Wednesday, 27 June 2012

இரண்டாவது தேனிலவு

இரண்டாவது தேனிலவு என மலேசியாவில் தமிழ் தினசரியில் வெளியான செய்தியைப்பார்துவிட்டு அதை படித்து பார்த்தேன் .இன்றைய நிலையில் எல்லா நாடுகளிலும் பரீட்சித்துப் பார்கவேண்டிய  நிகழ்வாய் படுகிறது எனக்கு  .

மலேசியாவில் ஒரு மாநிலத்தில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இந்த இரண்டாவது தேனிலவு திட்டத்தை செயல்படுத்தி பார்த்து இருக்கிறார்கள் .அதற்க்கு நல்ல பலனும் கிடைத்து இருக்கிறது .

செய்தி இதுதான் .மலேசியா குடும்பநல கோர்ட்டிற்கு வந்த விவகாரத்து வழக்குகளுக்கு அவர்கள் முயற்சித்து பார்த்ததுதான் இந்த இரண்டாவது தேனிலவு திட்டம் .விவகாரத்துகோரி வந்தவர்கள் அனைவருமே திருமணம் முடிந்து ஐந்து வருடங்களுக்குள் ஆனாவர்களே அதிகம் .இப்படி வரும் வழக்குளுக்கு பெரும்பாலும் ஒரு வருடம் வரைக்கும் டைம் கொடுப்பார்கள் .அதன் பின்பும் சரிவரவில்லை எனில் விவகாரத்து வழங்கி விடுவார்கள் .ஒரு வருடம் டைம் கொடுத்தபோதும் கணவனும் மனைவியும் சேர்ந்தும் இருப்பதில்லை .தங்கள் ஈகோவை விட்டுக்கொடுக்க தயாராகவும் இருப்பதில்லை எப்பொழுதுமே .

இப்படி பிரிந்து வாழ்பவர்கள் விவகாரத்து கேட்டுவரும்போது அவர்களுக்கு ஒரு உண்மை தெரிந்தது .அனைவருமே திருமணம் ஆகி ஐந்து வருடங்களுக்குள் ஆனவர்கள் .இவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவதை விட வேறு வகையில் முயற்சித்து பார்ப்போம் என அரசு செலவிலேயே முயற்சித்து பார்த்தது ரெண்டாவது தேனிலவு திட்டம் .விவகாரத்து கேட்டு வந்த கணவன் மனைவி இருவரையும் அழைத்து பேசி ஐந்து நாட்களுக்கு சுற்றுலாதளமும் அங்கே இருக்கும் உயர்தர ஹோட்டலில் தங்குவதற்கு அனைத்து வசதிகளையும் மற்றும் பணமும் கொடுத்து அனுப்பி வைத்து இருக்கின்றனர் .இவ்வாறு இரண்டாவது தேனிலவு திட்டத்தில் அனுப்பிய தம்பதியரில் இருநூற்றி எழுபத்து எட்டு தம்பதியர் மீண்டும் இணைந்து வாழ சம்மதித்து தங்கள் விவகாரத்து வழக்கை மீட்டுக்கொண்டு உள்ளனர் .இப்பொழுது இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தும் முயற்சியை எடுத்து உள்ளார்கள் .

கணவன் மனைவிக்குள் ஏற்ப்படும் பிரச்சினைகளை நீதிமன்றங்களுக்கு செல்வதைவிட இருவரும் அமர்ந்து பேசி தங்களுக்குள் என்ன குறை என்பதை களைந்து இருந்தார்கள் என்றால் எந்த நீதிமன்றங்களும் பஞ்சாயத்தும் அவசியமே இல்லை .

இன்று அதிகமாக விவகாரத்து செய்பவர்கள் காதலித்து மனந்தவர்களே .இதிலும் நகர பின்னணியில் வாழ்பவர்கள் அதிகமாக விவகாரத்து வழக்கு போடுகிறார்கள் .காதலிக்கும்போது தங்கள் குறைகளை பேசி எப்பொழுதும் காதலிப்பதில்லை .தங்கள் நிறைகளை முன்வைத்தே எப்பொழுதும் காதலிப்பார்கள் .கல்யாணம் முடிந்தவுடன் ஒருத்தர் குணம் ஒருவருக்கு ஒவ்வொன்றாக தெரியவரும் .இருவரும் சண்டை இடவேண்டியது நீ என்னை ஏமாற்றி விட்டாய் என .இருவருக்குள்ளும் உள்ள குறைகள் தெரியவரும்போது தங்களுக்குள்ளே மனம் விட்டு பேச ஆரம்பித்து இருந்தார்கள் என்றால் எந்தவித பிரச்சினைகள் இன்றி வாழ்க்கை சக்கரம் ஓடிக்கொண்டு இருக்கும் .என்று இருவருக்குள்ளும் ஈகோ தலைதூக்க அனுமதிக்கிறார்களோ அன்றே அவர்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க ஆரம்பித்து விடுகிறார்கள் .

இந்த இரண்டாவது தேனிலவு திட்டம் இந்தியாவின் பெருநகரங்களுக்கு இன்று அவசியாமான திட்டம் .பிரிந்து வாழும் தம்பதியரை   தங்கள் மனசு விட்டுபேச ஒரு சந்தர்ப்பம் அமைத்து தருவது இன்றைய நிலையில் அவசியமாகிறது .யாரோ மத்தியஸ்தம் அல்லது நீதிமன்றங்களில் பேசி  தீர்ப்பதை விட சம்மந்தப்பட்ட இருவரே பேசவும் தனிமையும் ஏற்ப்படுதிகொடுக்கும்போது நிச்சயம் நல்ல பலனை தரும்

4 comments:

 1. மிகவும் சிந்திக்க கூடிய ஒரு நல்ல செய்தி... வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
  Replies
  1. @avargal unmaigal மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்

   Delete
 2. அருமையாச் சொல்லிருக்கீங்க சார் ! பாராட்டுக்கள் ! நன்றி !

  சமீபத்திய என் பதிவு :"மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் என்ன ?”

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன் உங்கள் பாராட்டுக்கு .உங்கள் பதிவை படித்து பார்க்கிறேன்

   Delete