Friday 8 June 2012

ஆனந்தவிகடன் எனும் ஆலமரத்தில் இந்த வாரம் நானும்


லிவைஸ் ஜீன்சும் டெனிம் டீசர்ட்டும் ரேபான் கூலிங்கிளாஸ் போட்டு மெக்டொனால்ட் பர்கர் அல்லது கென்டக்கி சிக்கன் சாப்பிட பழகி இருந்தாலும் ,பக்கத்தில் நாடுகளில் போய் சுற்றித்திரிந்து வந்து இருந்தாலும் அடிக்கடி ஆற்றங்கரையின் சுவற்றில் கைலி கட்டி உட்கார்ந்து கதைகள் பேசிய அந்த கிராமத்தான் எட்டிபார்ப்பதை ஏனோ தவிர்க்கமுடிவதில்லை .

நேற்றையதினம் அவ்வாறே அமைந்தது எனக்கு ஒரு தொலைபேசியின் வழியாக வந்த செய்தியால் .நன்றாக உறங்கிய என்னை எழுப்பி உனக்கு ஒரு மகிழ்வான செய்தி என சொன்னான் நண்பன் .சொல்லிய செய்தியை கொஞ்சம் மனம் நம்ப மறுத்தது .ஏன் எனில் வெறும் பதினாறு பதிவே இதுவரை ப்ளாக்கில் எழுதி இருக்கிறேன் .நான் சென்ற மாதத்தில் இருந்து ப்ளாக்கில் எண்ணங்களுக்குள் நான் என்ற தலைப்பில் இதுவரை பதினாறு பதிவுகள் தான் எழுதி இருக்கிறேன் .அப்படி இருக்கும்போது உன் ப்ளாக் ஆனந்தவிகடன் துணை இதழான என் விகடன் திருச்சி பதிப்பில் வெளியாகி இருக்கு என சொன்னால் மனம் நம்புமா .மறுபடியும் நண்பன் சொன்னான் நெட்டில் செக் பண்ணி பாரு என .அவ்வாறே பார்த்தேன் .ஆம் ஆனந்தவிகடனில் என் பதிவு .








துள்ளிகுதிக்காத குறை ஒன்றுதான் என்னிடம் .நீண்டநாளாக வெளிவராத கிராமத்தான் நேற்று வெளியே குதித்துவிட்டான் . ஆனந்தவிகடனில் என் பதிவு வந்து இருக்கு என முதலில் பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன் .வரிசையாக வாழ்த்துக்கள் என நண்பர்களின் பின்னூட்டங்கள் .பின்பு ஏதோ உலகம் ஒரு நாள் என் கையில் என்பதுபோல என் நண்பர்களுக்கும் என் குடும்பத்தினருக்கும் போன் செய்து விசயத்தை சொன்னேன் .எல்லோரும் வாழ்த்தினர் .

இன்று காலையில்தான் என் மனைவியிடமும் மகளிடமும் பேசமுடிந்தது.மனைவி எப்பொழுதும்போல சந்தோசம் என சொன்னாள்.ஆனால் என் மகள் என்னிடம் பேசியதும்தான் தான் குழந்தையின் சந்தோசம் எப்படி என்பது புரிந்தது .என் மகள் என்னிடம் அத்தா [அப்பா ]நான் இந்த புத்தகத்தை என் பள்ளிகூடத்தில் என் நண்பர்களிடம் காட்டவா என குதுகலத்துடன் கேக்கும்போது ஒரு தந்தையாக சொல்லமுடியாத சந்தோசம் அடைந்தேன் .என் மனமும் குழந்தையோடு குழந்தையாக ஆனது .

நாள் ஒன்றுக்கு நான்கு தடவை போனால் போகுது என்று பேருந்து எட்டிப்பார்க்கும் ஊரில் பிறந்தவன் நான் .இன்று பொருளாதார வாழ்விற்காக அயல்தேசதில் இருந்துகொண்டு கணினிக்குள் தொலைந்துபோன வாழ்வியல் மிச்சங்களை எழுத்துக்களாக எழுத ஆரம்பித்தேன் ..அந்த எழுத்துக்கள் இன்று ஆனந்தவிகடனில் வெளியானது கண்டு மனம் அடைந்த சந்தோஷத்தில் இந்த பதிவு .

இந்த மகிழ்வான தருணத்தில் நான் ஒருவருக்கு நன்றி சொல்லாமல் விட்டால் நன்றாக இருக்காது .அவர் என் நண்பன் ரஹீம் கஸாலி.பேஸ்புக்கில் எழுதும் எழுத்துக்களை பார்த்து நீ இங்கே எழுதியது எதையும் உன்னாலேயே மறுபடியும் படிக்க முடியாது .நீ ப்ளாக்கில் வந்து எழுது என சொல்லி ப்ளாக்கை டிசைன் செய்து கொடுத்து இன்று ஆனந்தவிகடனில் வரும் அளவுக்கு கொண்டுவந்து இருக்கின்றார் .நன்றி ரஹீம் கஸாலி .

என் பதிவுக்கு வருகைதந்து படித்துக்கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி .உங்கள் ஆதரவில் இன்னும் எழுதுவேன் .

மறுபடியும் ஆனந்தவிகடனுக்கு என் நன்றி .

27 comments:

  1. Replies
    1. கஸாலி எனக்கு கிடைக்கும் பாராட்டு எல்லாம் உன்னையே சேரவேண்டும் .ஒன்றும் தெரியாமல் இருந்தவனை ப்ளாக் வடிவமைத்து கொடுத்து எழுதத்தூண்டியது நீதானே .உன் வாழ்த்துக்கு என் இனிய நன்றி

      Delete
  2. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் நண்பரே..!! அண்ணன் ரஹீம் கஸாலிக்கும் பாராட்டுகள்..!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் வருகைக்கும் என் இனிய நன்றி பிரவின்குமார்

      Delete
  3. மச்சான்....

    கலக்கல்..வாழ்த்துக்கள்... குறுகிய காலத்தில் ஆனந்த விகடனில் வந்த பெருமை உங்களையே சாரும்..
    நான் ரெண்டு வருசமா இருக்கேன்...இன்னும் வரல...அவ்வ்வ்வ்வ்... நீங்க கலக்குங்க மச்சான்..

    ReplyDelete
    Replies
    1. மச்சான் உன் பதிவும் சீக்கிரமே வரும் .வாழ்த்துக்கு நன்றி மச்சான்

      Delete
  4. ஷண்முகம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. சிறந்த பதிவுகளையும் பதிவர்களையும் ஆனந்தவிகடன் அடையாளம் காட்டத் தவறியதில்லை......

    வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.....

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ரஹீம் கஸாலியைப் பற்றி நான் எதயும் சொல்ல விரும்பவில்லை ......
    இப்போல்லாம் எல்லாத்துக்கும் திட்டுறான்.........

    ReplyDelete
    Replies
    1. கஸாலி அப்படித்தான் .நாம சொல்றதை சொல்லிப்புடனும் ராஜா

      Delete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகையும் வாழ்த்தும் என்னை மிக்க மகிழ்வு அடைய வைக்கிறது சுவனப் பிரியன்

      Delete
  9. Replies
    1. இந்த புதியவனின் தளத்திற்கு வந்து என்னை வாழ்த்தியதர்க்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

      Delete
    2. இந்த புதியவனின் தளத்திற்கு வந்து என்னை வாழ்த்தியதர்க்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

      //


      கிர்ர்ர்ர்ர்ர்.. நான் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? :))

      Delete
  10. பதிவுலக 'அரசியல் சாணக்யர்' கஸாலி சொல்லி கேள்விப்பட்டேன். மனமார்ந்த வாழ்த்துகள்.

    இப்படிக்கு,
    சிராஜுதீன் சிஷ்யன் சிவகுமார்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி சிவகுமார்

      Delete
  11. mikka magilchi nanbarey ..vaalthukkal

    ReplyDelete
    Replies
    1. அன்பிற்கினிய வாழ்த்திற்கு என் இனிய நன்றி நண்பரே

      Delete
  12. வாழ்த்துக்கள் ஃபாரூக்...
    தங்களுடன் தொடர்பில் இணைந்து கொண்டேன்.
    தங்கள் திறமை(யான எழுத்து)க்கு ஓர் அங்கீகாரம்தான்
    ஆ.வி. எ.வி. வலையோசை!
    தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நிஜாமுடின் .உங்கள் வருகைக்கும் அன்புக்கும்

      Delete
  13. மிகக் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியை எட்டிப்பிடித்தமைக்கு வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகள் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. enrenrum16 உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  14. ANNA ENNAI MARATHUTEENGALAE ....VAALTHUKKAL CONGRATS

    ReplyDelete