பூ தெரியுமா உங்களுக்கு பூக்கள் தெரியுமா .எல்லாம் தெரிந்து இருக்கும் .தினசரி வாழ்வில் பூக்களை கடக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா இவ்வுலகில் .
பூ வாசம் உள்ளதும் வாசம் இல்லாததுமாக எத்தனை எத்தனை பூக்கள் இருக்கின்றன .ஒவ்வொரு நாளும் எதேனும் பூக்களை உற்று பார்த்துக்கொண்டே இருக்கிறேன் .அவை மொட்டாகவும் மலர்ந்த மலராகவும் தலையாட்டி சிரிக்கின்றன .எப்படியும் காய்ந்து உதிர்ந்துவிடுவோம் என தெரிந்தும் பயமற
்று சிரித்துக்கொண்டு இருக்கின்றன .
அதிகமாய் மலரும் முன்பே செடியில் இருந்து வேட்டையாடப்படும் மலராக மல்லிகைபூ இருக்கின்றது .முன்பு மல்லிகைபூக்கள் வாழைநாரில் தொடுக்கப்பட்டது .அப்படி தொடுக்கபட்டதாலேயே யாரையாவது பார்த்து பழமொழி சொல்லும்போது பூவோடு சேர்ந்து நாறும் மணப்பதுபோல என சொன்னார்கள் .இன்று வாழைநார் மறந்து நூர்கண்டுகளில் தொடுக்கபடுகிறது .
எங்கே என்ன நடந்தாலும் இந்த பூக்களுக்கு அங்கே என்ன வேலை .முதலில் முந்தி வருவது பூக்கள்தானே .வாசமாகவும் அலங்காரமாகவும்
எல்லா வீடுகளுக்கும் நுழைந்து விடுகின்றன .

எவ்வளவு நாகரீகத்தின் உச்சியில் இருந்தாலும் ஒரு பெண் ஒரு முழம் பூவை தலையில் சூடும்போது அழகின் உச்சத்தை தொட்டவள்போல தெரிகிறாள் .
மணப்பெண்ணின் தலையில் ஏறி அமர்ந்த பூக்கள் முதலிரவு அறைக்குள்ளும் மெத்தைகளில் பரவிக்கிடக்கின்றது நசுங்கபோகிறோம் என தெரியாமலே .
ரோஜாக்கள் எப்பொழுதும் அமைதியாக இருப்பதாக தோணும் எனக்கு .வருடத்தில் வரும் ஒரு நாளுக்காக மற்ற அத்தனை நாட்களும் அமைதியாக இருக்கின்றன .பிப்ரவரி பதினாலு அன்று உலகம் முழுக்க ஒரு ஆன் கையில் இருந்து பெண் கைக்கு மாறிசெல்ல பூத்து இறுகும் ரோஜாக்கள் .அன்பை சொல்ல நாங்க மட்டுமே குத்தகை என ரோஜாக்கள்
பெருமைபட்டுகொள்கின்றன.
எனக்கும் பூக்களோடு வாசம் உண்டு .அது அன்பையும் கொடுத்து இருக்கு
அதே நேரம் வெறுப்பையும் தந்து இருக்கு .
எங்கேனும் பயணத்தில் ரோட்டோரங்களில் பூக்கள் கொட்டிகொண்டே போய் இருந்தால் யாரோ இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கி சென்றார்கள் என தெரிகிறது .அதை சொல்லவும் பூக்கள் தேவையாக இருக்கு .
புது கணவன் மனைவிக்கு பூ வாங்கி வரும்போது வீட்டில் இருக்கும் தங்கைக்கு தெரியாமல் மனைவிக்கு கொடுக்க அங்கே மறைக்கப்படும் பூவாகவும் ஆகிவிடுகிறது .
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் பூக்கள் பற்றி .உங்களுக்கும் தெரிந்து இருக்கும் பூக்கள் பற்றி
Tweet |
பூவை வைத்து நல்லதொரு அலசல்...
ReplyDeleteமுடிவில் இப்படி ஒரு 'பன்ச்'
நன்றி...tm2
//தங்கைக்கு தெரியாமல் மனைவிக்கு கொடுக்க அங்கே மறைக்கப்படும் பூவாகவும் ஆகிவிடுகிறது // அதுசரி...பூவை மறைக்கலாம். பூ வாசத்தை எப்படி மறைப்பது?
ReplyDelete//தங்கைக்கு தெரியாமல் மனைவிக்கு கொடுக்க அங்கே மறைக்கப்படும் பூவாகவும் ஆகிவிடுகிறது // அதுசரி...பூவை மறைக்கலாம். பூ வாசத்தை எப்படி மறைப்பது?
ReplyDeleteபூவைப்பற்றி மணக்க மணக்க ஒரு கட்டுரை! முகர்ந்து ரசிக்கும்படி இருந்தது! நன்றி!
ReplyDeleteநான் படித்ததுகளில் ரொம்ப வித்தியாசமான பதிவு
ReplyDeleteநல்ல அலசல்