Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, 2 May 2015

உத்தம வில்லன் _ உத்தரவாதமில்லை


ஒரு மாதத்துக்கு மேலாக உத்தம வில்லன் ட்ரைலர் படம் பார்க்க போகும்போதெல்லாம் போடுவாங்க திரைஅரங்கில்.அதை பார்த்து மிக நன்றாக இருக்கும் என நினைத்து இருந்தேன்.
கதை மிக பிரபலமான நடிகர் கமல்ஹாசனுக்கு தன் இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவோம் என தெரிய வருகின்றது.தன்னை சினிமாவில் அறிமுகபடுத்தி நல்ல படங்களில் நடிக்க வைத்த தன் குருநாதர் இயக்கத்தில் தன் கடைசி படத்தில் நடிக்க விரும்பி சென்று பார்க்கின்றார்.குருநாதர் இயக்க மறுக்கும்போது தான் இறந்துவிட போகும் உன்மைய சொல்கின்றார்.அதன் பின் குருநாதர் இயக்கத்தில் நடிக்கின்றார்.நடிக்கும் கதை ஐந்துமுறை சாவின் விளிம்பை தொட்டும் சாகாத உத்தமன் எனும் நாடக கலைஞன் பற்றியது.


நிஜ வாழ்வில் அவர் சந்தித்த பெண்களும்,துரோகங்களும் மகன், மனைவி,டாக்டருக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள தொடர்பு,முதல் காதலி மூலம் பிறந்த மகள்,மகளின் இன்றய தகப்பன் என பல வகையில் கதை விரிகின்றது.
நான் இங்கே கதையாக சொல்கின்றபோது நல்லாத்தான் இருக்கு.படம் இடைவேளைவரை கூட கமல்ஹாசனின் திரைக்கதை உத்தியால் சீராக போவது போலத்தான் தெரிகின்றது.இடைவேளை முடிந்து நிஜவாழ்வு கதையும்,அங்கே படமாக்கப்படும் கதையும் மாற்றி மாற்றி காண்பிக்கும்போது மிகப்பெரும் அயற்சிக்குள்ளாகிரோம்.படம் எப்ப முடியும் என வரும் எண்ணத்தை தடுக்க முடியவில்லை.



கமல்ஹாசன் சிறந்த நடிகர்களாக நினைக்கும் அனைவரையும் படத்தில் போட்டு தன் ஆசான் பாலசந்தர் அவர்களையும்,தன்னை உறுவாக்கிய இன்னொரு சிற்பி கே.விஸ்வநாத் அவர்களையும் கவுரவிக்கும் பொருட்டு படம் எடுத்தாரோ என்னவோ?!.
பாலசந்தரின் கடைசி படமாகவும் அமைந்துவிட்டது திரை உலக வாழ்வில்.
படம் பார்க்கும் ரசிகனை வேறு ஒரு தளத்திற்கு வா என அழைக்க முயற்சி செய்கின்றார் கமல்ஹாசன்.அவரின் பரிசோதனை முயற்சிக்கு இந்த படம் அயற்சியை கொடுத்து விட்டது.
படம் பார்ப்பவர்கள் மிக சிறந்த படம் என சொல்லவும் கூடும்.ஒரு நாவல் படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒருவித மனநிலையை கொடுக்கும்.அதே போல மற்றவர்களுக்கும் அமையலாம்.

கமலஹாசன் தெனாலி,வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற முழுநீள நகைச்சுவை படம் ஒன்றை கொடுக்கலாம் அல்லது குடும்ப சித்திரம் எடுக்கலாம்.அதைவிட்டு பரிசோதனை முயற்சியில் ரசிகனை பலிகொடுப்பதை தவிர்க்க வேண்டுகிறேன்.
இந்த படம் எனக்கு புரியவே செய்தது ஆனால் உங்களுக்கு புடிக்கும் என என்னால் உத்திரவாதம் செய்ய இயலவில்லை.




Sunday, 14 December 2014

லிங்கா விமர்சகர்களுக்கு என் கேள்விகள்.....



லிங்கா.
இது விமர்சனம் இல்லை.கடந்த மூன்றுநாளாக ஆள் ஆளுக்கு எழுதிட்டாங்க.நல்லா இருக்குன்னும் எழுதிட்டாங்க நல்லா இல்லைன்னும் எழுதிட்டாங்க.படத்தின் கதையும் எல்லோருக்கும் தெரியும் இப்போ. அதனால அதுவும் வேண்டாம்.இங்கு படிச்ச விமர்சனங்களால் இப்போ படம் பார்த்துவிட்டு வந்து சில கேள்விகள் தோன்றுகிறது.அது மட்டுமே.

படம் பார்க்கும் முன்பு ரஜினியிடம் என்ன எதிர் பார்த்து போனீங்க.ஒரு விஜய் நடிப்போ அல்லது அஜீத் நடிப்போ எதிர்பார்த்து போனீங்களா?.
இல்லை ரஜினியின் இன்னொரு பாட்ஷா படமோ,சிவாஜியோ அல்லது எந்திரன் படமோ எதிர் பார்த்து போனீங்களா?.
சிவாஜி படத்தின் வில்லன் சுமன் போன்றோ ,எந்திரன் படத்தின் வில்லன் ரஜினி போன்ற பவரான வில்லனை எதிர்ப்பதுபோல கதை எதிர் பார்த்து போனீங்களா?.
அனுஷ்கா,சோனாக்சியிடம் என்ன மாதிரியான நடிப்பை எதிர்பார்த்து போனீங்க.சிவாஜியில் ஷ்ரேயா,எந்திரன் ஐஸ்வர்யா நடிப்பு போன்று இருக்கனும் என எதிர்பார்த்தீங்களா?.
ஏஆர் ரஹ்மானிடம் இன்னொரு சிவாஜி,எந்திரன் படத்தின் இசையை போன்று எதிர்பார்த்து போனீங்களா?.
இதுபோல வேண்டும் என்றால் அந்த படங்கள்தான் இருக்கே அதையே பார்த்து விடலாமே?!.
லிங்கா படம் நல்லா இருக்குதான் ஆனா ஏதோ ஒன்னு குறையுது என்றால் நான் மேல சொல்லி இருப்பவற்றில் ஏதோ ஒன்று குறையுதுதானே அர்த்தம்?!.
ஈரான்,கொரியன் என உலகப்படம் பார்த்துவந்த நமக்கு லிங்கா படம் புரியவில்லையா.
நோலனின் புரியாத படம் புரிந்தகொண்ட அளவுக்கு இந்த ரஜினியின் லிங்கா படம் புரியவில்லையா?.

அல்லது கதை சொல்லும் போக்கு புடிக்கவில்லையா.
படம் பார்த்துக்கொண்டு இருந்தபோது எழுந்து ஓடிவிட தோன்றியதா.
எது உங்களுக்கு புடிக்கவில்லை?.

நேரடியாக கதை புதியுற மாதிரி எடுத்தது புடிக்கலையா.
இரண்டாம் பகுதியில் மெதுவாக கதை சொல்லும் போக்கு நடைபெருகின்றது என சொல்றீங்களா?.இது ஆக்சன் படமாக இருந்தால் வேகமாக நகரும் திரைக்கதை எழுதி படம் எடுத்து இருப்பாங்க.ஆனா ஒரு அணை ஊருக்காக கட்டப்படும்போது அதன் போக்கில்தானே சொல்லமுடியும்.
இத்தனை வயதிலும் இவ்வளவு சுறு சுறுப்பாக ரசிகனின் மனநிலைக்கு ஏற்றவாறு நடித்து இருப்பதே பெரிய விசயமில்லையா?.
அடுத்த ஐந்து வருடங்களில் விஜயோ அஜித்தோ தங்களை இதுபோல நிலைநிறுத்திகொள்ள முடியுமா எனும் சந்தேகம் இருக்கும்போது முப்பத்தி ஐந்து வருடமாக கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்தி தான்தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து இருக்கின்றாரே அது பத்தாதா?!.

நீங்க பாட்ஷாவையோ சிவாஜி எந்திரன் படத்தையோ எதிர்பார்த்து போனது உங்க தவறு.
ரசிக்க தெரியாதவன் சொல்வது இந்த படம் நல்லா இல்லை என.
திரைக்கதை மேஜிக் ரஜினி படத்தில் எப்போதும் இல்லாதது.அதை நீங்க ஏன் எதிர்பார்க்கனும்?.
படம் பார்க்க வருபவனுக்கு மூன்றுமணி நேரம் போவது தெரியாமல் படமாக்கப்பட்டு இருக்கா என்பது முக்கியம். அதை படம் நன்றாக செய்கிறது.
ரஜினி ரசிகன் என்பதையும் தாண்டி பொதுவான திரைபார்வையாளனாக இதுக்குமேல் படம் எப்படி எடுக்கவேண்டும் என எனக்கு சொல்ல தெரியவில்லை.
படம் எனக்கு பிடிச்சு இருக்கு.பார்க்கதவங்க திரையில் பாருங்க.

Wednesday, 22 October 2014

கத்தி- செம ஷார்ப்........ விமர்சனம்



கத்தி என் பார்வையில்
முதலில் முருகதாசுக்கு வாழ்த்துக்கள்.
விஜய் கதாநாயகனாக இருந்தும் ஓப்பனிங் மிக சாதரனமாக விஜயை அறிமுக படுத்தியதற்க்கும் ஓப்பனிங் பாட்டு வைக்காததற்க்கும்.
படத்தில் மூன்று சன்டைகாட்சிகள் இருந்தபோதும் இதை முழுக்க ஆக்சன் படம் என சொல்ல முடியாது.
படத்தின் பாடல்கள் நன்றாக இருந்த அளவுக்கு பின்னனி இசை கொஞ்சம் பத்தாதுதான்.இருந்தும் ஓகே.
ஒளிப்பதிவு நன்றாக இருக்கு.கதைக்களத்தின் மூடுக்கேற்ப்ப ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார் ஒளிப்பதிவாளர்.
நடனம் மிக நன்றாக இருக்கு.சொல்லவே வேனம் நடனத்தில் தன்னை அடிச்சுக்கு ஆளே இல்லை என்பதை மறுபடியும் நிரூபித்து இருக்கின்றார்.
சமந்தா ஒரு கதாநாயகிக்கு என்ன வேலை இருக்குமோ அதை மட்டும் செய்கின்றார் கொஞ்சம் அழகாக இருக்கின்றார்.
அனல் அரசுவின் சன்டை அனல் பறக்கின்றது.அதுவும் எதிர்பாரமல் திடிரென நடக்கும் அந்த முதல் சண்டை அபாரம்.


சரி இனி கதைக்கு வருவோம்.
ஜெயிலில் இருந்து ஒரு கைதி தப்பிக்கின்றார் அறிமுக காட்சியில்.அவனை பிடிக்க அங்கே கைதியாக இருக்கும் பிராடு விஜய் உதவியை நாடுகின்றனர் போலீஸ்.
அவரும் சரியாக கைதி இருக்கும் இடத்தை போலிஸோடு சுற்றிவலைத்து பின்பு போலிஸ் பார்க்கும்போது கைது செய்ய உதவிய விஜய் போலிசிடம் இருந்து தப்பிவிடுகின்றார்.

தப்பிய விஜய்(கதிரேசன்) தன் நண்பனின் உதவியை நாடுகின்றார் போலி பாஸ்போர்ட்டில் தாய்லாந்துக்கு தப்பி செல்ல.அவரும் பாஸ்போர்ட்க்கு ஏற்ப்பாடு செய்து ஏர்போர்ட்டில் தாய்லாந்து செல்ல காத்து இருக்கும்போது அங்கே சமந்தாவை பார்க்கின்றார்.அவரையே பார்க்கும்போது சமந்தா தன் நம்பரை கொடுத்து போன் செய்ய சொல்லி சென்று விடுகின்றார்.சமந்தாவுக்காக தாய்லாந்து செல்லாமல் டிக்கெட்டை கிழித்து எறிந்து விடுகின்றார்.
விஜயும் அவரின் நண்பனும்(சதீஷ்) இரவில் சமந்தா கொடுத்த நம்பருக்கு போன் செய்கின்றனர்.அது வேரொறு நம்பருக்கு போகின்றது.ஏமாந்துவிட்டோம் என விஜய் சொல்லிக்கொண்டு இருக்கும்போது வேகமாக வரும் ஒரு லாரி மோதி நிக்கின்றது.அந்த லாரியை தொடர்ந்து வரும் காரில் இருந்து நாலைந்துபேர் இறங்கி காருக்குள் இருப்பவரை சுட்டுவிட்டு செல்கின்றனர்.


காருக்குள் இருப்பவர் யாரெனெ விஜய் ஓடிவந்து பார்க்கும்போது அங்கே குண்டடிபட்டு இன்னொரு விஜய்(ஜீவா) கிடக்கின்றார்.அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு திரும்பும்போது விஜய்க்கு(கதிரேசன்) ஒரு யோசனை வருகின்றது.அதுபடி ஜீவாவின் பொருட்க்களை எடுத்துக்கொண்டு தன் பர்சை அங்கே விட்டுவிடுகின்றார்.போலிஸ் மறுபடியும் ஜீவாவை கதிரேசன் என நினைத்து ஜெயிலுக்கு கொண்டு போய்விடுகின்றனர்.
மறுநாள் கதிரேசனும் அவரின் நண்பனும் மறுபடியும் தாய்லாந்து போவதர்க்காக பேசிக்கொண்டு செல்கையில் அந்த வழியாக வரும் கலேக்டர் அவர்கள் இருவரையும் தன் காரில் ஏறசொல்லி உன் பெயருக்கு 25லட்சரூபாய் செக் வந்துவிட்டது என சொல்லி ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டுபோய்விடுகின்றார்.செக்கை ஆசையாக வைத்து இருக்கும் விஜயிடம் இருந்து பிடுங்கி ஒரு முதியவர் கிழித்துவிடுகின்றார்.கிடைத்த பணம் போச்சே என இருக்கும்போது பேட்டி எடுக்க வந்த இரண்டு வெளிநாட்டு பெண்களால் கதிரேசன்(விஜய்) தாக்கப்படுகின்றார்.அவர்களிடம் இருந்து தப்பித்து விடுகின்றார்.

மறுபடியும் கதிரேசன் வில்லன் ஆட்க்களால் கடத்தி வில்லன் இருப்பிடம் கொண்டு செல்லப்படுகின்றார்.அங்கே வில்லன் பேரம் பேசுகின்றார்.25கோடி தருகின்றேன் கோர்ட்டில் நடக்கும் கேசை வாபஸ் வாங்கு மற்றும் நாலு பேரிடம் கையெழுத்து வாங்கிட்டு வா என அட்வான்சாக 5கோடி ரூபாய் கொடுக்கின்றான் வில்லன் கதிரேசனை ஜீவா என நினைத்து.கதிரேசனும் சரியென பணத்தை வாங்கி கொண்டு வருகின்றார்.
நண்பனிடம் செய்யப்போகும் வேலைக்கு 25கோடி பணம் அட்வான்ஸாக 5கோடி வாங்கிவிட்டேன் என சொல்லும்போது முதியோர் இல்லத்தில் இருந்து போன் வருகின்றது.
உனக்கு ரோட்டரி சங்கத்தில் விருதும் 4லட்சம் பணமும் கொடுக்கின்றார்கள் என சொல்ல அந்த பணத்தையும் வாங்கிவிடுவோம் என நண்பன் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களோடு விழாவிற்க்கு செல்கின்றார்.அங்கே விஜய் யார் என திரைப்படம் திரையிடப்படுகின்றது.அதோடு அந்த நாலு லட்சரூபாய் யார் யாரல் கொடுக்கப்பட்டது என சொல்லுகின்றார்கள்.
இதற்க்குமேல் திரையில் கதையை பார்த்துக்கொள்ளுங்கள்.
விஜய்க்கு எந்த பஞ்ச் வசனமும் கொடுக்கபடவில்லை இடைவேளையின்போது வரும் ஐயாம் வெயிட்டிங் எனும் வசனம் தவிர.
மிக இயல்பாய் நடித்து இருக்கின்றார்.
கடைசிக்கட்ட போரட்டம் மிகையாக இருந்தாலும் கூட எதுவும் சாத்தியமே என படுகின்றது.


கிராமத்து விவசாயின் நீராதாரம் பற்றியும்,அதை உறிஞ்சும் கார்ப்பரேட் கம்பெணிகள் பற்றிய கதை இது.
மீடியாக்களின் ஸ்லாட் பற்றி அப்பட்டமாக பேசப்படுகின்றது.
கிங்பிஷர் பீர் கம்பெணிக்காரனின் கடன் பற்றியும் பேசப்படுகின்றது.
சென்சார் இதை எல்லாம் கட் செய்யாமல் விட்டதுக்கு அவர்களுக்கும் நன்றி சொல்லனும்.
இது விஜய் படம் என்பதை விட மிக அவசியமான படமும் கூட.
விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும்.
யார் எப்படி வேண்டும் என்றாலும் விமர்சனம் எழுதலாம்.
ஆனால் நீங்க போயி திரை அரங்கில் பார்த்து விமர்சனம் எழுதுங்க.
விஜய்க்கு இன்னொரு மைல் கல் கத்தி.
ஆனால் இன்னொரு துப்பாக்கி அல்ல இந்த படம்.

Saturday, 2 November 2013

அமர்க்களமான, அட்டகாசமான “ஆரம்பம்”


அஜீத் ரசிகர்களுக்கு இது தல தீபாவளிதான் சந்தேகமே இல்லை .யார் சொல்வதையும் கேக்காமல் திரைஅரங்கில் சென்று விசில் அடிச்சு கொண்டாடலாம் அஜீத் ரசிகர்கள் .

நேற்று என்னால் படம் பார்க்கமுடியவில்லை அதனால பேஸ்புக்கில் வந்த விமர்சனங்களை படித்துக்கொண்டு இருந்தேன் .அப்ப்பப்பா இவர்களின் விமர்சன பார்வையை என்ன சொல்வது .ஆங்கில பட காப்பி .முக்கால்வாசி படத்துக்கு பின்பு சரி இல்லை .நயன்தார செத்து போகிறார் என கதை கதையா அடிச்சு விட்டத படித்தபோது எனக்கே திரை அரங்கம் செல்வோமா வேணாமா என ஒரு குழப்பம் வந்துவிட்டது .

இது உலகப்படம் இல்லை லாஜிக் மேஜிக் எல்லாம் பார்த்து எடுக்க .அஜித் ஆர்யா எனும் இரண்டு குதிரைகளுக்கு சரியான தீனி போடவேண்டும் .அதை இயக்குனர் சரியாகவே செய்து இருக்கார் .

கதை நாம எப்பவும் செய்திகளில் பார்க்கும் படிக்கும் ஊழல் ,பேரம் பேசுதல்தான் கதை .எல்லா காலங்களிலும் இதை ஒட்டி எடுக்கப்படும் படம் வந்துகிட்டே இருக்கு .அதுனால கதை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை .இங்க நிறைய பேர் கதை எழுதிக்கிட்டு இருக்காங்க அதுனால அது வேணாம் .


 

அஜீத் நடிப்பைப்பற்றி எப்பொழுதும் இப்படி விமர்சனம் வரும் நடந்துகிட்டே இருக்கார் என .இதிலும் அப்படித்தான் ஆனால் ரசிக்கும்படி நடக்கிறார் .சில இடங்களில் அவர் வசனம் பேசும்போது அஜித் ரசிகர்களுக்கு தன்னையறியாமல் விசில் அடிக்க வரும் .
ஆர்யாவுக்கு இடம் கொடுத்து நடித்து இருக்கிறார் .இது பெரிய விஷயம் .

ஆர்யா மிக சரியாக பொருந்தி போகிறார் அவரது கதாபாத்திரத்துக்கு .இரண்டு ஹீரோ ஒன்றாக பயணிக்கும்போது அது உருத்தக்கூடாது.அஜித் ஆர்யாவை நடிக்க விட்டு வேடிக்கை பார்ப்பதால் கிடைக்கும் கேப்களில் ஸ்கோர் செய்துவிடுகிறார் .






நயன்தாரா முகம் பார்க்க முடியவில்லை முதிர்ச்சி தெரிகிறது என நேற்று நிறையப்பேர் எழுதி இருந்தாங்க .அது என்னங்க ஆங்கில படங்களில் நடிக்கும் நடிகைகளை புகழும்போது அவர்கள் வயது மட்டும் தெரியவில்லை இவர்களுக்கு .நாற்ப்பது வயதுக்குமேல் இருக்கும் ஆங்கிலப்பட நடிகைகளுக்கு .நன்றாகவே அஜீத் ஆர்யா இருவரோடும் சேர்ந்து நடித்து இருக்கின்றார் .

படத்தின் ஒளிப்பதிவு ,இசை இரண்டும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது .ஏழு புள்ளி ஒன்று டிஜிட்டல் சிஸ்டம் உள்ள திரை அரங்கில் பார்த்தேன் .மிக துல்லியமாக இருந்தது சவுண்ட் .யுவன் நன்றாக பின்னணி இசை அமைத்து இருக்கின்றார் .

ஒளிப்பதிவில் மெனக்கெடல் தெறிகிறது .சண்டைக்காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு விருந்து .

கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் நாடகதன்மைதான் இருந்தும் அங்கே அஜீத் இருப்பதால் ஒன்றும் தெரியவில்லை .

எனக்கு திரைக்கதை பற்றி எல்லாம் தெரியாது அதைப்பற்றி பேச .என்னை திரை அரங்கில் கடைசிவரை உக்காரவைக்கிறதா என மட்டுமே பார்ப்பேன் .அப்படி பார்க்கும்போது கடைசிகாட்சி வரை ரசிக்க முடியும் .

மொத்தம் திரை அரங்கம் சென்று பாருங்கள் .

ஆரம்பம் முதல் முடிவரை அமர்க்களமாய் இருக்கும் உங்களுக்கு

Monday, 30 September 2013

ராஜா ராணி


ஒரு கல்யாணம்.ரென்டு காதல்.ஒரு முடிவு.
படம் தொடக்கமே எங்கோ வெறித்து பார்த்தபடி ஆர்யா நயன்தாரா இருக்க அவர்கள் இருவருமே மனதளவில் ஒப்புதல் இல்லாமல் கல்யாணம் நடக்கிறது அவர்கள் இருவருக்கும்.
முதலிரவு தொடங்கி ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுங்குவதுமாக இருக்கின்றார்கள்.ஆர்யாவின் செயல்களால் மனம் உடைந்து அழும்போது நயன்தாராவுக்கு முடியாமல் வந்துவிடுகிறது.ஆர்யா நயன்தாராவை மருத்துவமனையில் சேர்க்கிறார்.பின்பு இதற்க்கு முன்பு உங்களுக்கு இது போல நடந்து இருக்கா என கேக்கும்போது அங்கே தொடங்குகிறது ஜெய்க்கும் நயந்தாராவுக்குமான கதை.மிக அழகியழோடு படமாக்கப்பட்ட காதல் கதை.அதை நான் இங்கே சொல்ல போவது இல்லை.திரையில் பாருங்கள்.நயந்தாரா அழகாகவும் அதே அளவு நடிப்புமாக கலக்கி இருக்கின்றார்.ஜெய்யும் நடிப்பில் அசத்தி இருக்கின்றார்.இவர்கள் இருவருக்குமான கதையில் மிக அழகாக பொருந்தகூடிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நயன்ந்தாரா அப்பாவாக.மொத்தத்தில் ஒரு சிறந்த சிறுகதை படத்தின் முதல் பகுதி.


படத்தின் இரன்டாம் பகுதியும் காதல் கதைதான்.நஸ்ரியாவின் துள்ளல் நடிப்பும் ஆர்யாவின் நடிப்பும் நன்றாக இருக்கு .முதல் பகுதி போல இரண்டாம் பகுதி வேகம் இல்லையெனினும் நஸ்ரியாவின் சிரிப்பும் ,இடை இடையே சந்தானம் கோஸ்ட்டி அடிக்கும் கூத்துமாக நகர்கிறது.
இந்த இரண்டு காதலின் முடிவும் ஒரு தோல்வியில் முடிந்து ஒரு கல்யாணத்தல் இனைந்து இருவரும் ஒன்றமுடியாமல் இருப்பதும் பின்னர் இனைவதும் கதை.

க்லைமாக்ஸில் ஜெய் திரும்ப வருவதும் ஆர்யாவிடம் பேசும் அந்த நாலுவரி வசனமும் படத்தின் திருப்புமுனை என இயக்குனர் நினைத்து இருந்தாலும் அது எரிச்சலையே தருகிறது.
நயன்ந்தாரா,நஸ்ரியா இருவரும் முழுப்படத்தையும் தாங்குகிறார்கள்.மற்றபடி படம் நிச்சயம் திரை அரங்கில் பார்க்கலாம்.


அட்லீக்கு முதல்படம் இது.நல்ல இயக்கம்.அடுத்த படம் நிச்சயம் இதைவிட நன்றாக தருவார் எனம் நம்பிக்கை தருகிறது இந்த படம்.இசை வழக்கம் போல. ஒளிப்பதிவு அருமையா இருக்கு.
படத்தின் சின்ன சின்ன காட்சிகலாக செதுக்கி நன்றாக இருக்கு.சில காட்சிகள் மனதில் நிற்க்கும்.
திரை அரங்கம் சென்று பாருங்கள்.
ராஜா ராணிக்கு ராணி ராஜாவுக்கு

Saturday, 7 September 2013

வருத்தம் மறந்து சிரிக்க வைக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்



ஒரு படம் உங்களை என்ன செய்யனம்.கவலைகள் மறக்கடிக்க செய்யனும்.அதை நன்றாகவே இந்த படம் செய்கிறது.

கதையெல்லாம் நான் சொல்ல தேவையும் இல்லை ,அப்படி ஒன்றும் புதுமையான கதையும் இல்லை.லாஜிக் ,மேஜிக்,திடிர் திருப்பம் என எதுவுமே இல்லை.ஆனாலும் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும்வரை சிரித்துக்கொண்டே இருக்க முடிகிறது.

சிவகார்த்திகேயன்,பரோட்டா சூரி இருவரும் செய்யும் அதகளமே தியேட்டரை அதிர செய்கிறது.படம் பார்த்துக்கொண்டு இருந்த அனைவருமே சிரித்ததை பார்த்தேன்.

சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் மனநிலை நன்றாக தெரிந்து இருக்கிறது.தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து நடித்து இருக்கிறார்.அவர் பேச ஆரம்பித்தாலே நாம் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.பக்கபலமாக சூரி வேறு இருக்கிறார்.வானவேடிக்கை நடத்தி இருக்கின்றனர்.வடிவேலு பார்த்திபன் போல சிவகார்த்திகேயன் சூரி இருவரையும் சொல்லலாம்.




கதாநாயகி புதுமுகம் போலருக்கு.பக்கத்து வீட்டு பெண்ணைப்போல இருக்கிறார்,நன்றாக நடித்தும் இருக்கிறார்.






சத்தியராஜ் அறிமுக காட்சியில் கைது செய்யப்படும்போது சீரியசாக நினைத்து பார்க்க ஆரம்பித்தால் கடைசியில் அதுவும் காமடியிலேயெ முடிகிறது.அவரின் அல்லக்கைகள் நாளு பேரின் பாராட்டிலேயே இவரும் லொல்லடிக்கிறார்.




ஆரம்பத்தில் இரன்டொரு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் இளசுகளின் கைதட்டலை பிந்து மாதவி அள்ளி செல்கிறார்.மறைந்த சில்க் ஸ்மிதாவின் பார்வையை அப்படியே பிரதிபலிக்கிறா

பாடல்கள் ஏற்க்கனவே பிரபலம் ஆனதுதான்.நன்றாகவே இருக்கு.ஒளிப்பதிவு பாலசுப்ரமனியெம் அதிகமாக மெனக்கெடவில்லை.இந்த படத்திற்க்கு மெனக்கெடவேன்டியதில்லை என அளவாக முடித்துக்கொண்டார்.
வசனம் ஓகே ஓகே இயக்குனர் .ஸ்டேன்டப் காமடி மாதிரி போகிற போக்கில் சிரிக்கவைக்கவேண்டும் என எழுதி இருக்கிறார்.அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

படம் உங்களை நிச்சயம் மகிழ்விக்கும் கருத்து குத்து எதுவும் இல்லாமல் அட்வைஸ் செய்யாமல்.நிச்சயம் திரை அரங்கில் போய் படம் பார்த்து சிரித்துவிட்டு வரலாம்.

வருத்தபடாமல் ,மனம் நொந்து போகமல் விழுந்து சிரிக்க ஒரு படம்

Tuesday, 13 August 2013

தலைவா.............. தடைபோட ஒன்றுமில்லை.......



தலைவா............

விமர்சனம் எழுதும் முன்பு ஒரு செய்தி.நான் விஜய் ரசிகன்.ஆனால் இந்த விமர்சனம் அதை தான்டி எழுதும் நிலை உள்ளது.

அமலாபால் அழகாய் இருக்கிறார்.ஆஸ்த்ரேலியா அழகா இருக்கு.நீரவ்ஷா ஒளிப்பதிவு மிக நன்றாக இருக்கு.சன்டை காட்சிகளும் நல்லா இருக்கு.விஜய் நடிப்பும் கூட ஓகேதான்.ஆனால் இது மட்டும் போதுமா ஒரு படத்துக்கு.

நாயகன்,தளபதி,பாட்ஷா,தேவர்மகன் என தமிழ் படங்களின் சில காட்சிகளை மாத்தி எடுத்தால் படம் பார்க்கும் ரசிகனுக்கு புரியாமல் போய் விடுமா என்ன.




நாயகன் படத்தின் கமல் வேடத்தை சத்தியராஜும்,கமலை சுட்டுக்கொல்லும் அந்த மனவளர்ச்சி குன்றியவர் வில்லனாகவும் படத்தில் இடம் பிடித்து உள்ளனர்.அனேக காட்சிகள் பாட்ஷா ,மற்றும் தளபதி படத்தின் மறு ஆக்கம்.

படம் ஆரம்பித்து இடைவேளைவரை ஆஸ்த்திரேலியாவில் ஆமை போல நகர்கிறது.அமலாபால் அழகை கான்பிப்பதற்க்காக இவ்வளவு செலவா.காதல் காட்சிகள் ஒட்டவே இல்லை மனதில்.சந்தானம்
வாயசைத்து செல்வதற்க்கு எதற்க்கு இந்த படத்தில்.





சத்தியரஜ் சிகப்பு துன்டை குறுக்கே போட்டு வசனம் பேசி செல்கிறார்.
கருப்பு ஆடாக பொன்வன்னன்.
பாடல் காட்சிகள் செட்டிங் எல்லாமே நாயகன் படத்தை நினைவு படுத்துகின்றன.





விஜய் நன்றாக நடித்து இருக்கிறார் என சொன்னாலும் அன்டர்ப்ளே செய்து நடிக்கிறேன் என சில இடங்களில் எரிச்சலையும் வரவழைத்துவிடுகிறார்.

மொத்தம் படத்தில் சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் மொத்த படத்தையும் பொருமையாகத்தான் பார்க்கவேன்டும்.
விஜய் ரசிகர்களுக்காக எந்த காட்சிகளும் படத்தில் இல்லை வாங்கனா வனக்கங்கனா பாட்டை தவிற.
நான் மறியான் போன்ற மிக ஸ்லோவான படத்தையும் ரசித்து பார்த்து இருக்கிறேன்.ஆனால் விஜய் ரசிகனாக இப்படி ஒரு ஸ்லோவான படத்தை ரசிக்க முடியவில்லை.
இந்த படத்தை தமிழகத்தில் எதற்க்காக திரையிடவிடாமல் செய்து இருக்காங்க என தெரியவில்லை

Monday, 8 July 2013

சீறிய சிங்கம்லே சூர்யா.........




கொஞ்சநாளாக புதிய டிரென்ட் என வெறும் காமடி படங்களாக வந்துகொண்டு இருந்தது .சில படங்கள் சினிமாவில் உதவி இயக்குனராககூட வேலை செய்யாமல் குறும்படங்கள் எடுத்த அனுபவத்தில் படம் எடுத்து நன்றாக ஓடியது .அந்த படங்களை தூக்கிவைத்து கொண்டாடவும் செய்தனர் .அதை ஒற்றி பெரிய இயக்குனர்கள் கூட நகைச்சுவை படம் எடுத்தனர் .கடைசியாக வந்த தில்லு முள்ளு ,தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களும் நகைச்சுவை படங்களே .என்னதான் திரை அரங்கில் சென்று படம் பார்த்து சிரித்துவிட்டு வந்தாலும் அதில் ஒரு என்ட்டர்டிரைனர் இல்லாது போலவே இருந்தது .இதுவே டிரென்ட் ஆகிருமோ என இருக்கும்போது சரியாக களத்தில் சிங்கம் .

சூர்யா கடைசியாக வந்த இரண்டு படம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாததால் கட்டாய வெற்றி தேவை பட்டது .இயக்குனர் ஹரியோடு சேர்ந்து சொல்லி அடிச்சு இருக்கார் சிங்கம் இரண்டாம் பாகம் மூலம் .



படம் ஆரமிக்கும்போது சிங்கம் முதல் பகுதியின் சில காட்சிகளோடு ஆரம்பிக்கிறது .படத்தின் முதல் பகுதியில் விஜயகுமார் சொன்னது போல போலீசாக இல்லாமல் பள்ளிகூடத்தில் என் சி சி ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டு தூத்துக்குடி கடற்க்கரையோரங்களில் ஆயுத கடத்தல் நடைபெறுகிறதா என கண்காணித்து வருகிறார் .வேலை பார்க்கும் பள்ளியில் ஹன்சிஹா மாணவியாக இருக்கிறார் .ஹன்சிஹாவுக்கு சூர்யா மேல் காதல் வருகிறது .

அதே ஊரில் இருக்கும் இருவர் பரம விரோதியாக இருக்கின்றனர் .ஒருவர் நல்லவர் .ஒருவர் கேட்டவர் .அந்த நல்லவர் ஹன்சிஹா சித்தப்பா .
ஆயுத கடத்தல் என நினைத்து வேவு பார்க்க போன இடத்தில் அங்கே நடப்பது போதை மருந்து கடத்தல் என தெரிய வருகிறது .இந்த போதை மருந்து கடத்துபவர்கள் பரம விரோதியாக கருதப்படும் இருவரும் ஒன்றாக சேர்ந்து என சூர்யாவிற்கு தெரிய வருகிறது .

இவர்களின் மிக முக்கியமான ஆளை கைது பண்ணும்போது அங்கே ஒரு நைஜீரியனும் கைது செய்ய படுகிறான் .அவனை இரவோடு இரவாக ஜெயிலை உடைத்து தப்பிக்க வைக்கிறார்கள் .அவனை பற்றி ஆராயும்போதுதான் தெரிகிறது அவன் ஒரு இண்டர்நேசனல் போதை பொருள் கடத்தல் காரன் என .இவ்வளவுதான் கதை .

மிக சாதாரண கதைதான் .படம் ஆரம்பித்து மெதுவாக நகரும் .காமடிக்கு சந்தானம் வருவார் .ஹன்சிஹா துரத்தி காதலிக்க அதை மறுத்துக்கொண்டு இருப்பார் சூர்யா .வில்லனின் அடியாள் தம்பியை பப்பில் வைத்து ஒருவர் அடித்துவிட அவரின் தங்கையை கடத்தும்போது வேகம் எடுக்கும் படம் இருதிகாட்சிவரை தடதடத்து ஓடிக்கொண்டே இருக்கும் .
முன்பகுதியில் வந்த முக்கியமான கதாபாத்திரம் அத்தனையும் சரியான இடத்தில் வருமாறு கதை அமைத்து இருக்கின்றார் .படத்தில் வரும் எந்த வசனமும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது .

சண்டைகள் நன்றாக படம் ஆக்கபட்டு இருக்கு .சண்டைகள் படமாக்கியவிதத்தில் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது .எல்லா சண்டை காட்சியிலும் முந்திய படத்தில் ஒரு கையை உயர்த்தி ஓங்கி பிடரியில் அடிப்பது போல கவனமாக சேர்த்து இருக்காங்க .சண்டை காட்சிகள் நிச்சயம் அதிரி புதிரியானவை .





பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை .சூர்யா விஜய் போல ஆட முயற்சித்து இருக்கிறார் .அவரது உயரம் அதற்க்கு தடையா இருக்கு .அனுஷ்கா அழகு பதுமையாக வந்து போகிறார் .கதையின் ஓட்டத்துக்கு ஹன்சிஹா உதவியாக இருக்கிறார் .இந்த படத்தில் நடிக்கவும் செய்து இருக்கிறார் ஹன்சிஹா .

வில்லன்கள் பிரகாஷ்ராஜ் அளவுக்கு இல்லை .இருந்தும் பரவா இல்லை .படத்தின் நிறைய காட்சிகள் அந்தரத்தில் இருந்து ஒளிப்பதிவு செய்யபட்டு உள்ளது .பிரியன் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார் .

படத்தில் நிறைய நடிகர்கள் இருந்தாலும் சூர்யா ஒற்றை ஆளாக அவ்வளவையும் சுமந்து நடித்து இருக்கின்றார் .சூர்யாவிற்கு நிறைவான படம் இரத்து .

இயக்குனர் ஹரிக்கு படம் பார்க்க வருபவர்களின் ரசனை எப்படி இருக்கும் என தெரிந்து இருக்கு .வசனத்தை பற்றி இந்த கவலையும் இல்லாமல் பரபர திரைக்கதையால் சூர்யா ஓடிக்கொண்டு இருக்க நம்மையும் சேர்ந்து சூர்யோவோடு ஓடுவது போல ஆக்கி இருக்கார்.அதுதான் ஹரியின் பலம் .

நகைச்சுவை படம் பார்த்து அலுத்து இருந்த நேரத்தில் நல்ல பொழுதுபோக்கு படமாக சிங்கம் வந்து இருக்கு .

சிங்கம் சீறும்

Saturday, 15 December 2012

கும்கி- நல்ல முயற்சி.....



ஆக மிக சிறந்த படம் என சொல்ல முடியாதுதான்.ஆனால் நல்ல படம்.

கதை எப்பொழுதும் சொல்லபட்ட கதைதான்.

அதை காட்சியாக எடுத்தவிதம் அருமையாக இருக்கு.

கதை நாயகன் பிரபு மகன்.நல்ல தொடக்கம் என சொல்லலாம்.அடுத்த படங்களில் இன்னும் கொஞ்சம் முயற்ச்சிக்கவேண்டும்.முதல் படம் எனும் அளவில் நல்ல நடிப்புதான்.

கதை நாயகி லட்சுமி மேனன்.பரவாயில்லை ரகம் நடிப்பு.ஆனால் அவர் அழகு கூடுதல் இம்சை நமக்கு.இன்னும் எனக்கு கன்னுக்குல்லே இருக்கு அவர் முகம்.

தம்பி ராமையாவும் உன்டியல் எனும் கேரக்டரில் வரும் இன்னொரு பய்யனும் நகைச்சுவையில் நம்மை ஓரளவு சிரிக்கவைத்து இருதியில் உயிரை விட்டு நம்மை கொஞ்சம் அழ வைக்கின்றனர்.

அப்புறம் அந்த யானை.ராம நாராயணன் படத்தில் வரும் மிருகங்கள் போல இல்லாமல் கதையோடு பயனித்து கடைசி காட்சியில் நாயகனை காப்பாற்றி உயிரை விடுகிறது.

ஒளிப்பதிவு மிக சிறந்தது.ஒளிப்பதிவுக்காகவே இந்த படத்தை மறுபடியும் பார்க்கலாம்.கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ஒளிப்பதிவு.

இயக்கம் பிரபு சாலொமன்.நல்ல இயக்கம்தான்.நல்ல படத்தையே கொடுத்து இருக்கிறார்.ஆனால் மைனா படம் பார்த்துவிட்டு அதே நினைப்பில் போனால் நீங்க ஏமாந்து போவீர்கள்.மைனா படம் ஆரம்பித்ததில் இருந்து தடக் தடக் எதிர்பாராத காட்சிகள் மாறும்.கிளைமேக்ஸ் பதினைந்து நிமிடத்துக்குல் மூன்று கிளைமேக்ஸ் காட்சிகள் வரும்.அதுபோல எதுவும் இல்லாமலே நல்லதொரு படமாக இருக்கிறது.

திரை அரங்கில் பார்க்க கூடிய நல்லதொரு படமே கும்கி

Wednesday, 26 September 2012

சுந்தரபாண்டியன்



படம் வெளியான அன்று என் அண்ணன் மகன் படம் பார்த்துவிட்டு வந்து நல்லா இருக்கு சச்சா என்றான் .அப்புறம் கேபிள் சங்கர் விமர்சனம் ,ஆனந்தவிகடன் விமர்சனம் எல்லாம் படிச்சுட்டேன் .எல்லாரும் விமர்சனம் எழுதியபிறகு நான் என்ன எழுதுவது .படம் பார்த்தபின்பு எழுதலாம் என தோன்றியது .

படம் யாரும் சொல்லாத கதை என்று கிடையாது .எல்லோரும் தொட்டுசென்ற களம்தான்.காட்சி அமைப்பில் புதுமை என்றும் சொல்லமுடியாது .ஆனால் படம் ரசிக்கவைக்கிறது .

சசிகுமாருக்கு ரசிகர்களின் நாடி தெரிந்து இருக்கிறது .தனக்கு எது செட்டாகும் என தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார் .நகைசுவை நடிகருக்கு இடம் கொடுத்து தான் நடிக்கவேண்டிய இடத்தில் மட்டும் நடித்து இருக்கிறார் .பேருந்து காட்சிகளில் பரோட்டா சூரியோடு சேர்ந்து அதகளபடுத்துகிறார்.ஓரிரு காதல் காட்சிகளே இருந்தாலும் அதிலும் சோடைபோகவில்லை சசிகுமார் .

சசிகுமாருக்கு பின்பு படத்தின் தூணாக தாங்கி இருப்பது சூரி என சொல்லலாம் .சூரி முந்தய படங்களில்  கொஞ்சம் கவுண்டமணி சாயலில் கத்திபேசுவார்.இந்த படத்தில் அமைதியாக பேசி நம்மை குலுங்கி சிரிக்கவைத்து விடுகிறார் .ஏறக்குறைய படத்தின் படத்தின் பெரும்பகுதியில் வந்தாலும் அசத்தல் நடிப்பு சூரிக்கு .

கதாநாயகிக்கு இந்த படம் அறிமுகம் என்பதை நம்பமுடியவில்லை .சந்தோசமோ துக்கமோ எந்த காட்சியிலும் அவரது முகம் பொருந்திபோகிறது .
காதலித்தவனை கல்யாணம் செய்ய அப்பா சம்மதம் சொல்லியவுடன் வரும் அழுகையும் சந்தோசமும் மிக அர்ப்புதமாய் நடித்து உள்ளார் .

இரண்டு பாடல் காட்சிகள் வாயசைப்பு இல்லாமல் பின்புலத்தில் ஓடவிட்டு காட்சிகள் எடுத்தவிதம் அவ்வளவு அழகு .

நண்பர்களாக வரும் அத்தனைபேரும் காட்சியின் தன்மை உணர்ந்து நடித்து உள்ளனர் .அப்பாக்களாக வரும் நரேன் ,தென்னவன் இருவரும் நடிப்பும் மிகை இல்லை .

இசை ரகுநந்தன் .மோசமில்லை .பின்னணி இசை படத்தின் பலம் .

ஒளிப்பதிவும் ரசிக்கவைக்கிறது .

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எதிர்பாராதவிதமாக அமைக்கப்பட்டுள்ளது .

பழையமொந்தையில் புதியகள் என்பதுபோல எண்பதுகளில் வந்த படம் போல இருந்தாலும் இருக்கையில் அமரவைத்துவிடுகிறது படம் .

திரைஅரங்கில் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் .துளி ஆபாசம் கிடையாது

Monday, 16 July 2012

பில்லா ஏன் இல்லை நல்லா....விமர்சனம் அல்ல சிறு பார்வை


இதை எழுதும் முன்பு நான் யோசித்துக்கொண்டு இருந்தேன் .படம் பார்க்கும் முன்பு முன்பு எதிர்மறையான கருத்துக்கள் எழுதுவது தவறோ என.....
ஆம் உண்மையில் தவறுதான் .எதையும் பார்ததபின்பே இனி எழுதுவது எனும் முடிவுக்கு வந்து இருக்கிறேன் .

முன்பு ஒரு சினிமா விழாவில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் பற்றி விமர்சனம் எழுந்தபோது எது நல்ல படம் எது கெட்ட படம் எனும் கேள்வி வந்தது .அதற்கு இயக்குனர் அமீர் அவர்கள் சொன்னார் நல்ல படம் கெட்ட படம் என எதுவும் கிடையாது .ஓடும் படம் ஓடாத படம் என்று சொல்லலாம் என்றார்.
ஓடும் ஒரு குதிரையின் மீதே பந்தயம் கட்டமுடியும் .அஜித் பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரை .ஜெயித்து இருக்கிறார் பில்லா இரண்டு படத்தில் .

இங்கே படம் எடுப்பவர்கள் யாரும் கலைசேவை செய்ய வரவில்லை .பணம் போட்டு பணம் எடுக்கவே வந்து இருக்காங்க .பில்லா படம் வெளியானவுடன் ப்ளாக்கரிலும் பேஸ்புக்கிலும் ஒரே அக்கபோர்.படம் சரியில்லை என...
நானும் கூட சரி இல்லை என்றே நினைத்து விட்டேன் .ஆனால் படம் பார்த்தபின்பே தெரிகிறது .படத்தில் குறைகள் இல்லை என [என்னால் படத்தில் நிறைய குறைகள் சொல்ல முடியும் .அப்படி சொல்லும் குறைகள் படத்தின் ஓட்டத்தை தடுக்கக்கூடிய வல்லமை உள்ளது இல்லை .திரைக்கதையில் ஆரம்பித்து நிறைய சொல்லலாம் .]

இவ்வளவு ஈடுபாட்டோடு அஜித் நடித்து இருப்பதற்கே ஒரு சபாஷ் போடலாம் .முதலில் தன் ரசிகனுக்காகவும் முப்பது வயதுக்கு கீழே உள்ள திரைப்பட ரசிகர்களுக்காகவும் பில்லா படம் எடுக்கப்பட்டு உள்ளது .படத்துக்கு செல்லும் ஏ கிளாஸ் ரசிகர் முதல் சி கிளாஸ் ரசிகர் வரை படம் போய் சேரனும் என்ற முடிவோடு திரைக்கதை லாஜிக் எதுவும் பார்க்கவில்லை  இயக்குனர் .

ஏற்கனவே நிறையப்பேர் கதையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பிச்சு மேய்ந்துவிட்டார்கள் .நிறையப்பேர் வசனங்களையும் எழுதிவிட்டார்கள் .அதனால அவற்றை எல்லாம் நான் பேசவில்லை .படம் பார்க்காதவர்கள் பார்க்கணும் என ஒரு சிறு மேலோட்டம் மட்டுமே இது .

படம் முழுவதும் சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நிறைய இருக்கு .பில்லா டான் ஆகுவது ஒரே நாளில் இல்லாமல் படிப்படியாக வருவதற்கு இந்த சிறிய கதாபாத்திரங்கள் உதவுகின்றன .

படத்தில் வளவளவென எங்கும் வசனம் இல்லை .மொத்த கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை பத்து பக்கத்துக்குள் அடக்கி விடலாம் .எழுத்தாளர் இரா.முருகன் ஜாஃபர் என்ற இன்னொருவருடன் சேர்ந்து வசனத்தை எழுதி உள்ளார் .

ஒளிப்பதிவு மிக அருமை .ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ..பார்க்கும் காட்சி நம்மை ஒன்ற செய்யவேண்டும் .அந்த வகையில் ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக ஒளிப்பதிவு செய்து உள்ளார் .

இசை யுவன் கலக்கல் .பின்னணி இசை ஒரு கதாநாயகன் என சொல்லலாம் .படத்தோடு நம்மையும் கூடவே அழைத்து செல்கிறது பின்னணி இசை .

எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.மிக அழகாக தொகுத்து உள்ளார் .திரைக்கதை தடுமாற்றத்தை இவரது கத்திரி சரிசெய்து உள்ளது .

சண்டைக்காட்சி ராஜசேகர் என நினைக்கிறேன் .அஜித் நடித்த சண்டை காட்சிகளில் பெஸ்ட் படம் இதுவென சொல்வேன் .பரபரவென இருக்கும் சண்டைக்காட்சி .அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் .



படத்தின் நாயகிகள் சில காட்சிகள் தலைகாட்டி செத்துபோய்விடுறாங்க .நாயகிகள் கேங்ஸ்டார் படங்களில் வருவதுபோல மிக உயரமானவர்களாக இருக்காங்க .சில வசனமும் சின்னதாய் சிரிப்பு மட்டுமே இவர்கள் நடிப்பு .

விஜய் படத்தின் தலைப்பு துப்பாக்கி என்பதாலோ என்னவோ இந்த படத்தில் அதிகமான துப்பாக்கிகள் நடிச்சு இருக்கு .ஒரு போட்டிகூட வைக்கலாம் இந்த படத்தில் எத்தனை துப்பாக்கிகள் பங்கெடுத்தன என்று .பில்லா ஒன்றில் கூலிங்கிளாஸ் என்றால் இந்த படத்தில் துப்பாக்கிகள் .

வில்லன்கள் நிறைய .சர்வதேச வில்லன்கள் ரெண்டுபேரும் உள்ளூர் வில்லன்கள் சில பெரும் நண்பர்கள் சில பெரும் படத்தில் தலையை காட்டி எல்லோரும் செத்து போயிடுறாங்க .படத்தில் மொத்தம் எத்தனைபேர் செத்தார்கள் என தனியாக ஒரு கணக்கெடுக்கலாம் .

எப்படி சொன்னாலும் அஜித் இந்த படத்தில் மாஸ்தான் .தன் ரசிகர்களின் நாடிபிடித்து நடித்து உள்ளார் .சிறு சிறு கண் அசைவிலும் உடல் அசைவிலும் அற்ப்புதமாக நடித்து உள்ளார் .படத்தில் போரடிக்குது என எதுவும் இல்லை .குறைகள் நிறைய இருந்தும் உங்களை யோசிக்கவிடாமல் சொல்லி அடிச்சு இருக்காங்க .

கடைசியாக ஒன்று நீங்க உலகப்படம் பார்ப்பவர் என்றால் படம் பார்க்க போகவேண்டாம் .இரண்டுமணிநேர பொழுது போகணும் என நினைத்தால் கண்டிப்பா இந்த படம் பாருங்க .நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்

Wednesday, 11 July 2012

பில்லா-2 முந்துமா நான் ஈ திரைப்படத்தை?......



ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பதை நீங்க எதை வைத்து தீர்மானம் செய்வீர்கள் .அந்த படம் ஈட்டிக்கொடுக்கும் மொத்ததொகை வைத்து கணக்கிட்டு சொல்வீர்கள் .அப்படி கணக்கிட்டு நீங்க வெற்றி திரைப்படம் என சொன்னால் வெளியாகபோகும் பில்லா ரெண்டு மிகப்பெரிய வெற்றிப்படம் .ஏன் எனில் அதிகமான திரை அரங்கில் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்குள் போட்ட பணத்தை எல்லாம் பில்லா பெற்று தந்துவிடும் .



என்னை கேட்டால் நான் ஈ திரைப்படத்தோடு ஒப்பிடுகையில் பில்லா ரெண்டு மிகப்பெரிய தொல்விப்படம் என்பேன் இப்பொழுதே .ஏன் என நீங்க என்னிடம் கேட்கலாம் .நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்த்துவிட்டு அப்புறம் பில்லா ,நான் ஈ திரைப்படம் பற்றி பேசுவோம் .

தொன்னூறுகளில் படம் வெளியாகும்போது ஒரே நேரத்தில் நான்கைந்து படங்கள் வெளியாகும் .படம் வெளியாகும் இடங்களை ஏ,பி ,சி என மூன்று செண்டர்களாக பிரித்து இருப்பார்கள் .வெளியாகும்போது ஏ மற்றும் சில பி சென்டர்களில் மட்டும் வெளியாகும் .ஒரு சென்டரில் அதிக பட்சமாக பனிரெண்டு அல்லது பதினைந்து திரை அரங்குகளில் வெளியாகும் .சராசரி படம் வெளியானால் கூட எல்லா திரை அரங்குகளிலும் கூட்டம் இருக்கும் .படம் ஐம்பது நாட்கள் ஓடிவிட்டால் அதன் பிறகுதான் பி சென்டருக்கு படம் வரும் .படம் வெளியாகி ஆறுமாதங்கள் கழித்தே கிராமப்புற திரை அரங்கை தொடும் .ஆறு மாதம் கழித்து கிராமத்திற்கு வரும் திரைப்படமே சில நேரங்களில் இருபது நாட்களை தாண்டி ஓடும்.இப்படி இருக்கும்போது இப்ப வெளியாகி மூன்றாவது நாளே படம் மிகப்பெரிய வெற்றி என சொல்லபடுகிறது .



பில்லா ரெண்டு திரைப்படம் உலகம் முழுவதும் ஏறக்குறைய ஆயிரம் திரை அரங்குகளில் வெளியாரும் .மூன்று நாட்கள் திரை அரங்குகள் நிரம்பி ஓடினாலே போட்ட அனைத்து முதலும் எடுத்து விடுவார்கள் .அப்ப படம் வெற்றிதானே .

நான் இதை வெற்றி என சொல்லமாட்டேன் .அதிகப்படியான விளம்பரங்கள் செய்து படம் வெளியாகும்போதே பார்த்தால்தான் சிறப்பு என்பதுபோல ஒவ்வொருவரையும் மூளை சலவை செய்து திரைஅரங்கில் குவிய வைக்கிறார்கள் .




முன்பு படம் வெளியாகும்போது படம் சரி இல்லை என்றால் சராசரியான கூட்டம் கூடும் .சில நாட்களில் படம் தூக்கப்பட்டு விடும் .சில நேரங்களில் படம் வெளியாகி ஒரு வாரம் வரை திரை அரங்கில் கூட்டமே இருக்காது .படம் பார்த்த ஆட்கள் படம் நன்றாக இருக்கிறது என சொன்னால் வாய்மொழியாக கேட்டு கேட்டு மிகபெரிய வெற்றி அடைந்து இருக்கிறது .ஒரு தலை ராகம் ,சேது ,அஜீத் நடித்த காதல் கோட்டை போன்ற படங்கள் .இப்படி மக்கள் பார்த்து சொல்லி அதன் பிறகு நன்றாக ஓடிய படங்கள் .

இதே போல மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான முதல் நாளை விட ரெண்டாவது நாள் அதிகப்படியாக கூட்டம் கூடிய திரைப்படம் நான் ஈ .காரணம் முதல் நாள் பார்த்த அனைவருமே படம் நன்றாக இருக்கிறது என சொன்னதுதான் .படம் பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் ஒன்று சொன்னதுபோல எல்லோரும் நன்றாக இருக்கிறது என எழுதினார்கள் .பேஸ்புக்,ட்விட்டர் , ப்ளாக்கர் என எல்லா தளங்களிலும் படம் நன்றாக இருக்கிறது என சொன்னார்கள் .அப்ப நான் ஈ திரைப்படம் வெற்றிப்படம் தானே .

பில்லா ரெண்டு திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் முதல் மூன்று நாளைக்கு டிக்கெட் இல்லை என சொல்லபடுகிறது .சென்னை மாயாஜால் திரை அரங்கில் படம் வெளியாகும் அன்று எழுபத்து இரண்டு காட்சிகள் திரை இடப்படுகிறது என சொல்கிறார்கள் .இதை எல்லாம் பார்க்கும்போது படம் வெளியான மூன்றாவதுநாள் எந்திரன் திரைப்படத்தின் வசூல் சாதனையை பில்லா முறியடித்தது என கண்டிப்பாக விளம்பரம் வரும் .கண்டிப்பாக மிகபெரிய வசூல் சாதனையை கொடுக்கும் பில்லா .ஆனால் என்னை பொருத்தவரை இப்பொழுதே நான் சொல்கிறேன் விளம்பரங்களில் வைத்து ஒட்டப்படும் எந்தப்படமும் வெற்றிப்படம் இல்லை .அந்த வகையில் பில்லா ஒரு தோல்வி படமே

.எந்தவித அதிகபட்ச விளம்பரம் இல்லாமல் வந்து வாய்மொழியாக நல்லபடம் என சொல்லப்பட்டு இன்று வெற்றி அடைந்து இருக்கும் நான் ஈ மிகப்பெரிய வெற்றிபடமே

Monday, 9 July 2012

நான் ஈ - என் பார்வையில் விமர்சனம்......



நான் நிறைய சினிமாக்கள் பார்ப்பவன் .மொழி புரியாத படத்தைக்கூட கடைசிவரை பார்ப்பேன் .அப்படித்தான் நேற்று நான் ஈ படத்தை மொழி மாற்று படம் என நினைத்து பார்த்தேன் .ஆனால் தமிழில் எடுத்துள்ளார்கள் .

இப்போ நான் எழுதுவது விமர்சனம் அல்ல .சராசரி சினிமா ரசிகனாய் இதை எழுதுகிறேன் .கடைசியில் சொல்வதை விட முதலிலேயே சொல்லி விடலாம் .குடும்பத்தோடு போய் பாருங்க இந்த படத்தை .நிச்சயம் பெரியவர்களையும் இளைஞர்களையும, குழந்தைகளையும் சந்தோசப்படுத்தும் இந்தப்படம் .

கதை படத்தின் தலைப்பை போலவே கொசு அளவே கதை .தன்னை கொன்றவனை மறுஜென்மம் ஈ உருவில் எடுத்து பழிவாங்குவதே கதை .


படம் ஆரம்பிக்கும்போதே வில்லனின் குணம் இதுதான் என முதல் காட்சியில் உணர்த்திவிடுகிறார் இயக்குனர் .வில்லன் சுதீப் மிக அற்புதமாக நடித்துள்ளார் .சுதிப்பை கதாநாயகன் எனக்கூட சொல்லலாம் .

நானி படம் ஆரம்பித்து முப்பத்து ஐந்து நிமிடங்களே வந்தாலும் சொல்லி அடித்து நடித்து இருக்கிறார் .துரு துரு வென இருக்கிறது அவரது அசைவும் நடிப்பும் .ஒன்றும் இல்லாமல் மொட்டையாக வரும் மெசேஜ்க்கு அவரது சந்தோசமும் நண்பன் கேட்கும் கேள்விக்கு சொல்லும் பதிலும் அட்டகாசம் .


சமந்தா...... இவரைப்பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை .திரையில் பார்த்த அவரது சிரிப்பு இன்னும் மனசுக்குள்ளேயே இருக்கு .சமந்தா நடித்த சில படங்கள் தெலுங்கு மொழியில் பார்த்து இருக்கிறேன் .அவை ஒரு கதாநாயகி என்ன செய்வாளோ அது போன்று நடித்து சென்று இருப்பார் .இந்த படத்தில் காட்சியின் தன்மை உணர்ந்து நடித்து உள்ளார் .அவர் முகத்தில் நானியை பார்க்கும்போதெல்லாம் ஏற்ப்படும் பரவசம் அவ்வளவு அழகா இருக்கும் .

சமந்தாவும் சுதிப்பும் சாப்பிடும்போது அவர் நானியை பார்க்கும் பார்வையில் ஒரு அழகு இருக்கும் .காதலிக்கும்போது ஏற்படும் வெட்கமும் பரவசமும் ஒரு பெண்ணுக்கு எப்படி ஏற்படுமே அதை அப்படியே திரையில் கொண்டு வந்து உள்ளார் சமந்தா .ஈ உருவில் இருப்பது நானிதான் என தெரிந்த பின்பு சமந்தாவும் ஈ யும் அசைவிலேயே உரையாடுவது சான்ஸே இல்லை வேறு யாரு நடித்து இருந்தாலும் இப்படி வந்து இருக்குமா என .சமந்தாவுக்கு இனி தமிழில் நல்ல எதிர்காலம் இருக்கிறது .


சிஜி யில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாக ஈ  இருந்ததாலும்கூட அது செய்யும் அட்டகாசங்கள் சிரிப்பையும் வியப்பையும் ஏற்ப்படுத்துகிறது .நானி  ஈ உருவம் அடைந்தவுடன் சிறுவர்கள் விளையாடும்போது பறக்கும் நுரை முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து விளையாடும்போதே நமக்கும் பரவசம் பற்றிக்கொள்கிறது .சுதிப்பை முதன்முதலில் பார்த்த உடனே சிறு பிள்ளைகள் கோபப்பட்டு அடிக்க வருவதுபோல இருக்கும் ஈ யின் செய்கைகள். 

சுதிப் கன்னத்தில் மோதி தொப்பென்று கீழே விழும் .மறுபடி மறுபடி முயன்று பச்சை இலை தேநீர் கிண்ணத்துக்குள் விழுந்து தண்ணீர் சுழலுக்குள் மாட்டி மயக்கநிலைக்கு போகும்போது தன்னை கொன்றது நினைவுக்கு வந்து சிலிர்த்து எழும் பாருங்க உங்களுக்கே விசில் அடிக்க தோன்றும் .இதுக்கு மேலே சொல்ல கூடாது திரையில் பாருங்க ஈ யின் அட்டகாசத்தை .


இயக்குனர் ராஜமௌலி ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு மிக கடுமையாக உழைத்து இருக்கிறார் .
வசனம் கிரேசிமோகன் நீண்ட நாட்களுக்கு பின்பு எழுதி இருக்கிறார் .அவரது எடக்கு மடக்கு பாணி வசனங்கள் ,நானி பேசும் வசனங்கள் எல்லாமே அருமை .

ஒளிப்பதிவு அருமை .பின்னணி இசை அருமை .மொத்தத்தில் படம் அருமை .இந்தியாவில் முழுமையாக கிராபிக்ஸ் செய்து வந்த படத்தில் இது மிக அருமை .

முன்பே சொன்னதுதான் .குடும்பத்தோடு போய் பாருங்க .குழந்தைகளோடு போய் பாருங்க இந்த படத்தை