கதையை சொல்ல மாட்டேன் -பரதேசி !!!!!
படத்திற்கு
விமர்சனம் எப்படி எழுதுவது என தெரியவில்லை .நான் கதைக்குள் செல்ல
விரும்பவில்லை .இந்நேரம் உங்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் தெரிந்து
இருக்கும் .ப்ளாக்கரில் அல்லது பேஸ்புக்கில் படத்தின் கதையை விரிவாக குறை
சொல்லியோ அல்லது நல்லதாகவோ எழுதி இருப்பார்கள் .ஆகவே விரிவாக கதைக்குள்
நான் பயணிக்கவில்லை .
இன்று படம் வெளியாகும் வரை படத்தின் விளம்பர
முன்னோட்டம் பார்த்து பாலாவை விமர்சனம் எனும் போர்வையில் கஞ்சி
காய்சியவர்களை முதலில் இந்த படத்தை பார்ப்பதற்கு பணிக்கவேண்டும் .
படத்தின் கதையை போலவே இன்றும் வேறுவிதமான கொத்தடிமைத்தனம் ஒன்று
சத்தமில்லாமல் தமிழக கிராமங்களில் நடக்கிறது .தாலிக்கு வேலை {சுமங்கலி
திட்டம் }.
கிராமங்களுக்கு ஏஜண்டுகள் வந்து முன்பணம் கொடுத்து
படிப்பை நிப்பாட்டிய பெண்களை வேலைக்கு அழைத்து செல்கிறார்கள் .இப்பொழுது
நடப்பது நவீன கொத்தடிமை .
முதல் படம் வந்து பதினாலு வருடங்கள்
.இந்த பதினாலு வருடங்களுக்குள் மொத்தம் ஆறு படம் மட்டுமே .நினைத்தால்
வருடத்திற்கு ஒரு படம் எடுத்து இருக்கலாம் .சதையை நம்பி படம் எடுக்காமல்
கதையை நம்பி படம் எடுப்பதால் வெறும் ஆறு படம் மட்டும் .
எடுத்த
படம் அத்தனையும் விளிம்புநிலை மனிதர்களை மட்டுமே பேசியது .இதற்க்கு முன்பு
வந்த படங்களில் இறுதிக்காட்சி மிக அகோரமாய் இருக்கும் .நான்கு படங்களில்
பைத்தியத்துக்கு அருகில் உள்ள நிலைமையில் இருக்கும் கதா பாத்திரம் .அவன்
இவன் படம் எடுக்கும்போதே படம் பார்க்கும் நீங்க பாலாவை வெறுப்பீர்கள் என
சொல்லியே எடுத்தார் .அதே மாதிரி விமர்சனம் எனும் பேரில் நாம் துவைத்து
எடுத்துவிட்டோம் .
பரதேசி பற்றி என்ன சொல்வது என தெரியவில்லை
எனக்கு .படம் டைட்டில் ஆரம்பித்ததில் இருந்து படம் முடியும்வரை ஏதோ என்னை
ஆட்க்கொண்டது போல காட்சிகள் கடந்து கொண்டு இருக்கும்போது பொசுக்கென கண்ணீர்
துள்ளிகள் அடிக்கடி எட்டி பார்த்துக்கொண்டே இருந்தது .
அதரவா
இந்த கதைக்கான முகச்சாயல் இருப்பதாலேதான் பாலா தேர்ந்து எடுத்து இருப்பார்
போலருக்கு .வாழ்ந்து இருக்கின்றார் .வேதிகா அழகான பொம்மையாக வந்து போனவரை
எவ்வளவு அழகாக செதுக்கி எடுத்து இருக்கிறார் .எல்லா நடிகர் நடிகைக்குள்ளும்
பாலாவே புகுந்து வந்தால் ஒழிய இவ்வளவு சாத்தியம் இல்லை .யாரை குறித்து
எழுதினாலும் பாலா பாலா என மட்டுமே எழுத முடியும் .
விடுதலைக்கு
உழைத்த பெரியவர்களை மட்டுமே பேசியே காலம் கடந்து வந்து இருக்கின்றோம்
.பஞ்சத்தையும் ,உழைத்த உழைப்பிற்கான ஊதியம் பெறாமல் சுரண்டலை சந்தித்து
வந்த மனிதர்களையும் மறந்துவிட்டோம் .அவர்களின் ரத்தத்தில் எழுதபட்ட
வாழ்க்கையை இன்று நாம் சொகுசாக வாழ்ந்து வருகின்றோம் .
இந்த படம்
பார்க்கும்போது உங்கள் மனதில் ரெத்தம் வடியவில்லை எனில் ,உணர்ச்சிகளுக்கு
நீங்கள் ஆட்ப்படவில்லை எனில் உங்கள் மனங்களில் கோளாறு .
படம் ஹீரோயிசம் பற்றிய படம் அல்ல .குத்து பாட்டுக்கான படம் இல்லை .இது சண்டைகளுக்கான படம் இல்லை .
உண்மைகளுக்கான படம் இது .உண்மையை பேசத்துடிக்கும் படம் .
உலகப்படம் என எண்ணி நீங்க போக வேணாம் .உள்ளூர் படம் உலகத்துக்கான படம் என எண்ணி பார்க்கவேண்டிய படம் .
நான் கடைசிவரை இங்கே கதையை எழுதவில்லை .பாலா எனும் கலைஞனுக்கு நான் செய்யும் மரியாதை அது மட்டுமே .திரை அரங்கில் பாருங்கள் .
இதை விட நல்ல விமர்சனம் ஏது...!?
ReplyDeleteபார்க்க வேண்டும்...
இதை விட நல்ல விமர்சனம் ஏது...!?
ReplyDeleteபார்க்க வேண்டும்...