இதை எழுதும் முன்பு நான் யோசித்துக்கொண்டு இருந்தேன் .படம் பார்க்கும் முன்பு முன்பு எதிர்மறையான கருத்துக்கள் எழுதுவது தவறோ என.....
ஆம் உண்மையில் தவறுதான் .எதையும் பார்ததபின்பே இனி எழுதுவது எனும் முடிவுக்கு வந்து இருக்கிறேன் .
முன்பு ஒரு சினிமா விழாவில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் பற்றி விமர்சனம் எழுந்தபோது எது நல்ல படம் எது கெட்ட படம் எனும் கேள்வி வந்தது .அதற்கு இயக்குனர் அமீர் அவர்கள் சொன்னார்
நல்ல படம் கெட்ட படம் என எதுவும் கிடையாது .ஓடும் படம் ஓடாத படம் என்று சொல்லலாம் என்றார்.
ஓடும் ஒரு குதிரையின் மீதே பந்தயம் கட்டமுடியும் .அஜித் பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரை .ஜெயித்து இருக்கிறார் பில்லா இரண்டு படத்தில் .
இங்கே படம் எடுப்பவர்கள் யாரும் கலைசேவை செய்ய வரவில்லை .பணம் போட்டு பணம் எடுக்கவே வந்து இருக்காங்க .பில்லா படம் வெளியானவுடன் ப்ளாக்கரிலும் பேஸ்புக்கிலும் ஒரே அக்கபோர்.படம் சரியில்லை என...
நானும் கூட சரி இல்லை என்றே நினைத்து விட்டேன் .ஆனால் படம் பார்த்தபின்பே தெரிகிறது .படத்தில் குறைகள் இல்லை என [என்னால் படத்தில் நிறைய குறைகள் சொல்ல முடியும் .அப்படி சொல்லும் குறைகள் படத்தின் ஓட்டத்தை தடுக்கக்கூடிய வல்லமை உள்ளது இல்லை .திரைக்கதையில் ஆரம்பித்து நிறைய சொல்லலாம் .]
இவ்வளவு ஈடுபாட்டோடு அஜித் நடித்து இருப்பதற்கே ஒரு சபாஷ் போடலாம் .முதலில் தன் ரசிகனுக்காகவும் முப்பது வயதுக்கு கீழே உள்ள திரைப்பட ரசிகர்களுக்காகவும் பில்லா படம் எடுக்கப்பட்டு உள்ளது .படத்துக்கு செல்லும் ஏ கிளாஸ் ரசிகர் முதல் சி கிளாஸ் ரசிகர் வரை படம் போய் சேரனும் என்ற முடிவோடு திரைக்கதை லாஜிக் எதுவும் பார்க்கவில்லை இயக்குனர் .
ஏற்கனவே நிறையப்பேர் கதையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பிச்சு மேய்ந்துவிட்டார்கள் .நிறையப்பேர் வசனங்களையும் எழுதிவிட்டார்கள் .அதனால அவற்றை எல்லாம் நான் பேசவில்லை .படம் பார்க்காதவர்கள் பார்க்கணும் என ஒரு சிறு மேலோட்டம் மட்டுமே இது .
படம் முழுவதும் சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நிறைய இருக்கு .பில்லா டான் ஆகுவது ஒரே நாளில் இல்லாமல் படிப்படியாக வருவதற்கு இந்த சிறிய கதாபாத்திரங்கள் உதவுகின்றன .
படத்தில் வளவளவென எங்கும் வசனம் இல்லை .மொத்த கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை பத்து பக்கத்துக்குள் அடக்கி விடலாம் .எழுத்தாளர் இரா.முருகன் ஜாஃபர் என்ற இன்னொருவருடன் சேர்ந்து வசனத்தை எழுதி உள்ளார் .
ஒளிப்பதிவு மிக அருமை .ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ..பார்க்கும் காட்சி நம்மை ஒன்ற செய்யவேண்டும் .அந்த வகையில் ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக ஒளிப்பதிவு செய்து உள்ளார் .
இசை யுவன் கலக்கல் .பின்னணி இசை ஒரு கதாநாயகன் என சொல்லலாம் .படத்தோடு நம்மையும் கூடவே அழைத்து செல்கிறது பின்னணி இசை .
எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.மிக அழகாக தொகுத்து உள்ளார் .திரைக்கதை தடுமாற்றத்தை இவரது கத்திரி சரிசெய்து உள்ளது .
சண்டைக்காட்சி ராஜசேகர் என நினைக்கிறேன் .அஜித் நடித்த சண்டை காட்சிகளில் பெஸ்ட் படம் இதுவென சொல்வேன் .பரபரவென இருக்கும் சண்டைக்காட்சி .அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் .
படத்தின் நாயகிகள் சில காட்சிகள் தலைகாட்டி செத்துபோய்விடுறாங்க .நாயகிகள் கேங்ஸ்டார் படங்களில் வருவதுபோல மிக உயரமானவர்களாக இருக்காங்க .சில வசனமும் சின்னதாய் சிரிப்பு மட்டுமே இவர்கள் நடிப்பு .
விஜய் படத்தின் தலைப்பு துப்பாக்கி என்பதாலோ என்னவோ இந்த படத்தில் அதிகமான துப்பாக்கிகள் நடிச்சு இருக்கு .ஒரு போட்டிகூட வைக்கலாம் இந்த படத்தில் எத்தனை துப்பாக்கிகள் பங்கெடுத்தன என்று .பில்லா ஒன்றில் கூலிங்கிளாஸ் என்றால் இந்த படத்தில் துப்பாக்கிகள் .
வில்லன்கள் நிறைய .சர்வதேச வில்லன்கள் ரெண்டுபேரும் உள்ளூர் வில்லன்கள் சில பெரும் நண்பர்கள் சில பெரும் படத்தில் தலையை காட்டி எல்லோரும் செத்து போயிடுறாங்க .படத்தில் மொத்தம் எத்தனைபேர் செத்தார்கள் என தனியாக ஒரு கணக்கெடுக்கலாம் .
எப்படி சொன்னாலும் அஜித் இந்த படத்தில்
மாஸ்தான் .தன் ரசிகர்களின் நாடிபிடித்து நடித்து உள்ளார் .சிறு சிறு கண் அசைவிலும் உடல் அசைவிலும் அற்ப்புதமாக நடித்து உள்ளார் .படத்தில் போரடிக்குது என எதுவும் இல்லை .குறைகள் நிறைய இருந்தும் உங்களை யோசிக்கவிடாமல் சொல்லி அடிச்சு இருக்காங்க .
கடைசியாக ஒன்று நீங்க உலகப்படம் பார்ப்பவர் என்றால் படம் பார்க்க போகவேண்டாம் .இரண்டுமணிநேர பொழுது போகணும் என நினைத்தால் கண்டிப்பா இந்த படம் பாருங்க .நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்