ஒரு கல்யாணம்.ரென்டு காதல்.ஒரு முடிவு.
படம் தொடக்கமே எங்கோ வெறித்து பார்த்தபடி ஆர்யா நயன்தாரா இருக்க அவர்கள் இருவருமே மனதளவில் ஒப்புதல் இல்லாமல் கல்யாணம் நடக்கிறது அவர்கள் இருவருக்கும்.
முதலிரவு தொடங்கி ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுங்குவதுமாக இருக்கின்றார்கள்.ஆர்யாவின் செயல்களால் மனம் உடைந்து அழும்போது நயன்தாராவுக்கு முடியாமல் வந்துவிடுகிறது.ஆர்யா நயன்தாராவை மருத்துவமனையில் சேர்க்கிறார்.பின்பு இதற்க்கு முன்பு உங்களுக்கு இது போல நடந்து இருக்கா என கேக்கும்போது அங்கே தொடங்குகிறது ஜெய்க்கும் நயந்தாராவுக்குமான கதை.மிக அழகியழோடு படமாக்கப்பட்ட காதல் கதை.அதை நான் இங்கே சொல்ல போவது இல்லை.திரையில் பாருங்கள்.நயந்தாரா அழகாகவும் அதே அளவு நடிப்புமாக கலக்கி இருக்கின்றார்.ஜெய்யும் நடிப்பில் அசத்தி இருக்கின்றார்.இவர்கள் இருவருக்குமான கதையில் மிக அழகாக பொருந்தகூடிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நயன்ந்தாரா அப்பாவாக.மொத்தத்தில் ஒரு சிறந்த சிறுகதை படத்தின் முதல் பகுதி.
படத்தின் இரன்டாம் பகுதியும் காதல் கதைதான்.நஸ்ரியாவின் துள்ளல் நடிப்பும் ஆர்யாவின் நடிப்பும் நன்றாக இருக்கு .முதல் பகுதி போல இரண்டாம் பகுதி வேகம் இல்லையெனினும் நஸ்ரியாவின் சிரிப்பும் ,இடை இடையே சந்தானம் கோஸ்ட்டி அடிக்கும் கூத்துமாக நகர்கிறது.
இந்த இரண்டு காதலின் முடிவும் ஒரு தோல்வியில் முடிந்து ஒரு கல்யாணத்தல் இனைந்து இருவரும் ஒன்றமுடியாமல் இருப்பதும் பின்னர் இனைவதும் கதை.
க்லைமாக்ஸில் ஜெய் திரும்ப வருவதும் ஆர்யாவிடம் பேசும் அந்த நாலுவரி வசனமும் படத்தின் திருப்புமுனை என இயக்குனர் நினைத்து இருந்தாலும் அது எரிச்சலையே தருகிறது.
நயன்ந்தாரா,நஸ்ரியா இருவரும் முழுப்படத்தையும் தாங்குகிறார்கள்.மற்றபடி படம் நிச்சயம் திரை அரங்கில் பார்க்கலாம்.
அட்லீக்கு முதல்படம் இது.நல்ல இயக்கம்.அடுத்த படம் நிச்சயம் இதைவிட நன்றாக தருவார் எனம் நம்பிக்கை தருகிறது இந்த படம்.இசை வழக்கம் போல. ஒளிப்பதிவு அருமையா இருக்கு.
படத்தின் சின்ன சின்ன காட்சிகலாக செதுக்கி நன்றாக இருக்கு.சில காட்சிகள் மனதில் நிற்க்கும்.
திரை அரங்கம் சென்று பாருங்கள்.
ராஜா ராணிக்கு ராணி ராஜாவுக்கு
Tweet |
க்லைமாக்ஸில் ஜெய் திரும்ப வருவதும் ஆர்யாவிடம் பேசும் அந்த நாலுவரி வசனமும் படத்தின் திருப்புமுனை என இயக்குனர் நினைத்து இருந்தாலும் அது எரிச்சலையே தருகிறது.//
ReplyDeletehmm ok...
padatha thirai arangkukala paarkka sonnathala unga vimarsanaum ok tan..