Thursday 1 November 2012

ஏழாம் உலகமும், ஜெயமோகனின் ஏழரையும்..............


ஒரு வழியா ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவல் படித்து முடித்துவிட்டேன் .நீண்டநாட்களாக படிக்க நினைத்து தேடி வாங்கிய புத்தகம் அது .நான் தேடியலைந்த காரணம் இந்த நாவலை படித்து முடிக்காதவர்கள் இலக்கியம் படிக்கமுடியாது போன்ற மாயதொற்றங்கள் உருவாக்கப்பட்டதால் .

நான் ஜெயமோகன் தளத்திற்கு போய் படிக்கும்போதெல்லாம் ஏழாம் உலகம் நாவல் படித்தவர்கள் எழுதிய கடிதங்களும் அதற்க்கு ஜெயமோகன் சொல்லிவரும் பதிலும் இ
ந்த நாவலை இன்னும் படிக்காமல் இருக்கோமே என என் எண்ணங்களை தூண்டிக்கொண்டே இருந்தது .இந்த நாவலோடு விஷ்ணுபுரம் ,பின்தொடரும் நிழல் போன்ற நாவலுக்கும் ஏதாவது கடிதமும் ஜெயமோகனின் பதிலும் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும் .ஏழாம் உலகம் நாவல் படித்தவர்கள் எழுதியதுபோல மனதை உலுக்கி செல்கிறதா இந்த நாவல் என்று என்னை கேட்டால் இல்லை என்றே சொல்வேன் நான் .

எதற்காக ஏழாம் உலகம் நாவல் பற்றி இவ்வளவு பிதற்றல்கள் என தெரியவில்லை .இயக்குனர் பாலா எடுத்த நான் கடவுள் இந்த படத்தின் கதையை ஒற்றி எடுக்கப்பட்டு வசனமும் ஜெயமோஹனே எழுதி இருந்தார் .நான் கடவுள் எனக்குள் ஏற்ப்படுத்திய பாதிப்பை சிறிதேனும் ஏழாம் உலகம் நாவல் என்னுள் ஏற்ப்படுத்தவில்லை .

வட்டார வழக்கில் எழுதிய ஒன்றை தவிர இந்த நாவலில் வேறேதும் விசேஷம் இருப்பதாக தெரியவில்லை எனக்கு .நாவலில் போகிற போக்கில் எம்ஜியாரையும் ,ஓவியர் மணியன் அவர்களையும் ,ரஜினிகாந்த் அவர்களையும் கிண்டல் செய்து தன் மனவக்கிரத்தை தீர்த்துக்கொண்டு உள்ளார் .



மாற்றுத் திறநாளி என இன்று கவுரவமாக அழைக்கபடுபம் உடல் ஊனமுற்றவர்களை வைத்து கதை எழுதி உள்ளார் .அப்படி எழுதியவற்றில் நிறைய முரண் இருக்கிறது .உடல் ஊனமுற்ற பெண் ஒருவருக்கு உடல் ஊனமுற்றேவா குழந்தைகள் பிறக்கும் .







கதையின் இறுதி பகுதியில் வரும் ஒரு இடம் நாவல் படிப்பவர்களை அசைத்துபோட்டது போலிருக்கிறது .உடல் குறை உள்ள பெண்ணிற்கு பிறந்த ஒரு குழந்தை அதுவும் ஒரு விரலுடன் ஊனமுற்ற குழந்தை சிறு வயதிலேயே பிரிதேடுக்கபட்ட அந்த குழந்தை பெரியவன் ஆனதும் யாரேனே தெரியாமலேயே மது கொடுத்து தாயிடமே குழந்தை உருவாக்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதும் அந்த தாய் அலறுவதும் கதையாக முடித்து இருக்கிறார் .நாவல் படித்து வரும்போதே நிறைய இடங்களில் கெட்ட வார்த்தைகளில் கதை நிரப்பப்பட்டு இருக்கு .அப்படி எழுதுவதுதான் இலக்கியம் போலருக்கு

7 comments:

  1. இதே நாவலை நீங்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்து இருந்தால் ....உங்களுக்கு பிடித்திருக்கலாம் சகோ ...
    அப்படி படித்து பரவசபட்டவுங்க சொன்ன கருத்துக்கள் உங்களுக்கு பிதற்றலாக தெரிகிறது .. இந்த நாவல் உங்களை பாதிக்காதற்கு நான் கடவுள் திரைப்படமும் ஒரு காரணம் ...நான் இந்த நாவல் படித்தது இல்லை ஜெயமோகன் அவர்களின் ரசிகனும் இல்லை ... ஆனால் உங்கள் கருத்தோடு மாறு படுகிறேன் அதை தான் சொன்னேன் .. மன்னிக்கவும்

    ReplyDelete
  2. ஜெ.மோ. நாவல்லாம் படிக்கிறே... நீ பெரிய இலக்கியவியாதி தான்பா..

    ReplyDelete
  3. அவருடைய பாணி அது தான் என்றால், நமக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தான்...

    நன்றி...
    tm3

    ReplyDelete
  4. ஓயாத பிரச்சாரம் இவரைப் போன்றவர்களைப் ‘பிரபலம்’ ஆக்கியிருக்கிறது.

    ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

    ReplyDelete
  5. || திறநாளி ||

    திறனாளி

    இந்த நாவல் பற்றிய எனது கருத்தும் அதுவே. சில சிறுகதைகளில் அவர் சுஜாதாவைத் தொட்டிருக்கிறார். சில நாவல்களும் கூட படிக்கத் தக்கவையே. ஆனால் இது என்னைப் பொறுத்த வரை குப்பை.

    இக் கதை காட்டும் சமூகத்தில் அவர் காட்டுமளவுக்கு கீழ்நிலை அலகுகள் அனைத்தும் ஒருங்கினைந்து காணக் கிடைப்பதில்லை. அது அவலச் சுவையை விடக் கீழ்மைக்கு மனதை இழுக்கிறது.

    அதிலும் உருப்படிகள்' என்ற வகையான சொல்லாடல்கள் நிச்சயம் கீழ்மையானவை.

    எந்த ஒரு எழுத்து மனித மனத்தின் சிந்தனையை உயர்ந்துகிறதோ அதுவே உண்மையான எழுத்து. இது அப்படியானது அல்ல.

    ReplyDelete
  6. ஜெயமோகன் எழுதியதிலேயே சரளமாக வாசித்துச் செல்லக் கூடிய சிறப்பான முறையில் எழுதப்பட்ட நாவல் ஏழாம் உலகம் தான். அது பொருட்படுத்தத் தக்க நாவலும் கூட. நான் கடவுள் சினிமாவைக் கூட பாலா ஏழாம் உலகத்தை மட்டும் கதைக்களனாக வைத்து எடுத்திருந்தால் அது ஒரு அற்புதமான சினிமாவாக அமைந்திருக்கும். அதில் அதீத உணர்வுகளுடன் கூடிய அகோரி பாத்திரத்தை நுழைத்து கொஞ்சமும் நம்பகத் தன்மையில்லாத வன்முறைகளுடன் சினிமாவையெ சிதைத்து விட்டார் என்பது என்னுடைய அபிப்ராயம். நான் ஜெயமோகனின் தீவிர அபிமானி அல்ல; அவரின் காடு போன்ற நாவல்களை சலிப்பூட்டும் நடையால் என்னால் வாசிக்கக் கூட முடிந்ததில்லை.

    ReplyDelete
  7. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete