Wednesday, 17 October 2012

மாற்றான் - தோற்றானா வென்றானா?



மாற்றான் 

ரொம்ப எதிர்பாப்பை ஏற்ப்படுத்தும் எந்த படமும் அதை நேர் செய்வதில் இருந்து தவறுகிறது .சமீப உதாரணம் மாற்றான் .

எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய காரணம் சூர்யா ,கே வி ஆனந்த் ,ஹாரிஸ் ஜெயராஜ் என பிரபலங்கள் இந்த படத்தில் இடம் பெற்றதுதான் .

கதை ஒரு வரியில் சொல்லலாம் .ஒட்டி பிறந்த இரட்டையர் ஒரு இதயத்தில் வாழ்கின்றனர் .சொந்த அப்பாவே வில்லன் .இரட்டையரில் ஒருவர் இறந்துவிட இன்னொருவர் அப்பாவை எலிகளுக்கு இ
ரையாக்குவது கதை,

சூர்யா என்னதான் நூத்துக்கு இருநூறு சதம் தன் உழைப்பைகொட்டி நடித்தாலும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது கதையோட்டத்தில் ஏற்ப்படும் தொய்வுகளால் .எண்ணிக்கையில் சூர்யாவுக்கு இன்னொரு படமாக அமைந்து விட்டது .இறுதிகாட்சியில் அழுது நடிக்கும்போது ஏனோ ஏழாம் அறிவு படம் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை .அதோடு எரிச்சல் வருவதையும் தடுக்கமுடியவில்லை .

காஜல் அகர்வால் படத்திற்கு பலமா பலமில்லையா என்பதை கணிக்கமுடியவில்லை .படத்தில் வருகிறார் ,சூர்யாவிற்கு மொழி பெயர்க்கிறார் ,கொஞ்சம் ஆடுகிறார் அவ்வளவுதான் .இரட்டையரில் தான் காதலித்தவன் இறந்தவுடன் எந்தவித மன அதிர்வுகளும் இல்லாமல் இன்னொரு சூர்யாவுடன் கை கோர்க்கிறார் .

சூர்யா அப்பாவாக வருபவரை சிங்கம் ஹிந்தி பதிப்பில் பார்த்து இருக்கிறேன் .அவருடைய நடிப்பை என்ன சொல்வது .பத்தோடு பதினொன்றாக வருவது போல வந்து மகனிடம் அறிவுரை வாங்கி கடைசி காட்சியில் செத்து போகிறார் .

அப்புறம் கே வி ஆனந்த் .ஷங்கரிடம் ஒளிப்பதிவு செய்தபோது பிரமாண்டமாய் கதை சொல்வதை கவனித்து இருப்பார் போல .அதை வைத்து அயன் ,கோ போன்ற வெற்றிப்படங்களை இயக்கி இருந்தார் .அதில் கொஞ்சம் மமதை ஏறி இருக்கலாம் .அதே போல இந்த படமும் வந்து விடும் என எடுத்து சொதப்பி விட்டார் .படம் ஆரம்பித்ததில் இருந்து ஒரு காட்சி நன்றாக இருந்தால் அடுத்தகாட்சியில் தொய்வாக நகரும் .இதே போல படம் நகருவதால் முழுமையாய் ஒன்றி படம் பார்க்கமுடியவில்லை .

படத்தில் மிகபெரிய பலம் சண்டை காட்சிகள் அதை படமாக்கியவிதம் ஆகியவற்றை சொல்லலாம் .படத்தில் வரும் சண்டை காட்சிகள் இதுவரை வந்த படங்களில் உச்சம் என சொல்லலாம் .ஒளிபதிவாளர் சௌந்தரராஜன் கடுமையாக உழைத்து இருக்கிறார் .சண்டைபயிர்ச்சி இயக்குனரையும் பாராட்டியே ஆகணும் .

படத்துக்கு மிகபெரிய திருஷ்டி போட்டு ஹாரிஸ் ஜெயராஜின் இசை .ஒரு பாடலின் இசையை மட்டும் வைத்துக்கொண்டு எத்தனை படத்துக்குத்தான் இசை அமைப்பார் என தெரியவில்லை .கார் துரத்தல் காட்சிகளில் பயன்படுத்தி இருக்கும் இசை ஏ ஆர் ரகுமான் சிவாஜி படத்தில் திரை அரங்கு சண்டைகாட்சியில் பயன்படுத்திய இசை .

படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் உங்களை திருப்திபடுத்தகூடும் .இல்லையேல் எரிச்சலை தரும் .

ஆனாலும் ஒருமுறை பார்த்து வரலாம் .

கொசுறு .திரை அரங்கில் டிக்கெட் கிழிப்பவர் நான்கு நாட்களாக ஓரளவு திரை அரங்கம் நிறைகிறது என்று சொன்னார் .

2 comments:

  1. எனக்கு என்னமோ பிடிக்கலை...

    விமர்சனத்திற்கு நன்றி...tm2

    ReplyDelete
  2. நறுக்குனு இருக்கு.

    ReplyDelete