Saturday, 2 February 2013

கடல் பார்க்க ஐஞ்சு ரூவாக்கு மேல செலவு செய்யாதீங்க


கடல் எப்பொழுது எனக்கு முதல் பரிச்சயம் நினைவுபடுத்தி பார்க்கிறேன்.

மூன்றாவது படிக்கும்போது சென்ற சிறிய இன்ப சுற்றுலாதான் முதன் முதலில் கடல் பார்த்த அனுபவம்.

அந்த சுற்றுலாவுக்கு ஒரு சர்பத் சேர்த்து போய் வர மொத்தமே ஐந்து ரூபாய் மட்டுமே.மதிய உணவு புளிச்சோறு கட்டி எல்லாக்குழந்தகளும் கொண்டுபோனோம்.கூடுதலாக வீட்டில் ஐந்து ரூபாய் கொடுத்தார்கள்.

சுற்றுலா சென்ற இடம் பேராவூரனிக்கு அருகில் உள்ள மனோரா.

கடலும் கடல் ஒட்டி மனொரா கம்பீரமாக நின்றது அந்த வயதில் ஆச்சரியம்.பேருந்து தூர வரும்போதே உயரமாக தெரிந்த மனோரா பார்த்து எல்லா குழந்தைகளும் கை கொட்டி சந்தோசமாய் ஆர்ப்பரித்தது நினைவில் இன்னும் இருக்கு.

இருபத்து அய்ந்து பைசா கொடுத்து மொனோரா உள்ளே சென்று ஆட்டம் போட்டதும் உச்சிவரை சென்று கீலே பார்த்தபோது பயமாக இருந்தது.

அதன் பின்பு கடல் நோக்கி ஓடினோம்.கடல் அலை இல்லாத கடல்.இப்ப சென்று பார்த்தாலும் அமைதியாகவே இருக்கும் கடல்.சகதியும் பாசிகள் அடர்ந்தும் கடலோரம் இருந்தது.இருந்தும் கால் நனைத்து விளையாடியத்தும் ,சங்கு சிப்பிகள் தேடி எடுத்ததும் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடியதும் இன்னும் நினைவில் இருக்கு.

மாலை நேரம் நெருங்கியவுடன் ஆசிரியர் வீடு திரும்ப அழைத்ததும் எல்லோரும் கடலையும் மனோராவையும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தது பசுமையாக இருக்கு.

இப்பவும் மனோரா சென்றே வருகிறேன்.காலாங்கள் கடந்தும் கம்பீரமாக நிற்க்கிறது மனோரா.
கடலும் அன்று பார்த்தது போலவே அலைகள் இல்லாமல் அமைதியாகவே இருக்கு.

2 comments:

 1. மொத்த திரையுலகமும், எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.

  >>>>>> Click to Read
  விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர‌ விபசாரங்களும்.


  .

  ReplyDelete
 2. முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்.

  விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன்.

  அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது.

  என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

  ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும்.

  தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

  இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன்.

  விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது.

  நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது.

  அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்?

  அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

  இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்?

  அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள்.

  ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்?

  கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான்.

  கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை.

  பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.


  இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை. ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன்.

  நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும். அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன். அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது.

  வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது.

  சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில்.

  ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை.

  ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது.

  ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள்.
  அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்?

  நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

  விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன.
  ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

  முஸ்லீம்களை அவமதித்து,

  அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு

  நான் தெருவுக்கு வந்து விடுவேன்,

  நாட்டை விட்டுப் போய் விடுவேன்

  என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்.

  மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது - சாரு நிவேதிதா


  SOURCE: http://charuonline.com/blog/?p=167

  ReplyDelete