நான் படம் பார்க்க திரை அரங்கம் சென்றால் ஒன்று நடிகர்களுக்காக அல்லது இயக்குனர்களுக்காக .அப்படி நான் இயக்குநருக்காக சென்றுபார்த்த படம் முகமூடி .மிஷ்கினின் சித்திரம் பேசுதடி ,அஞ்சாதே ,யுத்தம் செய் மற்றும் நந்தலாலா காப்பி செய்து எடுக்கப்பட்ட படம் என்றாலும்கூட எனக்கு பிடிக்கவே செய்து இருந்தது .
ஏற்கனவே ஓரளவு ரசிக்ககூடிய அளவில் படம் எடுத்தார் என்ற காரணத்திற்க்காக
முகமூடி படம் பார்க்க சென்றேன் .டைட்டில் போடும்போது நடிகர்கள் பெயர் போடும்போதுகூட ஆஹா படம் அருமையாக இருக்கபோகுது என்று நினைத்துக்கொண்டு இருந்த என் எண்ணத்தில் மண்ணை அள்ளிபோட்டதுதான் மிச்சம் .
படம் ஆரம்பித்தவுடனே சூப்பர் ஹீரோ படங்களில் கதாநாயகன் சாகசம் செய்து அறிமுகம் ஆவதுபோல இல்லாமல் மிக சாதரணமாக ஜீவா அறிமுகம் ஆகும்போது ஆகா மிஷ்கின் மற்ற இயக்குனர்கள் செய்யும் தவறை செய்யவில்லை நிச்சயம் படம் நல்லா இருக்கும் என்ற நினைப்பிலேயே படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் .இடைவேளைவரை குழந்தை தத்தக்கா பித்தக்கா என தத்தி தத்தி நடப்பதுபோல சண்டைகாட்சியும் ,காதல் காட்சியும் ,விரும்பும்பெண்ணை கவர்கிறேன் என்று சொல்லி சின்ன புள்ளைகளுக்கு சூப்பர்மேன் உடை வாங்கி கொடுப்போமே அதேபோல ஒரு உடை மாட்ட வைத்து ஜீவாவையும் அவஸ்த்தை படுத்தி நம்மையும் அவஸ்த்தைக்கு உள்ளாக்குகிறார் மிஷ்கின் ,
ஒரு வழியாக இடைவேளை வருகிறது .சரி இனிமேல் சூப்பர் ஹீரோ வருவார் வருவார் என படம் பார்த்துக்கொண்டே இருந்தேன் .ஜீவா அந்த கருப்பு உடை மாட்டிக்கொண்டு கட்டிடத்தின் உச்சியில் நின்றதும் கடைசி காட்சியில் இரும்பு பாலத்தில் ஓடியதும் வேணா மிஷ்கினுக்கு சூப்பர்மேன் ஆக தெரிந்து இருக்கலாம் .படம் பார்த்த நமக்கு ஐயோ பாவம் ஜீவா நல்லா நடிக்கிற ஒரு நடிகனை இப்படி கேவலபடுத்தனுமா என்றுதான் தோணும் .
எடுக்கும் எல்லா படத்திலும் ஐட்டம் பாட்டை வித்தியாசமாக சாரயநெடியோடு காட்சிபடுத்துவதில் மிஷ்கின் வித்தியாசமாக இருக்கிறார் .புகழ்பெற்ற மேடை நாடக நடிகர் கிரீஸ் கர்னாட் இந்த படத்திற்கு எதற்கு .அந்த முதுகு வளைந்த ஊனமுற்ற நபர் கதைக்கு எந்தவிதத்தில் அவசியம் .கதாநாயகி எங்கே இருந்து பிடித்துகொண்டு வந்தார் .வித்தியாசமா படம் பிடிக்கிறேன்னு எல்லா படத்திலும் குளோசப்பில் கால்களை காட்டுகிறாரே அது எதற்கு .நாசர் மட்டுமே கொஞ்சம் இந்த படத்தில் நடித்து இருக்கிறார் .
பின்னணி இசை படத்தில் நன்றாக இருப்பதாக தெரிந்தாலும் சில இடங்களில் எரிச்சலையும் கிளப்புகிறது .படத்தில் வரும் ப்ளாஷ் பேக் காட்சி இருக்கே அப்பப்பா புல்லரிக்குது போங்க .
படத்தின் ஆரம்பத்தில் ப்ரூஸ்லீக்கு சமர்ப்பணம் என்று வருகிறதே அது எதற்கு .
மொத்தத்தில் ஜீவா எனும் நல்ல நடிகனை வேஸ்ட்டாக்கி தானும் பேச்சு அளவில்தான் புலி மத்தபடி எலிதான் என இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார் மிஷ்கின் .
இது என் எண்ணம் மட்டுமே .படம் நான் பார்த்துட்டேன் .நீங்க போய் திரை அரங்கில் பார்ப்பதும் பார்க்காததும் உங்க இஷ்ட்டம்
Tweet |
விரும்பி படம் பார்க்கப் போன என் நண்பனின் குழந்தை நன்றாக தூங்கி விட்டதாம்...
ReplyDeleteஜீவா... பாவம்...