பாருக் முகம்மது
3 hrs ·
More options
மீகாமன்.
இரவு மிட்நைட் காட்சி கயல் படம் என நினைத்து திரைஅரங்கம் சென்றோம்.அங்கே கயல் ஆறுமணி காட்சி இப்போ மீகாமன் என சொன்னாங்க.படம் வெளியானது தெரியாமல் போயிருந்தோம்.ஆர்யா நடித்து இருக்கவும் சரி பார்ப்போம் என பார்த்தோம்.
படத்தின் கதை அரசாங்கத்திற்க்கு நீண்டவருடமாக தலைவியாக இருக்கும்
போதைமருந்து கடத்தல் தலைவனை பிடிப்பது.அவன் பெயர் மட்டுமே தெரியும் அவன் யார் என தெரியாது.
இந்த கும்பலை பிடிக்க இரண்டு அன்டர்கவர் போலிஸ் ஆபிஸர்கள் இரண்டு போதை கடத்தும் கும்பலில் நாண்கு வருடமாக தனிதனியாக வேலை செய்கின்றார்கள்.
அந்த அன்டர்கவர் போலீஸ் ஆபிஸர்கள் அந்த போதைபொருள் கடத்தல் தலைவனை பிடித்தார்களா என்பது கதை.கதையை படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.
நிறைய ஆங்கில படங்களில் பார்த்த கதைதான்.ஆனாலும் தமிழில் ஆங்கில படத்துக்கு நிகராக பார்க்கும்போது படம் நன்றாக இருக்கின்றது.
யாரேனும் படம் பார்த்துட்டு இது அந்த படத்தின் காப்பி இது இந்த படத்தின் காப்பி என சொல்லக்கூடும்.
இருக்கட்டுமே .தமிழில் ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு இருக்கே அது போதும்.
ஆர்யா நல்ல மெனக்கெடலுடம் நடித்து இருக்கின்றார்.அந்த போலிஸ் கதாபாத்திரத்திற்க்கு மிக பொருத்தமாக இருக்கின்றார்.நல்ல நடிப்பும்கூட.
ஆக்சனில் அனல் பறக்க வைக்கின்றார்.
ஆரம்பம் படத்தைவிட இந்த படம் ஆர்யாவுக்கு பெஸ்ட்.
ஹன்சிகா எல்லா கதாநாயகியையும் போலத்தான் என்றாலும் மெல்லிய நகைச்சுவை வரும் அளவுக்கு நடித்து இருக்கின்றார்.அழகாய் இருக்கின்றார் கொஞ்சம் போதையும் ஏற்றுகிரார் ஒரு பாடல் காட்சியில்.
வில்லன் தன் முகம் வெளியே தெரியாத அளவுக்கு இருக்கின்றார் என சொல்லப்படுகின்றது.கடைசி காட்சியில் ஆர்யாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வில்லனுக்கும் கொடுத்து இருக்கவேண்டும்.ஆனால் மிக சாதரனமாக மாட்டிக்கொள்கிறார்.
ஏகப்பட்ட நடிகர்கள் ஒவ்வொரு காட்சியில் வந்தாலும் நிறைவாய் செய்து இருக்கின்றார்கள்.
ஒளிப்பதிவு மிரட்டல்.மிக நேர்த்தியான ஒளிப்பதிவு.
இசை .பின்னனி இசை ஈர்த்த அளவு ஏணோ பாடலில் ஈர்க்கவில்லை.
சண்டைக்காட்சி அதிரடி.ஆங்கில படத்தில் மட்டும்தான் அப்படி அமைக்க முடியுமா நாங்களும் அமைப்போம் என மிரட்டி இருக்காங்க.
மகிழ்திருமேனியின் தடைற தாக்க படம் ஏற்க்கனவே பார்த்து இருக்கின்றேன்.அதுவே அதகளம் எனும்போது இந்த படத்துக்கு சொல்லவே தேவை இல்லை.நன்றாக இயக்கி இருக்கின்றார்.
மொத்தத்தில் மீகாமன்
ஆக்சன் பக்கா.
நல்ல பொழுது போக்கு படம்.
Tweet |
No comments:
Post a Comment