Tuesday, 24 July 2012

ஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....



பத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் என கேட்டார் .என்ன என்று கேட்டேன் .அவர் சொன்ன செய்தி என்னை மிக வியப்பில் ஆழ்த்தியது .அருவருப்பாகவும் இருந்தது .இப்படியும் இருக்கின்றாகளே மனிதர்கள் இவர்களை நாம் என்ன செய்வது? .

பேஸ்புக்கில் கொஞ்சம் நட்பு வட்டம் பெரிதாகவும் ஓரளவு படித்தவர்களுக்கு இடையில் நடந்த கதை இது .நல்ல சமூக கருத்துக்களை பதிபவர் அவர் .அவர் பதிவிடும் கருத்துக்ள் நன்றாக இருப்பதால் நண்பர்கள் வட்டம் பெரிதாக ஆகிறது .அடிக்கடி பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதால் நாளடைவில் போன் நம்பர்களை கொடுத்து பரிமாரிக்கொள்கிறார்கள்.அடிக்கடி போனில் பேசிக்கிறாங்க நண்பர்கள் அனைவரும் .இந்த நண்பரோடு சிலர் நேரில் ஒன்றாக கூடி பேசி அரட்டை அடித்து செல்கிறார்கள் .இது போல சந்தித்து பேசுவது அடிக்கடி நடக்கிறது .

இந்த நேரத்தில் இந்த நண்பரின் போனில் இருந்து ஒரு நண்பருக்கு அழைப்பு வருகிறது .நண்பர்தான் பேசுகிறார் என நினைத்து ஹலோ என சொல்கிறார் .எதிர் முனையில் பேசியதோ இவருக்கு அறிமுகம் இல்லாத பெண் குரல் .நண்பர் பதற்றம் அடைந்து நீங்க யார் என கேட்க நான் உங்க நண்பரின் மனைவிதான் பேசுறேன் என சொல்கிறார் .இந்த நண்பர் உங்க கணவர் எங்கே என கேட்க அவர் மனம் சங்கடமாக அறைக்குள் படுத்து இருக்கிறார் .அவருக்கு தெரியாமல் உங்களுக்கு போன் செய்கிறேன் என அந்த சொல்ல இவர் எதற்கு சங்கடம் என கேட்டு இருக்கிறார் .உடனே அந்த பெண் எங்கள் குழந்தைக்கு பள்ளியில் பணம் கட்ட முடியவில்லை .அதனால மனம் சங்கடப்பட்டு வீட்டிலேயே படுத்து இருக்கிறார் என்று சொல்லிவிட்டு போனில் உங்க நம்பரை பார்த்தேன் உங்களால் உதவி செய்ய முடியுமா என கேட்பதற்கு அவருக்கு தெரியாமல் போன் செய்கிறேன் .அவருக்கு தெரிந்தால் என் மீது கோபப்படுவார் என சொல்லி இருக்கிறார் .

நண்பர் அந்த பெண்ணிடம் எவ்வளவு கட்டவேண்டும் என கேட்டு இருக்கிறார் .இருபத்து ஐந்தாயிரம் என அந்த பெண் சொன்னதும் பெரிய தொகையாக இருக்கு என நினைத்துக்கொண்டு சரி பள்ளிக்கு கட்டதானே கேட்க்குறீங்க என கேட்டு இருக்கின்றார் .ஆமாம் என சொன்னவுடன் நண்பர் எந்த பள்ளி என கேட்டதற்கு அந்த பெண் ஒரு பள்ளியை சொல்லி இருக்கின்றார் .சரி நான் நாளைக்கு பணம் வாங்கிக்கொண்டு அந்த பள்ளிக்கு வருகிறேன் நீங்களும் வந்துவிடுங்க கட்டுவோம் என சொன்னதுக்கு பள்ளிக்கு நீங்க வரவேண்டாம் யாரவது பார்த்தால் தவறாக நினைப்பார்கள் என சொல்லி இருக்கின்றார் .சரி நான் உள்ளே வரவில்லை பள்ளிக்கு வெளியில் வைத்து பணம் தருகிறேன் நீங்க உள்ளே போய் கட்டிவிட்டு வாருங்கள் என சொன்னதுக்கும் வேண்டாம் நீங்க வெளியில் வேறு எங்காவது வைத்து கொடுங்கள் என சொல்லி இருக்கிறார் .சரி நான் நாளைக்கு பணம் வந்தவுடன் போன் செய்கிறேன் என சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

நண்பர் அலைபேசியை துண்டித்தவுடன் தனது வேறு ஒரு நண்பருக்கு போன் செய்து நடந்த விசயத்தை சொல்லி இருக்கிறார் .அங்கே அவருக்கு நண்பர் ஒரு அதிர்ச்சியான விசயத்தை சொல்லி இருக்கிறார் .அவங்க எனக்கும் போன் செய்து பணம் கேட்டாங்க .என்னிடம் இப்ப இல்லை ஒரு வாரம் சென்று தருகிறேன் என சொன்னேன் என்று சொல்லி இருக்கிறார் .இருவருக்கும் சிறிது சந்தேகம் .பள்ளிகூடத்துக்கு பணம் கட்டனும் என்று சொல்வது பொய்யாக இருக்குமோ என சந்தேகப்பட்டு அந்த பள்ளியில் போய் விசாரித்து இருக்கின்றார்கள் .அவங்க ஏற்க்கனவே எல்லா பணத்தையும் கட்டிமுடித்துவிட்டார்களே என பள்ளியில் சொன்னதும் இரண்டுபேரும் திரும்பிவிட்டனர் .இனிமேல்தான் இருவருக்கும் அதிர்ச்சி ஒன்று காத்து இருக்கு என்பது அறியாமலே வந்துவிட்டனர் .

முதல் நண்பர் அந்த பெண் பணம் கேட்டதை யார் என சொல்லாமல் நடந்த கதையை ஸ்டேட்டஸ் ஆக தனது முகப்பில் பதிந்து இருக்கின்றார் .அங்கே தான் நிறைய உண்மை வெளிச்சத்துக்கு வந்தது  மியுட்சுவல் நண்பர்களாக உள்ள கிட்டத்தட்ட பதினைத்து பேர் இதே பெண்ணிடம் இருப்பத்து ஐந்தாயிரம் ருபாய் குழந்தை படிப்புக்காக கொடுத்துள்ளார்கள் .எல்லோரிடமும் ஒரே கதைதான் .கணவருக்கு தெரியாமல் போன் செய்கிறேன் என .மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இருக்கின்றார்கள் .கணவன் சொல்லிகொடுத்தபடி மனைவி பேசி பணம் வாங்கி இருக்கிறார் .ஸ்டேட்டஸ் பின்னூட்டத்தில் எல்லோரும் கொட்டி தீர்த்துவிட்டனர் .

சமூக ஊடகத்தில் சமூக அக்கறை உள்ளவனாக பதிவுகள் போட்டு நல்ல பெயரோடு இருக்கும் ஒருவர் தனது மனைவியின் மூலம் நாடகம் ஆடி நம்பிக்கைக்கு உரிய நண்பர்களிடம் மோசடி செய்ய எப்படி மனது வந்தது என தெரியவில்லை .இதை இங்கே எழுதிய காரணம் நம்மை நம்பிக்கைக்கு உள்ளாக்கி நம்மையே மோசடி செய்யவும் நண்பன் என்ற பெயரில் சிலர் கிளம்பி இருப்பதால் எழுதினேன் .எல்லோரிடமும் உங்கள் உண்மைகளை கொட்டி தீர்க்காதீர்கள்

44 comments:

  1. அறியாமை தான் சார் காரணம்...

    "கணவருக்கு தெரியாமல் பேசுகிறேன்"
    என்று சொல்லும் போதே அறிந்து கொள்ள வேண்டாமா...?

    "பள்ளிக்கு நீங்க வரவேண்டாம் யாராவது பார்த்தால் தவறாக நினைப்பார்கள்"
    என்று சொல்லும் போதே தெரிந்து கொள்ள வேண்டாமா...?


    "நீங்க வெளியில் வேறு எங்காவது வைத்து கொடுங்கள்"
    என்று சொல்லும் போதே புரிந்து கொள்ள வேண்டாமா...?

    நன்றி... (த.ம. 2)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபலான் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      Delete
  2. அடக்கொடுமையே....

    முகமறியா நட்புகளை சீக்கிரமாக நம்பி விடுவது நம்மை நாமே முட்டாளாக்குவதற்கு சமமான செயல்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆமினா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      Delete
  3. பிரச்சினை ஒன்று என்றாலே மனமுடைந்து விடுபவர்கள் நம்மவர்கள். அதிலும், குழந்தையின் படிப்பு என்றால் சொல்லவே தேவை இல்லை. அத விடுங்க, ஒரு பெண் கேட்டார் என்றால் சும்மாவே உருகி வாடிஞ்சிடுமே... :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

      Delete
  4. பல வகையில் கிளம்புராங்கா ... என்ன செய்யுறது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரியாஸ்

      Delete
  5. நல்ல எச்சரிக்கைப் பதிவு
    இனியாவது யாரும் ஏமாறாமல் இருக்க
    நிச்சயம் இது உதவும்
    பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. அட இந்த தொழிலு நல்லாயிருக்கெ. ஒரு இண்டெர்நெட் இணைப்பு.அடுத்து பரிதாபமாய் பேச கூடிய பெண்(மனைவி கட்டாயமில்லை).மிக குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்த படியே மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கக்கூடிய தொழில். அறிமுக படுத்தியமைக்கு நன்றி பாரூக்.அடுத்து தொழிலதிபராய் தான் உங்களுக்கு மடல் எழுத உத்தேசித்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. சாக்கடை அள்ளுவதும் ஒரு தொழில்தான் .அதில் நேர்மை இருக்கு உழைப்பு இருக்கு .ஆனால் இது அப்படிபட்டதா .நட்பையே கலங்கபடுத்துதல் இல்லையா இது .

      உங்கள் அன்புக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  8. எப்பிடில்லாம் டெவலப் ஆயி போயிக்கிட்டுருக்காங்க.

    சேக்காளி இதையெல்லாம் தூக்கி சாப்படுறாரு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்கள் வருகைக்கு

      Delete
  9. கேவலப்படுத்துகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்கள் வருகைக்கு

      Delete
  10. அடி ஆத்தி....இப்படி எல்லாமா. வெளங்கிரும்

    ReplyDelete
    Replies
    1. நடந்துருக்கே .மிக்க நன்றி உங்கள் வருகைக்கு

      Delete
  11. நல்ல சமூக விழிப்புணர்வு பதிவு. சரியான நேரத்தில் வந்த எச்சரிக்கை மணி.

    ReplyDelete
  12. நட்பு என்னும் புனிதத்தையே கேவலப்படுத்தும் ஒரு சிலரால் மொத்த இனத்துக்கே அவமானமாகிபோகிறது.
    உசாரா இருங்கோ இருக்கனும்.. அது எதிலென்றபோதும்..

    ReplyDelete
    Replies
    1. நட்பையே கொச்சை படுத்திவிட்டார்கள் அவர்கள் .

      உங்கள் வருகைக்கு அன்பு நன்றி

      Delete
  13. அடி ஆத்தி....இப்படி எல்லாமா. வெளங்கிரும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்கள் வருகைக்கு

      Delete
  14. நட்பு என்கிற விஷயத்தில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்னொரு உதாரணம் நமக்கு. சரியான எச்சரிக்கை அலாரம் கொடுத்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக .நட்பு வலயத்துள் இருக்கும் அனைவருக்கும் போன் நம்பர் கொடுப்பது எவ்வளவு தவறு என்பது இப்பொழுதுதான் புரிகிறது .

      மிக்க நன்றி உங்கள் வருகைக்கு

      Delete
  15. அடி ஆத்தி....இப்படி எல்லாமா. வெளங்கிரும்

    ReplyDelete
  16. அடி ஆத்தி....இப்படி எல்லாமா. வெளங்கிரும்

    ReplyDelete
  17. ரொம்ப வருத்தமான சம்பவம் இது. எல்லோரிடமும் நாம் கொஞ்சம் உசாராக இருக்கணும். நல்ல விழிப்புணர்வு பகிர்வு. நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆம் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது

      Delete
  18. இது ரொம்ப கொடுமை பாய்..

    ReplyDelete
    Replies
    1. கொடுமைதான் .நடந்துவிட்டது .இன்னும் நடக்கிறது .

      உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  19. உண்மை .இங்கே உண்மைலேயே சமூக சேவை மனப்பான்மையுடன் செயல்படும் சிலருக்கும் இது போன்றோரால் இழுக்கு ஏற்படுகிறது

    ReplyDelete
  20. நல்ல பகிர்வு. எல்லா விதத்திலும் ஏமாற்றவும், ஏமாறவும் ஆட்கள் இருக்கிறார்கள்... முகப் புத்தகம் மூலம் இப்படி நிறைய விஷயங்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன - காதல் உட்பட.... :(

    ReplyDelete
  21. இதனை நான் ஏற்கனவே முக நூல் நண்பர் ஒருவரின் மூலம் தெரிந்து கொண்டேன் ஆனால் அது உங்கள் தளத்திலிருந்துதான் பெறப்பட்டது என்பதினை நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன்
    அவசியமான விழிப்புணர்வுப் பதிவுதான் தொடருங்கள் என் வருகையும் இனிமேல் தொடரும்

    ReplyDelete
  22. காலத்துக்கு ஏற்ற பதிவுதான், இது போல் ஒரு பதிவு நானும் போட்டிருந்தேன் , முடிந்தால் வந்து படித்து பாருங்கள்!http://kishoker.blogspot.com/2012/07/blog-post_07.html

    ReplyDelete
  23. என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே
    இது ஒரு கலவை
    - சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  24. misuse is happening if mobile numbers are shared anywhere in web

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. காசுக்காக கட்டிய மனைவியை ஆயுதமாக்கி நட்பை கற்பழித்த கேவலம்...........

    ReplyDelete