Monday, 8 July 2013

சீறிய சிங்கம்லே சூர்யா.........




கொஞ்சநாளாக புதிய டிரென்ட் என வெறும் காமடி படங்களாக வந்துகொண்டு இருந்தது .சில படங்கள் சினிமாவில் உதவி இயக்குனராககூட வேலை செய்யாமல் குறும்படங்கள் எடுத்த அனுபவத்தில் படம் எடுத்து நன்றாக ஓடியது .அந்த படங்களை தூக்கிவைத்து கொண்டாடவும் செய்தனர் .அதை ஒற்றி பெரிய இயக்குனர்கள் கூட நகைச்சுவை படம் எடுத்தனர் .கடைசியாக வந்த தில்லு முள்ளு ,தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களும் நகைச்சுவை படங்களே .என்னதான் திரை அரங்கில் சென்று படம் பார்த்து சிரித்துவிட்டு வந்தாலும் அதில் ஒரு என்ட்டர்டிரைனர் இல்லாது போலவே இருந்தது .இதுவே டிரென்ட் ஆகிருமோ என இருக்கும்போது சரியாக களத்தில் சிங்கம் .

சூர்யா கடைசியாக வந்த இரண்டு படம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாததால் கட்டாய வெற்றி தேவை பட்டது .இயக்குனர் ஹரியோடு சேர்ந்து சொல்லி அடிச்சு இருக்கார் சிங்கம் இரண்டாம் பாகம் மூலம் .



படம் ஆரமிக்கும்போது சிங்கம் முதல் பகுதியின் சில காட்சிகளோடு ஆரம்பிக்கிறது .படத்தின் முதல் பகுதியில் விஜயகுமார் சொன்னது போல போலீசாக இல்லாமல் பள்ளிகூடத்தில் என் சி சி ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டு தூத்துக்குடி கடற்க்கரையோரங்களில் ஆயுத கடத்தல் நடைபெறுகிறதா என கண்காணித்து வருகிறார் .வேலை பார்க்கும் பள்ளியில் ஹன்சிஹா மாணவியாக இருக்கிறார் .ஹன்சிஹாவுக்கு சூர்யா மேல் காதல் வருகிறது .

அதே ஊரில் இருக்கும் இருவர் பரம விரோதியாக இருக்கின்றனர் .ஒருவர் நல்லவர் .ஒருவர் கேட்டவர் .அந்த நல்லவர் ஹன்சிஹா சித்தப்பா .
ஆயுத கடத்தல் என நினைத்து வேவு பார்க்க போன இடத்தில் அங்கே நடப்பது போதை மருந்து கடத்தல் என தெரிய வருகிறது .இந்த போதை மருந்து கடத்துபவர்கள் பரம விரோதியாக கருதப்படும் இருவரும் ஒன்றாக சேர்ந்து என சூர்யாவிற்கு தெரிய வருகிறது .

இவர்களின் மிக முக்கியமான ஆளை கைது பண்ணும்போது அங்கே ஒரு நைஜீரியனும் கைது செய்ய படுகிறான் .அவனை இரவோடு இரவாக ஜெயிலை உடைத்து தப்பிக்க வைக்கிறார்கள் .அவனை பற்றி ஆராயும்போதுதான் தெரிகிறது அவன் ஒரு இண்டர்நேசனல் போதை பொருள் கடத்தல் காரன் என .இவ்வளவுதான் கதை .

மிக சாதாரண கதைதான் .படம் ஆரம்பித்து மெதுவாக நகரும் .காமடிக்கு சந்தானம் வருவார் .ஹன்சிஹா துரத்தி காதலிக்க அதை மறுத்துக்கொண்டு இருப்பார் சூர்யா .வில்லனின் அடியாள் தம்பியை பப்பில் வைத்து ஒருவர் அடித்துவிட அவரின் தங்கையை கடத்தும்போது வேகம் எடுக்கும் படம் இருதிகாட்சிவரை தடதடத்து ஓடிக்கொண்டே இருக்கும் .
முன்பகுதியில் வந்த முக்கியமான கதாபாத்திரம் அத்தனையும் சரியான இடத்தில் வருமாறு கதை அமைத்து இருக்கின்றார் .படத்தில் வரும் எந்த வசனமும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது .

சண்டைகள் நன்றாக படம் ஆக்கபட்டு இருக்கு .சண்டைகள் படமாக்கியவிதத்தில் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது .எல்லா சண்டை காட்சியிலும் முந்திய படத்தில் ஒரு கையை உயர்த்தி ஓங்கி பிடரியில் அடிப்பது போல கவனமாக சேர்த்து இருக்காங்க .சண்டை காட்சிகள் நிச்சயம் அதிரி புதிரியானவை .





பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை .சூர்யா விஜய் போல ஆட முயற்சித்து இருக்கிறார் .அவரது உயரம் அதற்க்கு தடையா இருக்கு .அனுஷ்கா அழகு பதுமையாக வந்து போகிறார் .கதையின் ஓட்டத்துக்கு ஹன்சிஹா உதவியாக இருக்கிறார் .இந்த படத்தில் நடிக்கவும் செய்து இருக்கிறார் ஹன்சிஹா .

வில்லன்கள் பிரகாஷ்ராஜ் அளவுக்கு இல்லை .இருந்தும் பரவா இல்லை .படத்தின் நிறைய காட்சிகள் அந்தரத்தில் இருந்து ஒளிப்பதிவு செய்யபட்டு உள்ளது .பிரியன் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார் .

படத்தில் நிறைய நடிகர்கள் இருந்தாலும் சூர்யா ஒற்றை ஆளாக அவ்வளவையும் சுமந்து நடித்து இருக்கின்றார் .சூர்யாவிற்கு நிறைவான படம் இரத்து .

இயக்குனர் ஹரிக்கு படம் பார்க்க வருபவர்களின் ரசனை எப்படி இருக்கும் என தெரிந்து இருக்கு .வசனத்தை பற்றி இந்த கவலையும் இல்லாமல் பரபர திரைக்கதையால் சூர்யா ஓடிக்கொண்டு இருக்க நம்மையும் சேர்ந்து சூர்யோவோடு ஓடுவது போல ஆக்கி இருக்கார்.அதுதான் ஹரியின் பலம் .

நகைச்சுவை படம் பார்த்து அலுத்து இருந்த நேரத்தில் நல்ல பொழுதுபோக்கு படமாக சிங்கம் வந்து இருக்கு .

சிங்கம் சீறும்

1 comment:

  1. படத்தைப் பற்றிய பலரது தவறான சீற்றமும் குறைந்து விட்டதும் உண்மை... நல்ல விமர்சனம்...

    ReplyDelete