Monday 16 July 2012

பில்லா ஏன் இல்லை நல்லா....விமர்சனம் அல்ல சிறு பார்வை


இதை எழுதும் முன்பு நான் யோசித்துக்கொண்டு இருந்தேன் .படம் பார்க்கும் முன்பு முன்பு எதிர்மறையான கருத்துக்கள் எழுதுவது தவறோ என.....
ஆம் உண்மையில் தவறுதான் .எதையும் பார்ததபின்பே இனி எழுதுவது எனும் முடிவுக்கு வந்து இருக்கிறேன் .

முன்பு ஒரு சினிமா விழாவில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் பற்றி விமர்சனம் எழுந்தபோது எது நல்ல படம் எது கெட்ட படம் எனும் கேள்வி வந்தது .அதற்கு இயக்குனர் அமீர் அவர்கள் சொன்னார் நல்ல படம் கெட்ட படம் என எதுவும் கிடையாது .ஓடும் படம் ஓடாத படம் என்று சொல்லலாம் என்றார்.
ஓடும் ஒரு குதிரையின் மீதே பந்தயம் கட்டமுடியும் .அஜித் பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரை .ஜெயித்து இருக்கிறார் பில்லா இரண்டு படத்தில் .

இங்கே படம் எடுப்பவர்கள் யாரும் கலைசேவை செய்ய வரவில்லை .பணம் போட்டு பணம் எடுக்கவே வந்து இருக்காங்க .பில்லா படம் வெளியானவுடன் ப்ளாக்கரிலும் பேஸ்புக்கிலும் ஒரே அக்கபோர்.படம் சரியில்லை என...
நானும் கூட சரி இல்லை என்றே நினைத்து விட்டேன் .ஆனால் படம் பார்த்தபின்பே தெரிகிறது .படத்தில் குறைகள் இல்லை என [என்னால் படத்தில் நிறைய குறைகள் சொல்ல முடியும் .அப்படி சொல்லும் குறைகள் படத்தின் ஓட்டத்தை தடுக்கக்கூடிய வல்லமை உள்ளது இல்லை .திரைக்கதையில் ஆரம்பித்து நிறைய சொல்லலாம் .]

இவ்வளவு ஈடுபாட்டோடு அஜித் நடித்து இருப்பதற்கே ஒரு சபாஷ் போடலாம் .முதலில் தன் ரசிகனுக்காகவும் முப்பது வயதுக்கு கீழே உள்ள திரைப்பட ரசிகர்களுக்காகவும் பில்லா படம் எடுக்கப்பட்டு உள்ளது .படத்துக்கு செல்லும் ஏ கிளாஸ் ரசிகர் முதல் சி கிளாஸ் ரசிகர் வரை படம் போய் சேரனும் என்ற முடிவோடு திரைக்கதை லாஜிக் எதுவும் பார்க்கவில்லை  இயக்குனர் .

ஏற்கனவே நிறையப்பேர் கதையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பிச்சு மேய்ந்துவிட்டார்கள் .நிறையப்பேர் வசனங்களையும் எழுதிவிட்டார்கள் .அதனால அவற்றை எல்லாம் நான் பேசவில்லை .படம் பார்க்காதவர்கள் பார்க்கணும் என ஒரு சிறு மேலோட்டம் மட்டுமே இது .

படம் முழுவதும் சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நிறைய இருக்கு .பில்லா டான் ஆகுவது ஒரே நாளில் இல்லாமல் படிப்படியாக வருவதற்கு இந்த சிறிய கதாபாத்திரங்கள் உதவுகின்றன .

படத்தில் வளவளவென எங்கும் வசனம் இல்லை .மொத்த கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை பத்து பக்கத்துக்குள் அடக்கி விடலாம் .எழுத்தாளர் இரா.முருகன் ஜாஃபர் என்ற இன்னொருவருடன் சேர்ந்து வசனத்தை எழுதி உள்ளார் .

ஒளிப்பதிவு மிக அருமை .ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ..பார்க்கும் காட்சி நம்மை ஒன்ற செய்யவேண்டும் .அந்த வகையில் ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக ஒளிப்பதிவு செய்து உள்ளார் .

இசை யுவன் கலக்கல் .பின்னணி இசை ஒரு கதாநாயகன் என சொல்லலாம் .படத்தோடு நம்மையும் கூடவே அழைத்து செல்கிறது பின்னணி இசை .

எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.மிக அழகாக தொகுத்து உள்ளார் .திரைக்கதை தடுமாற்றத்தை இவரது கத்திரி சரிசெய்து உள்ளது .

சண்டைக்காட்சி ராஜசேகர் என நினைக்கிறேன் .அஜித் நடித்த சண்டை காட்சிகளில் பெஸ்ட் படம் இதுவென சொல்வேன் .பரபரவென இருக்கும் சண்டைக்காட்சி .அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் .



படத்தின் நாயகிகள் சில காட்சிகள் தலைகாட்டி செத்துபோய்விடுறாங்க .நாயகிகள் கேங்ஸ்டார் படங்களில் வருவதுபோல மிக உயரமானவர்களாக இருக்காங்க .சில வசனமும் சின்னதாய் சிரிப்பு மட்டுமே இவர்கள் நடிப்பு .

விஜய் படத்தின் தலைப்பு துப்பாக்கி என்பதாலோ என்னவோ இந்த படத்தில் அதிகமான துப்பாக்கிகள் நடிச்சு இருக்கு .ஒரு போட்டிகூட வைக்கலாம் இந்த படத்தில் எத்தனை துப்பாக்கிகள் பங்கெடுத்தன என்று .பில்லா ஒன்றில் கூலிங்கிளாஸ் என்றால் இந்த படத்தில் துப்பாக்கிகள் .

வில்லன்கள் நிறைய .சர்வதேச வில்லன்கள் ரெண்டுபேரும் உள்ளூர் வில்லன்கள் சில பெரும் நண்பர்கள் சில பெரும் படத்தில் தலையை காட்டி எல்லோரும் செத்து போயிடுறாங்க .படத்தில் மொத்தம் எத்தனைபேர் செத்தார்கள் என தனியாக ஒரு கணக்கெடுக்கலாம் .

எப்படி சொன்னாலும் அஜித் இந்த படத்தில் மாஸ்தான் .தன் ரசிகர்களின் நாடிபிடித்து நடித்து உள்ளார் .சிறு சிறு கண் அசைவிலும் உடல் அசைவிலும் அற்ப்புதமாக நடித்து உள்ளார் .படத்தில் போரடிக்குது என எதுவும் இல்லை .குறைகள் நிறைய இருந்தும் உங்களை யோசிக்கவிடாமல் சொல்லி அடிச்சு இருக்காங்க .

கடைசியாக ஒன்று நீங்க உலகப்படம் பார்ப்பவர் என்றால் படம் பார்க்க போகவேண்டாம் .இரண்டுமணிநேர பொழுது போகணும் என நினைத்தால் கண்டிப்பா இந்த படம் பாருங்க .நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்

24 comments:

  1. படம் வெளியான இரண்டு நாளுக்கு பிறகுதான், நல்ல விமர்சனங்கள் வர ஆரம்பித்து உள்ளன. நன்றி ஃபாருக் அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்களுக்கு என் தளத்திற்கு வருகை தந்தமைக்கு .படம் பார்க்கும் முன்பு நானும் மற்றவர்கள் பதிவு படம் சரி இல்லை என நினைத்து இருந்தேன் .படம் பார்த்த பின்பே தெரிகிறது படம் மாஸ் என

      Delete
  2. Thanks for the good review!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்கள் வருகைக்கு

      Delete
  3. நல்ல அலசல்...
    பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம. 3)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபாலன்

      Delete
  4. கடந்த மூன்று நாட்களாக வந்ததை விட இது மாறுபட்ட விமர்சனமா இருக்கே....இப்ப பார்க்கலாமா வேண்டாமான்னு ஒரே குழப்பமா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. படத்தை உடனே போய் பாருப்பா .உன் விமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்

      Delete
  5. ஒ அப்படியா அப்பா பார்த்துட வேண்டியது தான்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக பாரு ரியாஸ் .

      Delete
  6. Thanks for Good review. Appreciate the same

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே

      Delete
  7. //இரண்டுமணிநேர பொழுது போகணும் என நினைத்தால் கண்டிப்பா இந்த படம் பாருங்க .நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்//
    நல்ல விமர்சனமாக உள்ளது. படம் பார்ப்பது என்பது பொழுது போக்கிற்காகத்தானே....அறிவு வளர்வதற்காக அல்ல.


    வித்தியாசமான விமர்சனம் தந்து உண்மையை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் அவர்கள் உண்மைகள் .

      Delete
  8. அஜித்குமார் மிகச்சிறந்த மனிதர். கடினமான உழைப்பாளி. நிறைய ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருபவர். பிரியாணியை தன் கையால் சமைத்து லெக்பீஸோடு ஏழைகளுக்கு அர்ப்பணிக்கும் தயாள குணங்கொண்டவர். சொந்தக்காலில் சுயமாக நின்று கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவர். விபத்தில் அடிபட்டு உடல்நலங்குன்றி தேறிவந்து நடித்தவர். தோல்விகள் அவரை ஒன்றுமே செய்யாது. ப்பீனிக்ஸ் பறவைபோல தோல்விகளிலிருந்து குபுக் என குதித்து வந்தவர். உண்மை உலகில் நல்ல நல்லவராக வாழ்வதற்காகவே சினிமாவில் கெட்ட கெட்டவராக நடிப்பவர். இன்றைக்கு தமிழகத்தில் அப்துல்கலாமுக்கு பிறகு அஜித்குமார்தான் மிக மிக நல்ல நல்ல நல்லவர். அவரைவிட்டால் தமிழ்நாட்டிலேயே ஏன் இந்த இந்தியாவிலேயே வேறு நல்ல நல்லவர்கள் இருப்பதாக தெரியவில்லை. இப்படி தமிழகமே போற்றும் ஃபீல்குட் புராஃபைல் கொண்டவர் அஜித்குமார். அவரை மதிக்கலாம். பாராட்டலாம். விழா எடுக்கலாம். பீச்சாண்டை சிலைகூட வைக்கலாம்.
    ஆனால் அதற்கொசரம் அவருடைய படம் கொடூர குப்பையாய் இருந்தாலும் அதை கொண்டாடும் அளவுக்கெல்லாம் எனக்கு பெரிய மனசு கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. அன்பு உங்களுக்கு என்ன பிரச்சினை இப்போ .அஜித்தா இல்லை அவரது படமா .இந்த விமர்சனத்தை எழுதி இருக்கும் நான் யார் ரசிகன் தெரியுமா .ரஜினி ரசிகன் .அதற்க்கு அடுத்து விஜய் ரசிகன் .நான் அஜித் ரசிகன் கிடையாது .அதற்காக இவ்வளவு உழைப்பை சிந்தி எந்த அளவும் பொழுதுபோக்குக்கு குறையாத அளவில் படமாக்கப்பட்டு இருக்கும் பில்லாவை பாராட்டாமல் இருக்கணும் என சொல்றீங்களா .உங்கள் ரசனை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் .படம் பார்ப்பதற்கு முன்பு இதே பில்லா படத்தை தாறுமாறா கிண்டல் செய்தவன் நான் .என் இந்த பதிவுக்கு முந்தய பதிவு ஒன்று இருக்கு படித்து பாருங்கள் .அப்படி எழுதிய நான்தான் இங்கே பில்லா நன்றாக இருக்கு என எழுதி இருக்கேன் .திரை அரங்கில் போய் பாருங்க படத்தை .அப்படியும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் ரசனையில் கோளாறு என்றுதான் சொல்லவேண்டும்

      Delete
  9. Billa 2 padatha net la ye parkka mudiyala.. Eppadi boss theatre la poi pathuttu apdi ipdi nnu uttalakkidi review pannirukkinga... Billa 2 collection report parkkum pothu Operation Success but patient died solvankale athu than gnabgam varuthu..Billa 2 stylish mokkai.. Oru goat oru cooling glass pottu nadicha sorry sorry nadanthaa Perya James Bond nnu ninaippo... Padathula onnum illatha vethu vettu... Innum rendu naalukku appuram theatre la kkakka otturathukkuda aal irukkathu...But unka confidence enakku pidichurukku... Vandi vandiya Ajith Pathi eluthinalaum padathula sarakku illana Flop than... Intha oru pointa unka thala kitta thalayila kuttu sollunka boss... Hmmkum.. Ivaru ethukkum asara mathiri theriyala...adutha padathulayum Vishnuvarthanoda goat cooling glass oda nadakka kilambittaru... Great Thala.. next flop kku naan ready neenka readya....

    ReplyDelete
    Replies
    1. அன்பு என் பேஸ்புக் பக்கம் போய் பாருங்க .பில்லா படம் பார்ப்பதற்கு முன்பு எத்தனை பதிவு பில்லா படத்தை கேவலமாக எழுதி இருக்கேன் என்று .படம் நல்லா இருக்கும்போது உங்கள மாதிரி எல்லாம் எனக்கு கீழ்த்தரமாக எழுத தெரியாது .அடிப்படையில் நான் ரஜினிக்கு பின்பு விஜய் ரசிகன் .என்னை பேஸ்புக்கில் அறிந்தவர்களுக்கு தெரியும் .வெள்ளக்காரன் கொட்டு சூட்டு போட்டுட்டு வந்து துப்பாக்கியால் முன்னூறு பேரை சுட்டுக்கொன்றால் அது உங்களுக்கு காலிவூட் படம் .அதையே தமிழில் எடுத்தால் நீங்க ஒத்துக்கொள்ள மாட்டீங்க .எத்தனை கேங் ஸ்டார் காலிவூட் பார்த்து இருக்கீங்க நீங்க .இதைவிட மொக்கை படம் எல்லாம் காலிவூட் ல இருக்கு .சரி நீங்கதான் சொல்லுங்க படம் எப்படி எடுக்கலாம்னு

      Delete
    2. Mr. Annbhu first you have to learn difference b/w goat & Coat.

      Delete
  10. oru filma pathi tharakuraiva pesurathuku munadi atha nalla go through panni parunga anbu, padam 2&1/2 hrs jollya pogutha athuthan thevai.thavai ilama padatha pathi ethirmarai ya pesathinga, ivlo pesura neenga pona yearla sirantha padam ethunu first sollunga parpom.

    ReplyDelete
  11. Mr. guna and farook , really am appreciating you, because even-though your being others fan you have given the correct criticism on billa 2. thanks

    ReplyDelete
  12. ungal vimarchanam arumai padam nalla erukku

    ReplyDelete