Wednesday, 6 June 2012

அப்பாடக்கர் எனும் அறிவாளிதமிழன்


உலக தொலைகாட்சிகளில் முதன்முறையாக என்று போடுவது போல உலக இணையதளங்களில் முதன்முறையாக என செய்திகள் போட துடிக்கும் அறிவாளி தமிழனே எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறாய் நீ .

இணைய இணைப்பையும் ,இனைய இணைப்பு உள்ள செல்பேசியயையும் கையில் வைத்துகொண்டு உலக உலாவந்து ,உள்ளூர் குட்டிசுவர் தாண்டி எல்லைகள் அற்று பேசுகின்றாய் .எல்லை என்று சொன்னது நாட்டின் எல்லைகள் அல்ல .எதை பேசுவதாக இருந்தாலும் ஒரு எல்லை வேண்டும் .ஆனால் நீ எல்லை கோட்டை மீறுதல் வேண்டும் என அடம்பிடித்து அலைந்துகொண்டு இருக்கிறாய் .

ஒவ்வொரு நாளும் உன்னை யாரேனும் கவனத்திகொண்டே இருக்கவேண்டும் என பேராசைபடுகிறாய்.ஆசைகொள்வதில் தவறு ஒன்றும் இல்லை .அர்த்தத்தோடு அந்த ஆசைகள் வேண்டாமா .

இன்று பேஸ்புக் உலகமே கொஞ்ச நேரத்தில் ஸ்தம்பித்து விட்டது .உன் மண்ணாய் போன யார் செய்திகளை முந்திதருவது என்ற ஆசையால் .யார் பக்கத்தை திறந்தாலும் பதிவுகளும் பதிவுகளை ஒட்டிய பின்னூட்டமும் ஒன்றை நோக்கியே கை நீட்டி செய்திகளை சொல்லிக்கொண்டே இருந்தன .

குஷ்பூவின் இடுப்பை கிள்ளியது உங்களுக்கு பதிவு போட்டு கும்மி அடிக்கும் நிகழ்வாக தெரிந்தது .ஏன் எனில் குஷ்பூ ஒரு நடிகை .பெரிய மார்பகங்களையும் இடுப்பையும் தொப்புளில் வளையம் மாட்டியதை மட்டுமே ரசிக்க பழகிய நமக்கு  அந்த உடம்புக்குள் உயிரும் உணர்வும் கலந்த ஒரு பெண் இருக்கிறாள் என்பதை மறந்து அருவெருப்பின் உச்சத்தையும் ஆபாசத்தையும் கலந்து எழுதுகிறாய் .

ஏன் இப்படி எழுதுகிறாய் நமக்கும் அம்மாக்கள்,அக்காக்கள் ,தங்கைகள் ,அத்தைகள் என பெண் வடிவில் உறவுகள் இருக்கிறது என சொன்னால் உள்ளே வராதே ஒதுங்கி போ என சொல்கிறாய் .எனக்கு குஷ்பூ உறவுக்காரங்க இல்லைதான் ,ஆனால் என் பார்வையில் பெண் வடிவில் அம்மாவையும் தன்னுள் ஒலித்துவைத்து இருக்கும் மனுஷி.

என்னையே திரும்ப கேட்க்கிறாய் எங்கள் குடும்ப உறவுகள் குத்தாட்டம் போடவில்லை .ஆதலால் எங்கள் குடும்ப உறவுகளை பதிவு எழுதி கும்மி அடிக்கமாட்டோம் .நீ வேண்டும் என்றால் குத்தாட்டம் ஆடச்சொல்லி எழுது என .என்ன சொல்வது உனக்கு பதில் .சினிமாக்காரி என்றால் நமக்கு கேவலமானவர்கள் .

இன்னொன்றையும் நீ எழுதுகிறாய் ரஞ்சிதா பற்றி எழுதாதவர்கள் யாரும் இருக்கின்றீர்களா என .அதுதான பிரச்சினை .செய்திகளின் வீரியம் எது என்பதை எப்பொழுது உணர ஆரம்பிப்பாய் .ரஞ்சிதாவின் செய்தி தனிப்பட்ட ஒன்று அல்ல .நித்தியானந்தாவின் ஆன்மிகம் கேள்விகுரியானபோழுது அவரையும் சேர்த்து எழுதும் அளவுக்கு தள்ளபட்டுவிட்டார் .உன் கேள்வி நியாயம் ஆனதுதான் .அன்று ரஞ்சிதா வை எழுதியது போலவே எல்லோரையும் எழுதுவேன் என சொல்ல வருகிறாயா .

அப்ப மஞ்சள் பத்திரிக்கை எழுதி பிழைப்பு நடத்துபவனுக்கும் ,நூறு லைக் ஐம்பது கமன்ட் வாங்க எழுதும் உனக்கும் என்ன வித்தியாசம் அன்பு தமிழனே .

நேற்று தான்யா எனும் நடிகையை மன உளைச்சல் கொள்ளும் அளவுக்கு தனிப்பக்கம் ஆரம்பித்து திட்டினாய் .இன்று குஷ்பூ இடுப்பு  நாளை எதை எழுதி தமிழன் என நிரூபிக்க போகிறாய் .

நான் இவ்வளவு எழுதியதால் என்னை உனக்கு திட்ட தோன்றலாம் .தாரளாமாக திட்டிக்கோள்.நான் கவலை அடையபோவதில்லை .நான் எழுதியது ஒரு தகப்பனாக ஒரு அண்ணனாக ,ஒரு தம்பியாக பெண்மையை மதிக்கும் ஒரு தோழனாக மட்டுமே இதை எழுதினேன் .

நீ நாளைய செய்திகளுக்கும் யார் முதலில் செய்திகள் தருவது என்பதற்காக உன் கணினியை எப்பொழும் போல பார்த்துக்கொண்டிரு

4 comments:

 1. mmm.. yosikka koodiya visayamthaan!

  ReplyDelete
 2. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
 3. மன்னிக்கவும் தில் என்பதற்கு பதில் தி என்று வந்துள்ளது

  ReplyDelete