Wednesday, 30 May 2012

சுனிதா ராணியும் பேஸ்புக் புரட்சியும்


சுனிதா ராணி பார்க்க அவ்வளவு அழகாய் இருப்பாள் .போட்டோவை ஒரு தடவை பார்க்கும்போதே ஒன்பது தடவை பார்க்க தோன்றும் அழகு .ஆண்டவன் படைப்பில் அவ்வளவு அழகாய் இருப்பாள் .நீங்க பார்த்து இருந்தால் மலைத்து இருப்பீர்கள் பேரழகி என .அவள் ஆல்பத்தில் இருந்த போட்டோக்களுக்கு அவ்வளவு பின்னூட்டம் வந்தது .நானும் கூட அந்த பெண்ணின் நண்பர் இணைப்பில் இருந்தேன் .

ஒருவாரம் போனவுடன் பேஸ்புக் முகப்பில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது .அந்த பெண்ணின் புகைப்படமும் சில ஷேர் செய்யப்பட்டு இருந்தது .பார்த்தவர்கள் நண்பராக இருக்கும் என எண்ணி அந்த போட்டோக்களுக்கும் பின்னூட்டம் போட்டு இருந்தனர் .நாள் ஆக ஆக நிறைய பெண்கள் அதுவும் அழகாய் இருக்கும் பெண்கள் படங்களாக ஷேர் செய்ய ஆரம்பித்தாள்.அது போல நேற்றும் நிறைய படங்கள் வெளியாக நண்பர்கள் இணைப்பில் இருக்கும் அனைவருக்கும் லேசாக சந்தேகம் வர ஆரம்பித்தது போலி முகவரி என .இன்று காலையில் இன்னும் ஐம்பது பெண்கள் படம் வெளியாகவும் பொங்கி எழுந்துவிட்டது பேஸ்புக் நண்பர்கள் கூட்டம் .

இன்று நான் பேஸ்புக் முகப்பில் விழிக்கையில் நிறைய பதிவு சுதா ராணி போலி முகவரி .உடனே கம்ப்ளைன்ட் செய்யுங்கள் என .மதியம் ஆவதற்குள் ஒரு புரட்சியே நடந்து அந்த போலி முகவரி நபர் பேஸ்புக்கில் இருந்து விரட்டி அடிக்கபட்டுள்ளார் .அந்த பன்னாடை வேறு முகவரியில் வரும் அது வேறு விஷயம் .இனி நான் விசயத்திற்கு வருகிறேன் .

ஒரு நபர் போலி முகவரியில் இருக்கிறார் என்று தெரிந்து கொந்தளித்து ஆளை விரட்டி விட்டோம் .நேற்று நீயா நானா கோபிநாத்தை புரட்டி எடுத்தோம் .நமது வீரமும் புரட்சியும் இதுதானா .எங்கே போரடவேண்டுமோ அப்பொழுது ஒன்றாக இணைத்து இருக்கோமா .கேள்வி கேட்டு பாருங்கள் இல்லையென்றே பதில் வரும் நம்மகிட்டே இருந்து .

பஸ் கட்டணத்தில் இருந்து பசுமாட்டு சாணி வரைக்கும் விலை ஏறியபோது என்ன செய்தோம் .பேஸ்புக்கில் இருந்து ப்ளாக் வரை ஆளுக்கு ஒரு பதிவை எழுதி மனநிறைவுடன் ஒதுங்கி கொண்டோம் .அரசியல் வாதி நாலு நாளைக்கு அறிக்கை விட்டு அவர்கள் வேலையை பார்க்க போய்விடுவார்கள் .நாம என்ன செஞ்சோம் .டீக்கடை பெஞ்சில் ஓசி பேப்பரையோ அல்லது நெட்ல பேசி ஓஞ்சு விடுவோம் .அது முடிஞ்சவுடனே அன்னைக்கு என்ன செய்தி முக்கியமா இருக்கோ ஆளுக்கு ஒரு பார்வையில் எழுதி நாலு கமண்டும் இருபது லைக்கும் வாங்கிட்டு அடுத்தநாள் செய்திய எப்படி எழுதலாம்னு ஓடிருவோம் .

பேஸ்புக்கில் முந்தாநாளு பெட்ரோல் விலை ஏற்றம் ,நேற்று கோபிநாத் ,இன்னைக்கு காலைல சுனிதா ராணி ,மத்தியானம் கலைஞர் பேச்சு என பதிவு போடவும் பேஸ்புக் புரட்சி பண்ணவும் தெரிந்து இருக்கு .அப்புறம் அரை லிட்டர் பெட்ரோலுக்கு அலைமோதி வாங்க தெரிந்து இருக்கே தவிர நம்மளுடைய கோபம் எங்கே போனது.

விலை ஏற்றம் வந்தபொழுது கட்சிபேதம் மறந்து மக்களை ஒன்றிணைக்க தெரிந்ததா .கரண்ட் பிரச்சினைக்கு வீட்டில் இருந்து திட்டியும் பதிவு போடதெரிந்ததே தவிர மக்களை ஒன்று திரட்டி புரட்சி செய்ய தெரிந்ததா .இப்ப பெட்ரோல் பிரச்சினை வந்த போதும் அவன் அவன் வண்டிக்கு பெட்ரோல் போட அலைவோம் தவிர அடுத்தவன் எப்படி போனா நமக்கு என்ன .

வாங்க நாம் புரட்சி பண்ணுவோம் சமூக வலைதளங்களில் மட்டும். நானும் உங்க கூடத்தான்

4 comments:

  1. அருமையான பதிவு.தேவையான விஷயங்களை எழுதினால் படிக்க ஆள் இராது. சும்மா மணலை வறுப்பதில் பொழுது போக்குகிறார்கள்.இந்த பதிவை எனது முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்.உங்களது பயனுள்ள எழுத்துகளுக்கு, எண்ணங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. புதிய புரட்சி தலைவர், மாநிற எம்.ஜி.ஆர்.,அண்ணன் ஃபாருக் அழைக்கிறார்.

    ReplyDelete
  3. சமீப நாட்களாக பேஸ் புக் அட்டுழியங்கள் அதிகமாகி கொண்டே வருகின்றன

    ReplyDelete