Tuesday 4 September 2012

ஒரு கிராமத்தானின் பதிவுலக மாநாட்டு அனுபவங்கள்

ஒருநாள் நண்பர் கஸாலி போன் செய்து சென்னை பதிவர் சந்திப்புக்கு வந்துவிடு என சொன்னார் .நானும் சரி என சொல்லிவிட்டேன் .இரண்டுநாள் கழித்து நானும் என் மனைவியும் அவங்க அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டர் சைக்கிளில் திரும்பிக்கொண்டு இருந்தோம் .அப்பொழுது பேச்சோடு பேச்சாக நான் சனிக்கிழமை சென்னைக்கு போகிறேன் என்று சொன்னேன் .எதற்கு என கேட்டாள்.ப்ளாக்கர் மீட்டிங் என சொன்னேன் .நானும் வருகிறேன் என சொன்னாள்.நான் கூட்டிட்டு போக முடியாது .உன்னை கொண்டுபோய் ஹோட்டலில் விட்டுவிட்டு மறுபடியும் கூட்டிட்டு வருவதற்கு எதற்கு சென்னைக்கு வரவேண்டும் என மறுத்துவிட்டேன் .ஒரு வழியாக சம்மதம் வாங்கி வெள்ளிக்கிழமை இரவு அறந்தாங்கியில் இருந்து இரவு எட்டு மணிக்கு பயணமானேன் .பஸ் இடையிலேயே கெட்டுபோக போகுது என தெரியாமலே .

பயணம் சென்றுகொண்டு இருக்கும்போது திருச்சிதாண்டியவுடன் பஸ் கெட்டுபோய் விட்டது .அதன்பின்பு இரண்டுமணி நேரம் கழித்து வேறு ஒரு பஸ் வந்து எங்களை ஏற்றிக்கொண்டு சென்னை பயணம் ஆனது .காலை ஐந்து மணிக்கு சென்னையில் இருக்கவேண்டிய பஸ் எட்டு மணிக்கு கோயம்பேட்டில் என்னை இறக்கிவிட்டு சென்றுவிட்டது .

ராஜேந்திரகுமார் நாவலில் வரும் ஞே எனும்  சொல்லுக்கு ஏற்றார் போல என் விழி பிதுங்கி எழும்பூருக்கு எப்படி போவது என தெரியாமல் நின்றேன்.ஒரு வழியாக எழும்பூர் வந்து ஹோட்டல் ரீகலில் தங்கினேன் .கொஞ்சநேரம் ஓய்வெடுத்துவிட்டு உணவருந்த சரவணபவன் உணவகம் சென்றேன் .ரெண்டு இட்லி ஒரு வடை ஒரு தோசை சாப்பிட்டேன் .ப்ரெஷர் உள்ள ஆளாக இருந்தால் நிச்சயம் எனக்கு மயக்கமே வந்து இருக்கும் கொண்டுவந்து கொடுத்த பில்லை பார்த்து .பெரிய இட்லியாக பத்து ரூபாய்க்கு ஐந்து இட்லி கிடைக்கும் ஊரில் பிறந்த எனக்கு நூற்றி பதினாறு ரூபாய் என்பது மிக மிக அதிகம் .டிப்ஸ் பத்து ரூபாய் வேறு

ஹோட்டலுக்கு நண்பர் அருள் எழில் வந்து சந்தித்தார் .அவருடன் ஒருமணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டு இருந்தேன் .அதன்பின்பு நண்பர் கஸாலி இருக்கும் இடம் நோக்கி சென்றேன்  ,கஸாலியிடம் நீண்டநேரம் உரையாடிக்கொண்டு இருந்தேன் .மதிய உணவருந்தும் நேரமும் வந்து விட்டது .கஸாலி நான் சாப்டுற சாப்பாடு உனக்கு சரிவராது .பக்கத்தில் கேரள உணவகம் ஒன்று இருக்கு .அங்கே போய் சாப்பிடு என சொன்னார் .நானும் அந்த கேரள உணவகம் குமரகோம் தேடிசென்று விறு விறு என உள்ளே சென்று
அமர்வதற்கு இடம் தேடினேன் .அப்பொழுது ஒருவர் சார் என பின்னாடி நின்று ர
அழைத்தார் .என்ன என கேட்டபோது வெளியில் அமருங்கள் .உங்கள் முறை வரும்போது அழைப்போம் என சொன்னார் .அப்போ;அப்பொழுதுதான்
கவனித்தேன் ஏற்கனவே பத்து பேருக்கு மேல் தங்கள் முறைக்கு அமர்ந்து இருப்பதை .இவ்வாறு சனிக்கிழமை ஓடி விட்டது .

ஞாயிறு காலையில் பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு செல்வதற்கு கஸாலிக்கு போன் செய்து வழி கேட்டேன் .அப்படியே ஆட்டோ காரரிடம் போய் அஞ்சுவிளக்கு செல்லவேண்டும் என சொன்னபோது கொல்லு கொலைக்கு அஞ்சாமல் நூற்றி ஐம்பது கேட்டார் .என்னங்க விலை கூடுதலாக கேக்குறீங்க என சொன்னபோது நான் திரும்பி வரும்போது வெறும் ஆளாக வரவேண்டும் என சொன்னார் .வேறுவழி அதே ஆட்டோவில் மண்டபம் வந்து சேர்ந்தேன் .

மண்டபத்தில் இறங்கி கஸாலிக்கு போன் செய்து  எங்கே இருக்கே என்றேன் .மேலே ஏறிவா என சொன்னார் .மேலே ஏறி சென்றவுடனே நிறைய பேர் என்னிடம் வந்து தங்களை அறிமுகபடுத்திகொண்டு என்னையும் நலம் விசாரித்தனர் ,சிலர் மிக நெருக்கமாக நெடுநாள் பழகியவர்கள் போல பேசினார்கள் .அப்பொழுதுதான் தெரிந்தது கஸாலி ஏற்கனவே என் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு இருக்கிறார் என்பது .மிக்க நன்றி கஸாலி .

அப்புறம் திடிர்னு என் கையில் மைக்கை கொடுத்து உங்களை அறிமுகபடுத்திகொள்ளுங்கள் என சொன்னார்கள் .தபூசங்கர் கவிதை தலைப்பு வெட்கத்தை கேட்டாள் என்ன தருவாய் என்பது போல வெட்கம் பிதுங்கி திங்க முதலில் பேச மறுத்தேன் ,பின்பு ஒரு வழியாக பேசி முடித்தேன் ,பின்பு நிறைய நண்பர்களிடம் பேசினேன் ,அதன்பின்பு மச்சான் சிராஜுதீன் வந்தார் .கஸாலி அவருக்கு தெரிந்த நண்பர்கள் அனைவரிடமும் அறிமுக படுத்தினார் .

பின்பு பதிவர்கள் அறிமுகம் நடந்தது .ஏறக்குறைய எல்லோருமே தயார் நிலையில் வந்து இருப்பார்கள் போல .மைக் சில நேரம் தன்வேலையை சரிவர
செய்யாத போதும் பதிவர்கள் தங்களை மிக அழகாக அறிமுகபடுத்திக்கொண்டார்கள் .அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது மறுபடி மேடையில் என்னை அறிமுகபடுத்திகொள்ள வேண்டும் என்பது .ஏனோ இந்த நேரத்தில் மன்னன் ரஜினி கவுண்டமணி தியேட்டர் காமடி நினைவுக்கு வந்தது .மேடையில் நான் ஏறி நின்றபோது என் காலடியில் ஏனோ பூமி நழுவி ஓடிக்கொண்டு இருந்தது .மேடையில் கேபிள் சங்கர் என்ன சொன்னார் நான் என்ன பேசினேன் என்பது தெரியவில்லை .ஒருவழியாக பதிவர்கள் அறிமுகம் முடிந்து உணவருந்தும் வேலை தொடங்கியது .அதன் பின்பு எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருந்தேன் .

மண்டபத்திற்கு வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தோம் .திடிரென பட்டுக்கோட்டை பிரபாகர் நடந்து வந்துகொண்டு இருந்தார் .மனம் திடிரென துள்ளிக்குதித்தது .இளம் வயதில் அவர் எழுதிய நாவல்களை விரும்பி படித்தவன் நான் .தொட்டால் தொடரும் நாவல் ஆனந்தவிகடனில் வெளிவந்தபோது அறந்தாங்கி சென்று புக் வாங்கி வந்து படிப்பேன் .அந்த அளவு
பிகேபி பைத்தியம் நான் .விழா மேடையில் பிகேபி அமர்ந்து இருந்தபோது அவர் அருகில் சென்று என்னை அறிமுகபடுத்திகொண்டேன் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் கிராமம் நான் என .

மறுபடியும் மூத்த பதிவர்களை சிறப்பிக்கும் விழா பிகேபி தலைமையில் நடந்தது .ஒவ்வொருவராக அறிமுகபடுத்தி சிறப்பித்துகொண்டு வரும்போது திடிரென என் பெயரை சொல்லி அழைத்தார்கள் மூத்தபதிவர் ஒருவருக்கு சால்வை போர்த்துவதற்கு .மேடை ஏறியபொழுது விழாவை வழி நடத்திக்கொண்டு இருந்த சுரேகா என் தலைமுடி ரகசியம் கேட்டார் .அதையும் சொல்லிவிட்டு சால்வை போர்த்திவிட்டு இறங்கி என் பணியை முடித்தேன் .

இன்னும் நிறைய எழுதலாம் .இங்கே எல்லோரும் எழுதி விட்டார்கள் .அதனால் இதை என் அனுபவமாக மட்டுமே எழுதினேன் .யாரையும் குறிப்பிட்டு எழுத முடியவில்லை .விழாவுக்கு வந்த அனைத்து பதிவர்களுக்கும் என்னிடம் உரையாடிய நண்பர்கள் ,விழா சிறக்க உழைத்த பதிவர்கள் எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்




12 comments:

  1. இனிய அனுபவத்தை நன்றாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்... அதுவும் ஒவ்வொரு நிகழ்வாக... அருமை... எனக்கும் மறக்க முடியாத அனுபவம்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் உங்கள் வருகைக்கு .உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தது மிக்க சந்தோசம்

      Delete
  2. சுருக்கமா இருந்தாலும் சூப்பர் அண்ணா!

    சென்னையில் ஆட்டோக்காரர்கள் எவ்வளவு பணம் கேட்டாலும் அதில் பாதியை தான் பேசணும் என ஹஸ் முன்பே ட்ரைனிங் கொடுத்ததுனால நான் தப்பிசேன் :-) மாம்பலம் ஸ்டேஷனில் இருந்து சாதிகா அக்கா வீட்டுக்கு போக 100 ரூபாய் கேட்ட போது , என்னமோ சென்னையிலேயே பொறந்து வளர்ந்தவுக மாதிரி 60 ரூபாய் தானே என சண்டை போட்டேன் :-) |

    உங்கள் அனுபவம் செம! இன்னும் எதிர்பார்த்தேன் :-)

    நன்றி அண்ணா

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எழுதலாம் என்றுதான் நினைத்தேன் சகோதரி .இதுவே கொஞ்சம் பெரிதாக வந்துவிட்டது .படிப்பவர்களை படுத்தி எடுக்கவேண்டாம் என நினைத்துத்தான் இதோடு முடித்துக்கொண்டேன் .மிக்க நன்றிமா அன்புக்கும் வருகைக்கும்

      Delete
  3. // கஸாலி ஏற்கனவே என் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு இருக்கிறார் என்பது .மிக்க நன்றி கஸாலி .//

    ஆம்
    எப்போது பேசினாலும் உங்களை பற்றி குறிப்பிட மறப்பதில்லை கசாலி அண்ணா... கூடவே ராஜா போன்றவர்களின் ப்ளாக் முகவரியையும் அடிக்கடி கொடுத்து பார்க்க சொல்லுவார்!

    ReplyDelete
    Replies
    1. ரஹீம் கசாலிங்கற பேர நான் எங்கயாச்சும் யூஸ் பண்ணுனாலே எனக்கு மிஸ்ட் கால் குடுத்து என்னைய போன் பண்ணசொல்லி கன்னாபின்னானு திட்டுறான்...... #இதுக்கும் திட்டுவானோ....???????

      Delete
  4. இதை படிக்கும் போது அப்படியே ஜாக்கி சேகரின் அனுபவ பகிர்வை படிக்கிற மாதிரியே இருக்கு. அவர் தான் வண்டி ரிப்பேர் ஆனதை எல்லாம் கூட விடாம சொல்வார்

    உங்களை பீ. கே. பி யுடன் போட்டோ எடுத்து கொடுத்த ஆளு நான் தான் நண்பரே ; அதிகம் பேச முடியலை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே நன்கு அறிவேன் .நான் மண்டபத்துக்குள் முதன் முதலாக நுழையும்போதே நான் யார் என தெரியாமலே கை கொடுத்து அன்புடன் வரவேற்றீர்கள் .மிக மகிழ்வான தருணம் பதிவர் சந்திப்பு .அடுத்தமுறை இன்னும் விரிவாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் எல்லோரும்

      Delete
  5. ஏனைய பதிவர்களின் அனுபவப் பகிர்வுகளை விட உங்களது வித்தியாசமாக இருக்கிறது...
    அழகான சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிட்டுக்குருவி உங்கள் அன்புக்கும் வருகைக்கும்

      Delete
  6. பதிவர் சந்திப்ப பத்தி எல்லோருமே எழுதி தீத்துட்டாங்க..... ஆனா பதிவர் சந்திப்புக்கு புறப்பட்டது முதல் சென்றடைந்ததுவரையான நிமிடங்களை இவ்வளவு சுவாரஸ்யமா நீங்கதான் சொல்லிருக்கீங்க.... பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளிலேயே வித்யாசமான பதிவு....... நல்ல பகிர்வு நன்றி.......

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜா உங்கள் அன்புக்கும் வருகைக்கும்

      Delete