இன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து இருந்தேன் .இந்த நிகழ்ச்சியை நடத்தும்போது அதிகபட்ச இடையூறு எதையும் செய்யாமல் வழிநடத்தினார் .
நிகழ்வில் கலந்துகொண்டோர் ஏறக்குறைய நாற்ப்பது வயதை கடந்தவர்கள் .எல்லோரும் மிக சிறப்பாக தங்கள் பங்களிப்பை செய்தனர் .அவர்கள் எல்லோருக்குள்ளும் காலங்கள் கடந்தும் பாடல்களால் தங்கள் இளமை காலங்களை மீட்டெடுத்து பாடல்கள் வழியாக பேசியது அவ்வளவு அருமையாக இருந்தது .
முன்பு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பாடல்கள் ஏதோ ஒரு வகையில் கலந்து இருந்ததை உணரமுடிந்தது .நானும் நாற்பதுகளில் இருந்தாலும் இந்த அனுபவங்கள் எனக்கும் இருந்தது .இங்கே அதை பற்றி ஒரு நோட்சே எழுதி இருக்கிறேன் .அது ஆனந்தவிகடனிலும் வந்தது .
கலந்துகொண்டவர்கள் தங்களை மறந்து பாடியபோது அது உணர்வுபூர்வமாக இருந்தது .அதை பார்த்த எனக்கும்கூட சந்தோசம் ஒட்டிக்கொண்டது .
அவர்கள் பாடிய பாடல்களை கேட்டபோது எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை .அந்த பாடல்களில் முக்கால்வாசி பாடல்களை நான் இங்கே முன்பு எடுத்து பகிர்ந்து இருக்கிறேன் .
இரண்டுநாட்களாக ஏதோ ஒருவகையில் மனசுமையில் இருந்த நான் இந்த நிகழ்ச்சி பார்த்தபோது என்னை மறந்து இருந்தேன் என்பது மட்டும் நிஜம்.
பார்க்காதவர்கள் நிச்சயம் பாருங்கள்
Tweet |
நானும் ரசித்துப் பார்த்தேன் நண்பரே...
ReplyDeleteஇந்தக்கால காதலர்கள் இப்படி அனுபவித்து பாடுவார்களா ?
அதற்கு முதலில் பாடல் வரிகள் தெரியுமா ?
இப்படி பல கேள்விகள் மனதில் எழுந்தன...
நீயா ? நானா ? பிடிக்காதவர்களுக்கு கூட இந்த எபிசோட் பிடிக்கும்...
பகிர்வுக்கு நன்றி.... (த.ம. 2)
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
மிக்க நன்றி தனபாலன் வருகிக்கு
Deleteபாதி தான் பார்த்தேன் மீதியும் பர்ர்க்க தூண்டும் பதிவு
ReplyDeleteரியாஸ் உண்மையில் அருமையாக இருந்தது
Deleteஇந்தக்கால காதலர்கள் இப்படி அனுபவித்து பாடுவார்களா ?
ReplyDeleteஅதற்கு முதலில் பாடல் வரிகள் தெரியுமா ?
// ஏன் சந்தேகம் அழகாக பாடுகின்றனர், கையிலா கிளாசு....................
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
Deleteஅருமையான பாடல்கள்.
ReplyDeleteசமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html
மிக்க நன்றி உங்கள் வருகைக்கு .கண்டிப்பாக வருகிறேன் உங்கள் தளத்திற்கு
Delete