Sunday 14 December 2014

லிங்கா விமர்சகர்களுக்கு என் கேள்விகள்.....



லிங்கா.
இது விமர்சனம் இல்லை.கடந்த மூன்றுநாளாக ஆள் ஆளுக்கு எழுதிட்டாங்க.நல்லா இருக்குன்னும் எழுதிட்டாங்க நல்லா இல்லைன்னும் எழுதிட்டாங்க.படத்தின் கதையும் எல்லோருக்கும் தெரியும் இப்போ. அதனால அதுவும் வேண்டாம்.இங்கு படிச்ச விமர்சனங்களால் இப்போ படம் பார்த்துவிட்டு வந்து சில கேள்விகள் தோன்றுகிறது.அது மட்டுமே.

படம் பார்க்கும் முன்பு ரஜினியிடம் என்ன எதிர் பார்த்து போனீங்க.ஒரு விஜய் நடிப்போ அல்லது அஜீத் நடிப்போ எதிர்பார்த்து போனீங்களா?.
இல்லை ரஜினியின் இன்னொரு பாட்ஷா படமோ,சிவாஜியோ அல்லது எந்திரன் படமோ எதிர் பார்த்து போனீங்களா?.
சிவாஜி படத்தின் வில்லன் சுமன் போன்றோ ,எந்திரன் படத்தின் வில்லன் ரஜினி போன்ற பவரான வில்லனை எதிர்ப்பதுபோல கதை எதிர் பார்த்து போனீங்களா?.
அனுஷ்கா,சோனாக்சியிடம் என்ன மாதிரியான நடிப்பை எதிர்பார்த்து போனீங்க.சிவாஜியில் ஷ்ரேயா,எந்திரன் ஐஸ்வர்யா நடிப்பு போன்று இருக்கனும் என எதிர்பார்த்தீங்களா?.
ஏஆர் ரஹ்மானிடம் இன்னொரு சிவாஜி,எந்திரன் படத்தின் இசையை போன்று எதிர்பார்த்து போனீங்களா?.
இதுபோல வேண்டும் என்றால் அந்த படங்கள்தான் இருக்கே அதையே பார்த்து விடலாமே?!.
லிங்கா படம் நல்லா இருக்குதான் ஆனா ஏதோ ஒன்னு குறையுது என்றால் நான் மேல சொல்லி இருப்பவற்றில் ஏதோ ஒன்று குறையுதுதானே அர்த்தம்?!.
ஈரான்,கொரியன் என உலகப்படம் பார்த்துவந்த நமக்கு லிங்கா படம் புரியவில்லையா.
நோலனின் புரியாத படம் புரிந்தகொண்ட அளவுக்கு இந்த ரஜினியின் லிங்கா படம் புரியவில்லையா?.

அல்லது கதை சொல்லும் போக்கு புடிக்கவில்லையா.
படம் பார்த்துக்கொண்டு இருந்தபோது எழுந்து ஓடிவிட தோன்றியதா.
எது உங்களுக்கு புடிக்கவில்லை?.

நேரடியாக கதை புதியுற மாதிரி எடுத்தது புடிக்கலையா.
இரண்டாம் பகுதியில் மெதுவாக கதை சொல்லும் போக்கு நடைபெருகின்றது என சொல்றீங்களா?.இது ஆக்சன் படமாக இருந்தால் வேகமாக நகரும் திரைக்கதை எழுதி படம் எடுத்து இருப்பாங்க.ஆனா ஒரு அணை ஊருக்காக கட்டப்படும்போது அதன் போக்கில்தானே சொல்லமுடியும்.
இத்தனை வயதிலும் இவ்வளவு சுறு சுறுப்பாக ரசிகனின் மனநிலைக்கு ஏற்றவாறு நடித்து இருப்பதே பெரிய விசயமில்லையா?.
அடுத்த ஐந்து வருடங்களில் விஜயோ அஜித்தோ தங்களை இதுபோல நிலைநிறுத்திகொள்ள முடியுமா எனும் சந்தேகம் இருக்கும்போது முப்பத்தி ஐந்து வருடமாக கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்தி தான்தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து இருக்கின்றாரே அது பத்தாதா?!.

நீங்க பாட்ஷாவையோ சிவாஜி எந்திரன் படத்தையோ எதிர்பார்த்து போனது உங்க தவறு.
ரசிக்க தெரியாதவன் சொல்வது இந்த படம் நல்லா இல்லை என.
திரைக்கதை மேஜிக் ரஜினி படத்தில் எப்போதும் இல்லாதது.அதை நீங்க ஏன் எதிர்பார்க்கனும்?.
படம் பார்க்க வருபவனுக்கு மூன்றுமணி நேரம் போவது தெரியாமல் படமாக்கப்பட்டு இருக்கா என்பது முக்கியம். அதை படம் நன்றாக செய்கிறது.
ரஜினி ரசிகன் என்பதையும் தாண்டி பொதுவான திரைபார்வையாளனாக இதுக்குமேல் படம் எப்படி எடுக்கவேண்டும் என எனக்கு சொல்ல தெரியவில்லை.
படம் எனக்கு பிடிச்சு இருக்கு.பார்க்கதவங்க திரையில் பாருங்க.

4 comments:

  1. 100 % unmai.. padam arumai..miga nermaiyaana vimasanam

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்கள் வருகைக்கு

      Delete
  2. விமர்சனங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன. ஒரே காட்சிகளைத்தான் குறிப்பிடுகிறார்கள். புத்திசாலித்தனமான அலங்காரங்கள் எல்லாம் அவசியமில்லை ரஜினிக்கு. sIMPLE AND PALIN . இதுவே ரஜினியின் வெற்றிக்குக் காரணம் நீங்கள் குறிப்பிட்டது போல ஏற்கனவே ஒரு முடிவன மனநிலையில் செல்வோருக்கு விமர்சனம் வேறு விதமாக எழுத முடியாது .
    லிங்கா-ஒரு வித்தியாசமான விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்கள் அன்புக்கும் வருகைக்கும்

      Delete