Monday, 14 January 2013

மாட்டுப்பொங்கலும், மாடில்லாத நாங்களும்.....




மாட்டுப்பொங்கல் வாழ்த்து சொல்ல எல்லோரும் இனையத்தில் மாடுகள் படம் தேடி எடுத்துப்போட்டு வாழ்த்து சொல்றாங்க.நானோ எப்படி சொல்வது என வருந்திகொண்டு இருக்கிறேன்.

மாடுகள் இருந்த வீடு என் வீடு.உழவு மாடு ஜோடி ஒன்றும் சில பசுக்களும் இருந்தன முன்பு.இன்று என் வீட்டில் ஒரு மாடு கூட இல்லை.



நாங்க வீட்டுபொங்கல் கொண்டாடவிட்டாலும் மாடுகள் இருந்ததால் எங்க வீட்டு வேலையாள் மூலம் மாட்டுபொங்கல் கொண்டாடுவோம்.இன்று மாடுகளும் இல்லை தனிப்பட்ட வேலையாளும் இல்லை எங்க வீட்டில் இன்னும் விவசாயம் பன்ன இடங்கள் இருந்தும்.

பொங்கலுக்கு இரண்டு நாள் முன்பே மாடுகளுக்கு புது கயிறுகள் ,கொம்புகலுக்கு பெயின்டு என வாங்கி வந்துவிடுவோம்.எங்க வீட்டு மாடுகளுக்கு கருப்பு சிகப்பு கலரில் பெயின்டு அடிப்போம்.எங்க வீட்டில் எல்லோரும் திமுக என்பதால்.

மாட்டுபொங்கல் இரவு அன்று மாட்டுக்கடை என சொல்லும் இடதிற்க்கு உழவு மாட்டை மட்டும் வீட்டு வேலையாள் கொண்டுபோய் கட்டுவார்.நண்பர்கள் எல்லோரும் அங்கே போவோம்.இரவு பனிரெண்டு மணிக்குமேல் பொங்கல் படையலிட்டு சாமி கும்பிட்டுவிட்டு தீப்பந்தம் ஏந்தி இளைஞர்கள் ஊர் எல்லைவரை ஓடிசென்று வருவார்கள்.அதன்பின்பு மாடுகளுக்கு படையல் இட்ட சோற்றை ஊட்டுவார்கள்.

மறுநாள் காலை மறுபடியும் வீட்டில் உள்ள எல்லா மாடுகளையும் பொங்க கடைக்கு ஓட்டி செல்வோம்.அங்கே ஊர் மாடுகள் அத்தனையும் கொண்டுவரப்பட்டு இருக்கும்.மாடுகள் கலர் கலராக ஜோடிக்கபட்டு இருக்கும்.யார் எந்த கட்சியில் இருக்காங்களோ அந்த கட்சி கலர் பெயின்ட் கொம்புகளில் அடிக்கபட்டு இருக்கும்.சில மாடுகள் குஞ்சம் கட்டி இருக்கும்,சிலவற்றில் பணமும் சேர்த்து கட்டி இருக்கும்.ஊரே ஒரே இடத்தில் இருக்கும்.

ஒன்பது மணிக்கு வெடிவிட்டு மாடு கூடுவார்கள்.மாடுவிறட்டி கையில் கிடைத்ததை பறிப்போம்.





அதன் பின்பு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடக்கும்.வழுக்குமரம் ஏறுதல்,பானை உடைத்தல்,போர்த்தேங்காய் உடைத்தல்,பெண்கள் கோலாட்டம் கும்மியாட்டம்,சிருவர்களுக்கு விளையாட்டுபோட்டிகள் என களைகட்டும் மாலைவரை.

தாவணிகளும் தாவணிகளை சுற்றும் காளைகளும் என சந்தோசமாக இருக்கும் அன்றய பொழுது.

இன்றோ எண்ணிக்கயில் ஒரு மாடுகூட என் வீட்டில் இல்லை.

எல்லாம் கணாக்காணும் காலம் ஆகிவிட்டது.

உழவர்கள் அனைவருக்கும் என் அண்பான உழவர் மாட்டுப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

1 comment:

  1. அது ஒரு கனாக்காலம் தான் ! நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள் சகோ ,,,,வாழ்த்துக்கள்

    ReplyDelete