Wednesday, 25 April 2012

நொண்டி அண்ணன்




தலைப்பு பார்த்துவிட்டு தலையை சொரிந்துகொல்லாதீர்கள் .நான் உங்களை அறுத்தெடுக்க போவதில்லை .இது ஒரு மனிதன் பற்றிய கதை அல்ல .என் வீட்டில் பால் கறக்கும் பசுமாடுகள் இல்லாமல் போனதற்கு நொண்டி அண்ணனும் ஒரு காரணம் .அதுதான் நொண்டி அண்ணன் என தலைப்பு .
நொண்டி அண்ணன் எனக்கு விவரம் தெரியும்போதே அப்படித்தான் அழைக்கபட்டுக்கொண்டு இருந்தார் .எங்கள் ஊரில் எல்லோருக்குமே அவர் நொண்டி அண்ணன் தான் .அவரின் உண்மையான பெயர் அவரின் குடும்பத்தார் அறிவார்களோ என்பதே சந்தேகம்தான்.

நொண்டி அண்ணன் மிக ஒல்லியாக ஒரு நாற்பது கிலோ தாண்டதவராய் இருப்பார் .அழுக்கடைந்த கைலி ஒரு மேல் துண்டு ஒரு நீண்ட வழவழப்பான கம்பு ஒன்று ,அழுக்கடைந்த உடம்பு முள்ளு முள்ளாய் அங்கொன்றும் இங்கொன்றும் நீட்டிக்கொண்டு இருக்கும் தாடி ,மஞ்சள் பல்வரிசை இப்படியாக இருப்பார் அவர் .அவர் நடக்கும்போது ஒரு கால் லேசாக விந்தி நடப்பார் .ஒரு கை எப்பொழும் மடங்கிய நிலையில் இருக்கும் .இதனாலேயே அவர் நொண்டி அண்ணன் என அழைக்கபட்டார் .


நொண்டி அண்ணனுக்கு எல்லோரையுமே தம்பி அல்லது தங்கச்சி என அழைக்கும் .அவர் அவர்கள் வீட்டில் உள்ள மாடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி செல்வார் .அவங்க வீட்டில் மாடுகள் நிறைய இருக்கும் .அண்ணன் மாடு ஒட்டிவருவதே அழகாக இருக்கும் .அண்ணன் வருவது நடையும் இல்லாமல் ஓட்டமும் இல்லாமல் இரண்டிற்கும் இடையில் தொங்கோட்டமாக ஓடி வரும் .அவர்கள் மாட்டோடு எங்கள் வீட்டு மாடும் இன்னும் பத்துக்கு மேற்ப்பட்ட குடும்பங்களின் மாடுகளை மேய்க்கும் .அவங்க வீட்டில் கிளம்பும்போது இருந்த இருபது மாடுகள் எங்கள் வீட்டை கடக்கும்போது நூறு மாடுகளை தாண்டி மந்தையாக மாடுகளை ஒட்டி செல்லும் .எல்லா மாடுகளுக்கும் அது பேர் வைத்து இருக்கும் .கிடாரி,செவலை,வெள்ளை என அது மாடுகளை அதட்டும்போது பார்க்கும் நமக்கு ஆச்சரியமாக இருக்கும் .அது பேர் சொல்லி கூப்பிடும் மாடு அண்ணனை திரும்பி பார்க்கும் .மந்தையில் போகும் எல்லா பசுவுக்கும் ஏதோ ஒரு பெயர் இருக்கும் .எங்கள் வீட்டின் ஒரு பசுவுக்கு அது வைத்து இருந்த பெயர் இன்னும் என் நினைவில் இருக்கு .அந்த பெயர் சின்ன கிடாரி .காலையில் எங்கள் வீட்டு மாடு சத்தம் போட்டது என்றால் மணி பத்தரை என்று அர்த்தம் .அந்த நேரம்தான் அண்ணன் மாடு மேய்க்க வெளியாகும் நேரம் .


மாலையில் மாடுகளை திரும்ப ஒட்டிக்கொண்டு வரும் .மணி சரியாக ஐந்தரை ஆகி இருக்கும் .அண்ணன் அவர்கள் வீட்டிற்கு சென்று மாடுகளை கட்டிவிட்டு முகம் கழுவிவிட்டு நேராக எங்கள் வீட்டிலோ அல்லது எங்கள் உறவினர்கள் வீட்டு வாசலிலோ நின்றுகொண்டு தங்கச்சி என அழைக்கும் .ஒரு மாடு மேய்ப்பதர்க்கு மாதம் ஒன்றுக்கு மூன்று ருபாய் வாங்கும் .எங்கள் வீட்டில் பசுக்கள் கன்றுக்குட்டி என எழு மாடுகள் .இதேபோல மற்ற வீடுகளிலும் இருக்கும் .என் அம்மா வந்தவுடன் பணம் குடுக்க மாட்டாங்க .தங்கச்சி தங்கச்சி என கெஞ்சிக்கொண்டு இருக்கும் .நொண்டி அண்ணன் பணம் வாங்குவது குடிப்பதற்காக .

என் அம்மா நான் காசு கொடுத்தா நீ குடிக்க போயிடுவே என்று சொல்வாங்க .இருந்தும் கெஞ்சி வாங்கி விடும் ஐந்து ரூபாயாவது .திரும்பி போகும்போது என் அம்மாவிடம் தங்கவிலாஸ் புகையிலை கொஞ்சம் குடு என்று அதையும் வாங்கி வாயில் அதக்கிகொண்டு போகும் .ஒரு பாக்கெட் சாராயம் நான்கு ருபாய் என நினைவு எனக்கு .எப்படியும் இரண்டு பாக்கெட் சாராயத்திற்கு பணம் சேர்த்துக்கொண்டு போகும் .என் அம்மா மாதம் முடிந்து அண்ணனிடம் கணக்கு சொல்லும் வாங்கிய பணத்திற்கு .இரண்டு மடங்கு கூடுதலாக பணம் வாங்கி இருப்பார் .என் அம்மா இந்த மாதம் பணம் கிடையாது என்று சொல்லி அனுப்பினாலும் மறுநாள் எங்கள் வீட்டின் முன் நிற்பார் .


நொண்டி அண்ணனுக்கு கல்யாணம் நடந்தது என்று சொல்வார்கள் .ஆனால் அந்த பெண் அவரோடு வாழவில்லை .அதை எல்லாம் எழுதினால் ஒரு கிளை கதை எழுதலாம் .நொண்டி அண்ணனை வருடத்தில் ஒரு நாள் புத்தம் புது மனிதனாக பார்க்கலாம் .அந்த நாள் மாட்டுப்பொங்கல் .புதிய கைலி புது சட்டை புது துணி ,ஷேவ் செய்த முகம் என வித்தியாசமாக இருக்கும் .பொங்கல் கடையில் மாடுகள் கூடும் வரை ஒவ்வொரு மாடாக பார்த்துகொண்டு வரும் .அன்று அது முகத்தில் அவ்வளவு சந்தோசம் இருக்கும் .மாடுகள் மட்டுமே என தன் வாழ்வை மரணம் எட்டும்வரை வாழ்ந்தவர் அவர் .


இன்று எங்கள் வீட்டில் ஒரு பசுமாடு கூட இல்லை .வயல்காடுகள் குத்தகைக்கு விட்டதால் உழவுமாடும் இல்லை .என் வீட்டை போன்றே என் உறவினர்கள் வீடுகளிலும் இல்லை பத்து வருடங்களுக்கு மேலாக .நொண்டி அண்ணன் ஒருவர் மட்டுமே இறக்கவில்லை .அவர் இறந்தவுடன் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்ட அத்தனை மாடுகளும் தங்கள் வாழ்வை தொலைத்து காணமல் போய்விட்டன .இன்று அந்த மாடுகள் அடி மாடுகளாய் போனவா இல்லை மூப்பெய்தி இறந்து போனவா என்பது தெரியவில்லை .ஒரு மனிதன் இறப்புக்கு பின் ஒரு நூறு மாடுகளின் வாழ்வும் காணமல் போனது

8 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    மொத பாராவுலேயே நீங்க சிறந்த பதிவராவுறதுக்கான அறிகுறி தெரியுது.. நெசமாதான் சொல்றேன்... ஒரு வாசகியாய் சொல்றேன்... அந்த மொத பாரா கீழே இருக்கும் கதையை படிக்க வைக்குது.

    அவர் இவர்ன்னே சொல்லியிருக்கலாம். அங்கங்கே அஃறிணை கலந்து வருவது மாட்ட சொல்றீங்களா இல்ல நொண்டி அண்ணன சொல்றீங்களான்னு கொழப்புது :-) புல் ஸ்டாப் வைப்பதிலும் பாத்து செய்யுங்க. எழுத்து பக்கத்துலையே இருக்குற மாதிரி! சில வாக்கியங்கள் முடிஞ்சுடுச்சா இல்லையான்னு தெரியல ஹி..ஹி..ஹி.. (எனக்கு தான் வயசாச்சோ :-)

    ஆனா மொத்தத்துல ஒரு கிராமத்துக்கு கூடிட்டு போன மாதிரி இருக்கு. ஒரு சின்ன அழகான கிராமிய கதையை கேட்டாப்ல! சும்மாவே ஆளாளுக்கு அரசர்கொளம் மாதிரி வருமான்னு சீண்டுதுக! :-) இந்த கதை நிச்சயம் உங்க ஊரை பாக்க தூண்டிவிடும்!

    இந்த மாதிரி தானே வாரஇதழ், மாத இதழ்லலாம் போடுறாங்க? ஒரு கிராமத்தானின் வாழ்க்கை பத்தியும் அவனின் நடவடிக்கை சுற்றியும் கதை அமைப்பாங்க.. அதே மாதிரியே இருக்கு... பெர்பெக்ட்.. எங்கும் சளிப்பை ஏற்படுத்தல... நீங்க எழுத ஆரம்பிச்சா நல்லா வருவீங்க.. கண்டிப்பா எழுத ட்ரை பண்ணுங்க... பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது அப்டேட் பண்ணுங்க. நிச்சயம் வரவேற்பு இருக்கும்...

    மனமார்ந்த மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அம்மு பதிவ விட உங்க கம்மென்ட் நீளமா இருக்கே? :) ஹிஹிஹி உங்க கடமை உணர்ச்சிய நான் பாராட்டுறேன்.......

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ பாரூக்.. :)
    எழுத்துலகில் உங்கள் பனி மேன்ம்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.... :)
    ஒரே ஒரு விஷயம் எழுத்துகள் ரொம்ப நெருக்க நெருக்கமா இருக்கா... கூர்ந்து படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு... நெக்ஸ்ட் பதிவுல அத மட்டும் பாத்துக்கோங்க... :)

    ReplyDelete
  3. அழைக்கும் சலாம்

    எனக்கு மிக்க சந்தோசமாக இருக்கு உங்களது வாழ்த்து பார்த்து .நானும் கஸாலியும் நல்ல நண்பர்கள் .முன்பே என்னை எழுதச்சொல்லி சொன்னார் .எனக்கு சிறிய தயக்கம் இருந்தது .எல்லோரும் இங்கே அதிகமாக அரசியல் எழுதுறாங்க நாமும் அதை செய்யவேண்டுமா என்பதே அந்த தயக்கம் .நான் முகநூளிலும் அதிகமாக அரசியல் பேசுவதில்லை நான் ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவனாக இருந்தாலும் கூட .நான் முகநூளில் மேலே எழுதி இருப்பது போன்ற பதிவுகளும் சில நேரங்களில் கவிதைகளும் எழுதுவேன் .நீங்க மேல படித்தது என் வாழ்வில் என் அருகில் பார்த்து உணர்ந்த ஒரு மனிதனின் வாழ்வு அது .என் முதல் பதிவிலேயே உங்கள் வாழ்த்து என்னை அடுத்து அடுத்து எழுத தூண்டும் .அடுத்து ஒரு நல்ல பதிவுடன் இங்கே வருகிறேன் .உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  4. சகோதரி சர்மிளா
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி .அடுத்து எழுதும் பதிவுகளில் குறைகள் களைந்து எழுத முயற்சிக்கிறேன் .பதிவுலகில் புதியவன் நான் .கற்றுக்கொள்ளும் மாணவ பருவத்தில் இங்கு இருக்கிறேன் .என் எழுத்துக்களை படித்து என் குறைகளை சுட்டிக்காட்டுங்கள் .எனக்கு அது மேலும் எழுதுவதற்கு என்னை பன்படுத்துவதர்க்கு உதவும் .உங்கள் வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  5. வாங்க வாங்க ... நல்ல முயற்சி நானும் விரைவில் வருவேன் கலக்குவோம் ....இன்ஷா அல்லா'

    ReplyDelete
  6. மிக்க நன்றி ரியாஜ் .கண்டிப்பாக .நீங்க கஸாலி எல்லாம் இங்கே எனக்கு முன்னோடி .உங்கள் வழிகாட்டுதலோடு இங்கே நான் எழுதுகிறேன்

    ReplyDelete
  7. அருமையான எழுத்து. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. [@]c1743903845771880783[/@][ma]இப்ப எதுக்கு இது[/ma]

    ReplyDelete