Saturday 29 November 2014

காவிய தலைவன் என் பார்வையில்

இசைக்காவியம்
ஒளிஓவியம்
கலையழகு

இசையமைப்பாளர் ரஹ்மான்,ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா மற்றும் கலை இயக்குனர் மூவருக்கும் வாழ்த்துக்கள்.அவ்வளவு உழைப்பு இவர்களுடையது.

படத்தின் டைட்டில் இசையிலேயே நாடக உலகுக்குள் அழைத்து சென்றுவிடுகின்றார் ரஹ்மான்.நீரவ்ஷா தன் ஒளிப்பதிவில் கலை இயக்குனரோடு சேர்ந்து கதை நடக்கும் காலகட்டத்துக்குள் நம்மை கொண்டு வந்துவிடுகின்றனர்.

சித்தார்த்தும் பிரித்விராஜும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து இருக்கின்றனர்.நாசர் சித்தார்த்துக்கு ராஜபார்ட் வாய்ப்பு கொடுக்கும்போது பிரித்விராஜுகு ஏற்ப்படும் வன்மத்தில் ஆரம்பிக்கிறது இருவருக்குமான நடிப்பு.
இருவருக்குமே இந்த படம் ஒரு மைல்கல்.
நாடக கம்பெணியின் குருவாக நாசர்.இவரை விட அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை பொருத்தி பார்க்கமுடியவில்லை.

வேதிகா ஏற்க்கனவே பரதேசியில் நன்றாக நடித்து இருந்தாலும் இந்த படத்தில் நடிப்பில் இன்னும் மெருகேறி இருக்கின்றார்.

தம்பிராமையா,சிங்கம்புலி என படத்தின் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்ட்டவர்கள் அத்தனை பேரும் சரியான தேர்வு.
வசந்தபாலனின் இன்னும் ஒரு மிகச்சிறந்த இயக்கம் இந்த படம்.
கதை நான் சொல்ல போவது இல்லை.திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
படத்தில் இடம்பெரும் அநேக இடங்கள் காரைக்குடியை சுற்றி உள்ள இடங்களாக இருக்கு.அந்த இடங்கள் எல்லாம் நான் நேரில் பார்த்து இருக்கின்றேன்.அதே இடத்தை திரையில் பார்க்கின்றபோது பிரமாண்டமாக இருக்கு.
வசனம் எழுதி இருப்பது ஜெயமோகன்.காட்சியின் தன்மைக்கேற்ப்ப உருத்துதல் இல்லாமல் எழுதி இருக்கின்றார்.
முடிந்த அளவுக்கு திரையில் பாருங்க.அப்பொழுதுதான் படத்தின் இசையை,ஒளிப்பதிவை,கலை இயக்கத்தை எல்லோரின் நடிப்பையும் ரசிக்க முடியும்