Sunday, 29 April 2012

முதல் பயணமும் என் முதல் வெளிநாட்டு வேலை அனுபவமும்டேய் நான் நாளைக்கு மலேசியா போறேண்டா ,சந்தோசமும் வருத்தமுமாக நண்பனிடம் சொன்னேன் .எங்கேடா வேலையில் சேரப்போறே  என கேட்டவனிடம் தெரியலடா அங்கே போனால்தான் தெரியும் என்று சொன்னேன் .

பயணம் கிளம்பும் அன்று என் உறவினர்கள் எல்லோர் வீட்டிற்கும் சென்று பயணம் சொன்னேன் .அனைவரும் வெத்திலை பாக்கு வைத்து நூறு ரூபாய் கொடுத்தார்கள் .கூடவே பணத்தோடு சின்ன அறிவுரையும் சேர்த்தே தருவார்கள் .போகிற இடத்தில் நல்ல படியாக வேலைபார்த்து பணம் சம்பாரிக்கணும் என்று .இப்ப எல்லாம் பயணம் சொல்வதே இல்லை .எப்ப வெளிநாடு போறாங்க ,எப்ப ஊருக்கு திரும்பி வருகிறார்கள் என்பது தெரியவில்லை .காலையில் ஊர்  டீ கடையில் பார்த்தால் நேற்று வெளிநாட்டில் இருந்தவன் இன்று ஊர் கடையில் டீ குடித்துக்கொண்டு இருப்பான் .

பயணம் அன்று மாலை வீட்டில் எல்லோரிடமும் பயணம் சொல்லிவிட்டு கிளம்புமுன் அம்மா கிழக்கு பார்த்து உட்கார சொல்லி கையில் காய்ச்சிய பசும்பால் குடிக்க கொடுத்தார்கள் .இந்த பசும்பால் குடிக்கும் நிகழ்வு மட்டும் என் அம்மாவின் சந்தோசத்திற்காக நான் ஊருக்கு வந்துவிட்டு திரும்பும் ஒவ்வொருமுறையும் தொடர்கிறது .

பயணத்திற்காக எங்கள் ஊர் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் ஒரே ஒரு பேருந்திற்காக சொந்தங்கள் சூழ நின்றிருந்தேன் என் நான்கு மாத குழந்தையை கையில் வைத்து இருந்தபடி .பேருந்து வரும் கொஞ்சநேரதிர்க்கு முன்பாக என் மகன் எனது சட்டையில் வைத்துபோக்கு ஆகிவிட்டான் .சட்டை மஞ்சள் நிறமாகி வாசம் எடுக்க ஆரம்பித்து விட்டது .இதை பார்த்த பெருசுங்க பயணத்தின்போது குழந்தை வெளிக்கு போனது உனக்கு இரணம் வந்து சேரும் கவலைபடாதே என சொன்னார்கள் .சட்டையயை அலசி மறுபடியும் போட்டுக்கொண்டு என் பயணத்தை தொடர்ந்தேன் .

முன்பு வெளிநாட்டு பயணங்கள் இன்றுபோல் திருச்சிவரை கிடையாது .சென்னை சென்றுதான் கிளம்பவேண்டும் .என் முதல் விமானபயணம் சென்னையில் இருந்து மலேசியன் ஏர்லைன்சில் கோலாலம்பூர் சென்று அடைந்தேன்  மார்ச் முப்பதாம் தேதி .இப்பொழுது இருக்கும் பிரமாண்டமான விமானநிலையம் அப்பொழுது இல்லை .அது பழைய விமானநிலையம் .

அங்கு சென்றதில் இருந்து என் உறவினர் வீட்டில் தங்கி இருந்தேன் .தினமும் அவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சி முன்பு அமர்ந்துவிடுவேன் .உறவினர் வேலை முடிந்து திரும்பும்போது தினமும் வேலை கிடைத்துவிட்டதா என கேட்பேன் .அவர் பொறுமையுடன் இரு என்பார் .

சரியாக பத்துநாள் கழித்து என்னை தனது மொட்டோர்சைக்கிளில் அழைத்துசென்றார் உறவினர் .ஒரு உணவகத்தின் முன்பு நிறுத்திவிட்டு என்னை உள்ளே அழைத்து சென்று உணவக மேலாளரிடம் பேசிவிட்டு என்னை உனக்கு இங்குதான் வேலை பார்த்து நடந்துக்க என சொல்லிவிட்டு சென்றார் .நானும் சரியென தலையாட்டிவிட்டு மேலாளரை பார்த்துக்கொண்டு நின்றேன் .அவர் என்னை அடுக்களைக்கு அழைத்து சென்றார் .அங்கே ஒரு இந்தோனிசியன் பெண் நின்றுகொண்டு இருந்தாள்.அவளிடம் இவர் மலாய் மொழியில் பேசிவிட்டு அவள் சொல்லுவதுபோல் வேலை செய் என என்னிடம் சொன்னார் .நானும் தலையாட்டினேன் .மொழி தெரியாத எனக்கு இவள் எப்படி சொல்லி புரியவைக்கபோகிறாள் என எண்ணிக்கொண்டு நின்றேன் .அதற்கெல்லாம் அவசியம் இல்லையென ஆகிவிட்டது அவள் செய்து காட்டியவேலை.நான் பார்த்த முதல் வேலை என்ன தெரியுமா .எச்சில் தட்டு மங்கு கழுவுவது .இதற்க்கு எதற்கு மொழி .ஒரு நிமிடத்தில் செய்கையில் வேலையை விளக்கி சொல்லிவிட்டாள்.ஊரில் என் வீட்டில் எனக்கு ஒரு செல்லப்பெயர் இருந்தது .அவ்வபோது சொல்லும் வேலைகளை தட்டிக்கலித்துவிடுவேன்.அதனால் வேலை களவாணி என்பதுதான் அது .அப்படி சுற்றி திரிந்த எனக்கு முதல் வேலை தட்டு மங்கு கழுவுவது என்றால் எப்படி இருந்து இருக்கும் எனக்கு .சில வாரங்கள் கண்ணீரில் கழிந்தது என் நாட்கள் .

நான் முதன் முதலில் வேலை பார்த்த நாள் எது தெரியுமா .சரியாக என் பிறந்தநாளான ஏப்ரல் பத்து அன்று .என்றுமே வாழ்வில் மறக்கமுடியாத நாளாக போய்விட்டது என் முதல்நாள் வேலை அனுபவம் .

விக்ரமன் படத்தில் வருவதுபோல ஊஊஊஊஊ லாலாலாலா என ஒரே பாட்டில் வசதியாக வருவதுபோல இருந்தாள் எப்படி இருக்கும் .ஆனால் நிதர்சனம் வேறு அல்லவா .பாடுபட்டு உழைத்தால்தான் வாழ்வில் முன்னேறலாம் .முன்னேற்றப்பாதையில் சில அடிகளை கடக்க ஆரம்பம் செய்து இருக்கிறேன் நீண்டகால காத்திருப்பிக்கு பின்பு வலிகள் நிறைந்த வாழ்வில்

9 comments:

 1. படம் வேறு வாழ்க்கை வேறு என்பதை அறிந்து வாழ்க்கையில் முன்னேறி இருப்பீர்கள். நிறைய எழுதுங்கள் உங்கள் அனுபவங்கள் கனவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாழ்க்கைபாடமாக இருக்கும்.வாழ்த்துக்கள் சகோதாரா....வாழ்க வளமுடன்

  ReplyDelete
 2. வெற்றி நிச்சயம் இது நம் எலோருக்கும்

  ReplyDelete
 3. படம் வேறு வாழ்க்கை வேறு என்பதை அறிந்து வாழ்க்கையில் முன்னேறி இருப்பீர்கள். நிறைய எழுதுங்கள் உங்கள் அனுபவங்கள் கனவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாழ்க்கைபாடமாக இருக்கும்.வாழ்த்துக்கள் சகோதாரா....வாழ்க வளமுடன்

  ReplyDelete
 4. படம் வேறு வாழ்க்கை வேறு என்பதை அறிந்து வாழ்க்கையில் முன்னேறி இருப்பீர்கள். நிறைய எழுதுங்கள் உங்கள் அனுபவங்கள் கனவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாழ்க்கைபாடமாக இருக்கும்.வாழ்த்துக்கள் சகோதாரா....வாழ்க வளமுடன்

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ....
  //நான் பார்த்த முதல் வேலை என்ன தெரியுமா .எச்சில் தட்டு மங்கு கழுவுவது .இதற்க்கு எதற்கு மொழி .ஒரு நிமிடத்தில் செய்கையில் வேலையை விளக்கி சொல்லிவிட்டாள்.ஊரில் என் வீட்டில் எனக்கு ஒரு செல்லப்பெயர் இருந்தது .அவ்வபோது சொல்லும் வேலைகளை தட்டிக்கலித்துவிடுவேன்.அதனால் வேலை களவாணி என்பதுதான் அது .அப்படி சுற்றி திரிந்த எனக்கு முதல் வேலை தட்டு மங்கு கழுவுவது என்றால் எப்படி இருந்து இருக்கும் எனக்கு .சில வாரங்கள் கண்ணீரில் கழிந்தது என் நாட்கள் .///// கண் கலங்க வைத்த வரிகள்... காலத்தின் கட்டாயத்தில் நானும் உணர்ந்த வலிகள்....
  உங்கள் வலிகள் சாதனைகளாக மாற என் வாழ்த்துக்கள் சகோ...

  ReplyDelete
 6. @sharmila hamid மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் .வெளிநாட்டிற்கு முதல் தடவை வேலைக்காக பயணப்படும்போது இருக்கும் கனவுகள் வேலையில் சேரும்போது பெரும்பாலோருக்கு வாய்ப்பதில்லை .முட்டி மோதித்தான் வாழ்க்கையில் உயரத்தை அடையும் வழிகளை கண்டுணர முடியும் .அந்த சிக்கலுக்குள் நானும் அகப்பட்டு இருந்தால்தான் இந்த பதிவு

  ReplyDelete
 7. இந்தியாவில் மட்டும்தான் செய்யும் தொழிலுக்கும் பிரிவினை வைத்திருக்கிறோம்..

  சுத்தம் செய்வது மட்டுமே தனது பொறுப்பு என்று இல்லாமல் சமையல்காரருக்கு வெங்காயம்,மிளகாய் போன்றவைகளை வெட்டிக்கொடுக்க உதவ வேண்டும்.இந்தப் பழக்கம் மெல்ல உங்களை சமையல் அறைக்கு இட்டுச் செல்லும்.சமையல் துறை பெரும் கடல்.ஈடுபாடு,உற்சாகம்,உழைப்பு இருந்தால் நிச்சயம் முன்னுக்கு வருவீர்கள்.

  சமையல் துறையின் அடிப்படையிலிருந்து நீங்கள் துவங்குவதால் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறுவீர்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.

  http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_22.html

  ReplyDelete
 9. ஆரம்பத்தில் கிடைத்த (கஷ்டமான) அனுபவங்களால் தான்..நீங்க இப்ப இந்தநிலையே அடைந்துள்ளிர்கள் பாய். அதேசமயம்...பட்ட கஷ்டங்களை (எளிதில்) மறக்காமல்...இருப்பது முக்கியமும் கூட!

  ReplyDelete