Wednesday 26 September 2012

சுந்தரபாண்டியன்



படம் வெளியான அன்று என் அண்ணன் மகன் படம் பார்த்துவிட்டு வந்து நல்லா இருக்கு சச்சா என்றான் .அப்புறம் கேபிள் சங்கர் விமர்சனம் ,ஆனந்தவிகடன் விமர்சனம் எல்லாம் படிச்சுட்டேன் .எல்லாரும் விமர்சனம் எழுதியபிறகு நான் என்ன எழுதுவது .படம் பார்த்தபின்பு எழுதலாம் என தோன்றியது .

படம் யாரும் சொல்லாத கதை என்று கிடையாது .எல்லோரும் தொட்டுசென்ற களம்தான்.காட்சி அமைப்பில் புதுமை என்றும் சொல்லமுடியாது .ஆனால் படம் ரசிக்கவைக்கிறது .

சசிகுமாருக்கு ரசிகர்களின் நாடி தெரிந்து இருக்கிறது .தனக்கு எது செட்டாகும் என தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார் .நகைசுவை நடிகருக்கு இடம் கொடுத்து தான் நடிக்கவேண்டிய இடத்தில் மட்டும் நடித்து இருக்கிறார் .பேருந்து காட்சிகளில் பரோட்டா சூரியோடு சேர்ந்து அதகளபடுத்துகிறார்.ஓரிரு காதல் காட்சிகளே இருந்தாலும் அதிலும் சோடைபோகவில்லை சசிகுமார் .

சசிகுமாருக்கு பின்பு படத்தின் தூணாக தாங்கி இருப்பது சூரி என சொல்லலாம் .சூரி முந்தய படங்களில்  கொஞ்சம் கவுண்டமணி சாயலில் கத்திபேசுவார்.இந்த படத்தில் அமைதியாக பேசி நம்மை குலுங்கி சிரிக்கவைத்து விடுகிறார் .ஏறக்குறைய படத்தின் படத்தின் பெரும்பகுதியில் வந்தாலும் அசத்தல் நடிப்பு சூரிக்கு .

கதாநாயகிக்கு இந்த படம் அறிமுகம் என்பதை நம்பமுடியவில்லை .சந்தோசமோ துக்கமோ எந்த காட்சியிலும் அவரது முகம் பொருந்திபோகிறது .
காதலித்தவனை கல்யாணம் செய்ய அப்பா சம்மதம் சொல்லியவுடன் வரும் அழுகையும் சந்தோசமும் மிக அர்ப்புதமாய் நடித்து உள்ளார் .

இரண்டு பாடல் காட்சிகள் வாயசைப்பு இல்லாமல் பின்புலத்தில் ஓடவிட்டு காட்சிகள் எடுத்தவிதம் அவ்வளவு அழகு .

நண்பர்களாக வரும் அத்தனைபேரும் காட்சியின் தன்மை உணர்ந்து நடித்து உள்ளனர் .அப்பாக்களாக வரும் நரேன் ,தென்னவன் இருவரும் நடிப்பும் மிகை இல்லை .

இசை ரகுநந்தன் .மோசமில்லை .பின்னணி இசை படத்தின் பலம் .

ஒளிப்பதிவும் ரசிக்கவைக்கிறது .

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எதிர்பாராதவிதமாக அமைக்கப்பட்டுள்ளது .

பழையமொந்தையில் புதியகள் என்பதுபோல எண்பதுகளில் வந்த படம் போல இருந்தாலும் இருக்கையில் அமரவைத்துவிடுகிறது படம் .

திரைஅரங்கில் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் .துளி ஆபாசம் கிடையாது

3 comments:

  1. சுருக்கமான விமர்சனத்திற்கு நன்றி...

    இந்த வாரம் போக வேண்டும்...

    ReplyDelete
  2. நல்ல படம்...விமர்சித்த விதம் அருமை...

    ReplyDelete
  3. தாமதமான விமர்சனம் என்றாலும் அருமை.

    ReplyDelete