Friday 12 October 2012

கனவாய் போன மின்சாரம்


எல்லோரும் மாஞ்சு மாஞ்சு எழுதிட்டாங்க மின்சாரம் இல்லாதது பத்தி .நானும் அதை எழுதணுமா என நினைக்கும்போதே எழுது மனது ஆணையிடுகிறது .என்ன எழுதலாம் .

நிறைய எழுதலாம் எங்க ஊரு மின்சாரம் பற்றி .எனக்கு விவரம் தெரிந்த 1980 ல எங்க ஊர்ல மின்சாரம் இருந்த பதினைந்து வீடுகளில் எங்க வீடும் ஒன்னு .மின் விளக்கு ஆன் செய்தோம் என்றால் அப்படி ஒளிரும் என சொல்ல ஆசைதான் .ஆனா அப்படி எல்லாம் ஒளிராது .மின்சாரம் இருந்தாலும் மண்ணெண்ணெய் விளக்கு வைத்துதான் எந்த வேலையும் செய்யமுடியும் .இரவு பத்து மணிக்கு லைன் மாத்துவாங்க .அப்ப போனா போகுதுன்னு இன்னும் கொஞ்சம் கூடுதலா மின்சாரம் வரும் .படிக்கும்போதுகூட குத்துவிளக்குதான் வைத்து படிப்போம் .அப்படி படிச்சும் நான் தேறாம போனது வேறுவிசயம் .

1990 ல பக்கத்து ஊருக்கு ட்ரான்ஸ்பார்மர் புதிதாக வைத்தார்கள் .எங்க ஊர்ல இருந்து ரெண்டு கிலோமீட்டர் தள்ளி அமைந்து இருந்தது அது .அதனால மின்சாரம் இன்னும் கொஞ்சம் கூடுதலா வந்தது .அப்ப எங்க வீட்ல மிச்சியோ ,கிரைண்டரோ ,தொலைகாட்சி பெட்டியோ இல்லை கூடுதலா மின்சாரம் தேவைபடுவதர்க்கு .அப்ப எங்க அம்மா அம்மியில் மசாலை அரைத்தும் ,ஆடுகல்லில் மாவு அரைத்தும் விறகடுப்பில் ஆக்கித்தந்த உணவின் சுவை இன்னும் நினைவிலும் நாக்கில் ருசியும் இருக்கவே செய்கிறது .

1992 la புதிதாக வீடுகட்ட ஆரம்பித்தோம் .அப்ப வீட்டுக்கு மின்சாரத்துக்கு அப்ளை செய்ய மின்வாரிய அலுவலகம் சென்றோம் .அங்கே எனக்கு தெரிந்த நண்பர் இருந்தார் .அவர் சொன்னார் நீங்க கட்டும் வீடு பெரிதாக இருக்கு அதனால த்ரீபேஸ் மின்சாரத்துக்கு அப்ளை செய்யுங்க என்றார் .சரி என நானும் அவ்வாறே செய்தேன் .எங்க ஊர்லேயே த்ரீபேஸ் மின்சாரத்துக்கு அப்ளை செய்து வாங்கிய முதல் வீடு எங்க வீடுதான் .எங்க வீட்டுக்கு த்ரீபேஸ் மின்சாரம் கொடுக்க போஸ்ட் மரத்தில் இரண்டு ஓயார்தான் எப்பொழுதும் இருந்தது .இன்னும் ஒரு ஒயர் புதிதாக போட்டுவந்து எங்க வீட்டுக்கு லைன் கொடுத்தாங்க .

1993 la எங்க புது வீட்டுக்கு குடிபெயர்ந்தோம் .எனக்கும் அந்த வருடம்தான் திருமணம் நடந்தது .இப்ப எங்க வீட்ல புதிதாக தொலைகாட்சி பெட்டி ,ஐஸ் பெட்டி ,விடியோ,கிரைண்டர் ,மிச்சி என அனைத்து மின்சாரம் தேவைப்படும் பொருளும் இருந்தது .த்ரீபேஸ் மின்சாரம் இருந்தும் நிறைய மின் உபயோகபொருள் இருந்ததால் ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக ச்டேப்லைசர் பொறுத்தவேண்டி இருந்து .இந்த சமயம் எங்க ஊரில் நிறைய வீடுகளில் மின்சாரம் வந்துவிட்டது .தூரத்தில் இருந்ததால் கொஞ்சம் மின்சாரம் பற்றாக்குறையாக வரும் .பத்துமணிக்குமேல்தான் டியூப்லைட் எரியும் .

1995 la முதன் முதலாக மலேசியா வந்துவிட்டேன் .அதன் பின்பு எங்கள் வீட்டுக்கு சில அடிகள் தூரத்திலேயே புதிய ட்ரான்ஸ்பார்மர் நிறுவி விட்டார்கள் .எங்கள் ஊரின் மின்பற்றாக்குரையும் நீங்கியது .மிக சந்தோஷமாக இருந்துவந்தோம் .

இந்த நிலையில்தான் ஆற்காடுவீராசாமி மின்துறை அமைச்சராக இருந்தபோது இரண்டுமணிநேர மின் தடை இருந்தது .அது நட்ட நடுசென்டர்கள் எனும் நடுநிலைவாதி புலிகள் முகநூல் மற்றும் ப்ளாக்கரில் கலைஞரையும் ,ஆற்காடுவீராசாமி அவர்களையும் திட்டுவதற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் பெரும் உதவிபுரிந்தது இந்த கண்ணில் காணாத மின்சாரம் .

இப்ப தமிழகம் காக்க வந்த தங்கத்தாரகை ,அகில உலக அகிலாண்டேஸ்வரி என அடி வருடிகளால் வர்ணிக்கப்படும் ஜெயலலிதா ஆட்சியில் பதினெட்டு மணிநேரம் சில நாட்கள் இருபத்தி மூணேகால் மணிநேரம் மின்சாரம் எங்கே இருக்கு அல்லது போகிறது என்பது தெரியவில்லை .

இனிமேல் காணமல் போனவர்கள் வரிசையில் மின்சாரத்தையும் சேர்க்கவேண்டியதுதான் .

கனவுகாணுங்கள் அப்துல்கலாம் சொன்னார் .நான் சொல்றேன் கனவுகானுகள் கனவிலாவது உங்கள் வீட்டில் இருபத்துநாலு மணிநேரம் மின்சாரம் இருப்பதாக 

5 comments:

  1. இங்கு மொத்தமே நான்கு மணி நேரம் தான்...!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    //கனவுகாணுங்கள் அப்துல்கலாம் சொன்னார் .நான் சொல்றேன் கனவுகானுகள் கனவிலாவது உங்கள் வீட்டில் இருபத்துநாலு மணிநேரம் மின்சாரம் இருப்பதாக///

    ஹா ஹா...நல்ல வேல நாங்க பாண்டிச்சேரில இருக்கோம். :-) :-)


    ReplyDelete
  3. ////ஹா ஹா...நல்ல வேல நாங்க பாண்டிச்சேரில இருக்கோம். :-) :-)////

    அப்ப நம்மளும் பாண்டிசேரிக்கு குடிவந்து விடவேண்டியதுதான்,

    செய்யது
    துபாய்

    ReplyDelete
  4. இனி கனவு எல்லாம் காணமுடியாது. கனவும் கனவாகிவிடும். அப்புறம் என்ன...மின்சாரம் இருந்தால்தானே நிம்மதியா தூங்க முடியும். அப்படி தூங்கினால்தானே கனவு வரும். அதான் இரவெல்லாம் கொசுக்கடி விழிக்கவைத்து விடுகிறதே? இந்த லட்சணத்தில் கனவாம்....கருமாதியாம்.

    ReplyDelete
  5. கனவாவது தூக்கத்துல அப்ப அப்ப வருது மின்சாரம் கனவுல கூட வரமாட்டுது என்ன செய்றது

    ReplyDelete