Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts

Friday, 8 June 2012

ஆனந்தவிகடன் எனும் ஆலமரத்தில் இந்த வாரம் நானும்


லிவைஸ் ஜீன்சும் டெனிம் டீசர்ட்டும் ரேபான் கூலிங்கிளாஸ் போட்டு மெக்டொனால்ட் பர்கர் அல்லது கென்டக்கி சிக்கன் சாப்பிட பழகி இருந்தாலும் ,பக்கத்தில் நாடுகளில் போய் சுற்றித்திரிந்து வந்து இருந்தாலும் அடிக்கடி ஆற்றங்கரையின் சுவற்றில் கைலி கட்டி உட்கார்ந்து கதைகள் பேசிய அந்த கிராமத்தான் எட்டிபார்ப்பதை ஏனோ தவிர்க்கமுடிவதில்லை .

நேற்றையதினம் அவ்வாறே அமைந்தது எனக்கு ஒரு தொலைபேசியின் வழியாக வந்த செய்தியால் .நன்றாக உறங்கிய என்னை எழுப்பி உனக்கு ஒரு மகிழ்வான செய்தி என சொன்னான் நண்பன் .சொல்லிய செய்தியை கொஞ்சம் மனம் நம்ப மறுத்தது .ஏன் எனில் வெறும் பதினாறு பதிவே இதுவரை ப்ளாக்கில் எழுதி இருக்கிறேன் .நான் சென்ற மாதத்தில் இருந்து ப்ளாக்கில் எண்ணங்களுக்குள் நான் என்ற தலைப்பில் இதுவரை பதினாறு பதிவுகள் தான் எழுதி இருக்கிறேன் .அப்படி இருக்கும்போது உன் ப்ளாக் ஆனந்தவிகடன் துணை இதழான என் விகடன் திருச்சி பதிப்பில் வெளியாகி இருக்கு என சொன்னால் மனம் நம்புமா .மறுபடியும் நண்பன் சொன்னான் நெட்டில் செக் பண்ணி பாரு என .அவ்வாறே பார்த்தேன் .ஆம் ஆனந்தவிகடனில் என் பதிவு .








துள்ளிகுதிக்காத குறை ஒன்றுதான் என்னிடம் .நீண்டநாளாக வெளிவராத கிராமத்தான் நேற்று வெளியே குதித்துவிட்டான் . ஆனந்தவிகடனில் என் பதிவு வந்து இருக்கு என முதலில் பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன் .வரிசையாக வாழ்த்துக்கள் என நண்பர்களின் பின்னூட்டங்கள் .பின்பு ஏதோ உலகம் ஒரு நாள் என் கையில் என்பதுபோல என் நண்பர்களுக்கும் என் குடும்பத்தினருக்கும் போன் செய்து விசயத்தை சொன்னேன் .எல்லோரும் வாழ்த்தினர் .

இன்று காலையில்தான் என் மனைவியிடமும் மகளிடமும் பேசமுடிந்தது.மனைவி எப்பொழுதும்போல சந்தோசம் என சொன்னாள்.ஆனால் என் மகள் என்னிடம் பேசியதும்தான் தான் குழந்தையின் சந்தோசம் எப்படி என்பது புரிந்தது .என் மகள் என்னிடம் அத்தா [அப்பா ]நான் இந்த புத்தகத்தை என் பள்ளிகூடத்தில் என் நண்பர்களிடம் காட்டவா என குதுகலத்துடன் கேக்கும்போது ஒரு தந்தையாக சொல்லமுடியாத சந்தோசம் அடைந்தேன் .என் மனமும் குழந்தையோடு குழந்தையாக ஆனது .

நாள் ஒன்றுக்கு நான்கு தடவை போனால் போகுது என்று பேருந்து எட்டிப்பார்க்கும் ஊரில் பிறந்தவன் நான் .இன்று பொருளாதார வாழ்விற்காக அயல்தேசதில் இருந்துகொண்டு கணினிக்குள் தொலைந்துபோன வாழ்வியல் மிச்சங்களை எழுத்துக்களாக எழுத ஆரம்பித்தேன் ..அந்த எழுத்துக்கள் இன்று ஆனந்தவிகடனில் வெளியானது கண்டு மனம் அடைந்த சந்தோஷத்தில் இந்த பதிவு .

இந்த மகிழ்வான தருணத்தில் நான் ஒருவருக்கு நன்றி சொல்லாமல் விட்டால் நன்றாக இருக்காது .அவர் என் நண்பன் ரஹீம் கஸாலி.பேஸ்புக்கில் எழுதும் எழுத்துக்களை பார்த்து நீ இங்கே எழுதியது எதையும் உன்னாலேயே மறுபடியும் படிக்க முடியாது .நீ ப்ளாக்கில் வந்து எழுது என சொல்லி ப்ளாக்கை டிசைன் செய்து கொடுத்து இன்று ஆனந்தவிகடனில் வரும் அளவுக்கு கொண்டுவந்து இருக்கின்றார் .நன்றி ரஹீம் கஸாலி .

என் பதிவுக்கு வருகைதந்து படித்துக்கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி .உங்கள் ஆதரவில் இன்னும் எழுதுவேன் .

மறுபடியும் ஆனந்தவிகடனுக்கு என் நன்றி .