Friday, 10 July 2015

பாகுபலி என் பார்வையில்

பாகுபலி படத்துக்கு இரவு பணிரெண்டுமணி காட்சிக்கு டிக்கெட் எடுத்துவிட்டேன் திரை அரங்கிற்கு வந்துவிடுங்க என நண்பர் போன் செய்தார்.தூக்கம் கெடுதே என விருப்பம் இல்லாமல் படத்துக்கு போனேன்.

படம் ஆரம்பிப்பதற்கு முன்பு புலி படத்தின் டிரைலர் ஓடியது.ஏனோதானோ என பார்த்துக்கொண்டு இருந்தேன்.டிரைலர் முடிந்து பாகுபலி படம் ஆரம்பம் ஆனது.
டைட்டில் முடிந்தவுடன் முதல் காட்சியாக அருவியில் இருந்து விழும் நீரை காட்டும்போது நிமிர்ந்து உக்காந்தவன்தான் அதன் பின் கொஞ்சம் கூட மனதில் சோம்பல் எழாமல் படத்தை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஏற்கனவே ஷங்கர் படங்களில் பிரமாணடங்கள் பார்த்து இருந்த போதும் அவை எனக்கு தினிக்கப்பட்ட பிரமாண்டங்களாக சிலவேளைகளில் தெரியும்.ஆனால் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் கதையின் போக்கில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

யாருடைய நடிப்பை பற்றியும் நான் சொல்லவில்லை.அதை நீங்களே பார்த்துக்கோங்க.இயக்குனர் ராஜமெளலியும்,ஒளிப்பதிவாளரும்,சண்டைகாட்சிகளை பீட்டர் ஹெய்னும்,மரகதமணியின் பின்னனி இசையும்(பாடல்கள் தடைகற்கள்)
கலை இயக்குனரும்,சிஜி இயக்குனரும் போட்டி போட்டு வேலை பார்த்து இருக்கின்றனர்.

இரண்டாம் பகுதியில் இடம்பெறும் அந்த அரைமணிநேர போர்க்கள காட்சிகள் என்னை சீட்டின் நுனியில் உக்கார செய்தது.திரையில் அந்த அனுபவத்தை பெருங்கள்.
கதாநாயகர்கள் பிரபாஸ்,ராணா இவர்களோடு சத்தியராஜ்,நாசர்,ரம்யாகிருஷ்னன் என பலர் போட்டி போட்டு நடித்து  இருக்கின்றனர்.
இரண்டுமணி நேரம் நாற்பது நிமிடம் படம் ஓடி திடிரென 2016 ல் வாருங்கள் அடுத்த பகுதி பார்க்க என நிறைவு செய்யும் போது இன்னும் சில மாதங்கள் காத்து இருக்க வேண்டுமா என்ன நடந்தது என தெரிய மனதில் ஓடியது.

இந்திய திரை உலகை அடுத்த கட்டதிற்கு அழைத்து சென்று இருக்கும்
ராஜமெளலி குழுவினருக்கு வாழ்த்துக்கள்

1 comment:

  1. சிரத்தை திலகம் ராஜமெளலி அவர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete