Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, 2 February 2013

கடல் பார்க்க ஐஞ்சு ரூவாக்கு மேல செலவு செய்யாதீங்க


கடல் எப்பொழுது எனக்கு முதல் பரிச்சயம் நினைவுபடுத்தி பார்க்கிறேன்.

மூன்றாவது படிக்கும்போது சென்ற சிறிய இன்ப சுற்றுலாதான் முதன் முதலில் கடல் பார்த்த அனுபவம்.

அந்த சுற்றுலாவுக்கு ஒரு சர்பத் சேர்த்து போய் வர மொத்தமே ஐந்து ரூபாய் மட்டுமே.மதிய உணவு புளிச்சோறு கட்டி எல்லாக்குழந்தகளும் கொண்டுபோனோம்.கூடுதலாக வீட்டில் ஐந்து ரூபாய் கொடுத்தார்கள்.

சுற்றுலா சென்ற இடம் பேராவூரனிக்கு அருகில் உள்ள மனோரா.

கடலும் கடல் ஒட்டி மனொரா கம்பீரமாக நின்றது அந்த வயதில் ஆச்சரியம்.பேருந்து தூர வரும்போதே உயரமாக தெரிந்த மனோரா பார்த்து எல்லா குழந்தைகளும் கை கொட்டி சந்தோசமாய் ஆர்ப்பரித்தது நினைவில் இன்னும் இருக்கு.

இருபத்து அய்ந்து பைசா கொடுத்து மொனோரா உள்ளே சென்று ஆட்டம் போட்டதும் உச்சிவரை சென்று கீலே பார்த்தபோது பயமாக இருந்தது.

அதன் பின்பு கடல் நோக்கி ஓடினோம்.கடல் அலை இல்லாத கடல்.இப்ப சென்று பார்த்தாலும் அமைதியாகவே இருக்கும் கடல்.சகதியும் பாசிகள் அடர்ந்தும் கடலோரம் இருந்தது.இருந்தும் கால் நனைத்து விளையாடியத்தும் ,சங்கு சிப்பிகள் தேடி எடுத்ததும் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடியதும் இன்னும் நினைவில் இருக்கு.

மாலை நேரம் நெருங்கியவுடன் ஆசிரியர் வீடு திரும்ப அழைத்ததும் எல்லோரும் கடலையும் மனோராவையும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தது பசுமையாக இருக்கு.

இப்பவும் மனோரா சென்றே வருகிறேன்.காலாங்கள் கடந்தும் கம்பீரமாக நிற்க்கிறது மனோரா.
கடலும் அன்று பார்த்தது போலவே அலைகள் இல்லாமல் அமைதியாகவே இருக்கு.

Thursday, 11 October 2012

பூர்விகா மொபைலின் பகல் கொள்ளை



பூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ  கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க....

நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் சாம்சங் நோட் செல்போனுக்கு ஸ்க்ரீன் ப்ரோடக்டர் வாங்குனேன் .நான் விலை எவ்வளவு என்று கேட்க்கைலேயே என் போனை வாங்கி துடைத்து சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டனர் .அப்புறம் ஸ்கிரின் ப்ரடக்டரை ஒட்டி கையில் கொடுத்து ரூபாய் எழுநூற்று ஐம்பது ரூபாய் கேட்டார்கள் .என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை .விதியோ என கொடு
த்துவிட்டு வந்தேன் .வெளியில் வந்து வேறு ஒரு கடையில் அதே ஸ்க்ரின் ப்ரோடக்டரை விலை கேட்டேன் .அவர்கள் சொன்ன விலை வெறும் முன்னூறு ரூபாய் மட்டுமே .

மலேசியாவில் இருபது வெள்ளிக்குமேல் எந்த ஸ்க்ரின் ப்ரடக்டர் இல்லை .இந்திய மதிப்பில் ரூபாய் முன்னூற்று நாற்ப்பது மட்டும் .பூர்விகா மொபைல்ஸ்ல போட்டது சீனா தயாரிப்பு .மலேசியா விழும் சீனா தயாரிப்புதான் .

முன்னூறு ரூபாய்க்கு வேறு கடையில் கிடைக்கும் ஒரு பொருள் பூர்விகாவில் எழுநூற்று ஐம்பது ரூபாய் .எவ்வளவு கொள்ளை .

சீனா மொபைல்ஸ் வாங்குரவுங்க இது போன்ற பெரிய கடையில் வாங்காதீங்க .இங்கே நீங்க இரண்டாயிரம் கொடுத்து வாங்கும் ஒரு போன் சிறிய கடைகளில் வெறும் எண்ணூறு ரூபாய்க்கு கிடைக்கிறது .

விளம்பரங்களையும் ,கடை பகட்டுக்களையும் நம்பி ஏமாறாதீங்க

Tuesday, 19 June 2012

இந்த வாரம்....அரசியல்வாதிகளின் ”ஙே” வாரம்....


”ஙே” என்ற இந்த வார்த்தைக்கு அர்த்தம் குமுதம் அரசு பதில்களிலும் ,எழுத்தாளர் ராஜேந்திரகுமார் நாவல்களில் மட்டுமே அறிந்து இருக்கின்றேன் .மற்றபடி ஙே எனும் வார்த்தைக்கு உண்மையில் அர்த்தம் இருக்கிறதா என்பது தெரியாமல்தான் இதுவரை இருந்து வந்தேன் .ஆனால் கடந்த ஒரு வாரமா அவ்ளோ ஞே க்களை பார்த்து வருகிறேன் இந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் .



முதல் ஙே ஒய்வு எடுக்குறதுக்கே புது அர்த்தம் கண்டுபிடித்த செல்வி ஜெயலலிதா .எழுதி குடுக்குறத அர்த்தம் தெரியாமே அப்படி வாசித்து செல்லும் ஜெயலலிதாவுக்கு நான் கை காட்டுற ஆளுதான் இந்த தடவை ஜனாதிபதி என மிதமிஞ்சிய நம்பிக்கையில் சங்கு ஊதப்பட்டுவிடுவார் என தெரியாமல் சங்மாவுக்கு அதரவு சொல்லி முதல் ஆளாக ஙே என விழித்துக்கொண்டு இருக்கிறார் .



அப்புறம் இந்த மம்தா பானர்ஜி .இவருக்கு கொஞ்சம் மனதுக்குள் இரும்பு பெண்மணி மார்கரெட் தாட்சர் என நினைப்பு .கொஞ்சம் ஓரக்கண்ணில் பிரதமர் பதவிக்கும் ஆசை துளிர்விட்டு இருக்கும்போல .தான் இந்தியாவின் அசைக்கமுடியாத சக்தி என நிரூபிக்க ஆசை .பலிகடா அப்துல் கலாம் .கலாம் பாட்டுக்கு அறிவியல் கருத்தரங்கு என கல்லூரிகளுக்கு பயணம் செய்துகொண்டு இருந்தவரை நீங்க மறுபடியும் வந்து ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் உக்காருங்க என அழைத்துவிட்டு இன்னைக்கு ஙேஎன விழிபிதுங்கி நிக்கிறார் .



அடுத்து ஙே பா ஜ க எனும் தேசிய கட்சி மொத்தமும் .பிரதமர் பதவிக்கு யாரை முன்மொழிவது என இப்பவே சண்டை போட உல் கட்ட்சியிலே ஆளுக்கு ஒரு பிரிவாக இருக்கும்போது ஜனாதிபதி தேர்தலில் மட்டும் என்ன ஒற்றுமையா இருந்துருவாங்களா என்ன? .முதலில் சங்மா ஆதரவு கேட்டவுடன் ஜெயலலிதாவே ஆதரிக்கும்போது நாம ஆதரிக்கலாம் என நினைக்கும்போதே மம்தா அப்துல்கலாமை நிற்கவைப்போம் என அறிக்கை வருது .தேள் கொட்டுனவன் உடம்புபோல ஆகிடுச்சு பா ஜ க கட்சிக்கு .நாமதானே அப்துல்கலாமுக்கு மொத்த ஏஜன்ட் ,இந்த அம்மா என்ன இப்ப வந்து அந்த உரிமையை கையில் எடுக்குதே என இவங்களும் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து இப்ப ஙே என விழி பிதுங்கி நிக்கிறாங்க .மறுபடியும் சங்மா வுக்கு சங்கு ஊத பாஜக காவடி எடுப்பாங்க போல .



அடுத்து கலைஞர் ஆரம்பத்தில் சொன்ன பதிலோடு நின்று இருக்கலாம் .மத்தியஅரசு நிற்க வைக்கும் வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு என சொன்ன பின்னாடி எதற்கு கலாம் என்றால் கலகம் என சொல்லணும் .ஏற்கனவே தமிழ் போராளிகள் எல்லோரும் எப்படா அய்யா வாய தொறப்பாரு நாம ஸ்டேட்டஸ் போட்டு கிழிக்கலாம் கொஞ்சம் தமிழன் என நிரூபிக்கலாம் என காத்திருக்கும்போது இப்படி பேசுனா சும்மா இருப்பாங்களா? .ஒருநாள் பொழுது அவங்களுக்கு ஓடிடுச்சு .கலைஞர் தான் தப்பா சொல்லிட்டோமோ என ஙே என விழி பிதுங்கி நிக்கிறார் .



இருபது இருபது என எல்லா இளைஞன் மனதிலும் விதைத்தவருக்கு சொந்தகாரரனா அப்துல்கலாம் .ஜனாதிபதியாக இருந்தபோது சில மரபுகளை உடைத்தவர்தான் .ஆனால் சில நேரங்களில் பேசவேண்டியது இருக்கும்போது மௌனமாகவும் இருந்தவர் .இவர் மனதிலும் இன்னும் கொஞ்சம் ஜனாதிபதி பதவிமேல் ஆசை இருந்து இருக்கும்போல .மம்தா பேரை அறிவித்த உடனே மறுத்து அறிக்கை விட்டு இருப்பாரேயானால் இன்று இன்னும் எல்லோர் மனதிலும் உயர்ந்து இருப்பார் .ஆனால் தாம் நின்றால் எல்லோரும் ஆதரிக்கும் சூழ்நிலை இல்லை என்று தெரிந்தபின்னால் நான் போட்டியிடவில்லை என சொல்லி ஙே என இவரும் விழி பிதுங்கி நிற்கிறார் .

மொத்தத்தில் கேலிகூத்து நடத்துவதில் யாரும் சளைத்தவரல் இல்லை என்பதை இந்த ஜனாதிபதி தேர்தலில் நிரூபித்து எல்லோரும் ஙே என விழிபிதுங்கி நிற்கின்றனர்

Monday, 28 May 2012

நீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா?



கோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா  அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு  நான் இணையத்தில் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக நீயா நானா இருந்தது .இன்று சில நேரங்களில் கோபிநாத் நடத்தும் நிகழ்சிகள் அசிங்கத்தின் உச்சியை தொட்டு விடுகிறது .



இந்தவார தலைப்பு போலி கவுரவம் .சரியான தலைப்புத்தான் .நிகழ்வும் தலைப்பை ஒட்டி போய்க்கொண்டு இருந்தது .சிறப்பு அழைப்பாளராக பவர் ஸ்டார் என அழைக்கப்படும் டாக்டர் சீனிவாசனை அழைத்தார் .கோபிநாத் அவரிடம் என்ன கேட்டு இருக்க வேண்டும் .போலிகவுரவம் பற்றியல்லவா .கோபிநாத் அதை விட்டுவிட்டு சீனிவாசனையே அசிங்கத்தின் உச்சமாக திரும்ப திரும்ப கேள்விகள் கேட்கிறார் நீங்க ஏன் அதில் இருந்து வெளிவர மறுக்குறீங்க என .ஒரு சபைக்கு ஒருவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து அவரை கோபிநாத் அவர்களே அசிங்கபடுத்த வேண்டுமா .

பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த ஒரு கேள்விக்கும் சிரித்துக்கொண்டே பதில் சொல்லிக்கொண்டு இருந்தார் .அதே இடத்தில் வேறு ஒரு நடிகரை கேள்வி கேட்டுவிட முடியுமா கோபிநாத் .சீனிவாசன் புரிந்து பதில் அளித்தாரா இல்லை புரியாமல் பேசினார தெரியவில்லை ,இப்பொழுது யோசிக்கும்போளுது கோபிநாத் கேட்ட கேள்விக்கெல்லாம் ஜென்டில்மேனாக இருந்து இருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம் .

....................................................................................................................................

மூன்று வாரங்களுக்கு முன்பு நடந்த இரண்டு விவாதங்கள் .ஒரு விவாதத்தில் ஒரு பக்கம் கணவர்களும் ஒரு பக்கம் மனைவிகளும் .அந்த விவாதத்தில் ஒரு பெண் பேசியதை மட்டும் எழுதுகிறேன் .அவர் சொல்கிறார் அடுக்களையில் நின்ற என்னிடம் என் கணவர் என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் கோபப்பட்டு தெருவில் போகும் நாயும் சும்மா பேசும் வாயும் அடிவாங்காமல் போகாது என கணவனை பார்த்து கேட்டேன் என சொல்கிறார் .கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டையை உலகறிய பார்க்கும் ஒரு விவாதத்தில் ஒரு பெண் இப்படி சொல்கிறார் .அன்று பேசிய அத்தனை ஆண்களும் பெண்களும் அபத்தமாக பேசினர்.இதை சிரித்துக்கொண்டே கோபிநாத் வழிநடத்துகிறார் .
........................................................................................................................................

அடுத்த வார  தலைப்பு பெண்களின் உடை சுதந்திரம் பற்றி .பெண்கள் காலத்திற்கு ஏற்ப உடை நாகரீகமாக அணிவதில் தவறில்லை .ஆனால் அசிங்கமாக உடை அணிவதையோ அல்லது தவறான வாசகங்கள் பொறித்த டீ சர்ட் அணிவதை நாகரீகம் என சொல்லமுடியுமா .அந்த நிகழ்சியில் ஒரு பெண் பேசியது .உடை அணிவது என் சுதந்திரம் .நான் எப்படி வேண்டுமானாலும் உடை அணிவேன் .நீ அதை பார்ப்பதோ விமர்சனம் பண்ணுவதோ தவறு என பேசுகிறது .இந்த நிகழ்வுக்கு வந்து இருந்த குட்டி ரேவதி ,டாக்டர் ஷாலினி ,கவிதா போன்றவர்கள் அது சரி என வாதிடுகின்றனர் .நாங்கள் பாலியல் தூண்டும் விதமாக உடை அணிவோம் ,நீங்க பார்த்து பொத்திக்கொண்டு போகவேண்டும் என பேசியது அந்த பெண் .

நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்து இருந்த கல்லூரி பேராசிரியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான கல்லூரி பெண்கள் என்னிடம் சொன்னது எங்கள் உடைகள்தான் காரணம் என .அவரையே மறுத்து இந்த பெண்ணியவாதிகள் பேசினர் .பாதி நிகழ்விலேயே அவரை அனுப்பி விட்டனர் .

கோபிநாத் நினைத்துக்கொண்டு இருக்கிறார் அறிவுசார் நிகழ்சிகள் படித்துக்கொண்டு இருக்கிறேன் என .சில நேரங்களில் அசிங்கங்களையும் அரங்கேற்றிகொண்டு இருக்கிறார் என்பதே இன்று நிஜம்