Tuesday 19 June 2012

இந்த வாரம்....அரசியல்வாதிகளின் ”ஙே” வாரம்....


ஙே” என்ற இந்த வார்த்தைக்கு அர்த்தம் குமுதம் அரசு பதில்களிலும் ,எழுத்தாளர் ராஜேந்திரகுமார் நாவல்களில் மட்டுமே அறிந்து இருக்கின்றேன் .மற்றபடி ஙே எனும் வார்த்தைக்கு உண்மையில் அர்த்தம் இருக்கிறதா என்பது தெரியாமல்தான் இதுவரை இருந்து வந்தேன் .ஆனால் கடந்த ஒரு வாரமா அவ்ளோ ஞே க்களை பார்த்து வருகிறேன் இந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் .



முதல் ஙே ஒய்வு எடுக்குறதுக்கே புது அர்த்தம் கண்டுபிடித்த செல்வி ஜெயலலிதா .எழுதி குடுக்குறத அர்த்தம் தெரியாமே அப்படி வாசித்து செல்லும் ஜெயலலிதாவுக்கு நான் கை காட்டுற ஆளுதான் இந்த தடவை ஜனாதிபதி என மிதமிஞ்சிய நம்பிக்கையில் சங்கு ஊதப்பட்டுவிடுவார் என தெரியாமல் சங்மாவுக்கு அதரவு சொல்லி முதல் ஆளாக ஙே என விழித்துக்கொண்டு இருக்கிறார் .



அப்புறம் இந்த மம்தா பானர்ஜி .இவருக்கு கொஞ்சம் மனதுக்குள் இரும்பு பெண்மணி மார்கரெட் தாட்சர் என நினைப்பு .கொஞ்சம் ஓரக்கண்ணில் பிரதமர் பதவிக்கும் ஆசை துளிர்விட்டு இருக்கும்போல .தான் இந்தியாவின் அசைக்கமுடியாத சக்தி என நிரூபிக்க ஆசை .பலிகடா அப்துல் கலாம் .கலாம் பாட்டுக்கு அறிவியல் கருத்தரங்கு என கல்லூரிகளுக்கு பயணம் செய்துகொண்டு இருந்தவரை நீங்க மறுபடியும் வந்து ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் உக்காருங்க என அழைத்துவிட்டு இன்னைக்கு ஙேஎன விழிபிதுங்கி நிக்கிறார் .



அடுத்து ஙே பா ஜ க எனும் தேசிய கட்சி மொத்தமும் .பிரதமர் பதவிக்கு யாரை முன்மொழிவது என இப்பவே சண்டை போட உல் கட்ட்சியிலே ஆளுக்கு ஒரு பிரிவாக இருக்கும்போது ஜனாதிபதி தேர்தலில் மட்டும் என்ன ஒற்றுமையா இருந்துருவாங்களா என்ன? .முதலில் சங்மா ஆதரவு கேட்டவுடன் ஜெயலலிதாவே ஆதரிக்கும்போது நாம ஆதரிக்கலாம் என நினைக்கும்போதே மம்தா அப்துல்கலாமை நிற்கவைப்போம் என அறிக்கை வருது .தேள் கொட்டுனவன் உடம்புபோல ஆகிடுச்சு பா ஜ க கட்சிக்கு .நாமதானே அப்துல்கலாமுக்கு மொத்த ஏஜன்ட் ,இந்த அம்மா என்ன இப்ப வந்து அந்த உரிமையை கையில் எடுக்குதே என இவங்களும் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து இப்ப ஙே என விழி பிதுங்கி நிக்கிறாங்க .மறுபடியும் சங்மா வுக்கு சங்கு ஊத பாஜக காவடி எடுப்பாங்க போல .



அடுத்து கலைஞர் ஆரம்பத்தில் சொன்ன பதிலோடு நின்று இருக்கலாம் .மத்தியஅரசு நிற்க வைக்கும் வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு என சொன்ன பின்னாடி எதற்கு கலாம் என்றால் கலகம் என சொல்லணும் .ஏற்கனவே தமிழ் போராளிகள் எல்லோரும் எப்படா அய்யா வாய தொறப்பாரு நாம ஸ்டேட்டஸ் போட்டு கிழிக்கலாம் கொஞ்சம் தமிழன் என நிரூபிக்கலாம் என காத்திருக்கும்போது இப்படி பேசுனா சும்மா இருப்பாங்களா? .ஒருநாள் பொழுது அவங்களுக்கு ஓடிடுச்சு .கலைஞர் தான் தப்பா சொல்லிட்டோமோ என ஙே என விழி பிதுங்கி நிக்கிறார் .



இருபது இருபது என எல்லா இளைஞன் மனதிலும் விதைத்தவருக்கு சொந்தகாரரனா அப்துல்கலாம் .ஜனாதிபதியாக இருந்தபோது சில மரபுகளை உடைத்தவர்தான் .ஆனால் சில நேரங்களில் பேசவேண்டியது இருக்கும்போது மௌனமாகவும் இருந்தவர் .இவர் மனதிலும் இன்னும் கொஞ்சம் ஜனாதிபதி பதவிமேல் ஆசை இருந்து இருக்கும்போல .மம்தா பேரை அறிவித்த உடனே மறுத்து அறிக்கை விட்டு இருப்பாரேயானால் இன்று இன்னும் எல்லோர் மனதிலும் உயர்ந்து இருப்பார் .ஆனால் தாம் நின்றால் எல்லோரும் ஆதரிக்கும் சூழ்நிலை இல்லை என்று தெரிந்தபின்னால் நான் போட்டியிடவில்லை என சொல்லி ஙே என இவரும் விழி பிதுங்கி நிற்கிறார் .

மொத்தத்தில் கேலிகூத்து நடத்துவதில் யாரும் சளைத்தவரல் இல்லை என்பதை இந்த ஜனாதிபதி தேர்தலில் நிரூபித்து எல்லோரும் ஙே என விழிபிதுங்கி நிற்கின்றனர்

3 comments:

  1. ஆத்தாடி, இந்தியாவில் இத்தனை ஙே-க்களா?

    ReplyDelete
    Replies
    1. இது கொஞ்சமே கொஞ்சம் மட்டுமே நிஜாமுதீன்

      Delete
  2. என்ன சார் ஆச்சு ? நேற்று படித்த பதிவையே மீண்டும் படித்து 'ஙே'-ன்னு முழிக்கிறேன் சார் ! (இரண்டு தடவை ஒரே பதிவு publish ஆகி விட்டது ... சரி பார்க்கவும்)

    ReplyDelete