Monday 30 July 2012

காதலில் காத்திருத்தல் சுகமா? தவமா?.....




காத்திருத்தல் சுகம்
என்றார்கள் காதலில்
காத்திருத்தல் கடும்
தவம் என தெரியாமலே

================


உன் புன்னகைக்கு
விலையேதும் இல்லையென்றாலும்
என் புன்னகையை
ஈடாக ஏற்றுக்கொள்வாயா?

====================


மௌனம் ஒரு 

மொழியென நீ 
பெசாதபோதேல்லாம் 
அறிந்துகொண்டேன் நான்

=================

நினைத்தேன் வந்தாய்
என பொய் சொல்லமாட்டேன்
நினைக்காத போதெல்லாம்
வந்தாய்
===========================================================


17 comments:

  1. தபூசங்கர் கவிதைகள் போல் அவ்வளவு அழகு ஒவ்வொரு கவிதையும்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சொல்றே .இருந்தாலும் அவரோடு ஒப்பிடாதப்பா .அவர் காதல் கவிதைகளுக்கு இலக்கணமே வகுத்தவர்

      Delete
  2. அழகான கவிதை நண்பரே.... வாழ்த்துக்கள்....

    நன்றி.
    (த.ம. 2)

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் உங்கள் வாழ்த்துக்களுக்கு

      Delete
  3. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு

      Delete
  4. அழகான கவிதைகள் நண்பா வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும்

      Delete
  5. ஒவ்வொரு கவிதையும் ரசிக்க வைத்தது தோழரே..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மதுமதி

      Delete
  6. சூப்பர்!! கிரேட் போயட்!

    தமிழ் கவிதைக்கு சுத்த தமிழில் கருத்து சொன்னேன் ...இப்படி தான் இங்கு பலர் சொலுறாங்க சகோ
    நல்ல கவிதை.. சகோ ..நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரியாஸ் நிஜமா நல்லா இருக்கா

      Delete
  7. என்ன சகோ காதலில் இறங்கி விட்டீர்களா? கவிதை நன்றாக உள்ளது. உங்களிடம் பல திறமைகள் ஒளிந்திருக்கின்றன போல் இருக்கிறதே...பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. எதையும் முழுதாக கற்றுக்கொள்ளாமல் சும்மா கொஞ்சம் கொஞ்சம் எதையாவது எழுதுகிறேன் அவர்கள் உண்மைகள் .உங்கள் அன்புக்கும் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

      Delete
  8. //மௌனம் ஒரு
    மொழியென நீ
    பெசாதபோதேல்லாம்///

    "பேசாத" என்று வந்து இருக்க வேண்டும். ஒரு சிறு திருத்தம்

    ReplyDelete
    Replies
    1. ஆம் பேசாத என்பதுதான் சரி .சிறு கவன குறைபாட்டில் கவனிக்கவில்லை .இனி கவனித்து எழுதுகிறேன்

      Delete
  9. கடைசி கவிதை சூப்பருண்ணே....கலக்குங்க...

    ReplyDelete