தீபாவளி இரவு அன்று டெங்கு காய்ச்சலுக்கு அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த என் மச்சானை உடனடியாக திருச்சியில் சேர்க்க சொல்லிவிட்டார்கள் .என் மச்சான் வாய் பேசமுடியாதவர் .இரவு பத்து மணிக்குமேல்தான் திருச்சியில் சேருங்கள் என்று சொன்னார்கள் .
அதன்பின்பு என் கிராமத்தில் இருந்து வாடகை கார் எடுத்துக்கொண்டு என் மச்சான
ையும் அவர் மனைவியையும் மற்றும் இரண்டு பெண்கள் என் மகன் ஆகியோர் திருச்சி பயணமானோம் .திருச்சியை நாங்கள் சென்று அடையும்போது இரவு மணி ஒன்று .இதற்க்கு இடையில் என் மச்சான் காரில் பட்டபாடு சொல்லி அழமுடியாது .வாய் பெசமுடியாதவரால் ஒன்றும் சொல்லமுடியாமல் துடிப்பதும் அழுவதுமாக எங்களோடு பயணித்தார் .
திருச்சியில் நாங்கள் முதலில் சென்றது அமெரிக்கன் மருத்துவமனை .அங்கே இருந்த ஒரு மருத்துவ பெண்மணி மருத்துவர்கள் அனைவரும் விடுமுறையில் உள்ளனர் .இப்ப இங்கே தங்குவதற்கு பெட்டும் இல்லை .நோயாளி அன் கண்டிசனில் இருக்கிறார் .உடனடியாக வேறு ஒரு மருத்துவமனையில் சேருங்கள் என்று சொல்லி விட்டனர் .
அதன்பின்பு நாங்கள் சென்றது கே எம் சி மருத்துவமனைக்கு .அங்கே இருந்த ஒரு பரதேசி நாய் கொஞ்சம்கூட ஈவு இறக்கம் இல்லாமல் இங்கே இப்பொழுது அனுமதிக்க முடியாது .நீங்க வேறு மருத்துவனை பாருங்க என சொல்லிவிட்டான் .நாங்கள் என் மச்சானின் நிலையை எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் அரசு மருத்துவமனையில் சேருங்கள் என சொன்னான் .நேரம் ஆக ஆக என் மச்சான் வயிறு வலியில் துடிப்பதும் நெஞ்சை அடைப்பதுமாக அவதிப்பட்டுகொண்டு இருந்தார் .
அதன்பின்பு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பிரண்ட் லைன் மருத்துவமனை சென்றோம் .அங்கே இருந்த நர்சும் இப்ப இங்கே சேர்க்கமுடியாது என சொல்லிவிட்டனர் .

அதன்பின்பு கீதாஞ்சலி மருத்துவமனை சென்று கேட்டோம் .அவர்களும் அனுமதிக்க மறுத்தனர் .அங்கே இருந்த நர்ஸ் சுதர்சனா மருத்துவமனையில் சேருங்கள் என்று சொன்னார் .நாங்கள் சுதர்சனா மருத்துவமனை சென்று அனுமதிக்க சொன்னோம் .அங்கே இருந்த
நர்சுகள் என் மச்சானை அனுமதித்து பரிசோதனையும் செய்தனர் .என்ன செய்கிறது என கேட்டனர் .நாங்க அறந்தாங்கி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சேர்த்து இருந்ததையும் வெளியே சென்றது கருப்பாக இருந்தததையும் சொன்னோம் .
நர்ஸ் போய் மருத்துவரிடம் பேசிவிட்டு வந்து இங்கே அனுமதிக்க முடியாது மருத்துவர் ஊரில் இல்லை என்று சொல்லி விட்டனர் .எவ்வளவோ சொல்லி பார்த்தோம் .அவர்கள் கேட்கவில்லை .
அதன்பின்பு விடியல் காலை நான்கு மணிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு நான் மட்டும் காரில் திரும்பிக்கொண்டு இருந்தேன் .காலை ஆறுமணிக்கு திருச்சியில் இருந்து தொலைபேசி வருகிறது .என் மச்சானுக்கு அடுத்து அடுத்த பெட்டுகளில் இருந்த மூன்று பேர் மரணம் அடைந்து விட்டார்கள் என்று .அதை பார்த்த என் மச்சான் அவரின் தங்கையின் காலில் கும்பிட்டு விழுந்து இருக்கிறார் .என்னை இங்கே வைக்காதே .என்னை வெளியில் எங்காவது கொண்டுபோய் காப்பாற்று என அழுது இருக்கிறார் .
அந்த சமயம் அங்கே வந்த காலை டூட்டி மருத்துவரிடம் கேட்டதற்கு உங்கள் அண்ணன் அன் கண்டிசனில் இருக்கிறார் .எது வேண்டுமானாலும் நடக்கலாம் என சொல்லி விட்டார் எந்த இரக்கமும் இன்றி .
அதன்பின்பு கொண்டுபோன எந்த பொருளையும் எடுக்காமல் அங்கே இருந்தவர்களுக்கு தெரியாமல் என் மச்சானை ஆட்டோவில் அழைத்துக்கொண்டுபோய் ஏ பி சி மருத்துவமனை கொண்டுபோய் இருக்கின்றனர் .அங்கேயும் அவர்கள் சேர்க்கவில்லை .இது எல்லாவற்றையும் பார்த்துகொண்டு இருந்த என் மச்சான் மரண பயத்தில் அழுது இருக்கின்றார் .
ஊருக்கு வந்த நான் இன்னும் இரண்டுபேரை அழைத்துக்கொண்டு என் உறவினர் காரோடு புதுக்கோட்டையில் காத்துகொண்டு இருந்தேன் .திருச்சியில் இருந்து ஒரு கார் எடுத்துக்கொண்டு என் மச்சானும் உறவினர்களும் வந்து சேர்ந்தனர் .
கடைசி முயற்சியாக மச்சானை அழைத்துக்கொண்டு மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை சென்றோம் பகல் பனிரெண்டு மணி அளவில் .அவர்கள் உடனடியாக எமெர்ஜென்சி வார்டில் அனுமதித்து அவசர சிகிச்சை செய்தனர் .
இறந்துபோய் விடுவார் என நாங்கள் நினைத்த என் மச்சான் இன்று நலமுடன் உள்ளார் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்ததால் .
திருச்சி கே எம் சி ,அமெரிக்கன் ,பிரண்ட் லைன் ,கீதாஞ்சலி ,சுதர்சனா போன்ற மருத்துவமனைகள் எதற்க்காக .அவர்களுக்கு பணம் மட்டுமே முக்கியமா .ஒரு உயிரின் அவசியம் தெரியாமல் எதற்க்காக மருத்துவமனை நடத்துகிறார்கள் .
Tweet |
மருத்துவ சேவை .மகேசன் சேவை என்பார்கள் ....இது போன்ற மருத்துவர்கள் இருப்பதனால்தான் .மருத்துவதுரைக்கே கெட்ட பெயர்
ReplyDeleteபல ஊர்களிலும் இந்த 'தொழில்' (சேவை-என்றோ மறைந்து விட்டது) சிறப்பாக நடக்கின்றது... கொடுமை...
ReplyDeletetm4
நிறைய மருத்துவ மனைகள் இந்த லட்சணத்ல தான் இருக்குது எத்தனை விசாரணைகள் அவர்கள் மீது கொடுத்தாலும் கண்டுக்கவே மாட்டேங்கறாங்க உயிரின் விலை அவர்களுக்கு மிக சாதாரணம் ...
ReplyDeleteஇப்டி நடக்றப்ப தான் தூத்துக்குடில நடந்த சம்பவம் ஏனோ அநியாயத்துக்கு மனதில் வந்து தொலைகிறது
இந்த மருத்துவமனைகளின் அங்கீகாரங்களை ரத்து செய்வதற்கு எங்கே முறையிட வேண்டும்?
ReplyDeleteஅண்ணா. இது எல்லாருக்கும் நடந்து கொண்டுதான் இருக்கு. எதிர்த்து போராடுவது யார்? என்பதுதான் இன்னும் முடிவு இல்லாமல் தொடர்கிறது இந்த தூயரங்கள்...
ReplyDeletehttp://www.mciindia.org/Contact.aspx
ReplyDeleteContact Person : To lodge a complaint
ReplyDeletehttp://www.mciindia.org/Contact.aspx
இதுபோன்ற சமூக அவலங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன
ReplyDeleteபூனைக்கு மணியைக் கட்டுவது யார் !?