பும்பெண்ணை கவர்கிறேன் என்று சொல்லி சின்ன புள்ளைகளுக்கு சூப்பர்மேன் உடை வாங்கி கொடுப்போமே அதேபோல ஒரு உடை மாட்ட வைத்து  ஜீவாவையும் அவஸ்த்தை படுத்தி நம்மையும் அவஸ்த்தைக்கு உள்ளாக்குகிறார் மிஷ்கின் ,

ஒரு வழியாக இடைவேளை வருகிறது .சரி இனிமேல் சூப்பர் ஹீரோ வருவார் வருவார் என படம் பார்த்துக்கொண்டே இருந்தேன் .ஜீவா அந்த கருப்பு உடை மாட்டிக்கொண்டு கட்டிடத்தின் உச்சியில் நின்றதும் கடைசி காட்சியில் இரும்பு பாலத்தில் ஓடியதும் வேணா மிஷ்கினுக்கு சூப்பர்மேன் ஆக தெரிந்து இருக்கலாம் .படம் பார்த்த நமக்கு ஐயோ பாவம் ஜீவா நல்லா நடிக்கிற ஒரு நடிகனை இப்படி கேவலபடுத்தனுமா என்றுதான் தோணும் .

எடுக்கும் எல்லா படத்திலும் ஐட்டம் பாட்டை வித்தியாசமாக சாரயநெடியோடு காட்சிபடுத்துவதில் மிஷ்கின் வித்தியாசமாக இருக்கிறார் .புகழ்பெற்ற மேடை நாடக நடிகர் கிரீஸ் கர்னாட் இந்த படத்திற்கு எதற்கு .அந்த முதுகு வளைந்த ஊனமுற்ற நபர் கதைக்கு எந்தவிதத்தில் அவசியம் .கதாநாயகி எங்கே இருந்து பிடித்துகொண்டு வந்தார் .வித்தியாசமா படம் பிடிக்கிறேன்னு எல்லா படத்திலும் குளோசப்பில் கால்களை காட்டுகிறாரே அது எதற்கு .நாசர் மட்டுமே கொஞ்சம் இந்த படத்தில் நடித்து இருக்கிறார் .

பின்னணி இசை படத்தில் நன்றாக இருப்பதாக தெரிந்தாலும் சில இடங்களில் எரிச்சலையும் கிளப்புகிறது .படத்தில் வரும் ப்ளாஷ் பேக் காட்சி இருக்கே அப்பப்பா புல்லரிக்குது போங்க .

படத்தின் ஆரம்பத்தில் ப்ரூஸ்லீக்கு சமர்ப்பணம் என்று வருகிறதே அது எதற்கு .
மொத்தத்தில் ஜீவா எனும் நல்ல நடிகனை வேஸ்ட்டாக்கி தானும் பேச்சு அளவில்தான் புலி மத்தபடி எலிதான் என இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார் மிஷ்கின் .

இது என் எண்ணம் மட்டுமே .படம் நான் பார்த்துட்டேன் .நீங்க போய் திரை அரங்கில் பார்ப்பதும் பார்க்காததும் உங்க இஷ்ட்டம் 

Monday, 30 July 2012

காதலில் காத்திருத்தல் சுகமா? தவமா?.....
காத்திருத்தல் சுகம்
என்றார்கள் காதலில்
காத்திருத்தல் கடும்
தவம் என தெரியாமலே

================


உன் புன்னகைக்கு
விலையேதும் இல்லையென்றாலும்
என் புன்னகையை
ஈடாக ஏற்றுக்கொள்வாயா?

====================


மௌனம் ஒரு 

மொழியென நீ 
பெசாதபோதேல்லாம் 
அறிந்துகொண்டேன் நான்

=================

நினைத்தேன் வந்தாய்
என பொய் சொல்லமாட்டேன்
நினைக்காத போதெல்லாம்
வந்தாய்
===========================================================


Tuesday, 24 July 2012

ஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....பத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் என கேட்டார் .என்ன என்று கேட்டேன் .அவர் சொன்ன செய்தி என்னை மிக வியப்பில் ஆழ்த்தியது .அருவருப்பாகவும் இருந்தது .இப்படியும் இருக்கின்றாகளே மனிதர்கள் இவர்களை நாம் என்ன செய்வது? .

பேஸ்புக்கில் கொஞ்சம் நட்பு வட்டம் பெரிதாகவும் ஓரளவு படித்தவர்களுக்கு இடையில் நடந்த கதை இது .நல்ல சமூக கருத்துக்களை பதிபவர் அவர் .அவர் பதிவிடும் கருத்துக்ள் நன்றாக இருப்பதால் நண்பர்கள் வட்டம் பெரிதாக ஆகிறது .அடிக்கடி பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதால் நாளடைவில் போன் நம்பர்களை கொடுத்து பரிமாரிக்கொள்கிறார்கள்.அடிக்கடி போனில் பேசிக்கிறாங்க நண்பர்கள் அனைவரும் .இந்த நண்பரோடு சிலர் நேரில் ஒன்றாக கூடி பேசி அரட்டை அடித்து செல்கிறார்கள் .இது போல சந்தித்து பேசுவது அடிக்கடி நடக்கிறது .

இந்த நேரத்தில் இந்த நண்பரின் போனில் இருந்து ஒரு நண்பருக்கு அழைப்பு வருகிறது .நண்பர்தான் பேசுகிறார் என நினைத்து ஹலோ என சொல்கிறார் .எதிர் முனையில் பேசியதோ இவருக்கு அறிமுகம் இல்லாத பெண் குரல் .நண்பர் பதற்றம் அடைந்து நீங்க யார் என கேட்க நான் உங்க நண்பரின் மனைவிதான் பேசுறேன் என சொல்கிறார் .இந்த நண்பர் உங்க கணவர் எங்கே என கேட்க அவர் மனம் சங்கடமாக அறைக்குள் படுத்து இருக்கிறார் .அவருக்கு தெரியாமல் உங்களுக்கு போன் செய்கிறேன் என அந்த சொல்ல இவர் எதற்கு சங்கடம் என கேட்டு இருக்கிறார் .உடனே அந்த பெண் எங்கள் குழந்தைக்கு பள்ளியில் பணம் கட்ட முடியவில்லை .அதனால மனம் சங்கடப்பட்டு வீட்டிலேயே படுத்து இருக்கிறார் என்று சொல்லிவிட்டு போனில் உங்க நம்பரை பார்த்தேன் உங்களால் உதவி செய்ய முடியுமா என கேட்பதற்கு அவருக்கு தெரியாமல் போன் செய்கிறேன் .அவருக்கு தெரிந்தால் என் மீது கோபப்படுவார் என சொல்லி இருக்கிறார் .

நண்பர் அந்த பெண்ணிடம் எவ்வளவு கட்டவேண்டும் என கேட்டு இருக்கிறார் .இருபத்து ஐந்தாயிரம் என அந்த பெண் சொன்னதும் பெரிய தொகையாக இருக்கு என நினைத்துக்கொண்டு சரி பள்ளிக்கு கட்டதானே கேட்க்குறீங்க என கேட்டு இருக்கின்றார் .ஆமாம் என சொன்னவுடன் நண்பர் எந்த பள்ளி என கேட்டதற்கு அந்த பெண் ஒரு பள்ளியை சொல்லி இருக்கின்றார் .சரி நான் நாளைக்கு பணம் வாங்கிக்கொண்டு அந்த பள்ளிக்கு வருகிறேன் நீங்களும் வந்துவிடுங்க கட்டுவோம் என சொன்னதுக்கு பள்ளிக்கு நீங்க வரவேண்டாம் யாரவது பார்த்தால் தவறாக நினைப்பார்கள் என சொல்லி இருக்கின்றார் .சரி நான் உள்ளே வரவில்லை பள்ளிக்கு வெளியில் வைத்து பணம் தருகிறேன் நீங்க உள்ளே போய் கட்டிவிட்டு வாருங்கள் என சொன்னதுக்கும் வேண்டாம் நீங்க வெளியில் வேறு எங்காவது வைத்து கொடுங்கள் என சொல்லி இருக்கிறார் .சரி நான் நாளைக்கு பணம் வந்தவுடன் போன் செய்கிறேன் என சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

நண்பர் அலைபேசியை துண்டித்தவுடன் தனது வேறு ஒரு நண்பருக்கு போன் செய்து நடந்த விசயத்தை சொல்லி இருக்கிறார் .அங்கே அவருக்கு நண்பர் ஒரு அதிர்ச்சியான விசயத்தை சொல்லி இருக்கிறார் .அவங்க எனக்கும் போன் செய்து பணம் கேட்டாங்க .என்னிடம் இப்ப இல்லை ஒரு வாரம் சென்று தருகிறேன் என சொன்னேன் என்று சொல்லி இருக்கிறார் .இருவருக்கும் சிறிது சந்தேகம் .பள்ளிகூடத்துக்கு பணம் கட்டனும் என்று சொல்வது பொய்யாக இருக்குமோ என சந்தேகப்பட்டு அந்த பள்ளியில் போய் விசாரித்து இருக்கின்றார்கள் .அவங்க ஏற்க்கனவே எல்லா பணத்தையும் கட்டிமுடித்துவிட்டார்களே என பள்ளியில் சொன்னதும் இரண்டுபேரும் திரும்பிவிட்டனர் .இனிமேல்தான் இருவருக்கும் அதிர்ச்சி ஒன்று காத்து இருக்கு என்பது அறியாமலே வந்துவிட்டனர் .

முதல் நண்பர் அந்த பெண் பணம் கேட்டதை யார் என சொல்லாமல் நடந்த கதையை ஸ்டேட்டஸ் ஆக தனது முகப்பில் பதிந்து இருக்கின்றார் .அங்கே தான் நிறைய உண்மை வெளிச்சத்துக்கு வந்தது  மியுட்சுவல் நண்பர்களாக உள்ள கிட்டத்தட்ட பதினைத்து பேர் இதே பெண்ணிடம் இருப்பத்து ஐந்தாயிரம் ருபாய் குழந்தை படிப்புக்காக கொடுத்துள்ளார்கள் .எல்லோரிடமும் ஒரே கதைதான் .கணவருக்கு தெரியாமல் போன் செய்கிறேன் என .மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இருக்கின்றார்கள் .கணவன் சொல்லிகொடுத்தபடி மனைவி பேசி பணம் வாங்கி இருக்கிறார் .ஸ்டேட்டஸ் பின்னூட்டத்தில் எல்லோரும் கொட்டி தீர்த்துவிட்டனர் .

சமூக ஊடகத்தில் சமூக அக்கறை உள்ளவனாக பதிவுகள் போட்டு நல்ல பெயரோடு இருக்கும் ஒருவர் தனது மனைவியின் மூலம் நாடகம் ஆடி நம்பிக்கைக்கு உரிய நண்பர்களிடம் மோசடி செய்ய எப்படி மனது வந்தது என தெரியவில்லை .இதை இங்கே எழுதிய காரணம் நம்மை நம்பிக்கைக்கு உள்ளாக்கி நம்மையே மோசடி செய்யவும் நண்பன் என்ற பெயரில் சிலர் கிளம்பி இருப்பதால் எழுதினேன் .எல்லோரிடமும் உங்கள் உண்மைகளை கொட்டி தீர்க்காதீர்கள்

நீயா நானா கோபியும், இளையராஜாவும்.............

இன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து இருந்தேன் .இந்த நிகழ்ச்சியை நடத்தும்போது அதிகபட்ச இடையூறு எதையும் செய்யாமல் வழிநடத்தினார் .

நிகழ்வில் கலந்துகொண்டோர் ஏறக்குறைய நாற்ப்பது வயதை கடந்தவர்கள் .எல்லோரும் மிக சிறப்பாக தங்கள் பங்களிப்பை செய்தனர் .அவர்கள் எல்லோருக்குள்ளும் காலங்கள் கடந்தும் பாடல்களால் தங்கள் இளமை காலங்களை மீட்டெடுத்து பாடல்கள் வழியாக பேசியது அவ்வளவு அருமையாக இருந்தது .

முன்பு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பாடல்கள் ஏதோ ஒரு வகையில் கலந்து இருந்ததை உணரமுடிந்தது .நானும் நாற்பதுகளில் இருந்தாலும் இந்த அனுபவங்கள் எனக்கும் இருந்தது .இங்கே அதை பற்றி ஒரு நோட்சே எழுதி இருக்கிறேன் .அது ஆனந்தவிகடனிலும் வந்தது .கலந்துகொண்டவர்கள் தங்களை மறந்து பாடியபோது அது உணர்வுபூர்வமாக இருந்தது .அதை பார்த்த எனக்கும்கூட சந்தோசம் ஒட்டிக்கொண்டது .


அவர்கள் பாடிய பாடல்களை கேட்டபோது எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை .அந்த பாடல்களில் முக்கால்வாசி பாடல்களை நான் இங்கே முன்பு எடுத்து பகிர்ந்து இருக்கிறேன் .

இரண்டுநாட்களாக ஏதோ ஒருவகையில் மனசுமையில் இருந்த நான் இந்த நிகழ்ச்சி பார்த்தபோது என்னை மறந்து இருந்தேன் என்பது மட்டும் நிஜம்.

பார்க்காதவர்கள் நிச்சயம் பாருங்கள்
Monday, 16 July 2012

பில்லா ஏன் இல்லை நல்லா....விமர்சனம் அல்ல சிறு பார்வை


இதை எழுதும் முன்பு நான் யோசித்துக்கொண்டு இருந்தேன் .படம் பார்க்கும் முன்பு முன்பு எதிர்மறையான கருத்துக்கள் எழுதுவது தவறோ என.....
ஆம் உண்மையில் தவறுதான் .எதையும் பார்ததபின்பே இனி எழுதுவது எனும் முடிவுக்கு வந்து இருக்கிறேன் .

முன்பு ஒரு சினிமா விழாவில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் பற்றி விமர்சனம் எழுந்தபோது எது நல்ல படம் எது கெட்ட படம் எனும் கேள்வி வந்தது .அதற்கு இயக்குனர் அமீர் அவர்கள் சொன்னார் நல்ல படம் கெட்ட படம் என எதுவும் கிடையாது .ஓடும் படம் ஓடாத படம் என்று சொல்லலாம் என்றார்.
ஓடும் ஒரு குதிரையின் மீதே பந்தயம் கட்டமுடியும் .அஜித் பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரை .ஜெயித்து இருக்கிறார் பில்லா இரண்டு படத்தில் .

இங்கே படம் எடுப்பவர்கள் யாரும் கலைசேவை செய்ய வரவில்லை .பணம் போட்டு பணம் எடுக்கவே வந்து இருக்காங்க .பில்லா படம் வெளியானவுடன் ப்ளாக்கரிலும் பேஸ்புக்கிலும் ஒரே அக்கபோர்.படம் சரியில்லை என...
நானும் கூட சரி இல்லை என்றே நினைத்து விட்டேன் .ஆனால் படம் பார்த்தபின்பே தெரிகிறது .படத்தில் குறைகள் இல்லை என [என்னால் படத்தில் நிறைய குறைகள் சொல்ல முடியும் .அப்படி சொல்லும் குறைகள் படத்தின் ஓட்டத்தை தடுக்கக்கூடிய வல்லமை உள்ளது இல்லை .திரைக்கதையில் ஆரம்பித்து நிறைய சொல்லலாம் .]

இவ்வளவு ஈடுபாட்டோடு அஜித் நடித்து இருப்பதற்கே ஒரு சபாஷ் போடலாம் .முதலில் தன் ரசிகனுக்காகவும் முப்பது வயதுக்கு கீழே உள்ள திரைப்பட ரசிகர்களுக்காகவும் பில்லா படம் எடுக்கப்பட்டு உள்ளது .படத்துக்கு செல்லும் ஏ கிளாஸ் ரசிகர் முதல் சி கிளாஸ் ரசிகர் வரை படம் போய் சேரனும் என்ற முடிவோடு திரைக்கதை லாஜிக் எதுவும் பார்க்கவில்லை  இயக்குனர் .

ஏற்கனவே நிறையப்பேர் கதையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பிச்சு மேய்ந்துவிட்டார்கள் .நிறையப்பேர் வசனங்களையும் எழுதிவிட்டார்கள் .அதனால அவற்றை எல்லாம் நான் பேசவில்லை .படம் பார்க்காதவர்கள் பார்க்கணும் என ஒரு சிறு மேலோட்டம் மட்டுமே இது .

படம் முழுவதும் சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நிறைய இருக்கு .பில்லா டான் ஆகுவது ஒரே நாளில் இல்லாமல் படிப்படியாக வருவதற்கு இந்த சிறிய கதாபாத்திரங்கள் உதவுகின்றன .

படத்தில் வளவளவென எங்கும் வசனம் இல்லை .மொத்த கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை பத்து பக்கத்துக்குள் அடக்கி விடலாம் .எழுத்தாளர் இரா.முருகன் ஜாஃபர் என்ற இன்னொருவருடன் சேர்ந்து வசனத்தை எழுதி உள்ளார் .

ஒளிப்பதிவு மிக அருமை .ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ..பார்க்கும் காட்சி நம்மை ஒன்ற செய்யவேண்டும் .அந்த வகையில் ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக ஒளிப்பதிவு செய்து உள்ளார் .

இசை யுவன் கலக்கல் .பின்னணி இசை ஒரு கதாநாயகன் என சொல்லலாம் .படத்தோடு நம்மையும் கூடவே அழைத்து செல்கிறது பின்னணி இசை .

எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.மிக அழகாக தொகுத்து உள்ளார் .திரைக்கதை தடுமாற்றத்தை இவரது கத்திரி சரிசெய்து உள்ளது .

சண்டைக்காட்சி ராஜசேகர் என நினைக்கிறேன் .அஜித் நடித்த சண்டை காட்சிகளில் பெஸ்ட் படம் இதுவென சொல்வேன் .பரபரவென இருக்கும் சண்டைக்காட்சி .அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் .படத்தின் நாயகிகள் சில காட்சிகள் தலைகாட்டி செத்துபோய்விடுறாங்க .நாயகிகள் கேங்ஸ்டார் படங்களில் வருவதுபோல மிக உயரமானவர்களாக இருக்காங்க .சில வசனமும் சின்னதாய் சிரிப்பு மட்டுமே இவர்கள் நடிப்பு .

விஜய் படத்தின் தலைப்பு துப்பாக்கி என்பதாலோ என்னவோ இந்த படத்தில் அதிகமான துப்பாக்கிகள் நடிச்சு இருக்கு .ஒரு போட்டிகூட வைக்கலாம் இந்த படத்தில் எத்தனை துப்பாக்கிகள் பங்கெடுத்தன என்று .பில்லா ஒன்றில் கூலிங்கிளாஸ் என்றால் இந்த படத்தில் துப்பாக்கிகள் .

வில்லன்கள் நிறைய .சர்வதேச வில்லன்கள் ரெண்டுபேரும் உள்ளூர் வில்லன்கள் சில பெரும் நண்பர்கள் சில பெரும் படத்தில் தலையை காட்டி எல்லோரும் செத்து போயிடுறாங்க .படத்தில் மொத்தம் எத்தனைபேர் செத்தார்கள் என தனியாக ஒரு கணக்கெடுக்கலாம் .

எப்படி சொன்னாலும் அஜித் இந்த படத்தில் மாஸ்தான் .தன் ரசிகர்களின் நாடிபிடித்து நடித்து உள்ளார் .சிறு சிறு கண் அசைவிலும் உடல் அசைவிலும் அற்ப்புதமாக நடித்து உள்ளார் .படத்தில் போரடிக்குது என எதுவும் இல்லை .குறைகள் நிறைய இருந்தும் உங்களை யோசிக்கவிடாமல் சொல்லி அடிச்சு இருக்காங்க .

கடைசியாக ஒன்று நீங்க உலகப்படம் பார்ப்பவர் என்றால் படம் பார்க்க போகவேண்டாம் .இரண்டுமணிநேர பொழுது போகணும் என நினைத்தால் கண்டிப்பா இந்த படம் பாருங்க .நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்

Wednesday, 11 July 2012

பில்லா-2 முந்துமா நான் ஈ திரைப்படத்தை?......ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பதை நீங்க எதை வைத்து தீர்மானம் செய்வீர்கள் .அந்த படம் ஈட்டிக்கொடுக்கும் மொத்ததொகை வைத்து கணக்கிட்டு சொல்வீர்கள் .அப்படி கணக்கிட்டு நீங்க வெற்றி திரைப்படம் என சொன்னால் வெளியாகபோகும் பில்லா ரெண்டு மிகப்பெரிய வெற்றிப்படம் .ஏன் எனில் அதிகமான திரை அரங்கில் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்குள் போட்ட பணத்தை எல்லாம் பில்லா பெற்று தந்துவிடும் .என்னை கேட்டால் நான் ஈ திரைப்படத்தோடு ஒப்பிடுகையில் பில்லா ரெண்டு மிகப்பெரிய தொல்விப்படம் என்பேன் இப்பொழுதே .ஏன் என நீங்க என்னிடம் கேட்கலாம் .நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்த்துவிட்டு அப்புறம் பில்லா ,நான் ஈ திரைப்படம் பற்றி பேசுவோம் .

தொன்னூறுகளில் படம் வெளியாகும்போது ஒரே நேரத்தில் நான்கைந்து படங்கள் வெளியாகும் .படம் வெளியாகும் இடங்களை ஏ,பி ,சி என மூன்று செண்டர்களாக பிரித்து இருப்பார்கள் .வெளியாகும்போது ஏ மற்றும் சில பி சென்டர்களில் மட்டும் வெளியாகும் .ஒரு சென்டரில் அதிக பட்சமாக பனிரெண்டு அல்லது பதினைந்து திரை அரங்குகளில் வெளியாகும் .சராசரி படம் வெளியானால் கூட எல்லா திரை அரங்குகளிலும் கூட்டம் இருக்கும் .படம் ஐம்பது நாட்கள் ஓடிவிட்டால் அதன் பிறகுதான் பி சென்டருக்கு படம் வரும் .படம் வெளியாகி ஆறுமாதங்கள் கழித்தே கிராமப்புற திரை அரங்கை தொடும் .ஆறு மாதம் கழித்து கிராமத்திற்கு வரும் திரைப்படமே சில நேரங்களில் இருபது நாட்களை தாண்டி ஓடும்.இப்படி இருக்கும்போது இப்ப வெளியாகி மூன்றாவது நாளே படம் மிகப்பெரிய வெற்றி என சொல்லபடுகிறது .பில்லா ரெண்டு திரைப்படம் உலகம் முழுவதும் ஏறக்குறைய ஆயிரம் திரை அரங்குகளில் வெளியாரும் .மூன்று நாட்கள் திரை அரங்குகள் நிரம்பி ஓடினாலே போட்ட அனைத்து முதலும் எடுத்து விடுவார்கள் .அப்ப படம் வெற்றிதானே .

நான் இதை வெற்றி என சொல்லமாட்டேன் .அதிகப்படியான விளம்பரங்கள் செய்து படம் வெளியாகும்போதே பார்த்தால்தான் சிறப்பு என்பதுபோல ஒவ்வொருவரையும் மூளை சலவை செய்து திரைஅரங்கில் குவிய வைக்கிறார்கள் .
முன்பு படம் வெளியாகும்போது படம் சரி இல்லை என்றால் சராசரியான கூட்டம் கூடும் .சில நாட்களில் படம் தூக்கப்பட்டு விடும் .சில நேரங்களில் படம் வெளியாகி ஒரு வாரம் வரை திரை அரங்கில் கூட்டமே இருக்காது .படம் பார்த்த ஆட்கள் படம் நன்றாக இருக்கிறது என சொன்னால் வாய்மொழியாக கேட்டு கேட்டு மிகபெரிய வெற்றி அடைந்து இருக்கிறது .ஒரு தலை ராகம் ,சேது ,அஜீத் நடித்த காதல் கோட்டை போன்ற படங்கள் .இப்படி மக்கள் பார்த்து சொல்லி அதன் பிறகு நன்றாக ஓடிய படங்கள் .

இதே போல மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான முதல் நாளை விட ரெண்டாவது நாள் அதிகப்படியாக கூட்டம் கூடிய திரைப்படம் நான் ஈ .காரணம் முதல் நாள் பார்த்த அனைவருமே படம் நன்றாக இருக்கிறது என சொன்னதுதான் .படம் பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் ஒன்று சொன்னதுபோல எல்லோரும் நன்றாக இருக்கிறது என எழுதினார்கள் .பேஸ்புக்,ட்விட்டர் , ப்ளாக்கர் என எல்லா தளங்களிலும் படம் நன்றாக இருக்கிறது என சொன்னார்கள் .அப்ப நான் ஈ திரைப்படம் வெற்றிப்படம் தானே .

பில்லா ரெண்டு திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் முதல் மூன்று நாளைக்கு டிக்கெட் இல்லை என சொல்லபடுகிறது .சென்னை மாயாஜால் திரை அரங்கில் படம் வெளியாகும் அன்று எழுபத்து இரண்டு காட்சிகள் திரை இடப்படுகிறது என சொல்கிறார்கள் .இதை எல்லாம் பார்க்கும்போது படம் வெளியான மூன்றாவதுநாள் எந்திரன் திரைப்படத்தின் வசூல் சாதனையை பில்லா முறியடித்தது என கண்டிப்பாக விளம்பரம் வரும் .கண்டிப்பாக மிகபெரிய வசூல் சாதனையை கொடுக்கும் பில்லா .ஆனால் என்னை பொருத்தவரை இப்பொழுதே நான் சொல்கிறேன் விளம்பரங்களில் வைத்து ஒட்டப்படும் எந்தப்படமும் வெற்றிப்படம் இல்லை .அந்த வகையில் பில்லா ஒரு தோல்வி படமே

.எந்தவித அதிகபட்ச விளம்பரம் இல்லாமல் வந்து வாய்மொழியாக நல்லபடம் என சொல்லப்பட்டு இன்று வெற்றி அடைந்து இருக்கும் நான் ஈ மிகப்பெரிய வெற்றிபடமே