Saturday 2 May 2015

உத்தம வில்லன் _ உத்தரவாதமில்லை


ஒரு மாதத்துக்கு மேலாக உத்தம வில்லன் ட்ரைலர் படம் பார்க்க போகும்போதெல்லாம் போடுவாங்க திரைஅரங்கில்.அதை பார்த்து மிக நன்றாக இருக்கும் என நினைத்து இருந்தேன்.
கதை மிக பிரபலமான நடிகர் கமல்ஹாசனுக்கு தன் இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவோம் என தெரிய வருகின்றது.தன்னை சினிமாவில் அறிமுகபடுத்தி நல்ல படங்களில் நடிக்க வைத்த தன் குருநாதர் இயக்கத்தில் தன் கடைசி படத்தில் நடிக்க விரும்பி சென்று பார்க்கின்றார்.குருநாதர் இயக்க மறுக்கும்போது தான் இறந்துவிட போகும் உன்மைய சொல்கின்றார்.அதன் பின் குருநாதர் இயக்கத்தில் நடிக்கின்றார்.நடிக்கும் கதை ஐந்துமுறை சாவின் விளிம்பை தொட்டும் சாகாத உத்தமன் எனும் நாடக கலைஞன் பற்றியது.


நிஜ வாழ்வில் அவர் சந்தித்த பெண்களும்,துரோகங்களும் மகன், மனைவி,டாக்டருக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள தொடர்பு,முதல் காதலி மூலம் பிறந்த மகள்,மகளின் இன்றய தகப்பன் என பல வகையில் கதை விரிகின்றது.
நான் இங்கே கதையாக சொல்கின்றபோது நல்லாத்தான் இருக்கு.படம் இடைவேளைவரை கூட கமல்ஹாசனின் திரைக்கதை உத்தியால் சீராக போவது போலத்தான் தெரிகின்றது.இடைவேளை முடிந்து நிஜவாழ்வு கதையும்,அங்கே படமாக்கப்படும் கதையும் மாற்றி மாற்றி காண்பிக்கும்போது மிகப்பெரும் அயற்சிக்குள்ளாகிரோம்.படம் எப்ப முடியும் என வரும் எண்ணத்தை தடுக்க முடியவில்லை.



கமல்ஹாசன் சிறந்த நடிகர்களாக நினைக்கும் அனைவரையும் படத்தில் போட்டு தன் ஆசான் பாலசந்தர் அவர்களையும்,தன்னை உறுவாக்கிய இன்னொரு சிற்பி கே.விஸ்வநாத் அவர்களையும் கவுரவிக்கும் பொருட்டு படம் எடுத்தாரோ என்னவோ?!.
பாலசந்தரின் கடைசி படமாகவும் அமைந்துவிட்டது திரை உலக வாழ்வில்.
படம் பார்க்கும் ரசிகனை வேறு ஒரு தளத்திற்கு வா என அழைக்க முயற்சி செய்கின்றார் கமல்ஹாசன்.அவரின் பரிசோதனை முயற்சிக்கு இந்த படம் அயற்சியை கொடுத்து விட்டது.
படம் பார்ப்பவர்கள் மிக சிறந்த படம் என சொல்லவும் கூடும்.ஒரு நாவல் படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒருவித மனநிலையை கொடுக்கும்.அதே போல மற்றவர்களுக்கும் அமையலாம்.

கமலஹாசன் தெனாலி,வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற முழுநீள நகைச்சுவை படம் ஒன்றை கொடுக்கலாம் அல்லது குடும்ப சித்திரம் எடுக்கலாம்.அதைவிட்டு பரிசோதனை முயற்சியில் ரசிகனை பலிகொடுப்பதை தவிர்க்க வேண்டுகிறேன்.
இந்த படம் எனக்கு புரியவே செய்தது ஆனால் உங்களுக்கு புடிக்கும் என என்னால் உத்திரவாதம் செய்ய இயலவில்லை.