Friday, 5 October 2012

ஒரு கதவின் கதை



கதவு இல்லாத வீடுகள் ஏதேனும் இருக்குமா .கதவை இதுவரை வீடு அடைக்கும் ஒரு பகுதியாகவே நினைத்துவந்து இருக்கிறேன் .ஆனால் நேற்று பார்த்த காட்சி ஒன்று என் நெஞ்சில் அறைந்தது போல இருந்தது .ஒரு பயணம் மேற்கொண்டு இருந்தேன் .அப்பொழுது ஒரு பகுதியை கடக்கும்போது பழைய பொருட்கள் விற்கும் கடை ஒன்றை கடக்க நேரிட்டது .

அங்கே கண்ட காட்சிகள் மனதில் சஞ்சலத்தை உண்டுபண்ணியது .அங்கே கண்ட அத்தனை பொருட்களும் வீடுகள் உடைத்
து சேகரித்த ஜன்னல்கள் ,கதவுகள் ஆகியவை .வரலாற்று கூடங்களில் கண்ட காட்சிகள் போல இருந்தது கதவுகளை பார்த்த பொழுது .

ஒவ்வொரு கதவும் என்னிடம் ஏதோ சொல்ல வருவதுபோல இருந்தது .நாங்கள் வாழ்ந்த வாழ்வு எப்படிபட்டது என கேட்பதுபோல இருந்தது .அங்கே கிடந்த கதவுகள் சில தலைமுறை வாழ்க்கைதனை பார்த்து வந்ததுபோல இருந்தது .ஒவ்வொரு கதவுக்கும் சில சரித்திரங்கள் கண்டிப்பாக இருந்து இருக்கும் என தோன்றியது .

சந்தோஷமாக வாழ்ந்த குடும்பத்து கதவுகள் வேகமாக அறைந்துசாத்தபடாமல் மிக மென்மையாக கையாளப்பட்டு இருக்கலாம் .கோபமும் குரோதமும் கொண்ட குடும்பத்து கதவுகள் சாத்தப்படும்போது இடி விழுந்ததுபோல அறைந்து சாத்தப்பட்டு இருக்கலாம் .

சந்தோசத்தையும் துக்கத்தையும் எப்பொழுதும் மௌனாமகவே காலம் காலமாக பார்த்துகொண்டு வருகின்றன கதவுகள் .சில கதவுகளில் அளிக்கபடாத சந்தனமும் குங்குமமும் மிச்சமாக ஒட்டி இருந்தது .யாரேனும் அந்த கதவுகளுக்கு பூஜைகள் செய்து இருக்கலாம் .

ஜன்னல்களும் அழுவதுபோல இருந்தது .எவ்வளவு சந்தோசங்கள் எவ்வளவு ஊடல்கள் எவ்வளவு சண்டைகள் அறைக்குள் நடந்தபோதெல்லாம் சாட்சியாய் இருந்தது அந்த ஜன்னல்கள்.
நிலவு வானில் தோன்றியபோதெல்லாம் அதன் ஒளியை அறைக்குள்
அனுமதித்து தென்றலையும் உடன்வர சம்மதித்து எல்லோருக்கும் சந்தோசங்களை கொடுத்தது ஜன்னல்கள்தானே.

யாரும் அறியாத ரகசியங்கள் முதலில் அறிவது கதவுகளும் ஜன்னல்களும்தானே .

வீடுகளுக்கு பாதுகாவலாகவும் ,வீட்டில் நடக்கும் சந்தோஷ நிகழ்வுகளுக்கு முதல் வரவேற்ப்பாளராகவும் கதவுகள்தானே இருக்கு .

ஒரு வீட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்துவந்த கதவுகளும் ஜன்னல்களும் மனிதர்களுக்கு வரும் மரணம் போல கால மாற்றத்தில் வீடுகள் இடிக்கப்பட்டு பெயர்தெடுக்கப்படுமபோது அவற்றின் அழுகுரலை
நாம் கேட்டு இருப்போமோ

3 comments:

  1. வித்தியாசமான சிந்தனை...

    ஏனோ இந்த பாட்டு ஞாபகம் வந்தது :

    அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்...
    எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்...
    சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்...
    சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்...
    தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்...

    ReplyDelete
  2. கவித்துமான பதிவு ஒன்று, மாறுப்பட்ட சிந்தனை வடிவம், வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  3. ரொம்ப வித்தியாசமான சிந்தனை.
    சிந்திக்க வேண்டியதும்தான் :)

    ReplyDelete