Thursday, 26 April 2012

புத்தகங்கள் என் வாழ்க்கையோடு......




நான் எப்படி புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன் யோசிக்கும்போது  ஆச்சரியமாக இருக்கிறது .இன்றும் கூட தினசரி பத்திரிக்கைகள் மாலையில் தான் வந்து சேரும் கடைகோடி கிராமத்தில் உள்ள நான் எப்படி வாசிப்பு பழக்கத்திற்கு ஆளானேன் .




என் முதல் வாசிப்பு எதுவென யோசிக்கையில் தினத்தந்தி பத்திரிக்கையின் கன்னித்தீவு படக்கதையே நினைவுக்கு வருகிறது .இன்றும் கூட சிந்துபாத் லைலாவை தேடி நீண்ட பயணம் மேற்கொண்டு இருப்பார் ,அந்த முடிவுறா பயணம் போலவே என் புத்தகங்கள் வாசிப்பும் .




அதற்க்கு அடுத்து காமிக்ஸ் புத்தகங்கள் .முத்து காமிக்ஸ் ,லயன் காமிக்ஸ் ,ராணி காமிக்ஸ் என் எல்லா காமிக்ஸ் புத்தகங்களும் அடங்கும் .அதில் வரும் கதாபாத்திரங்கள் ஜேம்ஸ்பாண்ட் ,ஆர்ச்சி ,ஸ்பைடர் மேன்,இரும்புக்கை மாயாவி என அந்த உலகம் எனக்குள் எப்பொழுதும் உலவிக்கொண்டே இருந்தது .




என் பள்ளி நண்பர்கள் நாலைந்து பேர் சேர்ந்து வாங்குவோம் ,சில நேரங்களில் என் நண்பன் திருக்குமரன் [இவன்  இன்று இவ்வுலகில் இல்லை ] மட்டும் வாங்குவான் .அதே நேரத்தில் இன்னொரு நண்பன் விநாயகமூர்த்தி அம்புலி மாமா கொண்டு வருவான் ,அவன் அப்பா ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் ,பள்ளிக்கு வரும் புத்தகம் அது .






நான் படித்த முதல் நாவல் யவன ராணி சாண்டில்யன் எழுதியது .என் அண்ணன் நூலகத்தில் உறுப்பினராக இருந்தார் ,அவர் வாங்கி வரும் புத்தகம் எல்லாம் விளங்கியும் விளங்காமலும் படித்து முடித்துவிடுவேன் .இதே சமயங்களில் என் நண்பன் சங்கர் வீட்டில் குமுதம் வாங்குவார்கள் [இவனும் இன்று இவ்வுலகில் இல்லை ]சங்கர் அப்பா எங்கள் ஊரின் போஸ்ட் மாஸ்டர் .குமுதம் வந்தவுடன் நாங்கள் பார்ப்பது முதலில் ஆறு வித்தியாசம் .அதன் பின்பே மற்றதெல்லாம் .குமுதத்தில் தான் எனக்கு அறிமுகம் ஆனார் எழுத்தாளர் சுஜாதா அவரின் விக்ரம் திரைப்பட தொடர் மூலம் .




ஸ்டெல்லா அக்கா மறக்க முடியாதவர்கள் .இவர் நூலக கண்காணிப்பாளர் [வேறு எப்படி சொல்வது என தெரியவில்லை ]என்னை நூலக உறுப்பினராக்கி என்ன என்ன புத்தகங்கள் படிக்கலாம் என சொல்லிகொடுப்பார்கள் .அவர்கள் மூலம் என் வாசிப்பும் கொஞ்சம் விரிவடைந்து இருந்தது .




நான் முதன் முதலில் காசு கொடுத்து வாங்கிய நாவல் இன்னும் நினைவில் இருக்கிறது .ராஜேஷ் குமார் எழுதிய நந்தினி நானுற்றி நாற்பது வோல்டேஜ் கிரைம் நாவலில் வந்தது .அதன் பின்பு சுபா தொடர்ச்சியாக எழுதிய சூப்பர் நாவல் [இந்த நாவலின் அட்டை படம் அன்று எடுத்தவர் இன்று பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குனர் கே வி ஆனந்த்] இந்த இதழில் வந்த ஒரு கதைதான் ஆனந்த் எடுத்த முதல் படம் கனாக்கண்டேன் என வந்தது .








அப்புறம் பட்டுகோட்டை பிரபாகர் தொடர்சியாக எழுதிய உல்லாச ஊஞ்சல்,பாலகுமாரன் எழுதிய பல்சுவை நாவல் ,தேவிபாலா எழுதிய குடும்ப நாவல் ,ரமணி சந்திரன் எழுதிய நாவல் என எல்லா புத்தகங்களும் .
ஆனந்த விகடன் ,குமுதம் ,வண்ணத்திரை ,கல்கண்டு ,முத்தாரம் என கலவையாக புத்தகங்கள் வாங்கினேன் .என் அம்மா இப்படி புத்தகம் படிக்கா படிப்பு வராது என சத்தம் போடுவார்கள் .அதே போல மேல்நிலை பள்ளி யோடு என் படிப்பும் முடிந்தது .








இன்று இலக்கிய எழுத்தாளர்களோடு எல்லாவிதமான புத்தகங்களும் படிக்கிறேன் .சுந்தரராமசாமி யின் ஒரு புளியமரத்தின் கதை ,ஜே ஜே சில குறிப்புகள் ,ஜெயமோகன் ,எஸ் ராமகிருஷ்ணன் ,வண்ணநிலவன் ,கலாப்ரியா ,மேலாண்மை பொன்னுசாமி ,இன்னும் யார் யாரெல்லாமோ .இணையத்தில் நிறைய ப்ளாக் படிக்கிறேன்.




இதுதான் என இல்லை ,என்னால் எதையும் படிக்க முடிகிறது .இலக்கியம் மட்டுமே அல்ல எல்லாமும் படிக்கவேண்டும் ,அதுவே என் ஆசை.

6 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    நீங்க சொன்ன அம்புலிமாமா, சாண்டில்யன்லாம் இப்படிதான்.... யாராச்சும் படிச்சேன்னு சொன்னாதான் தெரியும்... மத்தபடி படிச்சதில்ல :)

    ம்ம்ம்... இப்பவே அறிவாளியா இருக்கேன்.. இதெல்லாம் படிச்சா ஒலகறிவாளியாகிடுவேனோன்னு எனக்கே பயம்மா இருக்கு சகோ! அதுனால படிக்கிறதில்ல ஹி..ஹி..ஹி...

    உங்களின் வாசிப்பு பழக்கத்தை அழகா சொல்லியிருக்கீங்க. மேலும் பல இலக்கியங்களையும் பார்த்து எங்களை கொலையா கொல்ல மனமார்ந்த வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  2. அண்ணே... நீங்க எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுங்க...இலக்கியத்தை பற்றி மட்டும் எழுதிடாதீங்கண்ணே...படிக்க கஸ்டமாகிடும்...

    ReplyDelete
  3. வாசக ஒ வாசக நீ வாசி நாளை உன் எழுத்தில் நான் தெரிவேன் !!நீங்க படித்த இந்த மேதைகளின் எழுது சாயல் உங்களிடம் இருக்கும் ...தொடர்ந்து படிங்க எழுதுங்க அண்ணா

    ReplyDelete
  4. ஆமினா உங்கள் வருகைக்கு நன்றி .பயப்படாதீங்க இலக்கியம் எழுதி யாரையும் கொல்லமாட்டேன்.அதை ஏற்கனவே ஜெயமோகன் போன்றவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள் .ஏதோ எனக்கு தெரிந்த ஒன்றை எழுதுகிறேன்

    ReplyDelete
  5. கஸாலி ஆரம்பமே அருவா கம்பு எல்லாம் வரும்போல இருக்கே .இலக்கியம் எழுதலப்பா வேற எதையாச்சும் எழுதி கொல்லுறேன் சரியா

    ReplyDelete
  6. கஸாலி ஆரம்பமே அருவா கம்பு எல்லாம் வரும்போல இருக்கே .இலக்கியம் எழுதலப்பா வேற எதையாச்சும் எழுதி கொல்லுறேன் சரியா

    ReplyDelete