மதியம் ரெண்டுமணிக்கு பின்பே பேஸ்புக்கில் பிரியாணி படம் வெளியானதே தெரியும் .இன்னைக்கு வெள்ளிக்கிழமை என்பதால் எப்போதும்போல பிரியாணி சாப்டுவிட்டு பேஸ்புக் பார்த்தபோதுதான் திரை அரங்கிலும் கண்ணுக்கும் காதுக்கும் பிரியாணி விருந்து இருக்கு என்பது தெரிந்து அவசர அவசரமா மூணுமணி காட்சிக்கு ஓடினேன் .டிக்கெட்டும் கிடைச்சு படமும் பார்த்து இதோ அதைப்பற்றி என் மடிக்கணினி மூலம் உங்களிடம் சொல்ல வரேன் .
ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு பாணியில் படத்தை இயக்குவார்கள் .வெங்கட் பிரபுவோ எதைப்பற்றியும் கவலை இல்லாமல் ,திரைக்கதையில் மெனக்கெடாமல் ,ஒரே ஆர்டரில் படம் எடுக்காமல் போகிற போக்கில் கதை சொல்லி வெற்றி ஏற்றதுபோல இந்த படத்திலும் வெற்றி பெற்று இருக்கிறார் .
கதை என இடைவேளை வரை எதுவுமே இல்லை .படம் பாட்டுக்கு ஓடிகிட்டு இருக்கு .திரை அரங்கில் இடைவேளை சிரிச்சுகிட்டே இருந்தாங்க .நானும் சிரிச்சுகிட்டே இருந்தேன் .கதைக்குள் போகாமல் முதல்பகுதியை சிரிப்பாகவே நகர்த்தி விட்டார் .
கதை இடைவேளைக்கு பத்து நிமிடம் முன்பு ஆரம்பிக்கிறது .ஆம்புருக்கு கடை திறப்பு விழாவிற்கு வந்து விட்டு இரவு பார்ட்டியில் மது அருந்தி திரும்பும் வழியில் கார்த்திக் பிரியாணி சாப்பிடவேண்டும் என்கிறார் .எப்பொழுது மது அருந்தினாலும் அதற்க்கு சைட் டிஷ் பிரியாணிதான் சாப்டுவேன் என பிரியாணிக்கு பேர் போன ஆம்பூரில் பிரியாணி கடை தேடி அலைந்து ஒரு கடையில் சாப்பிடுகிறார்கள் .அப்ப அங்கே அழகிய இளம்பெண் ஒருவரும் வந்து சாப்பிட்டுவிட்டு செல்கிறார் .அவரை பின்தொடர்ந்து கார்த்திக்கும் ,பிரேம்ஜியும் செல்ல பின்பு அந்த பெண்ணோடு தங்கி மது அருந்துகிறார்கள் .காலையில் அதிகப்படியான போதையில் கார்த்திக் மட்டும் காரில் இருக்க பின்பு இரவு தங்கிய ஹோட்டலுக்கு பிரேம்ஜியை தேடி போக அங்கெ ஒரு துப்பாக்கியும் ரத்த கரைகளும் இருக்க அங்கே இருந்து இருவரும் தப்பிக்க தங்கள் காரிலேயே நாசரின் பிணம் இருக்க அந்த கொலைப்பலியில் இருந்து எப்படி தப்பிக்கிறாங்க என அதிரிபுதிரியாக சொல்லி இருக்காங்க .
படத்தின் கடைசிவரை யார் கொலையாளி என்பது தெரியாமல் படத்தை நகர்த்தி இருக்கின்றார் வெங்கட் பிரபு .கொலையாளி யார் என்பது தெரியாமல் என்ன படத்தை முடிக்கபோறாங்க என நினைக்கும்போது கடைசிக்காட்சியில் முடிச்சு அவிழும்போது அட இவரா வில்லன் என தோன்றுகிறது .இதே போல நிறைய படங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழுக்கு வித்தியாசமா இருக்கு .இன்னும் ரெண்டுநாளில் இது இந்த படத்தின் அப்பட்டமான காப்பி என யாரேனும் சொல்லக்கூடும் .அதையெல்லாம் கண்டுக்காம படம் பாருங்க போரடிக்காமல் போகும் .
கார்த்திக்கு இந்த படமும் ஓடாமல் இருந்து இருந்தால் அப்புறம் எல்லா படமும் பனால்தான் .தப்பித்து விட்டார் .சண்டை காட்சிகளில் நன்றாக உழைத்து இருக்கின்றார் .நன்றாக சண்டை அமைக்கபட்டு இருக்கு .கொஞ்சம் நடிக்கவும் செய்து இருக்கின்றார் .
ஹன்சிகாவுக்கு கதாநாயகி அதிகபட்சமா என்ன செய்வாரோ அதுவே இப்படத்திலும் .
பிரேம்ஜிக்கு நடிக்கவே வரவில்லை என்றாலும் ஏனோ சிரிப்பு வருவதை தடுக்கமுடியவில்லை .கதாநாயகனுக்கு இணையாக படம் முழுதும் வருகின்றார் .உபயம் அண்ணன் இயக்குனர் .
ஏகப்பட்ட நடிகர்கள் நடிச்சு இருக்காங்க .இவ்வளவு போரையும் வேலை வாங்கி இருக்கார் .ஒவ்வொரு சீனில் யார் தலைகாட்டினாலும் அந்த இடத்திற்கு அவர்கள் தேவையாக இருக்கு .
உமா ரியாஜ் சண்டை எல்லாம் போட்டு நடிச்சு இருக்கார் .சமீப காலங்களில் இந்த அளவுக்கு சண்டை போட்டு நடித்த பெண் யாரும் இருக்காங்களா என தெரியவில்லை .
இசை யுவன் .நன்றாக இருக்கு .
ஒளிப்பதிவும் ஓகே .சண்டைகாட்சிகளும் ஓகே .
படத்தில் நடித்து இருக்கும் நடிகர்களின் ஒரிஜினல் பெயர்கள் வேறு கதாபாத்திரங்களுக்கு சூட்டபட்டு இருக்கு .இது யதார்த்தமா அமைந்ததா அல்லது இயக்குனர் யோசித்ததா என தெரியவில்லை .
சின்ன சின்ன ஐடியாக்களால் படம் முழுவதும் தோரணமாக கோர்த்து ரசிக்கும் விதமாக படம் இயக்கி இருக்கின்றார் வெங்கட் பிரபு.
காமடியும் ,அதிரி ஆக்சனும் கலந்த படமாக வந்து இருக்கு பிரியாணி .
பிரியாணி சீரகசம்பா பிரியாணி .முழு ப்ளேட் சாப்ட்ட திருப்தி .
Tweet |
அடே'கேப்'பா...! 48 நாட்கள் கழித்து பிரியாணி அளித்த திருப்தியில் பதிவு வந்து விட்டதே... ஏவ்வ்வ்வ்வ்வ்வ்...!
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
உங்கள் பதிவு கொடுக்கும் தைரியத்தில்
ReplyDeleteநாளை பிரியாணி பார்க்கப் போகிறேன்
tha.ma 3
ReplyDelete:-)
ReplyDeleteபலமான ஏப்பம் தான்
ReplyDeleteநல்ல விமர்சனம்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்