Tuesday 1 May 2012

மே தினமும்...முன்னேறிய நானும்....



மே தினம் எல்லா வருடமும் என்னை கடந்து சென்ற நாள்தான் .இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் யாருக்கேனும் இந்த நாளில் வாழ்த்து சொல்லி இருக்கேனா என்று யோசித்தால் இல்லை என்ற பதிலே வருகிறது .இந்த முகநூலுக்கு வந்த பிறகு எல்லா நாளிலும் யாருக்கேனும் பிறந்தநாள் வாழ்த்தோ அல்லது விஷேச தின வாழ்த்தோ எழுதிகொண்டுதானிருக்கிறேன்.

உழைப்பாளர் தினம் தொழிலாளிக்கு மட்டுமா அல்லது ஊதியம் கொடுக்கும் முதலாளிக்குமா என்று எனக்கு தெரியவில்லை .எல்லோருக்குமே வாழ்த்துக்கள் சொல்லுவோம் .

நான் முதலாளியாகவும் இருந்து இருக்கிறேன் கிராமத்தில் என் விளைநிலத்தில் வேலை பார்த்த தொழிலாளிகளுக்கு .நான் தொழிலாளியாகவும் இருந்து இருக்கிறேன் மலேசியா வந்து .சில வருடங்கள் உழைத்து கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு சிறு தொழில் ஒன்றை இங்கே ஆரம்பித்து அதற்க்கு நானே முதலாளியாகவும் நானே தொழிலாளியாகவும் இருந்து இருக்கிறேன் .

சின்ன சறுக்கலில் அந்த தொழிலை இழந்து மறுபடியும் தொழிலாளியாக வேலை பார்த்து இருக்கிறேன் .அந்த முதலாளியிடமே அவரது சிறு தொழில் ஒன்றை விலைபேசி குறைந்த வருமானமாக இருந்தாலும் நிம்மதியா சில மாதங்கள் நடத்திக்கொண்டு இருந்தேன் .என் போதாத காலம் நான் தாயகம் திரும்ப வேண்டி இருந்ததால் அந்த கடையை தெரிந்த நண்பரிடம் பார்த்துக்க சொல்லி விட்டு வந்தேன் ,ஆனால் அவர் வேறு ஒருவரிடம் கடையை கொடுத்து அந்த ஆள் அந்த கடையின் மேல் கடன் வைத்து அந்த கடனால் நான் மலேசியா மறுபடி வந்தபோது உதடு தெறித்து மூக்குடைந்து ரத்தம் வழிய வழிய அடி வாங்கி இருக்கிறேன் ,என்னால் என் தம்பியும் அடி வாங்கினான் .

அதில் இருந்து மீண்டு மறுபடியும் வேலை செய்தேன் .வேலை செய்யும்போதே வினை ஒன்று பக்கத்தில் வேலை செய்பவன் ரூபத்தில் இருந்தது .அவனால் மீண்டும் அந்த வேலையை உதறிவிட்டு மறுபடியும் சிறு தொழில் ஒன்றை நண்பர்களிடம் கடன் வாங்கி ஆரம்பித்து நடத்தினேன் .அதில் என் நண்பன் ஒருவனும் பங்குதாரர் .திடிரென அவன் கடையில் நான் இருந்து பார்த்துக்கொள்கிறேன் .நீ வேறு கடை பார் என்றான் .அதற்கும் தலையாட்டிவிட்டு வெளியில் வந்தேன் .

மறுபடியும் சிறிய கிராமம் ஒன்றில் கடை திறந்தேன் .அந்த கடையையும் மூடிவிட்டு நான் பார்க்க தொழிலாளியாக இருந்த ஒருவரிடம் தொழிலாளியாக சேர்ந்தேன் .அப்பொழுது நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை .

இப்பொழுது எல்லாம் கடந்து சிறு தொழில் ஒன்றை வெற்றிக்கரமாக நடத்திக்கொண்டு வருகிறேன் .வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம் .எப்பொழுதும் நம் மனதினை எல்லாவற்றிலும் பொருந்திகொல்லுமாறு வைத்து இருக்கவேண்டும் .முதலாளியா இருந்த நாம் வேலை பார்ப்பதற்கு சங்கடபட்டோம் என்றால் நாம் வீழ்வதை யாரும் தடுக்க முடியாது .

நம்மால் முடியாது என்பது எதுவும் இல்லை என நினையுங்கள் நம்மால் எதுவும் முடியும் .இதுவே நான் என் வாழ்வில் கற்றுக்கொண்ட பாடம் .

உங்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்

4 comments:

  1. இன்று உங்கள் முந்தைய பதிவுகளைப் பார்த்தேன்.நல்ல ரசனை உங்களிடம் தென்படுகிறது.கூடவே உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.

    உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. @ராஜ நடராஜன் உங்களுக்கும் என் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் .உங்களது வருகை என்னை சந்தோசமடைய செய்கிறது .இன்னும் என்னை மேருகேற்றிக்கொள்ள தூண்டுகிறது உங்கள் ஆதரவு

    ReplyDelete
  3. சோர்ந்து போகமல் தொடர்ந்து முயற்ச்சி செய்ததற்க்கு உங்களை நினைத்தால் பெருமையாய் இருக்கிறது

    ReplyDelete
  4. தொடர்ந்து முன்னேற மற்றும் மே தின வாழ்த்துகள்

    ReplyDelete